புளியால், இந்தியாவின் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டத்தின் 5 உள் வட்டங்களில் ஒன்றாகும். சிவகங்கை - திருவாடானை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள புளியால் கிராம ஊராட்சியில் அமைந்துள்ளது. இவ்வூராட்சி காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. மேலும் புளியால் ஊராட்சி, தேவகோட்டை ஊராட்சியத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்

தொகு

புளியால் ஊராட்சி, மாவட்டத் தலைமையிடமான சிவகங்கைக்கு கிழக்கே 43 கிமீ தொலைவிலும், தேவகோட்டையிலிருந்து 13 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே உள்ள ஊர்கள், குருந்தனக்கோட்டை, திருவேகம்பத்தூர், கார்களத்தூர் 6 கிமி; முப்பையூர் 7 கிமீ தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளியால்&oldid=2713563" இலிருந்து மீள்விக்கப்பட்டது