பூந்தமல்லி நெடுஞ்சாலை

சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு நெடுஞ்சாலை
(பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஆங்கில மொழி: Poonamallee High Road) என்பது சென்னையையும் பூந்தமல்லியையும் இணைக்கும் ஒரு முக்கிய சாலை ஆகும். சென்னை மைய தொடருந்து நிலையம் அருகில் தொடங்கி கூவம் ஆற்றின் கரையில் மேற்காக போகும் இச்சாலை தேசிய நெடுஞ்சாலை 4 (என்.எச்.4)-ன் ஒரு பகுதியாகும்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்துக் குறிகாட்டி, பார்க் டவுன், சென்னை

இணைப்பு

தொகு

சென்னையின் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலைகளில் இதுவும் ஒன்று. இது சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் அருகே ராஜாஜி சாலையுடன் இணைகிறது. பூவிருந்தவல்லி அருகே தேசிய நெடுஞ்சாலை 4இல் முடிவடைகிறது. மேலும் சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் அருகே அமைந்துள்ள பாலம் வழியாக அண்ணா சாலையை இணைக்கிறது. 100 அடி சாலையை கோயம்பேடு சந்திப்பிலும் தேசிய நெடுஞ்சாலையை வானகரத்திலும் இணைக்கிறது.

இந்த சாலையில் அமைந்துள்ளவை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தமல்லி_நெடுஞ்சாலை&oldid=4169135" இலிருந்து மீள்விக்கப்பட்டது