பேச்சு:தண்டட்டி

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani


கட்டாயம் ஆவணப்படுத்த வேண்டி தலைப்பு. கட்டுரையை எழுதி வளர்த்தவர்களுக்கு வாழ்த்துகள். என் பாட்டி (தாத்தாவின் அக்கா) இன்றும் இதை அணிகிறார். இந்த பாம்படத்திலுள்ள முப்பரிணாம அமைப்புகள் ஆர்வமூட்டுபவை. -- சுந்தர் \பேச்சு 08:14, 23 செப்டெம்பர் 2011 (UTC)Reply

டோலாக்கு என்றும் இதை அழைக்கலாம் அல்லவா? இல்லை டோலாக்கு என்பது வேறு அணிகலனா?--தென்காசி சுப்பிரமணியன்

டொலாக்கு வேறு. பொதுப்பெயர். நீண்டு தொங்கும் காதணிகள் டோலாக்கு வகையறா. தண்டட்டி/பாம்படம் தனித்த வடிவம், அமைப்பு, கனம் கொண்டவை.--சோடாபாட்டில்உரையாடுக 10:26, 12 அக்டோபர் 2011 (UTC)Reply
தண்டட்டி என்பது வேறு பாம்படம் என்பது வேறு.
பாம்படம் அல்லது நாகபடம் என்பது பந்து,கனசதுரம், வட்டங்கள் மற்றும் எதிர் எதிர் பக்கங்களும், கோணங்களும் ஒன்றாக இருக்கும் இணைவகவடிவங்கள் கொண்ட ஒரு வடிவியல் வடிவமைப்பில் செய்யப்படுபவை. ஒரு பறவை அல்லது ஒரு பாம்பு போல தோற்றம் அளிக்கும்.
தண்டட்டி என்பது செவ்வகங்கள் மற்றும் முக்கோண வடிவங்கள், அரைவட்டம், கோளங்கள் கொண்ட ஒரு வடிவியல் அமைப்பைக் கொண்டது. இது முப்பரிமாண யந்திரத்தை ஒத்திருக்கும் --Parvathisri 15:08, 20 சனவரி 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தண்டட்டி&oldid=983758" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தண்டட்டி" page.