பேச்சு:ஆதாமின் பாலம்
தகவல்
தொகுநல்ல தகவல். நாசா படத்தை வடக்கு மேலே இருக்குமாறு திருப்பி வைத்தீர்களானால் நல்லது. என் தனிப்பட்ட கருத்து, அந்தப் பாலத்தைப் பலபடுத்தி ஒரு புதிய பாலத்தைக் கட்டினால் பல நன்மைகள் உண்டு என்பதே. அது என்ன நோக்கம்: இலங்கையில் இருக்கும் சிவனொளிபாத மலைக்கு Adam's peak என்றும், ராமர் பாலத்திற்கு Adam's bridge என்றும் ஆங்கிலேயர் பெயர் வைக்கலாம்.
இராமர் பாலம் எதிர் ராமர் பாலம் இலக்கனப்படி இ வரவேண்டுந்தானே?--டெரன்ஸ் \பேச்சு 14:23, 1 ஏப்ரல் 2007 (UTC)
- டெரன்ஸ் சொல்வது போல, இராமர் பாலம் என்று இருப்பதே நல்லது என்பது என் கருத்து.--செல்வா 15:13, 1 ஏப்ரல் 2007 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.indianexpress.com/full_story.php?content_id=17736
- In இராமர் பாலம் on 2007-05-06 10:24:18, 404 Not Found
- In இராமர் பாலம் on 2007-05-06 11:32:36, 404 Not Found
- In இராமர் பாலம் on 2007-05-14 00:57:19, 404 Not Found
பெயர் மாற்றக் கோரிக்கை
தொகுஇராமர் பாலம் என்பது நுண்ணரசியல் காரணங்களுடன் அண்மையில் சூட்டப்பட்டிருக்கக்கூடிய பெயர். பார்க்க - http://sethusamudram.info/ இந்தப் பாலம் குறித்த தகவல்கள் இடம் பெறும் கட்டுரைகள் அனைத்திலும் கவனம் தேவை. நடுநிலையான அல்லது வரலாற்றுக் கோணத்தில் பெரிதும் புழங்கிய பெயரைப் பயன்படுத்தலாம். ஆதம் பாலம் என்று கூறினாலும் தவறாகாது.--Ravishankar 19:33, 18 அக்டோபர் 2007 (UTC)
இதை நாம் ஏன் பாலம் என்று அழைக்கிறோம்? இது தொடர்ச்சியான நில இணைப்பாக இருப்பதால் இதைப் பாதை என்று தானே அழைக்க வேண்டும். --Jeyapal 17:39, 1 அக்டோபர் 2008 (UTC)
- இதை ஆதம் பாலம் என்று அழைக்கப்படவேண்டும் எனக் கருதிகிறேன். இராமர் பாலம் என்பது பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மிகக் குறுகியக் காலத்திற்கு முன்னர் சூட்டப்பட்டுள்ளதாகக் கருதிகிறேன்--கார்த்திக் 04:40, 4 ஏப்ரல் 2009 (UTC)
இராமர் பாலம் என்பது தவறு
தொகுஇராமர் பாலம் என்பது தவறான கருத்து. இலங்கையும் இந்தியாவும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஒன்றாக இருந்தவை . இடையில் ஏற்பட்ட கடற்கோள்கள் காரணமாக பள்ளமாக இருந்த பகுதி நீர் சூழ்ந்து விட்டது. உயரமாக இருக்கும் பகுதிகள் இன்னமும் ஆங்காங்கே தெரிகின்றன. இவைதான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள திட்டுகள் ஆகும். இதில் இராமர் என்கிருந்து வந்தார் என்பது தெரியவில்லை.--Kirusanthan 14:51, 27 பெப்ரவரி 2010 (UTC)
- நானும் இதனை வழிமொழிகின்றேன். என்ன பெயரில் இருந்தால் நடுநிலையாக இருக்கும் என்று கருத்து கூறுங்கள்.--செல்வா 16:34, 26 பெப்ரவரி 2010 (UTC)
- உலகின் முதல் மனிதரான ஆதம் இந்த பாலத்தை கடந்தே இலங்கையிலிருந்து இந்தியா வழியாக அரேபியா போய் சேர்ந்தார் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இதன் அடிப்படையிலேயே இது ஆதம் பாலம் என அழைக்கப்படுகின்றது. மாறாக இந்த பாலத்தை கண்டுபிடித்த ஒரு வெளி நாட்டு நிலப்படவியலாளரின் பெயரிலேயே இது ஆதம் பாலம் என அழைக்கப்படுவதாக எங்கோ படித்த ஞாபகம். எது எப்படியோ ஆதம் பாலம் என்பதே சரி.--Arafat 05:12, 27 பெப்ரவரி 2010 (UTC)
- `சேது' என்பது வடமொழிச் சொல் என்று கூறிவருகின்றனர். அது முற்றிலும் தவறு. சங்க இலக்கியங்களான அகநானூறு 79-7, 394-6, நற்றிணை 213-4, 359-1, பெரும்பாணாற்றுப் படை 306 ஆகிய பாடல்களில் சேறு, மணல் ஆகியவை சேரும் இடத்தைச் சேது என்றும் அந்த மண்ணை ஆண்ட மன்னர்களையும் மக்களையும் சேர்வை என்றும் குறிப்பிடுகின்றனர். எனவே, சேது என்பது தமிழ்ச் சொல்லே.இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இயற்கையாக மணல் சேருகின்ற தன்மையை அங்குள்ள மக்கள் சேர்வது என்று அழைத்து, பின்னர் சேது என்று அழைத்து வந்திருக்கிறார்கள். ஆற்றுநீரில் நீர்வரத்துக் குறைந்த காலங்களில் ஆற்று முகத்துவாரத்தில் மணல் சேர்ந்து திடலாகி இருக்கும். இது ஒரு புவியியல் தன்மை, நீரியல் தன்மை மற்றும் சேற்றியல்தன்மை. இத்தகைய திடல் ஆற்று முகத்துவாரங்களிலும் தரவைக் கடல்களிலும் உருவாகின்றன. ஆழம் குறைந்த கடலே தரவைக் கடல் .அதனால் "சேது" என்னும் பெயருடன் இணைத்துப் பெயரிடுவதே சிறந்தது. --Kirusanthan 14:22, 27 பெப்ரவரி 2010 (UTC)
- எந்த ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலும் அல்லாமல், Kirusanthan குறிப்பிட்டிருப்பதுபோல உண்மையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பெயரிட்டால் அதுவே நடுநிலமையாக இருக்கும் எனக் கருதுகின்றேன். அப்படியானால், ஏன் ‘சேது' என்ற சொல்லுடன் தொடர்பு கொண்ட ஒரு பெயரை தெரிவு செய்யக் கூடாது?--கலை 01:15, 28 பெப்ரவரி 2010 (UTC)
- `சேது' என்பது வடமொழிச் சொல் என்று கூறிவருகின்றனர். அது முற்றிலும் தவறு. சங்க இலக்கியங்களான அகநானூறு 79-7, 394-6, நற்றிணை 213-4, 359-1, பெரும்பாணாற்றுப் படை 306 ஆகிய பாடல்களில் சேறு, மணல் ஆகியவை சேரும் இடத்தைச் சேது என்றும் அந்த மண்ணை ஆண்ட மன்னர்களையும் மக்களையும் சேர்வை என்றும் குறிப்பிடுகின்றனர். எனவே, சேது என்பது தமிழ்ச் சொல்லே.இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இயற்கையாக மணல் சேருகின்ற தன்மையை அங்குள்ள மக்கள் சேர்வது என்று அழைத்து, பின்னர் சேது என்று அழைத்து வந்திருக்கிறார்கள். ஆற்றுநீரில் நீர்வரத்துக் குறைந்த காலங்களில் ஆற்று முகத்துவாரத்தில் மணல் சேர்ந்து திடலாகி இருக்கும். இது ஒரு புவியியல் தன்மை, நீரியல் தன்மை மற்றும் சேற்றியல்தன்மை. இத்தகைய திடல் ஆற்று முகத்துவாரங்களிலும் தரவைக் கடல்களிலும் உருவாகின்றன. ஆழம் குறைந்த கடலே தரவைக் கடல் .அதனால் "சேது" என்னும் பெயருடன் இணைத்துப் பெயரிடுவதே சிறந்தது. --Kirusanthan 14:22, 27 பெப்ரவரி 2010 (UTC)
எந்த ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலும் அல்லாமல் அனைத்து மொழிகளிலும்,ஆவணங்களிலும் இதே பெயரே உள்ளது.ஆதம் பாலம் என்பது இடையில் திணிக்கப்பட்ட பெயரல்ல. இவ்விசயத்தில் புதியபெயரை இடவேண்டும் என நினைப்பதே நடுநிலமையற்ற கருத்தாகும்.--Hibayathullah 12:43, 28 பெப்ரவரி 2010 (UTC)
மறுபெயரிடு பக்கம்
தொகுபக்கம் மறுபெயரிடு தயவு செய்து ஆதாம் பாலம் / இராமர் பாலம் மத நடுநிலைமை என்று.