பேச்சு:செம்பட்டியல்


செம்பட்டியல் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கலை, நீங்கள் ஆலமரத்தடியில் சொன்னது போல, கலைச்சொற்களைத் தரப்படுத்துதல் இன்றியமையாதது. என்னுடைய தெரிவுகள் கீழே. மற்ற பயனர்களின் கருத்துக்களையும் அறிந்து சரியான பொருள் தரும் சொற்றொடர்களைத் தேர்ந்து கொள்ள வேண்டும். (கட்டுரையில் இருந்த தொடர்களில் மட்டுமே இவற்றைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இவற்றைக் காட்டிலும் பொருத்தமான தொடர்கள் இருக்கக்கூடும். செல்வா போன்றோரது கருத்தைக் கேட்க வேண்டும்.) -- சுந்தர் \பேச்சு 10:20, 30 மார்ச் 2011 (UTC) --கலை 11:25, 30 மார்ச் 2011 (UTC)

சுந்தரின் தெரிவுகளுடன் ஒப்புகிறேன். conservation dependantக்கு என்னுடைய தெரிவாக காப்பு சார்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ளேன்.--மணியன் 08:11, 3 ஏப்ரல் 2011 (UTC)
காப்பு சார்ந்தவை என்ற தெரிவு நன்றாக உள்ளது, மணியன். சார்பைக் காட்டிலும் நம்பி இருத்தல், தாங்கி நிற்றல் போன்ற பொருளில் வந்தால் இன்னும் அழுத்தம் பெறுமென நினைக்கிறேன். ஆனால் இவற்றைச் சுருக்கமாக எப்படித் தருவது எனத் தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 06:38, 5 ஏப்ரல் 2011 (UTC)

//சார்பைக் காட்டிலும் நம்பி இருத்தல், தாங்கி நிற்றல் போன்ற பொருளில் வந்தால் இன்னும் அழுத்தம் பெறுமென நினைக்கிறேன்.// இதையேதான் நானும் நினைத்தேன். எங்கேயோ இதுபற்றி குறிப்பிட்ட நினைவுள்ளது. 'சார்ந்தவை' என்பதைவிட, 'பாதுகாக்கப்படவேண்டிய நிலையில் தங்கி இருப்பவை' என்பது அதிக பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகின்றது. ஆனால் எப்படி சுருக்கமாக குறிப்பது என்றுதான் தெரியவில்லை. மணியன், உங்களுக்கு ஏதாவது தோன்றுகின்றதா? அதுவரை காப்பு சார்ந்தவை என்பதே இருக்கட்டும்.--கலை 08:08, 5 ஏப்ரல் 2011 (UTC)

Conservation Dependant என்பதன் நேர் தமிழாக்கமாகவே "காப்பு சார்ந்தவை" எனக் குறிப்பிட்டேன். "காப்பைச் சார்ந்துள்ளவை" என்றால் இன்னும் சற்று அழுத்தமாக இருக்கும். சற்றே விரிவாக காப்பின்றி அழிவாய்ப்பு இனம் என்றும் குறிப்பிடலாம்.
காப்பின்றி அழிவாய்ப்பு இனம் என்ற பெயர் பெரியதாக இருந்தாலும், சரியான பொருளைத் தருவதுபோல் தெரிகின்றது. அப்படியே மாற்றட்டுமா?--கலை 14:40, 5 ஏப்ரல் 2011 (UTC)

காப்பு சார்ந்தவை என்ற சொல் சரி என்பதுதான் என் முடிவும். அது ஆங்கிலச் சொல்லுக்கு நிகராக பாதுகாப்பில் தங்கியுள்ளவை என்ற பொருளைத் தருகின்றது. அப்படியே பயன்படுத்தலாம்.--பாஹிம் 15:28, 5 ஏப்ரல் 2011 (UTC)

சுருக்கங்கள்

தொகு
சுருக்கம் விரிவு கலைச்சொல்
EX Extinct அற்றுவிட்ட இனம்
EW Extinct in the Wild இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்
CR Critically endangered அச்சுறுத்தலுக்கு உள்ளானவை அல்லது பேரிடரிலுள்ளவை, மிக அருகிய இனம்
EN Endangered அருகிவருபவை, அருகிய இனம்
VU Vulnerable அழிவாய்ப்பு இனம்
CD Conservation Dependant காப்பு சார்ந்தவை
NT Near Threatened அச்சுறு நிலையை அண்மித்த இனங்கள்
LC Least Concern தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
DD Data Deficient போதியளவு தரவுகள் பெறப்பட்டிருக்காத இனங்கள், தரவுகள் போதாது.
NE Not evaluated மதிப்பீடு செய்யப்படவில்லை
நன்றி சுந்தர். தயவு செய்து conservation dependant என்பதற்கும் சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள். அதனை முதலில் சேர்க்க மறந்துவிட்டேன்.

--கலை 23:05, 1 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செம்பட்டியல்&oldid=1082375" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செம்பட்டியல்" page.