பேரியம் புரோமைடு
பேரியம் புரோமைடு (Barium bromide) BaBr2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரியம் மற்றும் புரோமின் கலந்த ஒரு கனிமச் சேர்மமாகும். பேரியம் குளோரைடு போலவே பேரியம் புரோமைடும் நீரில் நன்கு கரைகிறது. நீர்க் கரைசலில் இவ்வுப்பு நச்சுத்தன்மை கொண்டுள்ளது.
இனங்காட்டிகள் | |
---|---|
10553-31-8 (நீரிலி) 7791-28-8 (இரு நீரேறி) | |
ChemSpider | 59728 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
BaBr2 (நீரிலி) BaBr2·2H2O (இரு நீரேறி) | |
வாய்ப்பாட்டு எடை | 297.14 கி/மோல் |
தோற்றம் | வெள்ளைத் திடம் |
அடர்த்தி | 4.78 கி/செமீ3 (நீரிலி) 3.58 கி/செமீ3 (இரு நீரேறி) |
உருகுநிலை | 857 °C (1,575 °F; 1,130 K) |
கொதிநிலை | 1,835 °C (3,335 °F; 2,108 K) |
92.2 கி/100 மிலீ (0°செ) | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம், oP12, SpaceGroup = Pnma, No. 62 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−181.1 கிகலோரி/மோல் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | தீங்கானது (Xn) |
R-சொற்றொடர்கள் | R20, R22 |
S-சொற்றொடர்கள் | S28[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பேரியம் புளோரைடு பேரியம் குளோரைடு பேரியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பெரிலியம் புரோமைடு மக்னீசியம் புரோமைடு கால்சியம் புரோமைடு இசுட்ரோன்சியம் புரோமைடு ரேடியம் புரோமைடு ஈய புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமைப்பும் பண்புகளும்
தொகுபேரியம் குளோரைடு போலவே பேரியம் புரோமைடும் செஞ்சாய்சதுரப் படிகங்களாகப் படிகமாகிறது. இப்படிகங்கள் நீர் உறிஞ்சும் திறன் கொண்டவையாக உள்ளன[2]. நீர் கரைசலில் பேரியம் புரோமைடு ஓர் எளிய உப்பின் பண்புகளை வெளிப்படுத்துகிறது. பேரியம் புரோமைடு கந்தக அமிலத்திலுள்ள சல்பேட்டு அயனிகளுடன் வினைபுரிந்து பேரியம் சல்பேட்டு உப்பின் வீழ்படிவைக் கொடுக்கிறது.
ஆக்சாலிக் அமிலம், ஐதரோ புளோரிக் அமிலம் பாசுபாரிக் அமிலம் ஆகிய அமிலங்களிலும் இத்தகைய வினைகளே நிகழ்கின்றன.
தயாரிப்பு
தொகுபேரியம் சல்பைடு அல்லது பேரியம் கார்பனேட்டை ஐதரோ புரோமிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்தால் குறுகிய நேரத்தில் பேரியம் புரோமைடின் நீரேறிய வடிவத்தை தயாரிக்க முடியும்.
இக்கரைசலில் இருந்து நீரேறிய பேரியம் புரோமைடு படிகமாக்கப்படுகிறது (BaBr2•2H2O) . இப்படிகத்தை 120 பாகை செல்சியசுக்கு சூடாக்குவதன் மூலமாக நீரற்ற பேரியம் புரோமைடு பெறப்படுகிறது[3] .
பயன்கள்
தொகுஒளிப்படவியலில் உபயோகமாகும் வேதிப்பொருட்கள் மற்றும் பிற புரோமைடுகள் தயாரிப்பதற்கு பேரியம் புரோமைடே முன்னோடியாக விளங்குகிறது. பகுதிபட படிகமாக்கல் முறையில் ரேடியத்தை தூமையாக்க மேரி கியூரி பேரியம் புரோமைடை பயன்படுத்தியுள்ளார். ஏனெனில், பேரியம் புரோமைடு கரைசலில் ரேடியம் முதலில் வீழ்படிவாகிறது. ரேடியத்திற்கும் பேரியத்திற்குமான விகித வேறுபாடு கரைசலைக் காட்டிலும் வீழ்படிவில் அதிகமாக உள்ளது[4]
முன்பாதுகாப்பு
தொகுபேரியம் புரோமைடும் நீரில் கரையும் இதர பேரியம் உப்புகளும் நச்சுத்தன்மை கொண்டவையாகும். இவற்றை உட்கொள்ள நேரிட்டால் கடுமையான நச்சு விளைவுகள் உண்டாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://fscimage.fishersci.com/msds/10358.htm
- ↑
Brackett, Elizabeth B.; Breackett, Thomas E.; Sass, Ronald L. (December), "The Crystal Structures of Barium Chloride, Barium Bromide, and Barium Iodide.", The Journal of Physical Chemistry (– Scholar search), vol. 67 (published 1963), p. 2132, பார்க்கப்பட்ட நாள் 2007-12-03
{{citation}}
: Check date values in:|date=
(help); External link in
(help) [தொடர்பிழந்த இணைப்பு]|format=
- ↑ Patnaik, Pradyot (2003), Handbook of Inorganic Chemical Compounds, McGraw-Hill Professional, pp. 81–82, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8, பார்க்கப்பட்ட நாள் 2007-12-03
- ↑ Sime, Ruth Lewin (1996), Lise Meitner: A Life in Physics, University of California Press, p. 233, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20860-9, பார்க்கப்பட்ட நாள் 2007-12-03