பேச்சு:கடனீர் இடுக்கேரி

கடல்+நீர் = கடனீர் என்பதற்குப் புணர்ச்சி விதி, ஒத்த எடுத்துக்காட்டுகள் உள்ளனவா? கடல்நீர் ஏரி என்று தலைப்பைப் பிரித்து எழுதினால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.--இரவி (பேச்சு) 07:10, 10 மார்ச் 2012 (UTC)

ல் + ந = ன என்பது இப்பக்கத்திற் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையிற் கடனீரேரி என்றே பயன்படுத்தப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 13:53, 10 மார்ச் 2012 (UTC)

ஆம். இலங்கையில் அவ்வாறே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. --மதனாஹரன் (பேச்சு) 02:45, 18 மார்ச் 2012 (UTC)

ல் + ந = ன

தொகு

தமிழக வழக்கில் செயல்பாடு (செயற்பாடு), செயல்முறை (செயன்முறை), தொழில்நுட்பம் (தொழினுட்பம்) என்றவாறு பெரும்பாலான சொற்கள் இலக்கணப் பிழையாகவே பயன்படுத்தப்படுகின்றன. மேற்படி ல் + ந = ன என்பதன் இலக்கண விதியைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வலைத்தளத்திற் பின்வருமாறு தரப்பட்டுள்ளது:

2. அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழியில் முதலில் வந்த நகரமெய் திரிந்த பின்பு நிலைமொழி இறுதியில் உள்ள லகர ளகர மெய்கள் கெடும். (லகரத்தின் முன் வரும் நகரம் னகரமாகவும், ளகரத்தின் முன்வரும் நகரம் ணகரமாகவும் திரியும். இவ்வாறு திரிவதற்கு விதி ‘னல முன் றனவும்’ என்ற நூற்பாவில் பின்னர்க் கூறப்படும்.)

சான்று:

அல்வழி

தோன்றல் + ல்லன், தோன்ற(ல்) + ல்லன், தோன்ற + னல்லன், தோன்றனல்லன்

வேள் + ல்லன், வே(ள்) + ல்லன், வே + ணல்லன், வேணல்லன்

(வேள் – வேளிர் குலத் தலைவன்)

வேற்றுமை தோன்றல் + ன்மை, தோன்ற(ல்) + ன்மை, தோன்ற + னன்மை, தோன்றனன்மை

வேள் + ன்மை, வே(ள்) + ன்மை, வே + ணன்மை, வேணன்மை


இச்சான்றுகளில் லகரத்தை அடுத்து வந்த நகரம் னகரமாகவும், ளகரத்தை அடுத்து வந்த நகரம் ணகரமாகவும் திரிந்த பின்பு, நிலைமொழி இறுதியில் உள்ள லகர, ளகர மெய்கள் கெட்டன.

--பாஹிம் (பேச்சு) 03:38, 20 ஏப்ரல் 2012 (UTC)

விரிவான விளக்கத்துக்கு, நன்றி--இரவி (பேச்சு) 06:46, 21 ஏப்ரல் 2012 (UTC)

தலைப்பு பற்றி

தொகு

கடனீரேரி என்ற தலைப்பு lagoon என்பதற்குத்தான் பொருத்தமோ என்று தோன்றுகின்றது. lagoon க்கு த.வி. யில் கட்டுரையும் இல்லை. விக்சனரியில், Fjord க்கு மலையிடைக் கடல் நுழைவழி எனக் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒருவேளை மிகப் பொருத்தமான தலைப்போ என்றும் தோன்றுகின்றது. கருத்துக்களைப் பகிருங்கள். பெயர் மாற்றம் செய்யத் தேவையேற்படின் செய்து விடலாம்.நன்றி.--கலை (பேச்சு) 14:00, 9 ஆகத்து 2012 (UTC)Reply

Lagoon என்பது களப்பையே குறிக்கும் (எ-டு: மட்டக்களப்பு). --மதனாகரன் (பேச்சு) 08:33, 10 ஆகத்து 2012 (UTC)Reply
களப்பு என்பது தமிழ்ச் சொல்லா? கடனீரேரி என்ற தலைப்பு பொருத்தமாக இருக்காதா? தவிர Fjord க்கு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்?--கலை (பேச்சு) 08:45, 10 ஆகத்து 2012 (UTC)Reply
Fjord என்ற சொல்லுக்கு வேறு தமிழாக்கம் வேண்டுமென்றே நானும் நினைக்கிறேன். பின்வருபவற்றை வேறுபடுத்த வேண்டும். -- சுந்தர் \பேச்சு 09:25, 10 ஆகத்து 2012 (UTC)Reply
lagoon - களப்பு, கடனீரேரி?
backwater - காயல்?
swamp - சதுப்பு
Fjord?
atoll - பவளத்தீவு?

நான் வேறுபடுத்த வேண்டும் என நினைத்தவை:

Pond - குளம்
Lake - ஏரி
Lagoon - களப்பு, கடனீரேரி, கடற்கரைக்காயல் (தமிழ் விக்சனரி)?
Fjord - கடனீரேரி, மலையிடைக் கடல் நுழைவழி (தமிழ் விக்சனரி)?

--கலை (பேச்சு) 10:19, 10 ஆகத்து 2012 (UTC)Reply

தலைப்பு மாற்றக் கோரிக்கை

தொகு

இங்கேயும், பேச்சு:கச்சாய் கடல் நீரேரி கட்டுரையிலும் நிகழ்ந்த உரையாடலின்படி, இந்தக் கட்டுரையின் தலைப்பை மாற்றலாம் என நினைக்கின்றேன். ஆனால் என்ன தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இந்தக் கட்டுரைக்கு, விக்சனரியில் உள்ளதுபோன்று, மலையிடைக் கடல் நுழைவழி சரியாக இருக்குமா? ஏனைய சொற்களையும் ஒருதடவை சரிபார்த்தால் நல்லது. கேணி என்பதன் ஆங்கிலப் பதம் என்ன?--கலை (பேச்சு) 09:10, 5 செப்டெம்பர் 2012 (UTC)Reply

கேணியை Pond எனலாமோ?--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 10:00, 5 செப்டெம்பர் 2012 (UTC)Reply
இலங்கை வழக்கில் கேணி என அழைக்கப்படுவது குளம் அளவுக்கு பெரியதாக இல்லாமல் இருக்கும் ஒரு நீர்நிலை. ஏனைய சொற்களுக்கும் உங்கள் பரிந்துரையைத் தாருங்கள் செந்தி.--கலை (பேச்சு) 10:44, 5 செப்டெம்பர் 2012 (UTC)Reply
small tank என்றும் அழைக்கலாம். கேணிக்கு தொட்டில் என்றும் கருத்து உண்டு.

Pond = தடாகம்? tank = குளம்

நீர்நிலைவகைகள்!!

தொகு

இலைஞ்சி, பண்ணை,ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை வலயம், சுனை, சிறை, பட்டம்,உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, எரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி,தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம்,நளினி, இலந்தை, மூழி, குழிகுளம் (http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF&table=kadirvelu)--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:20, 5 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் ஒன்றையும் காணோமே?--கலை (பேச்சு) 21:31, 5 செப்டெம்பர் 2012 (UTC)Reply
இங்கே பாருங்கள், ஒரு தொகுப்பு ஒன்று செய்கின்றேன்..ஏனையவர்களும் இதைத் திருத்த உதவினால் நன்று. பயனர்:Drsrisenthil/நீர்நிலைகள்
அருமை செந்தி. சுனையும், ஆவியும் கூட வழக்கில் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன், மறந்துவிட்டது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்குப் போகும் வழியில் தாமிரபரணியாற்றுப் படுகையில் பல சுனைகள் உள்ளன. அங்கே எங்கள் குலதெய்வக் கோயிலின் அருகே அருஞ்சுனைகாத்த அய்யனார் கோயில் என்று ஒன்று உண்டு. -- சுந்தர் \பேச்சு 06:31, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

http://tamilaasan.blogspot.in/2010_04_01_archive.html எனும் பதிவிலிருந்து:

-- சுந்தர் \பேச்சு 07:30, 7 அக்டோபர் 2012 (UTC)Reply

தலைப்பு மாற்றம்

தொகு

மிகவும் விளக்கமாக பல்வேறு நீர்நிலைகள் பற்றி அந்தப் பக்கத்தில் கொடுத்ததற்கு நன்றி செந்தி. அவற்றை உங்கள் பக்கத்தில் இருந்து நீர்நிலைகள் சொல்பற்றி உரையாடப்படும் பக்கத்திற்கு/பக்கங்களிற்கு நகர்த்தலாமா? மேலும் அவற்றில் fjord என்பதற்கான தமிழ்ச் சொல் இல்லாதபடியினால், விக்சனரியில் உள்ளது போன்றே மலையிடைக்கடல் நுழைவழி என மாற்றலாம் என நினைக்கின்றேன். எவரும் இதனை ஏற்க மறுக்காவிட்டால் அப்படியே மாற்றலாம் என நினைக்கின்றேன். மலையிடைக்கடல் நுழைவழி என்பது சரியாக இருக்குமா அல்லது மலையிடைக் கடல் என்பது சரியாக இருக்குமா?--கலை (பேச்சு) 06:51, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

முகநூலில் செல்வா இதுபற்றி அளித்த மறுமொழியை குறிப்புக்காக இடுகிறேன்:
இது கடலை ஒட்டி உள்ள உயர்ந்த பாறை அல்லது மலையிடையே இடுக்கான இடத்தில் கடல்நீர் பாய்திருக்கும் ஏரி போன்றதால் என்பதால் கடனீர் இடுக்கேரி எனலாம். அல்லது சுருக்கமாக இடுக்கேரி எனலாம். இன்னொரு சொல் கணவாயேரி எனலாம். கணவாய் என்பது மலையிடையே உள்ள இடுக்கான பாதை.
 
-- சுந்தர் \பேச்சு 06:57, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply
கணவாய் என்பதற்கு வேறும் அர்த்தங்கள் இருப்பதனால், நீங்கள் முதலாவதாய்க் கொடுத்த 'கடனீர் இடுக்கேரி என்றே மாற்றலாம் என நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 09:08, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

கணவாயேரி இன்னும் பொருத்தமான சொல்லாகவே தெரிகிறது.--

கடனீர் இடுக்கேரி என்னும்போது, இலகுவாக அது என்ன என்பதன் பொருள் புரிவதன்போல் தோன்றியதால்தான் அதனைத் தேர்வு செய்தேன். ஆனால் கணவாயேரி அதிகம் பொருத்தமாகத் தோன்றினால் அவ்வாறே மாற்றலாம்.--கலை (பேச்சு) 09:42, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply
எனக்கும் கடனீர் இடுக்கேரி என்பதே பொருத்தமாகத் தெரிகிறது. தலைப்பில் அவ்வாறு தந்துவிட்டு உள்ளே உரையில் மீண்டும் வருகையில் இடுக்கேரி என்றே சுருங்க அழைக்கலாம். இடுக்கு என்றால் சட்டெனப் பொருள் விளங்கக் கூடியதும் ஆகும். யாருக்கும் மறுப்பில்லையெனில் மாற்றிவிடலாம். -- சுந்தர் \பேச்சு 09:55, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply
//அவற்றை உங்கள் பக்கத்தில் இருந்து நீர்நிலைகள் சொல்பற்றி உரையாடப்படும் பக்கத்திற்கு/பக்கங்களிற்கு நகர்த்தலாமா?// ஆம், நகர்த்துங்கள்..அவற்றில் இன்னும் திருத்தம்/சேர்ப்பு உண்டு.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:59, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

புணர்ச்சி விதி

தொகு

கேரளத்தில் வயனாடு, திடனாடு, கடனாடு ஆகிய ஊர்கள் உள்ளன. மேற்கூறிய விதிப்படி, வயல்+ நாடு= வயனாடு (வயநாடு அல்ல) திடல்+ நாடு= திடனாடு கடல்+ நாடு= கடனாடு என்று ஆகியிருக்குமோ?

பின்குறிப்பு: 'ந','ன' இரண்டிற்கும் மலையாளத்தில் ஒரே 'ந' தான்! வயநாடு, வயனாடு, இரண்டில் எது சரி? கவனிக்க:ரவி, user:fahimrazick, பயனர்:Kanags, பயனர்:Kalaiarasy, பயனர்:Booradleyp1, user:rsmn, செல்வா. பார்க்க:பேச்சு:கேரளம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:03, 16 சூலை 2014 (UTC)Reply

நீங்கள் சொல்வது சரி தான். நாடு எனும் சொல்லுக்கு ஊர் எனும் பொருளும் தமிழில் உள்ளதே. எடுத்துக் காட்டாக, நாட்டுக்கோழி. புணர்த்தி எழுதும் போது 'ன' வருவதே பொருத்தம். மேலும், பின்குறிப்பு அல்ல. பிற்குறிப்பு என்று வர வேண்டும். முற்காலம், பொற்காசு என்பன போன்றது.--பாஹிம் (பேச்சு) 14:16, 16 சூலை 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடனீர்_இடுக்கேரி&oldid=1693560" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கடனீர் இடுக்கேரி" page.