புல் உண்ணி
புல் உண்ணி (Graminivore) விலங்குகள் முதன்மையாகப் புல், குறிப்பாக "உண்மையான" புற்கள், போயேசி குடும்பத்தின் தாவரங்கள் (கிராமினி என்றும் அழைக்கப்படுகிறது) ஆகியவற்றை உணவாகக் கொள்ளும் தாவர உண்ணி விலங்குகள் ஆகும். புல் உண்ணி விலங்குகள் மேய்ச்சல் விலங்குகளின் ஒரு வகையாகும். இத்தகையத் தாவர உண்ணி விலங்குகள் அதற்கானச் செரிமான அமைப்புகளைக் கொண்டுள்ளன. இவை அதிக அளவு செல்லுலோசை செரிமானம் செய்யக்கூடிய வாழ்க்கையினைத் தழுவியுள்ளன. இவை உண்ணும் உணவில் நார்ச்சத்து நிறைந்த தாவரப் பொருட்கள் உள்ளன. இவற்றைச் செரிமானம் செய்வது பல விலங்குகளுக்குக் கடினமானதாக உள்ளது. எனவே, இவற்றின் செரிமானத்திற்கு உதவச் சிறப்பு நொதிகளைக் கொண்டுள்ளன. மேலும் சில சந்தர்ப்பங்களில் இந்த விலங்குகளின் செரிமான பாதையில் வாழும் கூட்டுயிரி பாக்டீரியாவும் குடல் வழியாகப் பயணிக்கும் உணவுப் பொருள் நொதித்தல் மூலம் செரிமான செயல்முறைக்கு "உதவுகின்றன".[1]
குதிரை, கால்நடைகள், வாத்து, கினி எலி, நீர்யானை, கேபிபாரா, பாண்டா கரடி ஆகியவை முதுகெலும்புள்ள புல் உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். நாய் மற்றும் பூனை போன்ற சில மாமிச உண்ணிகளும் எப்போதாவது புல்லைச் சாப்பிடுவதாக அறியப்படுகிறது. நாய்களில் புல் நுகர்வு என்பது மாமிசத்தினால் இத்தகைய விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் குடல் ஒட்டுண்ணிகளை அகற்றுவதற்கான ஒரு வழிமுறையாகும்.[2] பல்வேறு முதுகெலும்பற்ற விலங்குகளும் புல் உண்ணி வாழ்க்கை முறையினைக் கொண்டுள்ளன. அக்ரிடிடே குடும்பத்தைச் சேர்ந்த பல வெட்டுக்கிளிகள், முதன்மையாக போயேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களை உணவாகக் கொண்டுள்ளன.[3] மனிதர்கள் புல் உண்பவர்கள் அல்ல என்றாலும், புல் வகைகளிலிருந்து பெறப்படும் தானியங்களை உண்ணுகின்றனர். இவற்றிலிருந்தே மனிதர்கள் ஊட்டச்சத்தின் பெரும்பகுதியைப் பெறுகின்றனர்.
புல் உண்ணி விலங்குகள் பொதுவாகக் குறிப்பிட்ட வகையான புல்லை உண்ண விரும்புகின்றன. உதாரணமாக, வடகிழக்கு கொலராடோவின் குறுகிய புல்வெளி சமவெளிகளில் காணப்படும் வட அமெரிக்கக் காட்டெருமை மொத்தம் முப்பத்தாறு வெவ்வேறு வகையான தாவரங்களை உட்கொள்கிறது என ஓர் ஆய்வுத் தெரிவிக்கின்றது. ஆனால் இந்தக் காட்டெருமை முப்பத்தாறு வகைப் புல்லில் ஐந்து புல் இனங்களை விரும்பி சாப்பிடுகிறது. இவற்றின் உணவில் இந்த ஐந்து புல் இனங்கள் சராசரியாகச் சுமார் 80% நுகரப்படுகிறது. இந்த இனங்களில் சில அரிசுடிடா லாங்கிசெட்டா, முக்லென்பெர்கியா இனங்கள், மற்றும் பூடெலோவா கிராசிலிசு.[4]
-
புல்லினை உண்ணுகின்ற சிவப்புக் கங்காரு
-
குதிரைகள் புல்வெளியில் மேய்ந்துகொண்டிருக்கும் காட்சி
-
கேபிபாரா கேட்டிசுபர்க் விலங்குகாட்சிச் சாலையில் புல்லினை உண்ணும் காட்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ Connie, Rye (2013). Biology. Avissar, Yael,, Choi, Jung Ho, 1956-, DeSaix, Jean,, Jurukovski, Vladimir,, Wise, Robert R. Houston, Texas. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781938168093. இணையக் கணினி நூலக மைய எண் 896421272.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ "Why Dogs Eat Grass—a Myth Debunked". Psychology Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-17.
- ↑ Picaud, F.; Bonnet, E.; Gloaguen, V.; Petit, D. (2003). "Decision Making for Food Choice by Grasshoppers (Orthoptera: Acrididae): Comparison Between a Specialist Species on a Shrubby Legume and Three Graminivorous Species". Environmental Entomology 32 (3): 680–688. doi:10.1603/0046-225x-32.3.680. https://archive.org/details/sim_environmental-entomology_2003-06_32_3/page/n265.
- ↑ Peden, D. G.; Van Dyne, G. M.; Rice, R. W.; Hansen, R. M. (1974). "The Trophic Ecology of Bison bison L. on Shortgrass Plains". Journal of Applied Ecology 11 (2): 489–497. doi:10.2307/2402203. Bibcode: 1974JApEc..11..489P.