புரோங்கெர்சுமா குழி விரியன்
புரோங்கெர்சுமா குழி விரியன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | வைப்பரிடே
|
பேரினம்: | |
இனம்: | கி. புரோங்கெர்சுமாய்
|
இருசொற் பெயரீடு | |
கிராசுபிடோசெபாலசு புரோங்கெர்சுமாய் Hoge, 1969 | |
வேறு பெயர்கள் | |
புரோங்கெர்சுமா குழி விரியன் (கிராசுபிடோசெபாலசு புரோங்கெர்சுமாய்) என்பது வைப்பெரிடே குடும்பத்தின் குரோடாலினே துணைக்குடும்பத்தில் உள்ள ஒரு நச்சுப் பாம்பு சிற்றினம் ஆகும்.[4] இது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள தீவுகளில் காணப்படுகிறது. எந்த துணையினமும் தற்போது அங்கீகரிக்கப்படவில்லை.[5]
சொற்பிறப்பியல்
தொகுபுரோங்கெர்சுமாய் என்ற குறிப்பிட்ட சிற்றினப் பெயர் இடச்சு ஊர்வனவியலாளர் லியோ புரோங்கெர்சுமாவின் நினைவாக இடப்பட்டுள்ளது.[6]
விளக்கம்
தொகுகி. புரோங்கெர்சுமாய் செதில்களில் நடுப்பகுதியில் 19 (அல்லது 21) முதுகு செதில்கள், 136-150 வயிற்றுப்புறச் செதில்கள், 41-48 பிரிக்கப்பட்ட வாலடிச் செதில்கள் மற்றும் 9-10 மேலுதட்டு மேல் செதில்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.[4]
புவியியல் வரம்பு
தொகுகி. புரோங்கெர்சுமாய் இந்தோனேசியாவில், சுமாத்திராவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள சிபெருத் மற்றும் சிமியுலுவின் மெந்தாவாய் தீவுகளில் காணப்படுகிறது.[1] கு, சிமலூர், சுமாத்திர வகை இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2]
வாழ்விடம்
தொகுகி. புரோங்கெர்சுமாயின் விருப்பமான இயற்கை வாழிடம் காடு ஆகும்.[1]
இனப்பெருக்கம்
தொகுகி. புரோங்கெர்சுமாயின் இனப்பெருக்கம் முறை குறித்து போதுமான தகவல் தெரியவில்லை.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Vogel, G.; Iskandar, D. (2012). "Trimeresurus brongersmai". IUCN Red List of Threatened Species 2012: e.T178541A1538501. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T178541A1538501.en. https://www.iucnredlist.org/species/178541/1538501. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ 2.0 2.1 McDiarmid RW, Jonathan A. Campbell, T'Shaka A. Touré (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
- ↑ 3.0 3.1 சிற்றினம் Craspedocephalus brongersmai at The Reptile Database www.reptile-database.org
- ↑ 4.0 4.1 Andreas Gumprecht, Frank Tillack, Orlov NL, Ashok Captain, Sergei A. Ryabov (2004).
- ↑ "Trimeresurus brongersmai ". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 28 July 2008.
- ↑ Richard Allen "Bo" Crombet-Beolens, Michael Watkins (zoologist), Michael Grayson (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Trimeresurus brongersmai, p. 39).
மேலும் படிக்க
தொகு- David P, Vogel G, Dubois A (2011). "On the need to follow rigorously the Rules of the Code for the subsequent designation of a nucleospecies (type species) for a nominal genus which lacked one: the case of the nominal genus Trimeresurus Lacépède, 1804 (Reptilia: Squamata: Viperidae)". Zootaxa 2992: 1-51.
- Hoge AR (1969). "Um novo Trimeresurus de Simalur, Sumatra (Serpentes: Viperidae)". Ciência e Cultura, São Paulo 21 (2): 459–460. (Trimeresurus brongersmai, new species). (in Portuguese).
- Hoge AR, De Lemos Romano SA (1974). "Notes on Trimeresurus brongersmai Hoge, 1969 (Serpentes: Viperidae: Crotalinae)". Memórias do Instituto Butantan 38: 147–158.