பெரும்திருக்கோவில்

கேரளத்திலுள்ள சில பழமைவாய்ந்த கோவில்களை பெரும்திருக்கோவில் என்று குறிப்பிடுகின்றனர். கேரளக் கோவில் கட்டிடக் கலையின் இன்றியமையாத பஞ்சப்பிராகாரங்கள் அனைத்தும் அமைந்துள்ள கோவில்[1][2][3] என்பது தான் இவ்வாறு குறிப்பிடுவதற்கான தகுதியை அளிக்கிறது. கருவறை (பிம்பம், அல்லது விக்கிரகம்), நாலம்பலம் (கோவிலை வலம்வரும் பகுதி), விளக்குமாடம், உள்ளேயும் வெளியேயுமுள்ள பலிபீடங்கள், சேவிக்கும் மண்டபம், போன்றவை உள்ளிட்ட கர்ப்பக்கிரகத்துக்கு சுற்றிலுமுள்ள ஐந்து (பஞ்ச) பிராகாரங்களே இவை.

கேரள கோவில்களின் கட்டிடக்கலை தொகு

இந்தியாவிலுள்ள பிற பகுதிகளிலுள்ள கோவில் கட்டிடக் கலையிலிருந்து மாறுபட்ட கட்டிடக் கலையே கேரளத்தின் பழைமை வாய்ந்த கோவில்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பொதுவாக கேரள பாணி என அறியப்படும் இந்த மாதிரியில் திராவிட பாணி என்று அறியப்படும் மாதிரியிலுள்ள செதுக்கப்பட்ட தெய்வீக வண்ண உருவங்களின் வரிசைகளோ, பரந்த தன்மையோ, உயர்ந்த கோபுர அமைப்பையோ காண இயலாது. மாறாக, அவை மிகவும் சுத்தமாகவும், எளிமையாகவும், ஏராளமான காற்று மற்றும் வெளிச்சத்தை அனுமதிக்கும் வகையிலும் கட்டப்பட்டு வந்தன. இந்த பூர்வீக பாணி கேரளத்தின் தனித்துவமாகும். இவை பொதுவாக செம்புரைக்கல், செங்கல் மற்றும் மரத்தினால் செய்யப்படுகின்றன. பதினாறாவது நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்க் கட்டிடக்கலையின் செழுமை கேரள மக்களுக்குத் தெரியாது என்று தான் கருத வேண்டும். இது முதன்முதலில் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் அறிமுகப்படுத்தப்பட்டது[4].

கேரள கோவில்களின் மையப் பகுதி ''ஸ்ரீகோவில்'' (கர்ப்பக்கிருகம்) என்று அழைக்கப்படுகிறது. இந்த பிராகாரத்தில் துணைசன்னதிகளும் இருக்கும். வெளிப்புற முற்றத்தில் பொதுவாக துணை கோவில்கள் மற்றும் விருப்பத்துக்கேற்ப கோவில் குளம் ஒன்றும் இருக்கும். சரிவான கூரைகளும், ஆடம்பரமான மர அமைப்புகளும் கேரளாவில் உள்ள கோவில்களின் சிறப்பு என்று சொன்னால் தவறில்லை. அபரிமிதமான பருவமழையால் ஆசீர்வதிக்கப்பட்ட இப்பகுதியின் புவியியல், கேரளாவின் கட்டிடக்கலையை பெரிய அளவில் பாதித்துள்ளது என்பதன் சான்றே இது.

கேரளத்தின் பெரும்திருக்கோவில்கள் தொகு

கேரளத்தின் பெரும்திருக்கோவில்கள் அமைந்துள்ள மாவட்டங்களாவன, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், ஆகியவையாகும்.

  1. உதயம்பேரூர் ஏகாதசி பெரும்திருக்கோவில், எர்ணாகுளம் மாவட்டம்
  2. பாழூர் பெரும்திருக்கோவில், எர்ணாகுளம் மாவட்டம்
  3. இராமமங்கலம் பெரும்திருக்கோவில், எர்ணாகுளம் மாவட்டம்
  4. முளையங்காவு பெரும்திருக்கோவில், பாலக்காடு மாவட்டம்
  5. ஆலத்தியூர் அனுமன் கோவில், மலப்புறம் மாவட்டம்
  6. தளிப்பறம்பு ராஜராஜேசுவரர் கோவில், கண்ணூர் மாவட்டம்

மேற்கோள்கள் தொகு

  1. "தேகம் தேவாலயம்". ஜென்மபூமி. 2011-12-18. பார்க்கப்பட்ட நாள் 2023-12-12.
  2. "எண்ணின் பாரம்பரிய முக்கியத்துவம். 5 (பஞ்ச) மற்றும் NO. 7 (சப்த)". ரிசர்ச்ச் கேட். நவம்பர் 2019. Archived from the original on 2023-12-10. பார்க்கப்பட்ட நாள் 2023-12-10.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  3. செய்திகள், கைரளி. "ஆதி சக்தியின் மாறும் வடிவம்" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-12.
  4. கோட்வின்ஸம், டாக்டர் ஸி. (டிசம்பர் 2016). "கேரளாவின் கோயில் கட்டிடக்கலை பற்றிய வரலாற்று ஆய்வு" (in en) (PDF). வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான ஆராய்ச்சி இதழ் (JETIR) 3 (12): 371-380. பன்னாட்டுத் தர தொடர் எண்:2349-5162. https://www.jetir.org/papers/JETIR1702060.pdf. பார்த்த நாள்: 2023-12-10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்திருக்கோவில்&oldid=3845001" இலிருந்து மீள்விக்கப்பட்டது