பெரிலியம் புரோமைடு
பெரிலியம் புரோமைடு ( Beryllium bromide ) என்பது BeBr2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது நீரை நன்றாக உறிஞ்சும் மற்றும் நீரில் நன்றாக கரையும். இச்சேர்மம் நான்முக பெரிலியம் மையங்களைக் கொண்ட ஒரு பல்லுறுப்பியாகும்[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பெரிலியம் புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
7787-46-4 | |
ChemSpider | 74208 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82230 |
| |
பண்புகள் | |
BeBr2 | |
வாய்ப்பாட்டு எடை | 168.820 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
அடர்த்தி | 3.465 கி/செ.மீ3 (20 °செல்சியசு) |
உருகுநிலை | 508 °C (946 °F; 781 K) |
கொதிநிலை | 520 °C (968 °F; 793 K) |
அதிகம் | |
கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர், பிரிடின் இவற்றில் கரையும். பென்சீனில் கரையாது. |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-2.094 கிலோயூல்/கிராம் |
நியம மோலார் எந்திரோப்பி S |
9.5395 யூல்/கெல்வின் |
வெப்பக் கொண்மை, C | 0.4111 யூல்/கி கெல்வின் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | பெரிலியப்பகுப்பு காண்க |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பெரிலியம் புளோரைடு பெரிலியம் குளோரைடு பெரிலியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் புரோமைடு கால்சியம் புரோமைடு இசுட்ரோன்சியம் புரோமைடு பேரியம் புரோமைடு ரேடியம் புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பும் வேதிவினைகளும்
தொகுபெரிலியம் உலோகம் தனிம புரோமினுடன் 500 பாகை செல்சியசு முதல் 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் பெரிலியம் புரோமைடு கிடைக்கிறது.
- Be + Br2 → BeBr2
பெரிலியம் ஆக்சைடை ஐதரோ புரோமிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரிய வைப்பதாலும் பெரிலியம் புரோமைடு தயாரிக்கலாம்.
- BeO + 2 HBr → BeBr2 + H2O
பெரிலியம் புரோமைடு நீருடன் சேர்ந்து மெதுவாக நீராற்பகுப்பு அடைகிறது.
- BeBr2 + 2 H2O → 2 HBr + Be(OH)2
பாதுகாப்பு
தொகுபெரிலியம் சேர்மங்கள் நச்சுதன்மை கொண்டவை எனவே அவற்றை சுவாசிப்பதும் அல்லது உட்கொள்ளுவதும் தீங்கை விளைவிக்கும்
மேற்கோள்கள்
தொகு- ↑ Crystal modifications of Beryllium dihalides BeCl2, BeBr2, and BeI2 Troyanov, S. I. Zhurnal Neorganicheskoi Khimii (2000), 45(10), 1619-1624.