இசுட்ரோன்சியம் புரோமைடு
இசுட்ரோன்சியம் புரோமைடு (Strontium bromide) என்பது SrBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அறை வெப்பநிலையில் இசுட்ரோன்சியம் புரோமைடு வெள்ளை நிறத்துடன் மணமற்ற, படிக தூளாகக் காணப்படுகிறது. இசுட்ரோன்சியம் புரோமைடு சுடர் சோதனையில் பிரகாசமான சிவப்பு நிறத்தை அளிக்கிறது. இதனால் இசுட்ரோன்சியம் அயனிகளின் இருப்பு நிருபிக்கப்படுகிறது. இச்சேர்மம் எரிப்புப் பயன்பாடுகளையும் சில மருந்து பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
10476-81-0 | |
ChemSpider | 23635 |
EC number | 233-969-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25302 |
| |
UNII | 1NG558X5VJ |
பண்புகள் | |
SrBr2 | |
வாய்ப்பாட்டு எடை | 247.428 கி/மோல் (நீரிலி) 355.53 கி/மோல் (அறுநீரேற்று) |
தோற்றம் | வெண்மையான படிகத் தூள் |
அடர்த்தி | 4.216 கி/செ.மீ3 (நீரிலி) 2.386 கி/செ.மீ3 (அறுநீரேற்று) |
உருகுநிலை | 643 °C (1,189 °F; 916 K) |
கொதிநிலை | 2,146 °C (3,895 °F; 2,419 K) |
107 கி/100 மி.லி | |
கரைதிறன் | எத்தனால் கரைப்பானில் கரையும் டை எத்தில் ஈதர் கரைப்பானில் கரையாது |
−86.6·10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணம் |
புறவெளித் தொகுதி | P4/n (No. 85) |
Lattice constant | a = 1160.42 பைக்கோமீட்டர், c = 713.06 பைக்கோமீட்டர் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Corrosive |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் |
|
ஏனைய நேர் மின்அயனிகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇசுட்ரோன்சியம் ஐதராக்சைடுடன் ஐதரோபுரோமிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இசுட்ரோன்சியம் புரோமைடு உருவாகும்.
- Sr(OH)2 + 2 HBr → SrBr2 + 2 H2O
மாறாக இசுட்ரோன்சியம் கார்பனேட்டும் இசுட்ரோன்சியம் மூலமாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.
- SrCO3 + 2 HBr → SrBr2 + H2O + CO2(வாயு)
இந்த வினைகள் இசுட்ரோன்சியம் புரோமைடின் (SrBr2·6H2O) அறுநீரேற்றைக் கொடுக்கின்றன. இந்நீரேற்று 89 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து இருநீரேற்றாக (SrBr2·2H2O) சிதைகிறது. 180 °செல்சியசு வெப்பநிலையில் நீரற்ற SrBr2 பெறப்படுகிறது.[1]
கட்டமைப்பு
தொகுஅறை வெப்பநிலையில், இசுட்ரோன்சியம் புரோமைடு ஒரு நாற்கோணக அலகு செல் மற்றும் P4/n என்ற இடக்குழுவும் கொண்ட படிக அமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இந்த கட்டமைப்பு α-SrBr2 வடிவம் குறிப்பிடப்படுகிறது மற்றும் EuBr2, USe2 கட்டமைப்புகளுடன் ஒத்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இசுட்ரோன்சியம் புரோமைடின் கட்டமைப்பு PbCl2 வகையைச் சேர்ந்ததாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.[2] ஆனால் இது பின்னர் சரி செய்யப்பட்டது.[3][4]
சுமார் 920 கெல்வின் (650 °செல்சியசு) வெப்பநிலையில் α-SrBr2 கனசதுர புளோரைட்டு கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு β-SrBr2 என்ற மிகக் குறைவான வரிசைப்படுத்தப்பட்ட கட்டத்திற்கு முதல்-வரிசை வினைக்கு உட்பட்டு திண்ம-திண்ம நிலை மாற்றத்திற்கு உட்படுகிறது. இசுட்ரோன்சியம் புரோமைடின் பீட்டா கட்டமானது, புரோமைடு துணை அணிக்கோவையில் உள்ள விரிவான கோளாறு காரணமாக அதிக அயனி கடத்துத் திறன் கொண்டுள்ளது.[4] 930 கெல்வின் (657 °செல்சியசு) வெப்பநிலையில் இசுட்ரோன்சியம் புரோமைடு உருகும்.
படக் காட்சியகம்
தொகு-
α-வடிவ இசுட்ரோன்சியம் புரோமைடு சேர்மத்தில் இசுட்ரோன்சியம் மற்றும் புரோமின் அயனிகளின் பொதிவுகள் மாதிரி
-
படிகவியல் சார்பற்ற இசுட்ரோன்சியம் அணு எண் 1 இன் சிதைந்த சதுர எதிர்ப்பட்டக ஒருங்கிணைப்பு வடிவியல்
-
இசுட்ரோன்சியம் அணு எண் 2 இன் சதுர எதிர் பட்டக மூலக்கூற்று வடிவியல்
-
புரோமின் அணு 1 இன் தட்டையான நான்முகி ஒருங்கிணைப்பு
-
புரோமின் அணு 2 இன் உருக்குலைந்த நான்முகி வடிவம்
-
புரோமின் அணு 3 இன் நாற்கோணக மூலக்கூற்று வடிவியல்
-
புரோமின் அணு 4 இன் நாற்கோணக மூலக்கூற்று வடிவியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ Dale L. Perry, Sidney L. Phillips: Handbook of Inorganic Compounds. CRC Press, 1995, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-8671-8, (இசுட்ரோன்சியம் புரோமைடு, p. 387, கூகுள் புத்தகங்களில்).
- ↑ Kamermans, M. A. (1939-12-01). "The Crystal Structure of SrBr2.". Zeitschrift für Kristallographie - Crystalline Materials (Walter de Gruyter GmbH) 101 (1–6): 406–411. doi:10.1524/zkri.1939.101.1.406. பன்னாட்டுத் தர தொடர் எண்:2196-7105.
- ↑ R. L. Sass (1963). "The crystal structure of strontium bromide". J. Phys. Chem. 67 (12): 2862. doi:10.1021/j100806a516.
- ↑ 4.0 4.1 Hull, Stephen; Norberg, Stefan T.; Ahmed, Istaq; Eriksson, Sten G.; Mohn, Chris E. (2011). "High temperature crystal structures and superionic properties of SrCl2, SrBr2, BaCl2 and BaBr2". J. Solid State Chem. 184 (11): 2925–2935. doi:10.1016/j.jssc.2011.09.004. Bibcode: 2011JSSCh.184.2925H.