பெரியபட்டினம், மைசூர் மாவட்டம்

இந்தியா, கர்நாடகாவில் உள்ள நகரம்

பெரியபட்டினம் (Periyapatna) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். 12°20′N 76°06′E / 12.34°N 76.1°E / 12.34; 76.1 அமைந்த பெரியபட்டினம் கடல் மட்டத்திலிருந்து 849 மீட்டர் (2769 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பெரியபட்டினம் பெங்களூர்-மைசூர்-மங்களூர் தேசிய நெடுஞ்சாலை எண் 275-இல் அமைந்துள்ளது. பெரியபட்டினம் நகரம் மைசூர் நகரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே குசால்நகர் (குடகு மாவட்டம்) அமைந்துள்ளது.

பெரியபட்டினம்
நகரம்
பெரியபட்டினம் தாலுகாவின் வரைபடம்
பெரியபட்டினம் தாலுகாவின் வரைபடம்
பெரியபட்டினம் is located in கருநாடகம்
பெரியபட்டினம்
பெரியபட்டினம்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெரியபட்டினம் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°20′11″N 76°04′45″E / 12.33649°N 76.07918°E / 12.33649; 76.07918
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்மைசூர்
அரசு
 • வகைபேரூராட்சி
 • நிர்வாகம்பெரியபட்டினம் பேரூராட்சி மன்றம்
ஏற்றம்849 m (2,785 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்16,685
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்571107
தொலைபேசி குறியீடு08223
வாகனப் பதிவுKA-45
அருகமைந்த நகரங்கள்குசால்நகர், குடகு மாவட்டம்

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 15 வார்டுகளும் 4,031 வீடுகளும் கொண்ட பெரியபட்டினம் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 16,685 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 8,284 மற்றும் பெண்கள் 8,401 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 1014 வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1851 (11.09 %) ஆகும். சராசரி எழுத்தறிவு 85 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.51%, இசுலாமியர்கள் 15.42% , கிறித்தவர்கள் 1.01%, பௌத்தர்கள் 0.95% மற்றும் பிற சமயத்தினர் 0.12% ஆக உள்ளனர்.[1]

படக்காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு