பெருஞ் சமவெளி

பெருஞ் சமவெளி (Great Plains, சிலநேரங்களில் "the Plains") ஐக்கிய அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்று உயர்புல் பிரெய்ரி புல்வெளிகளுக்கு மேற்கிலும் கனடா, அமெரிக்க ராக்கி மலைத்தொடருக்கும் இடையேயுள்ள பரந்த சமமான நிலப்பகுதி (சமவெளி) ஆகும்; இது பெரும்பாலும் பிரெய்ரி புல்வெளிகள், ஸ்டெப்பி புல்வெளிகள், மற்றும் பிற புல்வெளிகளால் அமைந்துள்ளது. இதில்:

பெருஞ் சமவெளி
பெருஞ்சமவெளி மாநிலங்கள்
வட்டாரம்
பெருஞ்சமவெளியின் காட்சி - லிங்கன், நெப்ராஸ்கா
நாடு  ஐக்கிய அமெரிக்கா
 கனடா
நீளம் 3,200 கிமீ (1,988 மைல்)
அகலம் 800 கிமீ (497 மைல்)
பரப்பு 13,00,000 கிமீ² (5,01,933 ச.மைல்)
பெருஞ் சமவெளியின் தோராயமான பரப்பு[1]
பெருஞ் சமவெளியின் தோராயமான பரப்பு[1]
பெருஞ் சமவெளியின் தோராயமான பரப்பு[1]

அடங்கும். இப்பகுதி பெரும் திறந்தவெளி கால்நடைப்பண்ணைகளுக்காகவும் உலர்நில வேளாண்மைக்காகவும் அறியப்படுகின்றது.

கனடியப் பகுதியில் உள்ள சமவெளி கனடியப் பிரெய்ரிகள் எனப்படுகின்றன. ஆல்பர்ட்டா, சஸ்காச்சுவானின் தென்பகுதி, தென் மானிட்டோபாவின் குறுகிய பகுதிகளில் இது பரவியுள்ளது. சிறு புவியியல் பகுதியாக இருப்பினும் இந்த மூன்று மாகாணங்களின் பெரும்பாலான மக்கள்தொகை இங்குதான் வசிக்கின்றனர்.

பெருஞ்சமவெளியின் நிலப்படம் - இதில் சிவப்பாக காட்டப்பட்டுள்ள கோடு 100வது நெடுங்கோடு ஆகும்

பெருஞ்சமவெளிப் பகுதியில் கோடைக்காலம் வெப்பமாகவும் ஈரப்பதம் மிகுந்தும் குளிர்காலங்கள் மிகவும் குளிர்ந்தும் காணப்படும். இங்கு காட்டெருதுகள் பெருமளவில் இருந்தன; அதுவே இங்குள்ள மக்களின் முதன்மை உணவாகவும் இருந்தது. தற்போது இங்கு கால்நடைகளுக்கும் மக்களுக்கும் தேவையான தானியங்கள் விவசாயம் செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Wishart, David. 2004. The Great Plains Region, In: Encyclopedia of the Great Plains, Lincoln: University of Nebraska Press, pp. xiii-xviii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8032-4787-7

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருஞ்_சமவெளி&oldid=3350685" இலிருந்து மீள்விக்கப்பட்டது