பெசர்லங்கா
பெசர்லங்கா (Pesarlanka) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தெனாலி வருவாய் கோட்டத்தின் பாட்டிபுரோலு மண்டலத்தில் அமைந்துள்ளது. பெசர்லங்கா ஆந்திர பிரதேச தலைநகர் பகுதியின் ஒரு பகுதியாகும்.[2]
பெசர்லங்கா Pesarlanka | |
---|---|
கிராமம் | |
Dynamic map | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/இந்தியா ஆந்திரப்பிரதேசம்" does not exist. | |
ஆள்கூறுகள்: 16°05′37″N 80°51′10″E / 16.0937°N 80.8527°E | |
நாடு | இந்தியா |
State | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | குண்டூர் |
வட்டம் (தாலுகா) | பாட்டிபுரோலு |
அரசு | |
• வகை | Panchayati raj |
• நிர்வாகம் | பெசர்லங்கா கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 451 ha (1,114 acres) |
மக்கள்தொகை (2011)[4] | |
• மொத்தம் | 2,527 |
• அடர்த்தி | 560/km2 (1,500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 522xxx |
இடக் குறியீடு | +91– |
வாகனப் பதிவு | ஆ.பி |
புவியியல்
தொகுமண்டலத் தலைமையகமான பாட்டிப்ரோலுவின் கிழக்கே 16.0937°வடக்கு 80.8527°கிழக்கு என்ற புவியியல் கூறுகளில் பெசர்லங்கா அமைந்துள்ளது.[5] இக்கிராமம் 451 எக்டேர் (1,110 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது.[3]
மக்கள்தொகை
தொகு2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, பெசர்லங்கா கிராமத்தில் 2,527 பேர் இருந்தனர். இம்மொத்த மக்கள் தொகையில், 1,284 பேர் ஆண்களாகவும் 1,243 பேர் பெண்களாகவும் இருந்தனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 968 பெண்களாக இருந்தது. 219 குழந்தைகள் 0-6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தார்கள். இவர்களில் 120 பேர் சிறுவர்கள் மற்றும் 99 பேர் சிறுமிகளாவர். கிராமத்தின் சராசரி கல்வியறிவு 1,608 என்ற எண்ணிக்கையுடன் கல்வியறிவு சதவீதம் 69.67% ஆக இருந்தது. இந்த அளவு மாநில சராசரியான 67.41% என்பதை விட கணிசமாக அதிகமாகும்.[3]
அரசும் ஆட்சியும்
தொகுபெசர்லங்கா கிராமப் பஞ்சாயத்து கிராமத்தின் உள்ளூர் ஆட்சியமைப்பாகும்.[1] கிராமம் வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வார்டும் ஒரு வார்டு உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.[6]
பொருளாதாரம்
தொகுகிராம மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயிகள் பயிரிடும் முக்கிய பயிர்கள் வாழை, பச்சைப்பயறு, பாக்கு போன்றவையாகும்.[7]
கல்வி வசதி
தொகு2018-19 கல்வியாண்டிற்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 3 அரசுப் பள்ளிகள் இருந்தன.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 98. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ 2.0 2.1 "Declaration of A.P. Capital Region – Amendment" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Municipal Administration and Urban Development Department, Andhra Pradesh. 22 செப்டெம்பர் 2015. p. 7. Archived (PDF) from the original on 6 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2019.
- ↑ 3.0 3.1 3.2 "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 474. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 782–783. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
- ↑ Seetharam, Mukkavilli (1990-01-01). Citizen Participation in Rural Development (in ஆங்கிலம்). Mittal Publications. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170992271.
- ↑ "Island villages in Guntur district limping back to normal". The Hindu (Pesaralanka (Guntur district)). 11 October 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/island-villages-in-guntur-district-limping-back-to-normal/article159473.ece. பார்த்த நாள்: 25 February 2016.
- ↑ "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)