பெரும் கோத்தா கினபாலு

கோத்தா கினபாலு பெருநகரப் பகுதி

பெரும் கோத்தா கினபாலு (ஆங்கிலம்: Greater Kota Kinabalu மலாய்: Zon Metropolitan Kota Kinabalu) என்பது மலேசியா, கோத்தா கினபாலு பெருநகரத்தின் எல்லைகளை நிர்ணயிக்கும் புவியியல் சொல் ஆகும்.[3]

பெரும் கோத்தா கினபாலு
பெருநகரப் பகுதி
Greater Kota Kinabalu


மேலே: பெரும் கோத்தா கினாபாலு செயற்கைக்கோள் படம்
கீழே: 2018-இல் கோத்தா கினபாலு மத்திய வணிக மாவட்டம்.[1]
நாடு Malaysia
மாநிலம் சபா
பிரிவுமேற்கு கரை
முதன்மை நகரம் கோத்தா கினபாலு
பரப்பளவு
 • மொத்தம்3,277 km2 (1,265 sq mi)
மக்கள்தொகை (2019)[2]
 • மொத்தம்1,092,400
 • அடர்த்தி333/km2 (860/sq mi)

சபா மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான கோத்தா கினபாலு மாநகரம் அமைந்துள்ள கோத்தா கினபாலு மாவட்டம் (Kota Kinabalu District); மற்றும் பெனாம்பாங் மாவட்டம் (Penampang District), துவாரான் மாவட்டம் (Tuaran District), பாப்பார் மாவட்டம் (Papar District) ஆகிய மாவட்டங்களை; இந்தப் பெரும் கோத்தா கினபாலு பெருநகரப் பகுதி உள்ளடக்கி உள்ளது.

கோத்தா கினபாலு பெருநகரப் பகுதியில் உள்ளடக்கிய அந்த மாவட்டங்களும் மேற்குக் கடற்கரைப் பிரிவின் ஒரு பகுதியாகும். 2019-ஆம் ஆண்டில், அந்த மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகை: 1.1 மில்லியன்; பரப்பளவு: 3,277 கி.மீ.2.

பொது தொகு

பெரும் கோத்தா கினபாலு எனும் பெயர் பொதுவாக மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களால் அமலாக்கம் செய்யப்படும் சமூக, பொருளாதார மற்றும் மூலோபாய மேம்பாட்டுத் திட்டமிடல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப் படுகிறது.[4]

சபா மேம்பாட்டு பெருவழி (Sabah Development Corridor) திட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒரு சிறப்பு அமைப்பான சபா பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு ஆணையம் (Sabah Economic Development and Investment Authority) தயாரித்த கொள்கை நடவடிக்கை ஆவணத்தில் இந்த வார்த்தை தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது.[5]

சபா கட்டமைப்பு திட்டம் 2033 தொகு

2033-ஆம் ஆண்டிற்குள் கோத்தா கினாபாலு மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில், மக்கள்தொகை வளர்ச்சியைத் திட்டமிடும் கொள்கை ஆவணமான சபா கட்டமைப்பு திட்டம் 2033-இல் (Sabah Structure Plan 2033) இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. கோத்தா கினபாலு வெள்ளத் தடுப்புக் குழுவின் (Greater Kota Kinabalu Flood Prevention Committee) பயன்பாட்டிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.[6][7]

புவியியல் தொகு

பெரும் கோத்தா கினபாலு பகுதி சபாவின் மத்திய மேற்கு கடற்கரையில் (Central West Coast of Sabah) அமைந்துள்ளது. இந்தப் பகுதியின் கிழக்கே குரோக்கர் மலைத்தொடராலும் (Crocker Range), மேற்கில் தென் சீனக் கடலாலும் சூழப்பட்டுள்ளது.

இந்தப் பெரும் கோத்தா கினபாலு பகுதி, சராசரியாக 10 கி.மீ. அகலம் கொண்ட கடற்கரைச் சமவெளியைக் கொண்டுள்ளது. இங்கு குறைந்த உயரமான மலைகளால் நிறையவே உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 1,951 மீட்டர் உயரம் உள்ள அலாப் மலை (Mount Alab) இந்தப் பகுதியில்தான் உள்ளது.

கோத்தா கினபாலு மத்திய வணிக மாவட்டத்திற்கு (Kota Kinabalu Central Business District) அருகில் பல தீவுகள் உள்ளன. துங்கு அப்துல் ரகுமான் தேசிய பூங்கா(Tunku Abdul Rahman National Park) ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும்.

கோத்தா கினபாலு மத்திய வணிக மாவட்டத்தில் இருந்து, 56 கிமீ தொலைவில், தென் சீனக் கடலில் மெங்காலும் தீவு (Mengalum Island) உள்ளது.

கோத்தா கினபாலு மத்திய வணிக மாவட்டம்

மக்கள் தொகை தொகு

2010-இல், பெரும் கோத்தா கினபாலுவின் மக்கள் தொகை 855,556 ஆகும். பெனாம்பாங் மாவட்டம் இப்பகுதியில் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டமாகும். அதைத் தொடர்ந்து கோத்தா கினபாலு மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகை 2019-இல் கிட்டத்தட்ட 1.1 மில்லியனாக இருந்தது.

மாவட்டம் பரப்பளவு (கிமீ²) மக்கள் தொகை (2020)[8] அடர்த்தி (மக்கள்/கிமீ²) மக்கள் தொகை (2010) அடர்த்தி (மக்கள்/கிமீ²)
கோத்தா கினபாலு 352 572,704 1,627 452,058 1,284
பெனாம்பாங் 467 152,709 327 121,934 261
துவாரான் 1,170 128,700 110 102,411 88
பாப்பார் 1,248 167,337 134 124,420 99
பெரும் கோத்தா கினபாலு 3,277 1,021,450 855,556 261

மக்கள் தொகை மையங்கள் தொகு

கோத்தா கினபாலு மாவட்டம் தொகு

 
லுயாங் நகரின் வான்வழி காட்சி.
 
கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் குரோக்கர் மலைத்தொடர்.

பெனாம்பாங் மாவட்டம் தொகு

 
பெனாம்பாங் மாவட்டத்தில் உள்ள லோக் காவி பகுதி.

துவாரான் மாவட்டம் தொகு

  • துவாரான்
  • கியுலு
  • தம்பருளி
  • தெங்கிலான்

பாப்பார் மாவட்டம் தொகு

  • கினாருட்
  • பாப்பார்
  • பெனோனி
  • கிமானிசு
  • பொங்கவான்

போக்குவரத்து தொகு

வானூர்தி தொகு

கடல் தொகு

  • செபாங்கார் கொள்கலன் துறைமுகம்
  • செபாங்கார் எரிவாயு முனையம்
  • கோத்தா கினபாலு துறைமுகம்
  • ஜெசல்டன் படகு முனையம்
  • சபா எண்ணெய் மற்றும் எரிவாயு முனையம்

முக்கிய சாலைகள் தொகு

  •   கூட்டரசு சாலை 1 (சபா)
  •   கூட்டரசு சாலை 22
  •   கூட்டரசு சாலை 500
  •   கூட்டரசு சாலை 501
  •   கூட்டரசு சாலை 503

மக்கள் போக்குவரத்து முறை தொகு

  • மேற்கு சபா தொடருந்து பாதை

மேலும் காண்க தொகு

மேற்கோள் தொகு

  1. "Kota Kinabalu". Google Search. Google Maps. பார்க்கப்பட்ட நாள் 18 May 2012.
  2. "Kota Kinabalu, Malaysia Metro Area Population 1950-2022". Macro Trends. பார்க்கப்பட்ட நாள் 13 April 2022.
  3. "Administration Structure". Sabah Lands and Surveys Department. Archived from the original on 8 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 18 May 2012.
  4. "Greater Kota Kinabalu" (PDF). Archived from the original (PDF) on 19 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021 – via Sabah Development Corridor. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Structure Plan". Town Planning Board. Archived from the original on 24 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021 – via Government of Sabah. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Three strategies to solve flooding in KK". The Borneo Post. 23 March 2012. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  7. "Achieving a System of Competitive Cities in Malaysia [Main Report]" (PDF). World Bank Reimbursable Advisory Service Social, Urban, Rural, and Resilience Global Practice. November 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021 – via World Bank.
  8. "Sabah". www.mycensus.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2022-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்_கோத்தா_கினபாலு&oldid=3654428" இலிருந்து மீள்விக்கப்பட்டது