முப்பையூர்
முப்பையூர், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், முப்பையூர் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இவ்வூர் காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
சிவகங்கை - தொண்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள முப்பையூர், தேவக்கோட்டைக்கு 11 கி.மீ. தொலைவிலும்; சிவகங்கைக்கு கிழக்கில் 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 630 402; தொலைபேசி குறியீடு எண் 04561 ஆகும். இவ்வூரின் அஞ்சலகம் சின்னகீரமங்கலத்தில் உள்ளது.
முப்பையூருக்கு அருகமைந்த சிற்றூர்கள்: திருவேகம்பத்தூர், சிறுநல்லூர், கிள்ளியூர், புளியால், திடக்கோட்டை, கார்களத்தூர், குருந்தன்கோட்டை ஆகும். அருகமைந்த நகரங்கள் தேவக்கோட்டை, சிவகங்கை, பரமக்குடி மற்றும் காரைக்குடி ஆகும்.
முப்பையூருக்கு கிழக்கில் திருவாடானை ஊராட்சி ஒன்றியம், தெற்கில் இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், வடக்கில் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், மேற்கில் காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
இதன் அருகமைந்த தொடருந்து நிலையங்கள் தேவக்கோட்டை ரோடு மற்றும் காரைக்குடி ஆகும்.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, முப்பையூர் சிற்றூரின் மக்கள்தொகை 2,562 ஆகும். ஒடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 693 (27%) ஆகும். இங்கு 645 வீடுகள் உள்ளது. சராசரி எழுத்தறிவு 70% ஆகும். [2]