கேபிபாரா

கேவி குடும்பத்திலுள்ள ஒரு இராட்சத கொறிணி உயிரினம்

Olfactores

கேபிபாரா (capybara, Hydrochoerus hydrochaeris) என்பது உலகில் வாழும் மிகப்பெரிய கொறிணி ஆகும். இது சிகுயிரே மற்றும் கர்பின்ச்சோ என்றும் அழைக்கப்படுகிறது. இது ஹைட்ரோகோயேருஸ் பேரினத்தின் உறுப்பினர் ஆகும். இப்பேரினத்தின் வாழும் மற்றொரு உறுப்பினர் சிறிய கேபிபாரா (ஹைட்ரோகோயேருஸ் இஸ்த்மியுஸ்) ஆகும். கினி எலி, பாறை கேவி (தென் அமெரிக்க கொறிணி) ஆகியவை இதன் நெருங்கிய உறவினர்கள் ஆகும். அகோடி, சின்சில்லா, கோய்பு ஆகியவை இதன் தூரத்து உறவினர்கள் ஆகும். இவை தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவை ஆகும். இவை சவானாக்கள் மற்றும் அடர்ந்த காடுகளில் தண்ணீருக்கு அருகில் வாழ்கின்றன. இவை கூட்டமாக வாழக்கூடியவை ஆகும். இவற்றின் கூட்டத்தில் 100 உறுப்பினர்கள் வரை இருக்கும். ஆனால் பொதுவாக 10-20 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமாக இருக்கும். இவை இவற்றின் இறைச்சி மற்றும் தோலுக்காக வேட்டையாடப்படுகின்றன. இதன் தடிமனான தோலில் இருந்து பெறப்படும் கொழுப்பு, மருந்து வர்த்தகத்தில் பயன்படுத்தப்படுகிறது.[2] இதன் இயங்கு படம் [3]

கேபிபாரா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
H. hydrochaeris
இருசொற் பெயரீடு
Hydrochoerus hydrochaeris
(லின்னேயஸ், 1766)
பூர்வீக இடம்.
வேறு பெயர்கள்

Sus hydrochaeris Linnaeus, 1766

கேபிபாராவின் மேல் ஒரு மஞ்சள் தலை கரகாரா

பெயர்க்காரணம்

தொகு

கேபிபாரா என்ற பெயர் துபி மொழியிலிருந்து வந்ததாகும். இப்பெயருக்கு புல்தின்னி என்று பொருள்.[4]

இதன் அறிவியல் பெயர் கிரேக்க மொழியில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் நீர்ப்பன்றி என்பதாகும்.[5][6]

விளக்கம்

தொகு
 
ஒரு கேபிபாரா வகை மாதிரி
 
கேபிபாரா எலும்புக்கூடு

கேபிபாரா கனத்த பீப்பாய் வடிவ உடம்பைப் பெற்றுள்ளது. தலை குட்டையாக இருக்கும். உடம்பின் மேல் புறத்தில் சிவப்பு-பழுப்பு மென்மயிர் காணப்படும். உடலின் கீழ்ப்புறத்தில் மஞ்சள்-பழுப்பு மென்மயிர் காணப்படும். இதன் வியர்வைச் சுரப்பிகள் இதன் தோலில் உள்ள முடிகளுக்கு அடியில் காணப்படும். இந்த வகையிலான அமைப்பு கொறிணிகளில் வழக்கமான ஒன்றல்ல.[7]

வளர்ந்த கேபிபாராக்கள் 106 முதல் 134 சென்டிமீட்டர் நீளமும், நிற்கும்போது 50 முதல் 62 சென்டிமீட்டர் உயரமும், 35 முதல் 66 கிலோ எடையும் இருக்கும். வெனிசுலாவின் இலானோஸ் பகுதியில் காணப்படும் கேபிபாராக்கள் சராசரியாக 48.9 கிலோ எடை இருக்கும்.[8][9][10] பெண் கேபிபாராக்கள் ஆண்களை விட சற்று எடை அதிகமானதாக இருக்கும். அதிகபட்ச சாதனை அளவாக பிரேசிலில் பிடிக்கப்பட்ட ஒரு பெண் காட்டு விலங்கு 91 கிலோ எடையும், உருகுவேயில் பிடிக்கப்பட்ட ஒரு ஆண் விலங்கு 73.5 கிலோ எடையும் இருந்தன.[7][11] 2001 அல்லது 2002 ஆம் ஆண்டு சாபாலோவில் ஒரு உயிரினம் 81 கிலோ எடை இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[12] இவற்றின் பல்லின் வகையடுக்கு   ஆகும்.[7] இவற்றின் கால்களில் லேசான அளவுக்கு சவ்வுகள் உண்டு. இவை எச்சவுறுப்புகள் உள்ள வால்களை கொண்டுள்ளன.[7] இவற்றின் பின்னங்கால்கள் முன்னங்கால்களை விலை சற்று நீளமானவை. இவற்றின் பின்னங்கால்களில் மூன்று விரல்களும், முன்னங்கால்களில் நான்கு விரல்களும் இருக்கும்.[13]

சூழலியல்

தொகு
 
கேபிபாராவின் மேல் ஒரு மஞ்சள் தலை கரகாரா
 
ஒரு நீந்தும் கேபிபாரா குடும்பம்

கேபிபாரா நீர் சார்ந்த ஒரு பாலூட்டி ஆகும்.[10] சிலி தவிர மற்ற அனைத்து தென்னமெரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.[14] இவை ஏரிகள், ஆறுகள், குட்டைகள் மற்றும் சதுப்பு நிலங்கள்[9] போன்ற நீர்ப்பரப்புகளின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வாழ்கின்றன. அதேபோல் வெள்ளம் நிறைந்த புன்னிலம் மற்றும் ஆற்றோரங்களில் உள்ள வெப்பமண்டல மழைக்காடுகள் ஆகியவற்றில் வாழ்கின்றன. நன்றாக நீந்தக் கூடியவை. இவற்றால் ஐந்து நிமிடங்களுக்கு நீரில் மூழ்கி இருக்க முடியும்.[15] மாட்டு மந்தைகள் வளர்க்கும் பகுதிகளில் இவை செழித்து வளர்கின்றன.[7] கேபிபாராக்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் சராசரியாக 10 ஹெக்டேர் (25 ஏக்கர்) அளவிற்குள் சுற்றித் திரிகின்றன.[7]

உலகம் முழுவதும் உள்ள, இதே போன்ற நீர் சூழ்நிலை கொண்ட பகுதிகளில், மனிதப் பிடியிலிருந்து தப்பிய பல கேபிபாராக்கள் வாழ்வதை காணமுடியும். ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இவை பொதுவாகக் காணப்படுகின்றன. ஆனால் அங்கு இன்னும் குட்டியிடும் எண்ணிக்கையிலான கேபிபாராக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.[16] 2011 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் நடுப்பகுதி கடற்கரையில் ஒரு கேபிபாரா காணப்பட்டது.[17]

உணவு மற்றும் உணவாதல்

தொகு
 
கேபிபாரா மீது ஒரு கேட்டில் டைரன்ட் பறவை

கேபிபாராக்கள் தாவர உண்ணிகள் ஆகும். பெரும்பாலும் புற்கள் மற்றும் நீர் வாழ்த் தாவரங்கள்[9][18] ஆகியவற்றை உண்ணும். மேலும் பழங்கள் மற்றும் மரப்பட்டைகளையும் உண்ணும்.[10] இவை மிகவும் தேர்ந்தெடுத்து உண்பவை ஆகும்.[19] ஏதாவது ஒரு வகை தாவரத்தின் இலைகளை மட்டும் உண்ணும். அதைச் சுற்றி இருக்கும் மற்ற இன தாவரங்களை அப்படியே விட்டுவிடும். வறண்ட காலச் சூழ்நிலையின் போது சில தாவரங்களே கிடைப்பதால் இவை பல்வேறுபட்ட தாவரங்களை அச்சூழ்நிலையின் போது உண்ணும். உலர்ந்த காலங்களில் புற்களை உண்ணும். இவை வறண்ட காலங்களில் அந்நேரத்தில் அதிகமாக கிடைக்கும் தாவரங்களுக்கு மாறுகின்றன.[20] வெயில் காலத்தில் கேபிபாராக்கள் உண்ணும் தாவரங்கள், அவற்றின் சத்துக்களை குளிர்காலத்தில் இழக்கின்றன. எனவே குளிர்காலத்தில் கேபிபாராக்கள் அவற்றை உண்பதில்லை.[19] கேபிபாராவின் தாடையானது செங்குத்தாக இல்லை. இதன் காரணமாக இவை பக்கவாட்டில் தமது உணவை மெல்லாமல், முன்புறமும் பின்புறமும் மெல்கின்றன.[21] கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், கேபிபாராக்கள் தமது மலத்தை உண்ணக்கூடியவை. பாக்டீரியாக்களை எடுத்துக் கொள்வதற்காக அவை இவ்வாறு உண்கின்றன. இவற்றின் பொதுவான உணவான புல்லில் உள்ள மாவியத்தை சமிபாடு செய்ய உதவுவதற்காக இவை அவ்வாறு உண்கின்றன. மேலும் தமது உணவிலிருந்து அதிகப்படியான புரதம் மற்றும் உயிர்ச்சத்துக்களை எடுத்துக் கொள்ளவும் இவ்வாறு உண்கின்றன. இவற்றிற்கு மாடுகளைப் போன்ற அசை போடும் ஒரு பழக்கம் உள்ளது.[22] மற்ற கொறிணிகளைப் போலவே கேபிபாராக்களின் முன் பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன. உணவு உண்பதால் ஏற்படும் சேதத்தை சரி செய்ய அவை இவ்வாறு வளர்கின்றன.[14] இவற்றின் கடைவாய்ப் பற்களும் தொடர்ந்து வளர்கின்றன.[21]

இதன் உறவினர் உயிரினமான கினி எலி போலவே இதனாலும் உயிர்ச்சத்து சி-ஐ தொகுக்க முடியாது. அடைத்து வைக்கப்பட்ட கேபிபாராக்கள் உயிர்ச்சத்து சி கொடுக்கப்படாத பொழுது ஸ்கர்வி அறிகுறியாக ஈறு நோய்க்கு உள்ளாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.[23]

இவை 8-10 வருடங்கள் உயிர் வாழக்கூடியவை.[24] ஆனால் காடுகளில் நான்கு வருடங்களுக்கும் குறைவாகவே உயிர்வாழ்கின்றன. ஏனெனில் இவை "ஜாகுவார், மலைச்சிங்கம், கழுகு மற்றும் கேமன் முதலை ஆகியவற்றின் விருப்பமான உணவாக" இருக்கிறது.[14] மேலும் இவை அனகோண்டாவிற்கும் ஒரு விருப்பமான உணவாகும்.[25]

உசாத்துணை

தொகு
  1. Reid, F. (2016). "Hydrochoerus hydrochaeris". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T10300A22190005. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T10300A22190005.en. http://www.iucnredlist.org/details/10300/0. பார்த்த நாள்: 1 May 2017. 
  2. Capybara (Hydrochoerus hydrochaeris) பரணிடப்பட்டது 2012-01-03 at the வந்தவழி இயந்திரம். ARKive.org
  3. https://www.youtube.com/watch?v=-lqhleCf8R0
  4. Ferreira, A. B. H. (1986) Novo Dicionário da Língua Portuguesa, 2nd ed., Rio de Janeiro: Nova Fronteira, p.344
  5. வார்ப்புரு:MSW3 Woods
  6. Darwin, Charles R. (1839). Narrative of the surveying voyages of His Majesty's Ships Adventure and Beagle between the years 1826 and 1836, describing their examination of the southern shores of South America, and the Beagle's circumnavigation of the globe. Journal and remarks. 1832–1836. London: Henry Colburn. p. 619. {{cite book}}: Unknown parameter |titlelink= ignored (help)
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 Mones, Alvaro; Ojasti, Juhani (16 June 1986). "Hydrochoerus hydrochaeris". Mammalian Species (264): 1–7. doi:10.2307/3503784. 
  8. Capybara பரணிடப்பட்டது 2012-01-03 at the வந்தவழி இயந்திரம், Arkive
  9. 9.0 9.1 9.2 Capybara Facts. Smithsonian National Zoological Park. Retrieved on December 16, 2007.
  10. 10.0 10.1 10.2 Capybara. Palm Beach Zoo. Retrieved on December 17, 2007.
  11. World Association of Zoos and Aquariums. WAZA. Retrieved on 2011-12-07.
  12. "Relationship Between Body Mass and Body Length in Capybaras (Hydrochoerus Hydrochaeris)" (PDF). பார்க்கப்பட்ட நாள் June 29, 2018.
  13. "Capybara Printout". Enchantedlearning.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-27.
  14. 14.0 14.1 14.2 Bristol Zoo Gardens (UK) Capybara பரணிடப்பட்டது 2007-09-18 at the வந்தவழி இயந்திரம். Bristolzoo.org.uk. Retrieved on 2011-12-07.
  15. "Capybara – Description, Habitat, Image, Diet, and Interesting Facts". Animals Network. பார்க்கப்பட்ட நாள் 2019-01-01.
  16. "Nonnatives – Capybara". myfwc.com. Archived from the original on 2014-04-06. பார்க்கப்பட்ட நாள் 2020-05-03.
  17. Mather, Kate (18 August 2011). "A gnawing question answered: It's a capybara roaming Paso Robles". Los Angeles Times. http://www.latimes.com/news/local/la-me-0818-capybara-20110818,0,104462.story. பார்த்த நாள்: 10 January 2012. 
  18. Forero-Montaña, Jimena; Betancur, Julio; Cavelier, Jaime (June 2003). "Dieta del capibara Hydrochaeris hydrochaeris (Rodentia: Hydrochaeridae) en Caño Limón, Arauca, Colombia" (in es). Revista de Biología Tropical 51 (2): 571–578. பப்மெட்:15162749. https://www.scielo.sa.cr/scielo.php?script=sci_arttext&pid=S0034-77442003000200029. 
  19. 19.0 19.1 Quintana, R.D.; Monge, S.; Malvárez, A.I. (1998). "Feeding patterns of capybara Hydrochaeris hydrochaeris (Rodentia, Hydrochaeridae) and cattle in the non-insular area of the Lower Delta of the Paraná River, Argentina". Mammalia 62 (1): 37–52. doi:10.1515/mamm.1998.62.1.37. 
  20. Barreto, Guillermo R.; Herrera, Emilio A. (1998). "Foraging patterns of capybaras in a seasonally flooded savanna of Venezuela". Journal of Tropical Ecology 14 (1): 87–98. doi:10.1017/S0266467498000078. 
  21. 21.0 21.1 Capybara. Hydrochaeris hydrochaeris. San Francisco Zoo
  22. Lord, Rexford D. (March 1994). "A descriptive account of capybara behaviour". Studies on Neotropical Fauna and Environment 29 (1): 11–22. doi:10.1080/01650529409360912. 
  23. Cueto, Gerardo Ruben; Allekotte, Roman; Kravetz, Fernando Osvaldo (January 2000). "Scurvy in capybaras bred in captivity in Argentine". Journal of Wildlife Diseases 36 (1): 97–101. doi:10.7589/0090-3558-36.1.97. பப்மெட்:10682750. 
  24. Burton M and Burton R. (2002) The International Wildlife Encyclopedia. Marshall Cavendish, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7614-7269-X, p. 384
  25. Capybara, the master of the grasses: pest or prey Sounds and Colours. Retrieved on January 23, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேபிபாரா&oldid=3929238" இலிருந்து மீள்விக்கப்பட்டது