புரோப்பாக்குளோர்

வேதிச் சேர்மம்

புரோப்பாக்குளோர் (Propachlor) என்பது C11H14ClNO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-குளோரோ-என்-ஐசோபுரோப்பைலசிட்டனிலைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்காப்படுகிறது. [1] அமெரிக்க வேளாண் வேதியியல் நிறுவனமான மான்சாண்டோவால் முதன் முதலில் ஒரு களைக்கொல்லியாக இது விற்பனை செய்யப்பட்டது. புரோப்பாக்குளோர் 1965 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பயன்படுத்துவதற்காக பதிவு செய்யப்பட்ட ஒரு சேர்மமாகும். [2]

புரோப்பாக்குளோர்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோ-என்-ஐசோபுரோப்பைல்-என்-பீனைலாக்டமைடு
வேறு பெயர்கள்
2-குளோரோ-என்-ஐசோபுரோப்பைலசிட்டமைடு
இனங்காட்டிகள்
1918-16-7
ChEMBL ChEMBL1394829
ChemSpider 4762
InChI
  • InChI=1S/C11H14ClNO/c1-9(2)13(11(14)8-12)10-6-4-3-5-7-10/h3-7,9H,8H2,1-2H3
    Key: MFOUDYKPLGXPGO-UHFFFAOYSA-N
  • InChI=1/C11H14ClNO/c1-9(2)13(11(14)8-12)10-6-4-3-5-7-10/h3-7,9H,8H2,1-2H3
    Key: MFOUDYKPLGXPGO-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4931
  • CC(C)N(c1ccccc1)C(=O)CCl
UNII 015443A483 Y
பண்புகள்
C11H14ClNO
வாய்ப்பாட்டு எடை 211.69 g·mol−1
தோற்றம் இலேசான பழுப்பு நிற திண்மம்
அடர்த்தி 1.139 கி/மி.லி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொவேசி எனப்படும் ஒருவித்திலைத் தாவர புல்லினங்களிலும் சில அகன்ற இலை களைகளிலும் [1] புரோப்பாகுளோர் நன்கு செயல்படுகிறது. இங்கிலாந்தில் மர்பி கவர்சீல்டு என்ற பெயரில் முளைத்தல் தடுப்பானாக விற்கப்பட்டது.

1987 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளுக்கிடையில் புரோப்பாகுளோரினின் மூலப்பொருள்கள் சுமார் 2.1 மில்லியன் பவுண்டுகள் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டன. [3] சுமார் 75% சோளப் பயிர்களுக்கும் 24% மக்காச்சோளத்திற்குமாக இக்களைக் கொல்லி பயன்படுத்தப்பட்டது. [3]

மான்சாண்டோ நிறுவனம் 1998 ஆம் ஆண்டில் தானாக முன்வந்து அதன் உற்பத்தியை நிறுத்தியது. [4] புரோப்பாக்குளோர் தற்போது அமெரிக்க . சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள நச்சு வெளியீட்டு சரக்குகளில் ஒன்றாக இது பட்டியலிடப்பட்டுள்ளது. [5] 2008 ஆம் ஆண்டு நிலத்தடி நீரில் இதன் வளர்சிதை மாற்ற விளைபொருள்கள் இருப்பதைக் காரணம் காட்டி ஐரோப்பிய ஆணையம் 2009 ஆம் ஆண்டு வரை இதன் பயன்பாடுகளை திரும்பப் பெறுவதாக தன் முடிவை வெளியிட்டது. [6] 2001 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் புற்றுநோய் காரணிகள் முன்மொழிவு பட்டியல் 65 இல் புரோப்பாக்குளோர் சேர்க்கப்பட்டது. [7]

தற்போதைய தயாரிப்பாளர்கள்

தொகு

இசுரேலை தலைமையிடமாகக் கொண்ட அதாமா வேளான் நிறுவனமும் சீனாவின் செஞ்சென் கின்பெங்கு பூச்சிக்கொல்லி நிறுவனமும் தற்போது புரோப்பாக்குளோர் சேர்மத்தை தயாரித்து வருகின்றன. [8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Warholic, DT; Gutenmann, WH; Lisk, DJ (1983). "Propachlor herbicide residue studies in cabbage using modified analytical procedure". Bulletin of Environmental Contamination and Toxicology 31 (5): 585–7. doi:10.1007/bf01605479. பப்மெட்:6640157. https://archive.org/details/sim_bulletin-of-environmental-contamination-and-toxicology_1983-11_31_5/page/585. 
  2. "Propachlor (Ramrod, Bexton) Herbicide Profile 2/85". கோர்னெல் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 2009-09-09.
  3. 3.0 3.1 "Reregistration Eligibility Decision (RED) - Propachlor" (PDF). U.S. Environmental Protection Agency. பார்க்கப்பட்ட நாள் 2009-09-09.
  4. "Illinois Pesticide Review". University of Illinois Extension Service. பார்க்கப்பட்ட நாள் 2009-09-09.
  5. "Toxics Release Inventory (TRI) Chemicals in TOXMAP". Archived from the original on 2009-09-10. பார்க்கப்பட்ட நாள் 2009-09-09.
  6. "COMMISSION DECISION of 18 September 2008 concerning the non-inclusion of propachlor in Annex I to Council Directive 91/414/EEC and the withdrawal of authorisations for plant protection products containing that substance". European Commission. பார்க்கப்பட்ட நாள் 2009-09-09.
  7. "CHEMICALS KNOWN TO THE STATE TO CAUSE CANCER OR REPRODUCTIVE TOXICITY AUGUST 7, 2009" (PDF). State of California Environmental Protection Agency. பார்க்கப்பட்ட நாள் 2009-09-09.
  8. Farm Chemicals International (2012-03-12). "Propachlor". பார்க்கப்பட்ட நாள் 2012-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பாக்குளோர்&oldid=3564238" இலிருந்து மீள்விக்கப்பட்டது