புதிய பாதை (1960 திரைப்படம்)

புதிய பாதை (Pudhiya Pathai) என்பது 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாபி சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது ஏக் கி ராஸ்தா (1956) என்ற இந்தி படத்தின் மறுஆக்கம் ஆகும்.[1] இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் குங்குமரேகா (1960) என்ற பெயரில் எடுக்கப்பட்டது.[2]

புதிய பாதை
இயக்கம்தாபி சாணக்கியா
தயாரிப்புஸ்ரீ சாரதி ஸ்டூடியோ
திரைக்கதைமுரசொலி மாறன்
இசைமாஸ்டர் வேணு
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஏ. தங்கவேலு
ஏ. கருணாநிதி
பாலாஜி
பாலகிருஷ்ணன்
சாவித்திரி
எம். சரோஜா
டெய்சி இராணி
சுகுமாரி
ஜோதி
வெளியீடுநவம்பர் 17, 1960
நீளம்14785 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு

பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவுத்தளத்திலிருந்து இப்பட்டியில் உருவாக்கபட்டது.[3]

நடாகர்கள்

நடிகைகள்

தயாரிப்பு

தொகு

இப்படத்தை தாபி சாணக்யா இயக்கினார். முக்ரம் ஷர்மா கதை எழுத, முரசொலி மாறன் உரையாடல் எழுதினார். ஒளிப்பதிவை யூசுப் முல்ஜி மேற்கொண்டார். வேம்பாட்டி சத்யம் நடன அமைப்பாளராக இருந்தார்.[3] இப்படம் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. தெலுங்கிலும் சாவித்திரி அதே பாத்திரத்தில் நடித்தார். பிற பாத்திரங்களில் எம். பாலையா, ஜக்கையா என தெலுங்கு நடிகர்கள் நடித்தனர்.[4]

பாடல்கள்

தொகு

இப்படத்திற்கு மாஸ்டர் வேணு இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை அ. மருதகாசியும், கண்ணதாசனும் எழுதினர்.[5] "ஆசைகள் மலர்வது பருவ நெஞ்சிலே" என்ற பாடல் 1956 ஆம் ஆண்டு வெளியான ஏக் ஹி ராஸ்தா என்ற ஹிந்தி திரைப்படத்தின் "சவ்லே சலோனே ஆயே தின் பஹர்கே" என்ற பாடலின் மெட்டை அடிப்படையாகக் கொண்டது.

பாடல் பாடகர்/கள் வரிகள் நீளம்
"இன்னும் ஏன் வரவில்லை" பி. சுசீலா அ. மருதகாசி 02:17
"ஆசைகள் மலர்வது பருவ நெஞ்சிலே" டி. எம். சௌந்தரராஜன், ஜிக்கி 04:14
"தஞ்சாவூர் பொம்மை போலே" ஜிக்கி (ம) குழுவினர் 04:18
"முயன்றால் புகழ் பெறவே முடியாதா" பி. சுசீலா, ஜெயலட்சுமி சந்தானன் 03:01
"வானமெனும் கூறையின்" டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 05:18
"இன்பக் கனவோடு கண் மூடு" பி. சுசீலா
"மணமாலை இழந்த தாயே" டி. எம். சௌந்தரராஜன் 02:48
"ஏன் இந்த இரவு" டி. எம். சௌந்தரராஜன், ஜிக்கி 03:08
"பொங்கும் மணமேடை அலங்காரம்" பி. சுசீலா 03:09
"நீயும் நானும் ஜோடி" டி. எம். சௌந்தரராஜன், ஜிக்கி 02:23

மேற்கோள்கள்

தொகு
  1. Nazir, Asjad (3 November 2022). "BR Chopra: 20 greatest movies". India Weekly. Archived from the original on 3 February 2023. பார்க்கப்பட்ட நாள் 3 February 2023.
  2. Ramachandran, T. M. (20 July 1963). "Sarathi Studios in Full Swing". ஸ்போர்ட் அண்ட் பேஸ்டைம். p. 48. Archived from the original on 3 February 2023. பார்க்கப்பட்ட நாள் 3 February 2023 – via இணைய ஆவணகம்.
  3. 3.0 3.1 "1960 – புதியபாதை-ஸ்ரீசாரதி ஸ்டுடியோ குங்கும ரேகா(தெ)" [1960 – Pudhiya Pathai-Sri Sarathi Studio Kumkuma Rekha(te)]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 17 March 2017. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "'புதிய பாதை' ஆன 'ஏக்-கி-ரஸ்தா'". Hindu Tamil Thisai. 2024-11-18. பார்க்கப்பட்ட நாள் 2024-11-19.
  5. Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 206.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பாதை_(1960_திரைப்படம்)&oldid=4145295" இலிருந்து மீள்விக்கப்பட்டது