பெலீச்ச பியாத்தோ
பெலீச்ச பியாத்தோ (Felice Beato, 1832 – சனவரி 29, 1909), அல்லது பீலிக்சு பியாத்தோ (Felix Beato)[note 1] இத்தாலிய–பிரித்தானிய ஒளிப்படக் கலைஞர்[note 2]. கிழக்கு ஆசியாவில் ஒளிப்படங்களை எடுத்த முதல்நபர்களில் இவரும் ஒருவர். போர்க்காலங்களில் ஒளிப்படம் எடுத்த முதல் நபர்களில் ஒருவராகவும் இருந்தார். இவரது பாணிக்காகவும் தனியுருவப் படங்களுக்காகவும் ஆசியா, நடுநிலப் பகுதிகளிலிருந்தக் கட்டிடங்கள், இயற்கைக் காட்சி அகலப்பரப்புப் படங்களுக்காகவும் அறியப்படுகிறார். பியாத்தோ பல நாடுகளுக்கும் சுற்றுலா சென்று அந்நாட்டு இயற்கைக் காட்சிகளையும் மக்களையும் நிகழ்வுகளையும் ஒளிப்படங்களாக ஐரோப்பிய, வட அமெரிக்க மக்களிடையே கொண்டு சேர்த்தார். இவரது படைப்புகளில் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857, இரண்டாம் அபின் போர் ஆகியவையும் அடங்கும்; இவை ஒளிப்பட இதழியலில் முன்னோடி எனலாம். மற்ற ஒளிப்படக் கலைஞர்களிடையே இவரது தாக்கம் இருந்தது. குறிப்பாக இவர் கற்பித்த, உடன் பணி செய்திருந்த யப்பானியக் கலைஞர்களிடையே ஆழமான, நிலைத்த பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.
ஃபெலீச்ச பியாத்தோ | |
---|---|
பியாத்தோ, அடையாளம் காணப்படாத ஒளிப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டது (தாமியாகக் கூட இருக்கலாம்), c. 1866 | |
பிறப்பு | 1832 வெனிசு, லொம்பார்டி-வெனீசியா இராச்சியம் |
இறப்பு | சனவரி 29, 1909 புளோரன்சு, இத்தாலி இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
மற்ற பெயர்கள் | பீலிக்சு பியாத்தோ |
பணி | ஒளிப்படக் கலைஞர் |
அறியப்படுவது | கிழக்கு ஆசியாவில் ஒளிப்படங்கள் எடுத்த முதல் நபர்களில் ஒருவர்; போர் ஒளிப்படங்களை எடுத்த முதல்வர்களிலும் ஒருவர் |
உறவினர்கள் | அந்தோணியோ பியாத்தோ (உடன்பிறப்பு) |
இளமையும் அடையாளமும்
தொகு2009இல் கண்டெடுக்கப்பட்ட இவரது மரணச் சான்றிதழ் ஒன்றில் பியாத்தோ 1832ஆம் ஆண்டு வெனிசு நகரில் பிறந்தவர் என்றும் சனவரி 29, 1909இல் புளோரன்சில் இறந்தார் என்றும் பதியப்பட்டுள்ளது. மேலும் இச்சான்றிதழில் இவரு ஓர் பிரித்தானியர் என்றும் திருமணமாகாதவர் என்றும் பதியப்பட்டுள்ளது.[3][note 3] பியாத்தோவின் இளமைக் காலத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் கிரீசின் கொர்ஃபூ தீவிற்கு குடி பெயர்ந்திருக்கலாம். அப்போது கொர்ஃபூ தீவு பிரித்தானிய கடல்கடந்த பகுதியான ஐயோனியத் தீவுகளின் அங்கமாக இருந்தது. இதுவே பியாத்தோவின் பிரித்தானிய குடிமைக்கு காரணமாகவும் இருக்கலாம்.[3][4][note 4]
பல ஒளிப்படங்களிலும் "பெலீச்ச அந்தோனியோ பியாத்தோ" என்றும் "பெலீச்ச அ. பியாத்தோ" என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததால் சமகாலத்தில் இதே பெயருடன் மற்றுமொரு ஒளிப்படக் கலைஞரும் எகிப்து, யப்பான் நாடுகளுக்கு சென்றாரோ என்ற ஐயம் இருந்தது. 1983இல் இதற்குத் தீர்வாக "பெலீச்ச அந்தோனியோ பியாத்தோ" என்பது இரு சகோதரர்கள், சில நேரங்களில் பெலீச்ச பியாத்தோவும் அந்தோனியோ பியாத்தோவும் கையொப்பத்தைப் பகிர்ந்தவாறு இணைந்து பணியாற்றினர் என்று சண்டல் எடெல் [6] சுட்டிக்காட்டினார். இந்தக் கையொப்பத்தால் எழுந்த குழப்பத்தால் இன்று வரை இந்த இரு ஒளிப்படக் கலைஞர்களில் எது யார் எடுத்தது என்பதை அடையாளப்படுத்த இயலாதுள்ளது.
நடுநிலக் கடல், கிரீமியா, இந்தியா
தொகுஒளிப்படக் கலைஞராக பெலீச்ச பியாத்தோவின் துவக்கத்தைக் குறித்து தெளிவான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் தனது முதல் ஓளிப்படக்கருவி வில்லையை பாரிசில் 1851இல் வாங்கியதாகத் தெரிகிறது.[7] பிரித்தானிய ஒளிப்படவியலாளர் ஜேம்சு இராபர்சனை மால்ட்டாவில் 1850இல் சந்தித்து அவருடன் இணைந்து 1851இல் கான்ஸ்டண்டினோபில் சென்றுள்ளார். 1855இல் ஜேம்சு இராபர்சன் (1813–88), இவருக்கு மச்சானானார். அரச நாணயச்சாலையில் தலைமை அதிகாரியாக இருந்த இராபர்ட்சன் தனது முதல் வணிகநோக்கிலான ஒளிப்பட நிலையத்தை1854-56 வாக்கில் திறந்தார். இந்த நாணயச்சாலையில் இராபர்சன் 1843இலிருந்து பணியில் இருந்துள்ளார். 1840களில் இராபர்சன் ஒளிப்படங்கள் எடுக்க கற்றுக் கொண்டுள்ளார்.[8] இராபர்ட்சனுடன் பியாத்தோ இணைந்து "ராபர்ட்சன் & பியாத்தோ" என்ற வணிக முயற்சியைத் தொடங்கினர். இவர்களுடன் பியாத்தோவின் அண்ணன் அந்தோனியோவும் இணைந்து கொண்டார். மூவரும் மால்ட்டா, கிரீசு, எருசலேம் பகுதிகளில் உள்ள இயற்கைக் காட்சிகளை ஒளிப்படம் எடுத்து வந்தனர். இந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் "ராபர்ட்சன், பியாத்தோ & கோ." என்ற ஒப்பம் உள்ளது. இதில் "& கோ." அந்தோனியோவைக் குறிப்பதாகும்.[9]
1854இன் பிற்பகுதியில் அல்லது 1855 முற்பகுதியில் ஜேம்சு இராபர்ட்சன் பியாத்தோவின் உடன்பிறப்பான லியோனில்டா மாரியா மாடில்டா பியாத்தோவை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.[7]
1855இல் பெலீச்ச பியாத்தோவும் ராபர்ட்சனும் கிரிமியா சென்றனர். அங்கு நடந்து கொண்டிருந்த கிரீமியப் போரை நாளிதழ்களுக்கு விவரித்து வந்தனர். பியாத்தோ இராபர்ட்சனின் உதவியாளராக இருப்பினும்[10] போர்க்கள நிலைகளால் தனியாக செயல்படும் நிலைகள் ஏற்பட்டன. முந்தைய நிருபர் பென்டன் மிகவும் கண்ணியமான முறையில் அறிவித்த வந்த நிலையில் பியாத்தோவும் ராபர்ட்சனும் மாறாக அழிவுகளையும் மரணங்களையும் காட்சிப்படுத்தினர்.[11] செப்டம்பர் 1855இல் செவஸ்தபோல் வீழ்ந்ததை ஒளிப்படம் எடுத்தனர். 60 படங்கள் கொண்ட இத்தொகுப்பு[12] போரின் போக்கை மாற்றின. போர்க்கால ஒளிப்பட இதழியலுக்கு இவை முன்னோடியாகவும் வரையறுக்கும் நிகழ்வுகளாகவும் அமைந்தன.[13]
பெப்ரவரி 1858இல் பியாத்தோ கொல்கத்தா வந்தடைந்தார். வட இந்தியா முழுவதும் பயணித்து சிப்பாய்க் கிளர்ச்சி அழிவுகளையும் பின்விளைவுகளையும் ஆவணப்படுத்தினார்.[14][note 5] இக்காலகட்டத்தில் முதன்முறையாக உயிரற்ற சடலங்களின் ஒளிப்படங்களை எடுத்தார்.[16] தில்லி, கான்பூர், மீரட், பெனாரசு, அமிருதசரசு, ஆக்ரா, சிம்லா, லாகூர் நகரங்களுக்கும் சென்று காட்சிகளைப் படம் பிடித்துள்ளார்.[17] சூலை 1858இல் இவரது மூத்தவர் அந்தோனியோவும் வந்து சேர்ந்து கொண்டார். இருவரும் உடல்நலக் காரணங்களால் திசம்பர் 1859இல் இந்தியாவை விட்டு எகிப்து சென்றடைந்தனர். 1862இல் தீபையில் ஒளிப்பட நிலையம் திறந்தனர்.[18]
சீனா
தொகுடாக்கு கோட்டைகள்
தொகுகோடை அரண்மனை
தொகுயப்பான்
தொகுபர்மா (தற்கால மியான்மர்) மற்றும் பிந்தைய ஆண்டுகள்
தொகுஇறப்பு
தொகுபியாத்தோ ரங்கோன் அல்லது மண்டலையில் 1905 அல்லது 1906 வாக்கில் இறந்ததாக துவக்கத்தில் நம்பப்பட்டாலும் [19] 2009இல் கண்டெடுக்கப்பட்ட மரணச் சான்றிதழின்படி பியாத்தோ இத்தாலியின் புளோரன்சில் சனவரி, 29, 1909இல் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Bennett, Photography in Japan, p. 86.
- ↑ Clark, Fraser, and Osman, passim.
- ↑ 3.0 3.1 Bennett, History of Photography in China, 1842–1860, p. 241.
- ↑ 4.0 4.1 Dobson, "'I been to keep up my position'", p. 31.
- ↑ Gray, p. 68.
- ↑ Zannier, Antonio e Felice Beato, n.p.
- ↑ 7.0 7.1 Clark, Fraser, and Osman, p. 90.
- ↑ Broecker, p. 58; Clark, Fraser, and Osman, pp. 89, 90.
- ↑ Pare, Photography and Architecture, p. 245 (citing Vaczek and Buckland, p. 190); Clark, Fraser, and Osman, pp. 90–91.
- ↑ Hannavy, J., Encyclopedia of Nineteenth-Century Photography, Routledge, 2013, p. 128
- ↑ Greenough, p. 21; Pare, "Roger Fenton", p. 226.
- ↑ Broecker, p. 58.
- ↑ Gartlan, L., "James Robertson and Felice Beato in the Crimea: Recent findings," History of Photography, Vol. 29, No. 1, 2005, pp72-80
- ↑ Harris, p. 23; Dehejia, p. 121; Masselos and Gupta, p. 1.
- ↑ Gernsheim, p. 96.
- ↑ Zannier, "Beato", p. 447.
- ↑ Harris, p. 23; Clark, Fraser, and Osman, pp. 91–92.
- ↑ Clark, Fraser, and Osman, pp. 90, 91.
- ↑ Robinson, p. 41; Clark, Fraser, and Osman, p. 116; Zannier, "Beato", p. 446.
குறிப்புகள்
தொகு- ↑ பெலீச்ச என்பதே ஆரம்ப பெயரெனத் தெரிகிறது. இருப்பினும் பீலிக்சு என்பதே அவர் விரும்பிய பெயராகும்.[1] அவரது வாழ்நாளில் பெரும்பாலான அச்சுப்பிரதிகளில் அவர் "சிக்னோர் பியாத்தோ" என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்.[2]
- ↑ இக்கட்டுரையில் photography என்ற சொல்லிற்கு இணையாக ஒளிப்படம் என்றும ஒளிப்படக் கலை, ஒளிப்படக் கலைஞர் என்றும் கையாளப்பட்டுள்ளது. இணையத்தில் இது சில நேரங்களில் புகைப்படம், புகைப்படக் கலைஞர் அல்லது நிழற்படம், நிழற்படக் கலைஞர் என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது
- ↑ அண்மைய ஆய்வுகளின்போது 1858இல் பியாத்தோ விண்ணப்பித்திருந்த பயணப்படிவம் ஒன்றில் இவர் 1833இல் அல்லது 1834இல் கொர்ஃபு தீவில் பிறந்தார் எனக் குறிப்பிடுகின்றது.[4]
- ↑ பியாத்தோ பலகாலமாக பிரித்தானியர், இத்தாலியர், கொர்பு இத்தாலியர், கிரேக்கர் என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தின் குடிபெயர்வினாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏட்ரியாடிக் வரலாற்றாலும் இவை அனைத்துமே பொருத்தமானவை. கொர்ஃபு 1386இலிருந்து 1815 வரை வெனிசிய பகுதியாகவும் இல்லாமலும் இருந்து வந்துள்ளது. 1815இல் ஏற்பட்ட பாரிசு உடன்படிக்கையின்படி இதுவும் மற்ற ஐயோனியன் தீவுகளுடன் பிரித்தானியக் கட்டுப்பாட்டில் வந்தது. 1864இல் கொர்ஃபு கிரீசிற்கு அளிக்கப்பட்டது. பியாத்தோ குடும்பத்தின் ஒருபகுதியினர் 17ஆம் நூற்றாண்டிலேயே கொர்ஃபுவிற்கு குடிபெயர்ந்ததாகவும் வெனிசு இராச்சியத்தின்போது இக்குடும்பம் இத்தீவின் முதன்மையான வெனிசிய சீமான்களாக இருந்ததாகவும் பதியப்பட்டுள்ளது.[5]
- ↑ கெர்ன்சம் பியாத்தோவும் ராபர்ட்சனும் இணைந்து இந்தியா சென்றதாகக் கூறினாலும் இப்போது பியாத்தோ தனியாகவே சென்றுள்ளார் என கருதப்படுகிறது.[15]
வெளி இணைப்புகள்
தொகு- Biography of Felice Beato, with links to 40 photographs. J. Paul Getty Museum.
- Gallery of Felice Beato photographs (53 images including landscapes and portraits). The Freer Gallery of Art and Arthur M. Sackler Gallery Archives.
- "Photographic views of Lucknow taken after the Indian Mutiny". Brown University Library; Anne S. K. Brown Military Collection.
- Photographs by Beato, "Japanese Old Photographs in Bakumatsu-Meiji Period". Nagasaki University Library.
- Collections Online, s.v. "Beato, Felice" பரணிடப்பட்டது 2010-07-27 at the வந்தவழி இயந்திரம். Canadian Centre for Architecture.
- "Photographers: Felice Beato, 1825–1908" at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 9 மே 2007). Asia through the Lens. Bachmann Eckenstein Art & Antiques, 2006. Archived by the Wayback Machine on 9 May 2007.
- Catalogue search for "Beato, Felice". New York Public Library.
- Gallery of Felice Beato photographs from Wellcome Images. (74 images from China and India). Wellcome Library, London.
- Fostinum: Felice Beato