பீர்க்கு
'பீர்க்கு, பீரம், பீர்கங்காய் (Luffa aegyptiaca, sponge gourd,[1] எகிப்திய வெள்ளரி, அல்லது வியட்நாமிய லஃப்ஃபா, என்பது காய்கறிக்காக பயிரிடப்படும் பீர்க்கு பேரினத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது ஒரு ஆண்டுத் தாவரக் கொடியாகும். இது தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியாவை பூர்வீகமாகக் கொண்டது.
சொற்பிறப்பு
தொகு16 ஆம் நூற்றாண்டில் எகிப்தில் சாகுபடிசெய்யப்படுவதைக் கண்ட ஐரோப்பிய தாவரவியலாளர்கள் இந்த தாவரத்துக்கு "ஈஜிப்டியாகா " என்ற தாவரவியல் பெயரை வைத்தனர். ஐரோப்பிய தாவரவியல் நூலில், இந்த கொடியானது முதன்முதலில் ஜோஹன் வெஸ்லிங்கியஸால் 1638 இல் விவரிக்கப்பட்டது, அவர் இதற்கு "எகிப்திய வெள்ளரி" என்று பெயரிட்டார். வெஸ்லிங்கியஸ் "லஃபா" என்ற பெயரையும் அறிமுகப்படுத்தினார்.[2]
விளக்கம் மற்றும் சாகுபடி
தொகுஇதன் காய்கள் தோராயமாக 30 செமீ நீளம் கொண்டது. இது வடிவத்திலும் அளவிலும் ஏறக்குறைய வெள்ளரிக்காயை ஒத்திருக்கிறது. இதில் உள்ள மஞ்சள் பூக்கள் காரணமாக, சிலசமையங்களில் அலங்காரத்துக்கும் வளர்க்கப்படுகிறது.
பீர்க்கு கொடியானது பெரும்பாலும் பந்தலிடப்பட்டு, அல்லது வேலியிலோ, விட்டுக் கூரையின் மேல் படரவிட்டோ வளர்க்கப்படுகிறது.[3] இது செழிப்பாக வளர நிறைய வெப்பமும், நிறைய தண்ணீரும் தேவை.
மலர்
தொகுபீர்க்கம்பூவானது சிறியது; பொன்போன்ற மஞ்சள் நிறமானது. அழகானது: எனினும் மணமில்லாதது.
பயன்கள்
தொகுஇளம் பீர்கங்காயானது காய்கறியாக பயன்படுத்தப்படுவதால், பொதுவாக வெப்பமண்டல ஆசியாவில் வளர்க்கப்படுகிறது. இளசைப் போலல்லாமல், நன்கு முற்றிய காயானது வலுவான நார்களைக் கொண்டதாகவும், சாப்பிட முடியாததாகவும் இருக்கும். மேலும் இந்த முற்றிய காயில் உள்ள நார் உருண்டையானது குளிக்கும்போது அழுக்கு தேய்க்கும் குளியல் நார் தயாரிக்க பயன்படுகிறது. குளியல் நாராக இது பயன்படுத்துவதால், டிஷ்ராக் சுண்டைக்காய், ராக் சுண்டைக்காய், கடற்பாசி, காய்கறி-கடற்பாசி ஆகிய பொதுவான பெயர்களிலும் இது அறியப்படுகிறது.[4] அதே நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ரிட்ஜ் லஃபா ( லஃபா அகுடங்குலா ) இலிருந்து வேறுபடுவதற்கு இது மென்மையான லஃபா என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் விதைகளில் இருந்து சமையல் எண்ணெயை எடுக்க இயலும். எண்ணை எடுத்த பிறகு மீதமாக கிடைக்கும் புண்ணாக்கானது முயல், கேட் பிஷ் என்னும் மீன்கள் போன்றவற்றிற்கு உணவாகவோ அல்லது உரமாக பயன்படுத்தலாம்.[5]
உணவாற்றல் | 56 கிசூ (13 கலோரி) |
---|---|
14.34 g | |
சீனி | 5.17 g |
நார்ப்பொருள் | 2.9 g |
0.34 g | |
0.66 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | 260 அஅ |
தயமின் (B1) | (4%) 0.046 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (4%) 0.042 மிகி |
நியாசின் (B3) | (2%) 0.26 மிகி |
உயிர்ச்சத்து பி6 | (8%) 0.099 மிகி |
இலைக்காடி (B9) | (3%) 12 மைகி |
உயிர்ச்சத்து சி | (7%) 5.7 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (2%) 0.24 மிகி |
உயிர்ச்சத்து கே | (2%) 1.7 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (1%) 9 மிகி |
இரும்பு | (3%) 0.36 மிகி |
மக்னீசியம் | (6%) 20 மிகி |
பாசுபரசு | (4%) 31 மிகி |
பொட்டாசியம் | (10%) 453 மிகி |
சோடியம் | (1%) 21 மிகி |
துத்தநாகம் | (2%) 0.17 மிகி |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
இலக்கியங்களில்
தொகு'பாரம், பீரம் பைங்குருக் கத்தி' எனவரும் குறிஞ்சிப் பாட்டு அடியில் உள்ள 'பீரம்' என்பதற்கு நச்சினார்க்கினியர், 'பீர்க்கம்பூ' என்று உரை கூறினார்.
பீர்க்கு ஒரு கொடி. மஞ்சள் நிறமான பூக்களை உடையது. பசலை யூர்ந்த மகளிரின் நிறம், இதன் நிறத்திற்கு உவமிக்கப்படும்.
'பீர் என்கிளவி அம்மொடு சிவனும்' எனக் கூறும் தொல்காப்பியம் (எழு. 366). பீரம் என்பதற்கு நச்சினார்க்கினியர் 'பீர்க்கம்பூ' என்று உரை கூறினார்.
இவர் கொடிப் பிரம் இரும்பிதல் மலரும் -ஐங். 464:2
என்னும்படி இம்மலர் ஒரு கொடிப்பூவாகும். பீர்க்கங்கொடி தழைத்துப் புதர் போலப் படரும். இது கார்காலத்திற் பூக்கும் என்பதை திணை மாலை நூற்றைம்பது குறிப்பிடும்.
கார்தோன்ற காதலர்தேர் தோன்றா தாகவே,
பீர்தோன்றி நீர்தோன்றும் கண்[6]
காதலனைப் பிரிந்த தலைவிக்கு உண்டாகும் நிற வேறுபாடு, பசலை எனப்படும். பசப்பு என்பதும் இதுவே. 'பசலை' பாய்ந்த மகளின் நிறம் பீர்க்கம் பூவை ஒத்து மஞ்சள் நிறத் தேமலாகத் தோன்றும். இதனை நெற்றியில் காணலாம் என்பர். இதனை கீழ்கண்ட பாடல்கள் வழியாக அறியலாம்.[7]
பசு நிலா விரிந்த பல்கதிர் மதியின்
பெருகல் ஆய்கவின் ஒரீஇ சிறுபீர்
வி ஏர் வண்ணம் கொண்டன்று
. . . . . . . . . . . . சிறுநுதலே -அகநா. 57 , 11-13
பொன்போல் பீரமொடு புதல்புதல் மலர -நெடுநல். 14
கலையில்
தொகுபிற்கால ரோமானியப் பேரரசு காலத்திலிருந்தே பீர்கங்காயானது இஸ்ரேலில் உணவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. முற்றிய காய்களில் உள்ள நார்கள் குளியல் நாராக பயன்படுத்தப்பட்டன. முற்றிய பீர்கங்காய்கள் பைசந்திய பேரரசு காலத்தில் இஸ்ரேலில் கலை வேலைப்பாடுக்கு பயன்படுத்தப்பட்டன.
இஸ்ரேலில் உள்ள தேவாலயங்கள் மற்றும் யூத வழிபாட்டிடங்களில் அமைக்கப்பட்ட தரைகளில் இதன் முற்றிய காய்கள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.
குறிப்புகள்
தொகு- ↑ "{{{taxon}}}". Natural Resources Conservation Service PLANTS Database. USDA. பார்க்கப்பட்ட நாள் 23 June 2015.
- ↑ Johann Veslingius, De Plantis Aegyptiis, 1638. p. 48 (in Latin)
- ↑ A Legacy of Luffa, by Elizabeth Harwick, who grows Luffa aegyptiaca successfully in South Carolina.
- ↑ "Luffa aegyptiaca". Germplasm Resources Information Network (GRIN). Agricultural Research Service (ARS), United States Department of Agriculture (USDA). Retrieved 21 December 2017.
- ↑ Heuzé V., Tran G., Lebas F., 2017. Luffa (Luffa aegyptiaca). Feedipedia, a programme by INRA, CIRAD, AFZ and FAO. https://www.feedipedia.org/node/626 Last updated on July 18, 2017, 10:53
- ↑ தினை மா. நூ. 10 0 : 4-5
- ↑ சங்க இலக்கியத் தாவரங்கள், டாக்டர் கு. சீநிவாசன், பக்கம் 345-350