புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு

ஈழப்போரில் அழிந்த நிலையில் புதுக்குடியிருப்பு சிறீ கந்தசுவாமி கோவில் தோற்றம் (2010).

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆனந்தபுரம், இரணைப்பளை, கோம்பாவில், மாளிகைத்தீவு, மாணிக்கபுரம், மண்ணக்கண்டல், மந்துவில், புதுக்குடியிருப்பு, சிவநகர், சுதந்திரபுரம், தேராவில், தேவிபுரம், உடையார்கட்டு, வல்லிபுரம், வள்ளுவர்புரம், விசுவமடு ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கிலும், தெற்கிலும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவும்; கிழக்கில் இந்தியப் பெருங்கடல், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, என்பனவும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 1009 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள்தொகு

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளியிணைப்புக்கள்தொகு