பூசெகர்
பூசெகர் (Bushehr or Bushire (பாரசீக மொழி: بوشهر [buːˈʃe(h)ɾ] (ⓘ); மேலும் ரோமானிய எழுத்துக்களில் பல்வேறாக(Būshehr, Bouchehr, Buschir, Busehr) குறிக்கப் படுகின்றன. மேலும், பேன்டேர் பூசெகர் (Bandar Bushehr) (பாரசீக மொழி: ⓘ; எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு முன் இப்பெயரானது, பே அர்டாசெர் ( Beh Ardasher, Antiochia in Persis) (பண்டைக் கிரேக்கம்: Ἀντιόχεια τῆς Περσίδος Antiócheia tês Persídos)எனவும், பக்ட் அர்டாசெர் (Bukht Ardashir) எனவும் அழைக்கப்பட்டது. இந்த நகரமானது, ஈரான் நாட்டிலுள்ள பூசெகர் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.2006 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள்தொகை பரவலானது, மொத்தம் 161,674 ஆகவும், அதில் 40,771 குடும்பங்களும் அடங்கி இருந்தன.[2]
பூசெகர்
بوشهر பூசெகர், Bandar Busher, Beh Ardasher | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°58′N 50°50′E / 28.967°N 50.833°E | |
நாடு | ஈரான் |
மாகாணம் | பூசெகர் |
[Counties of Iran | Bushehr County |
Bakhsh | Central District (Bushehr County) |
ஏற்றம் | 8 m (26 ft) |
மக்கள்தொகை (2016 Census) | |
• நகர்ப்புறம் | 3,23,504 [1] |
• பெருநகர் | 3,98,581 |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
காலநிலை | Semi-arid climate#Hot semi-arid climates/BSh |
இணையதளம் | www.bushehrcity.ir |
வரலாறு
தொகுதற்போதைய நகரத்தின் தெற்கே, ரீஷையரில், கி.மு. 3000 ஆண்டில் முந்தைய ஏலம், குடியேற்றத்தின் எச்சங்கள் உள்ளன. கிரேக்க மாசிடோனியன் செலூசிட் வம்சத்தின் போது, இந்த நகரம் 'பெர்சிஸில் அந்தியோகியா' '(τηςα της by) செலூகஸ் I நிகேட்டர் என்ப்பவரால் புதுப்பிக்கப்பட்டது. சில தசாப்தங்களுக்குப் பிறகு, இந்த நகரத்தை செலூகஸின் மகன் அந்தியோகஸ் I சோட்டர் ] மீண்டும் கட்டியெழுப்பினார். அவர் அங்கு குடியேறியவர்களை, மாக்னீசியா ஆன் தி மியாண்டர் என்ற இடத்திலிருந்து மாற்றினார். மேலும் செலியூசிட் மன்னர், கி.மு. 205 ஆண்டில் அந்தியோகஸ் III தி கிரேட், கிழக்கு மாகாணங்களுக்கான அவரது பரப்புரைக்குப் பிறகு ,(212 -205 கி. மு.). 170 கி. மு. வரை, அந்தியோகியா கிரேக்க செலூசிட் ஆட்சியின் கீழ் ஆளப்பட்டிருந்தது. இது சசானிய கடற்படையின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாகும். மேலும், இந்த வம்சத்தின் முதல் மன்னரான அர்தாஷீர் Iபெயரினை இத்துறைமுகத்திற்கு வைக்கப்பட்டது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் புஷெர், தெற்கு ஈரானுக்கு நெஸ்டோரியன் கிறிஸ்டியன் விரிவாக்க இடமாக இருந்தது. 1737 ஆம் ஆண்டில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி, இந்நகரில், ஒரு வர்த்தக இடுகையைத் திறந்து, அதனை, 1753 ஆம் ஆண்டுவ வரை நடத்தியது. 1763 ஆம் ஆண்டில், அரபு ஆளுநர் புஷேர் ஷேக் நஸ்ர் அல்-மட்கூர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி க்கு ஒரு தளத்தையும் வர்த்தக பதவியையும் கட்டும் உரிமையை வழங்கினார். இது 1856 ஆம் ஆண்டில் ஆங்கிலோ-பாரசீகப் போர் நடந்து, 1856-1857 ஆம் ஆண்டில் பிரித்தானியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. பூசெகர், 1856 டிசம்பர் 9 அன்று ஆங்கிலேயரிடம் சரணடைந்தார். இது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யுனைடெட் கி பிரித்தானியக கப்பற் படையான, ராயல் நேவியின் படைக்கலங்களுக்கு, இத்துறைமுகம் தளமாக பயன்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில், புஷெர் ஒரு முக்கியமான வணிக துறைமுகமாக மாறியது. ஜெர்மனியின் வில்ஹெல்ம் வாஸ்மஸ் உட்பட, நைடர்மேயர்-ஹென்டிக் பயணம் காரணமாக, இது 1915 ஆம் ஆண்டில் மீண்டும் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.
தொழில்களில் மீன்பிடித்தல், அனல் மின் நிலையம் வழியே, மின்சாரசக்தியை உருவாக்குதல், இந்நகரத்தின் தொழில்களில் முக்கியமானவை ஆகும். அதே நேரத்தில், உள்நாட்டுப் பகுதி உலோக வேலைகள், கம்பளி விரிப்புகள் தயாரித்தல் குறிப்பிடத்க்க தொழில்களாகும். இருப்பினும் பிற தொழில்களுக்குமான அடிப்படைகள் இங்கு உருவாக்கப் படுகிறது. எடுத்துக்காட்டாக, ஜவுளி, சிமென்ட், உரம் போன்ற வணிகங்களும் நடைபெறுகின்றன. இந்நாட்டு அரசால், ஈரானிய கடற்படை தளமொன்றும், இங்கே பேணப் படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.amar.org.ir/english
- ↑ "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. Archived from the original (Excel) on 2011-11-11.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help)