பேச்சு:தமிழீழம்
இக்கட்டுரை கூடுதல் பயனர்களால் பார்க்கப்படும் கட்டுரைகளில் ஒன்றாகும். எனவே இக்கட்டுரையை விரைந்து மேம்படுத்த பங்களிப்புகள் வரவேற்கப்படுகிறது. |
கவனப்படுத்தியமைக்கு நன்றி...
தொகுஇக் கட்டுரை நடுநிலமையை மீறி விட்டது. புலிகள் மக்கள் ஆதரவை கொண்ட ஒரே ஒரு குழு என்பது ஏற்று கொள்ளகூடியதொன்றல்ல. தமிழ் தேசிய போராளிகள் என்பவர்கள் யார்? புலிகளா! --Natkeeran 11:15, 16 அக்டோபர் 2005 (UTC)
கட்டுரை நடுநிலையையும் அரசியல் நேர்த்தியான வார்த்தைப்பிரயோகங்களையும் சில இடங்களில் தவறவிட்டிருந்தமை உண்மைதான். தற்போது இதில் மாற்றங்கள் செய்திருக்கின்றேன்.
தமிழ் தேசியப்போராளிகள் புலிகள் தான் என்றவாறாக அர்த்தம் தொனித்த வாக்கியம் நீக்கப்பட்டுள்ளது.
--மு.மயூரன் 11:41, 16 அக்டோபர் 2005 (UTC)
முஸ்லிம் தேசிய இனம் தமிழீழ கோரிக்கையை முன்வைக்கிறதா? நான் அப்படியாக நினைக்கவில்லை. சிலவேளை அவர்கள் தமிழீழ கோரிக்கை முன்வைப்பவர்களை தமது நேச சக்தியாக காணலாம். உண்மையில் தற்போது அவர்களிடையே முஸ்லிம் தேசம், தனி அல்லகு போன்ற கோரிக்கைகளே ஆங்காங்கே எழுந்தவண்ணமுள்ளன. --மு.மயூரன் 19:13, 16 அக்டோபர் 2005 (UTC)
மாற்றங்கள் செய்துள்ளேன்...--Natkeeran 20:14, 16 அக்டோபர் 2005 (UTC)
பொய்யும் புரட்டும்
தொகுஇதைப்போல் பொய்யும் புரட்டும் நிறைந்த கட்டுரையை எந்த கலைக்களஞ்சியத்திலும் இதுவரை நான் பார்த்ததில்லை. - சுரேன்
- குறிப்பிடத்தக்க சிக்கல்களை இங்கே தெரிவியுங்கள். முடிந்தால் உண்மை நிலைக்கு இக்கட்டுரையைக் கொண்டு வருவதில் பணி ஆற்றுங்கள். இவ்வாறான ஒருவரிக் குற்றச்சாட்டினால் பயன் இல்லை. -- Sundar \பேச்சு 06:02, 17 அக்டோபர் 2005 (UTC)
- எவை பொய்யாக இருக்கின்றன என்ற பட்டியலை சுரேன் சமர்ப்பித்தீர்களாயின் நாங்கள் ஆதாரங்களை தேடி இங்கே உள்ளிடுவதற்கு வசதியாக இருக்கும். --மு.மயூரன் 07:29, 17 அக்டோபர் 2005 (UTC)
- உண்மைகள் சில வேளைகளில் கசப்பாகத்தான் இருக்கும் சுரேன். ஆனால் அவை உண்மைகளே--ஜெ.மயூரேசன் 08:13, 8 பெப்ரவரி 2006 (UTC)
- உண்மைகள்??? this article is biased towards one side completely, but it's little better now - சுரேன்
- தற்போது இருப்பது சரியாயின் சரி. எது எதுவாயினும் உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றிகள்.--ஜெ.மயூரேசன் 08:34, 8 பெப்ரவரி 2006 (UTC)
தற்போதைய நிலைமைகளுக்குச் சிறிதும் பொருத்தமற்ற செய்திகள் பல இங்கிருப்பதைக் காண்கிறேன். அவற்றை நீக்கி அல்லது சீரமைத்து இக்கட்டுரையைத் திருத்தினால் நல்லது. இலங்கை அரசின் ஆட்சியே இலங்கைத் தீவு முழுவதிலுமுள்ள நிலையில் தமிழீழ காவல்துறை, நிதித்துறை, நீதித்துறை போன்ற செய்திகளால் என்ன பயன்? அவ்வாறு எதுவும் தற்போது இல்லையே!--பாஹிம் 04:33, 7 பெப்ரவரி 2011 (UTC)
- ஆம். 2009க்கு பிறகான நிலையை இதில் இற்றைப்படுத்த வேண்டும். ஈழ/இலங்கை விடயங்களை அவ்வளவாக அறியாதவன் என்பதால் இதில் கைவைக்க எனக்குத் தயக்கமாக உள்ளது. பரிச்சயம் உள்ள பயனர்கள் செய்ய வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:56, 7 பெப்ரவரி 2011 (UTC)
2011 மே 18 இன் படிக்குத் திருத்தப்பட வேண்டியவை
தொகுஇக்கட்டுரையில் உள்ள குறைபாடுகளைக் களைவதற்காக இப்பகுதிகளைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். இது தொடர்பில் கூடுதல் அறிவுள்ள யாரேனும், அருள்கூர்ந்து, இவற்றைத் திருத்துங்கள். இக்கட்டுரையில் பின்வரும் பகுதிகள் திருத்தப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும்:
//இன்னமும் பெரும்பகுதி இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோணமலை// மேற்படி வசனம் முன்னர் பக்கச் சார்பானது, இப்போது பிழையானது. இன்னமும் என்று இருப்பது பக்கச் சார்பானதல்லவா?
//ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெறுகின்றது// இப்போது இலங்கையில் போர் எதுவும் இல்லை.
//தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசமான வன்னிப் பகுதி// இப்போது இப்படி எதுவும் இல்லை.
//... பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத தனித்தேசமாகவே இயங்கிவருகிறது// இந்த நிலையும் இப்போது இல்லை.
//... விடுதலைப்புலிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய அங்கீகாரமாக அரசியல் அவதானிகளால் கருதப்படுகிறது// இப்பகுதி கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமற்றதாகப்படுகிறது.
//இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள்.// இதுவும் இப்போது இல்லை.
//தமிழீழ பகுதியில் பெரும்பான்மை நிலப்பரப்பின் பகுதியின் நிர்வாகம், நீதிமன்றம், கட்டமைப்புகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி பெரும்பாலான அம்சங்களுடன் செயல்பட்டுவருகிறது. இந்த பகுதிகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவ, நிர்வாக அடிப்படையில் துண்டிக்கப்பட்டதாக அமைந்துள்ளது.// இந்தப் பந்தியும் இப்போதைய நிலைமைக்கு முற்றிலும் மாற்றமாகவே உள்ளது.
//தமிழீழ விடுதலைப்புலிகள் பின்னர் அந்நிகழ்வு மட்டில் முஸ்லீம்களிடம் மன்னிப்புக் கோரியதுடன் அவர்களை மீண்டும் யாழில் குடியமர அழைத்தார்கள்.// இச்செய்தியைப் பிழையாகவே காண்கிறேன். தமிழீழ விடுதைலைப் புலிகள் தாம் முஸ்லிம்கள் தொடர்பில் இழைத்த இந்தப் பாரிய தவறுக்கு மன்னிப்புக் கோரவுமில்லை, முஸ்லிம்களை மீளக் குடியமர அழைக்கவுமில்லை.
//... சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படும். மேலும், புலம்பெயர் தமிழர்கள் பல மொழி தளங்களில் இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும் தேவையாக இருக்கும்.// கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமற்ற வசனங்களென நினைக்கிறேன். எதிர்காலத் திட்டம் பற்றிக் குறிப்பிடுகிறது.
//... பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு இயங்கும் இரு பல்கலைக்கழகங்கள் ஆகும்.// இவை தமிழீழத்தின் பல்கலைக்கழகங்கள் அல்ல. இலங்கை அரசாங்கத்தின் பல்கலைக்கழகங்கள். தமிழீழமெனக் கோரப்படும் பகுதியில் அமைந்துள்ளன.
//... எவ்வித தீர்வும் இல்லாமல் இழுப்பறி நிலை தொடர்ந்தாலோ போர் மீண்டும் தொடங்கினாலோ தமிழீழம் பல்வேறு பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்// இப்போதுதான் போர் நடக்கவில்லையே. போர் தொடர்ந்தாலோ என்று கூறுவது பொருத்தமற்றது.
எனவே, இது தொடர்பில் செய்தியறிந்தவர்கள் இதனைத் திருத்தினால் நல்லது.--பாஹிம் 17:08, 18 மே 2011 (UTC)
Question of Legitimacy
தொகுLTTE is fighting for legitimacy, but until such legitimacy is granted and recognized by Sri Lanka and other international bodies, LTTE and its civil apparatus will remain in a defactro state. The article should reflect that fact. --Natkeeran 17:12, 25 பெப்ரவரி 2006 (UTC)
highly inacurate & baised article
தொகு- 1. what is the flag of the NE Provincial council doing here??
- 2. when did muslims ever support Tamil Ellam?? muslims completely oppose this!
- 3. when did upcountry tamils support tamil eelam?? most completely oppose this!
- 4. there lots of tamils who oppose this, (change "all tamils" to "most tamils"??)
- 5. TAK contesed the elections for TE in 1977, not 1972
- 6. The election in N&E was a falacy, as observed by all international election monitering missions.
- 7. if TE consists of 8 districts, then why does the TE map has puttalam in it??
- 8. மீட்கப்படாத is not a neutral point of view
- 9. only 39 district secretariats are in the control of the ltte.
- 10. the conflict for seperation only began from 1975, before that they only wanted federation.
- 11. so far no repured political observers have accepted the TNA's claim.
- 12. most people in the east voted in the last election rejecting the ltte's claim.
- 13. மாவீரர் துயிலும் இல்லம் belongs in தமிழீழ விடுதலைப் புலிகள்
- 14. no organisation has so far accepted the ltte.
- இந்த விடயத்தைப் பற்றி அறிந்தவர்கள், மேற்குறிப்பிடப்பட்டுள்ளவைகளுக்கு மறுமொழி தாருங்கள். கூடவே, மதிப்பிற்குறிய வெளி மேற்கோள்களும் தாருங்கள். -- Sundar \பேச்சு 04:14, 2 மார்ச் 2006 (UTC)
- LTTE says Puttalam also one of the tamils parts in sri lanka. But after independence this parts were mostly occupied by Sinhala people. Now it's not included in N&E province.
- LTTE says they choosed seperation bcos they lost the confidence in the sinhala gov.
- In last election in east muslims voted for muslim parties such as Muslim congress but most of the (not all) tamil people voted for the TAK.
- மாவீரர் துயிலும் இல்லம் belongs to தமிழீழ விடுதலைப் புலிகள்
- upcountry tamil politicians are not that much interested in Tamil Eelam. but I'm not sure about the ordinary people.
- I have never seen the N&E province falg in my life time.
- Muslims now demanding for a seperate system within tamil eelam State(if federal accepted in Sri Lanka) like pondicheri
Thanks--ஜெ.மயூரேசன் 10:53, 2 மார்ச் 2006 (UTC)
- You have not answered single of my questions.
- please read my question about puttalam again.
- PAFFREL, EU monitering mission & other moniters have put down elections in the north & east as falacy.
- please remove the N&E province flag from here, it does not belong here. as well as the மாவீரர் துயிலும் இல்லம் move it the தமிழீழ விடுதலைப் புலிகள் article.
- muslims are not demanding anything within the TE state, they are demanding a landless council (pondicheri) with the N&E province.
- some upcountry tamils do support the ltte, but i have not met any who support Tamil Eelam.
சில விளக்கங்கள்
தொகு- தமிழீழம் வடகிழக்கு பிரதேசத்துக்கு ஒரு மாற்று பெயரே, எனவே அந்த கொடியை இங்கு தருவதில் பிழை இருப்பதாக தெரியவில்லை. அப்படி தருவது முக்கியம் கூட.
- முஸ்லீம்கல் தமிழீழத்தை ஆதரிப்பதாக எங்கும் தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் வட கிழக்கை தமது தாயக பிரதேசமாக கருதுவாகத்தான் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
- விடுதலைப்புலிகள் அங்கீகரிக்கப்படாத அரசு என்ற குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்க
--Natkeeran 04:03, 3 மார்ச் 2006 (UTC)
- இன்னும் நான் கேட்ட கேள்விகளுக்கு சரியான விடையேதும் கிடைக்கவில்லை.
- தமிழீழம் என்பது ஒரு தனியான தேசதுக்கான கோரிக்கை, வடகிழக்கு மாகாணசபை என்பது அப்படியல்ல. வடகிழக்கு மாகாணசபை என்பதும் தமிழீழம் என்பதும் ஒன்றல்ல. இந்த கொடி உள்ளதன் முலம், வடகிழக்கு மாகாணசபை போல இதுவும் ஒரு அங்கிகரிக்கப்பட்ட உறுப்பு என்றாகிவிடும்.
- மீண்டும் அவ்வசனத்தை வாசிக்கவும்.
- வன்னியில் மட்டும்தனே அவர்களின் அங்கீகரிக்கப்படாத அரசு உள்ளது, ஆனால் கட்டுரையின் படி அனேக பகுதிகளில் அவர்களின் அங்கீகரிக்கப்படாத அரசு உள்ளது போல எழுதப்பட்டுள்ளது.
- மீட்கப்படாத பிரதேசம் என்பது புலிகளுக்கு சாரிபானவர்க்கு சரியாக இருக்களாம், ஆனால் இதை வாசிக்கும் ஒரு வேற்றினத்தாருக்கு அப்பிரதேசம் ஒரு அடிமைபிரதேசம் போல இருக்கும். இது நடுனிலையா??
- Natkeeran நீங்கள் செய்துள்ள மாற்றங்கள் வரவேற்கதக்கன, ஆனால் நடுனிலை எய்த இன்னும் சில மாற்றங்கள் தேவை
இலங்கைக்கு வருக
தொகுஇலங்கைக்கு வந்து இங்குள்ள மக்களுடன் உரையாடுவீர்களானால் உங்கள் கேள்விகளிற்கான பல பதில் கிடைக்கும். வெளியிலிருந்து பார்ப்பவர்கட்கு வித்தியாசமான கோணத்தில் தெரிவது பிழையில்லை. காலம் காலமாக சலித்துப்போன அலுத்துப்போனதுதான் இலங்கை அரசியல், இங்கு நடக்கும் போராட்டம் பலருக்கு அரசியல் பிழைப்பு, அழிவது அப்பாவிகள்தான். தருவதுபோல் வருவது பின்பு தராமல் ஏமாற்றப்படுவது இலங்கைத்தமிழரிற்கு புதிதல்ல. முக்கியமான விடையம் புலிகளிற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவே நின்று நோக்காமல் இரண்டு கோணத்திலும் பார்க்கவும்.--ஜெ.மயூரேசன் 04:21, 3 மார்ச் 2006 (UTC)
- நான் பிறந்ததிலிருந்து இலங்கையில் தான் இருக்கிறேன். மேலும் நான்னொன்றும் உலக அறிவில்லாதவனல்ல.
- நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாகவெ இருக்கட்டும், ஆனால் நடுனிலை தவறலாமா?? இக்கட்டுரை சற்றும் நடுனிலைக்கு ஏற்றதல்ல.
தமிழீழம் என்பது தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த நிலப்பரப்பையே கோடிட்டுக் காட்டுகின்றது.
அதனை புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி, அல்லாத பகுதி என்று பகுத்துப் பார்ப்பது பொருத்தமற்றது. ஈழத்தமிழரின் தொன்மை எனும் இந்த ஆக்கத்தைப் பார்க்கவும்.http://www.erimalai.info/2005/may/articles/eelathamilar_thonmai.htm நன்றி
see also
தொகு- http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/2070817.stm
- http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1914790.stm
- http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1333400.stm
//2. when did muslims ever support Tamil Ellam?? muslims completely oppose this!// தமிழரசுக் கட்சி காலத்தில் முஸ்லிம்கள் தனித்தமிழீழ பிரிவினைக்கு முழுமையான ஆதரவு வழங்கியமைக்கு ஏராளமான சான்றுகள் உண்டு. விடுதலைப்புலிகளால் வடக்கு முஸ்லிம்கள் துரத்தப்பட்டதன் பிற்பாடு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கல்இன் பின் Mஉஸ்லிம்கல் தனியான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். அவர்கள் தமிழீழ கோரிக்கைக்கு எதிரானவர்கள் என்று அறுதியிட்டு கூற எந்த சான்றும் இல்லை. தமிழீழ கோரிக்கையை ஆதரிக்கும் முஸ்லிம், சிங்கள ந்ண்பர்கள் எனக்கு உள்ளனர். when did muslims ever support Tamil Ellam?? muslims completely oppose this! இந்த கேள்வி எந்த விதமான அடிப்படையும் அற்றது, சிறுபிள்ளைத்தனமானது. அதுசரி இந்த கேள்வி எழுவதர்கான வாய்ப்பு இந்த கட்டுரையில் இல்லையே? --மு.மயூரன் 12:40, 4 மார்ச் 2006 (UTC)
- கேள்வியில் சிறுபிள்ளைதனம் பெறுபிள்ளைதனம் என்றும் உள்ளதா?? இங்கு கேள்வி கேட்க யாருக்கும் உறிமை இல்லையா??
- தமிழரசுக் கட்சி சமஸ்டிக்காக தாபிக்கப்பட்ட கட்சி, தனிதமிழ் ஈழத்துக்காக தாபிக்கப்பட்ட கட்சிதான் தமிழர் விடுதலை கூட்டனி. ஆகவேதான் முஸ்லிம்கள் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு அளித்தனர் (சமஸ்டிக்காக). எப்போது தமிழரசுக் கட்சி ஈழம் கேட்டதொ அப்பொழுதெ முஸ்லிம்கள் அதிலிருந்து விலகிவிட்டனர்.
- // விடுதலைப்புலிகளால் வடக்கு முஸ்லிம்கள் துரத்தப்பட்டதன் பிற்பாடு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கல்இன் பின் Mஉஸ்லிம்கல் தனியான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
- 1980களிலேயே அஷ்ரப் தலைமையில் முஸ்லிம்கள் தனித்து இயங்க ஆரம்பித்து விட்டனர். முஸ்லிம் கங்கிரஸ் 1985 தாபிக்கப்பட்டது.
- //அதுசரி இந்த கேள்வி எழுவதர்கான வாய்ப்பு இந்த கட்டுரையில் இல்லையே?
- கட்டுரையில் முஸ்லிங்களும் தமிழிழம் கேட்கிறார்கள் என்ற தோரணையில் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
- // தமிழீழ கோரிக்கையை ஆதரிக்கும் முஸ்லிம், சிங்கள ந்ண்பர்கள் எனக்கு உள்ளனர்.
- தமிழீழ கோரிக்கையை எதிர்க்கும் கடந்தகால புலியுறுப்பினர்களும் உள்ளனர், தமிழர்களும் உள்ளனர்.
- //அவர்கள் தமிழீழ கோரிக்கைக்கு எதிரானவர்கள் என்று அறுதியிட்டு கூற எந்த சான்றும் இல்லை.
- எந்த முஸ்லிம் கட்சியாவது அவர்கள் ஆதரவு என்று அவர்களை கூறச்சொல்லுங்கள்?? (95% முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளுக்கே வாக்களிக்கின்றனர்).
- நண்பரே ஆத்திர அவசரப்படாமல் கட்டுரையை வாசிக்க உண்மை புரியும். இன்னும் நான் கேட்ட கேள்விகளுக்கு சரியான விடையேதும் கிடைக்கவில்லை.
விவாதம் எங்கோ செல்கின்றது. //no organisation has so far accepted the ltte// தமிழிழத்தைதான் அங்கீகரிக்கவில்லை தவிர they accept LTTE as a main political representative of N.E thamiz people. யாதார்தத்தை புரிந்துகொள்ளாமல் இதனை புரிந்து கொள்ளமுடியாது. 1989 IPKF (Indian army)காலத்தில் இலங்கை அரசியல் யாப்பின் 13ம் திருத்தத்தின்படி வட- கிழக்கைனை ஒன்றாக்கி ஒரு மாகாணசபையாக்கப்பட்டு வரதராஜப் பெருமாள் என்பவர் தலைமையில் ஆளப்பட்டது.பின்னர் IPKF வெளியேற்றத்தின்போது அவரால் வடகிழக்கு தமிழீழமாக பிரகடனப்படுத்தப்பட்டதும் இங்கு கவனிக்கப்படவேண்டியது. தமிழ் சசி எனும் வலைப்பதிவாளர் இது குறித்து அடிக்கடி பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.பின்னர் இதுபற்றிய சரியான சுட்டிகளை தருகிறேன்.kalanithe
- that line was meant to mean, that no organisation has so far accepted the structures setup by the ltte in the N&E.
- யாதார்த்தத்துக்கும் நடுநிலைத்தன்மைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. யாதார்த்தம் என்பதற்காக பிழையான தகவல்களை எழுதுவது குற்றம்.
- வட- கிழக்கு மாகாணசபைக்கும், தமிழீழத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சட்டவிரோதமான பிரகடணங்கள் உண்மையாகாது.
யாருக்கு உத்தியோகப்பற்றற்ற?
தொகு"உத்தியோகப்பற்றற்ற" என்ற வார்த்தை இந்தக்கட்டுரையில் வலிந்து புகுத்தப்பட்டுள்ளதாக உணர்கிறேன். பார்க்கப்போனால் "உத்தியோகப்பற்றற்ற" என்பது நடு நிலைத்தன்மையை மீறுகிறது. விடுதலைப்புலிகளின் பக்கமிருந்து பார்க்கும் போது உத்தியோகபூர்வமான ஒரு விடயம், அதற்கு எதிர்ப்பக்கமிருந்து பார்க்கும்போது உத்தியோகப்பற்றற்றதாகிறது. இன்னும் துல்லியமாக சொன்னால், சர்வதேச அங்கீகாரம் பெறாத அல்லது ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்படாத போன்ற அடைகள் சேர்க்கப்படவேண்டி இருக்கும். இது விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துடையவர்களால் தேவையற்று வலிந்து புகுத்தப்படும் ஒன்றாகவே பார்வையாளர்களுக்கு தெரியும். என்னுடைய பரிந்துரைப்பானது, "விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வமான" என்ற அடைமொழியை சேர்ப்பதாகும்.
- விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வமான தமிழீழ தேசியக்கொடி
- விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ காவல்துறை
என்றவாறாக இடம்பெறவேண்டும் என பரிந்துரைக்கிறேன்.
--மு.மயூரன் 15:17, 10 ஏப்ரல் 2006 (UTC)
- i also agree, these flags and symbols are just symbols of the ltte.
LTTE is an organization that is seeking legitimization. Legitimization must be provided or recognized by the community of nations and other organizations that inhibit this earth. If LTTE claims their own legitimization, it becomes authoritarianism or dictatorship. The legitimization can only be gained in discussion and in the context of existing sources of legitimization (ex GOSL), and can not be assumed from nothingness.
The government of Tamil Eelam (whether it is national or provincial) is different from the party that is in government. A government is not just the party in power, but also constitutes the party or parties in opposition. (ADMK is not Tamil Nadu. Congress is not India. Republican Party is not America.) LTTE can be a party, but party can not be the government unless in one party system. Of course LTTE assumes that it is the party in government; for time being most people can give the benefit of doubt to LTTE. But, this position can not be assumed indefinitely. Tamil people have never agreed that TE should be one party government. To suggest so would be totally misleading.
LTTE is not paying the teachers salaries. LTTE is not paying the pensions. LTTE is not paying hospital staff. LTTE’s laws and organs as efficient and benevolent they might be are arbitrary. Unless and when a system is in place to remove that arbitrary nature, the point that LTTE lacks legitimacy should be made clear.
(If LTTE can not accommodate alternative views, and if the struggle would loose strength in accommodating democratic mechanisms, then, the LTTE and the struggle can not be sustained. What ever the result will not be tolerable. )
If there is no provincial NE government, then there does not yet exist a legitimate Tamil Eelam government. In other words, Tamil Eelam has no legal definition. Whatever the government that LTTE establishes, it lacks legitimacy, and noted as such. Thus, I do not think Mauran’s suggestion is appropriate or fair. --Natkeeran 06:24, 11 ஏப்ரல் 2006 (UTC)
தமிழீழ வைப்பகம் என்பது ஒரு பெயர். பெயருக்கு உத்தியோகபூர்வமற்ற போன்ற அடைமொழிகளை பயன்படுத்துவது மிகத்தெளிவாக பக்கசார்பான செயல். --கோபி 06:39, 11 ஏப்ரல் 2006 (UTC)
- கோபி, ஒரு நாட்டின் வைப்பகம், ஒரு தனியார் வைப்பகத்தில் இருந்து வேறுபட்டது. இங்கு நாம் தனியார் நிறுவனங்களை பற்றி பேசவில்லை என்று நினைக்கின்றேன். --Natkeeran 06:59, 11 ஏப்ரல் 2006 (UTC)
ஆங்கில விக்கிபீடியாவின் இந்த தொடுப்பை பார்வையிடவும். http://en.wikipedia.org/wiki/Flag_of_Tamil_Eelam --கோபி 06:43, 11 ஏப்ரல் 2006 (UTC)
Natkeeran, நீங்கள் இங்கு தேவையில்லாத விவாதத்திற்கு இட்டுச் செல்கிறீர்கள் என ஐயப்படுகிறேன். ஆவணப்படுத்தலே இங்கு முக்கியமே தவிர தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ கருத்துக்களோ அல்ல. நன்றி. Kanags (சிறீதரன்) 06:38, 11 ஏப்ரல் 2006 (UTC)
- Kanags, I agree to certain point, but we can not over simplify the issues involved. I think we have to find a way to present the multiple layers of issues, or multiple view points. The way to do so is through discussion. --Natkeeran 06:56, 11 ஏப்ரல் 2006 (UTC)
- Kanags, கட்டுரை முதலில் தனிப்பட்ட விருப்பத்தை (ஒரு பக்க சார்பை) வெளிப்படித்தியே இருந்தது. --Natkeeran 07:06, 11 ஏப்ரல் 2006 (UTC)
///////////
மாகாணசபையின் கொடியை நீக்கியுள்ளேன்
தொகுதொடர்பில்லாத மாகணசபையின் கொடியை நீக்கியுள்ளேன். ////////
கொடி போடலாமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் இங்கு கனடாவில், ஒவ்வொரு மாகாணமும் ஒவ்வொரு கொடி வைத்திருக்கின்றன. போதாதற்கு ஒவ்வொரு பெரிய ஊரும் அவர்களுக்கென்று ஒரு கொடி வைத்திருக்கின்றன. இன்னும் ஒரு படி கீழே போனால், பெரிய வர்த்தக நிலையங்களும் தங்களுக்கென்று கொடி வைத்திருக்கின்றன.
எந்த கொடி இருந்தாலும் தாம் கனடியர்கள் என்பதை அவர்கள் மறப்பதில்லை.
______ CAPital http://1paarvai.wordpress.com/
புத்தளம் தமிழீழத்தின் ஒரு பகுதியா?
தொகுபுத்தளம் தமிழீழத்தின் ஒரு பகுதியா? --Natkeeran 07:03, 11 ஏப்ரல் 2006 (UTC)
தமிழீழம் ஒரு நாடு அல்ல
தொகுநற்க்கீரன், தமிழீழம் எனப்படுவது ஒரு நாடு அல்ல. இலங்கையில் தமிழர்கள், தாம் தாயகப்பிரதேசமாக கருதும் பிரதேசங்களில் ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக தெரிவு செய்த பெயர் தமிழீழம். தமிழீழம் ஒரு எண்ணக்கரு. இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இந்த அரசாங்கம் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதல்ல. ஆக தமிழீழ வைப்பகத்தை ஒரு நாட்டின் வைப்பகமாக நீங்கள் விளங்கிக்கொள்ளத்தேவையில்லை. தமிழீழம் என்ற பெயரில், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இயங்குவது ஒன்றே, இவ்வைப்பகம் இந்த கட்டுரையில் இடம்பெறுவதற்கு போதுமானது. இந்தக்காரணத்தாலேயே வ-கிழக்கு மாகாணக்கொடி இக்கட்டுரையில் இடம்பெறத்தேவையில்லாமற் போனது. --கோபி 08:41, 11 ஏப்ரல் 2006 (UTC)
- கோபி, நீங்கள் தமிழீழம் என்றால் என்ன என்பதற்கு நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள். (தமிழீழம் முஸ்லீம்களின் தாயகபிரதேசம் என்பதையும், அங்கு சிங்களவர் வசிக்கின்றார்கள் போன்றவை நீங்கலாக.)
- கோபி, தமீழீழ விடுதலைப்புலிகள் ஒரு நிழல் அரசாக செயல்படுவதால், அவர்களால் நடாத்தப்படும் ஒரு வைப்பகத்தை எப்படி பார்ப்பது? தமிழீழ என்ற ஒரு (எண்ணக்கரு) அரசின் வைப்பகம் என்றா அல்லது விடுதலைப்புலிகளின் வைப்பம் என்றா? --Natkeeran 15:15, 11 ஏப்ரல் 2006 (UTC)
வடக்கு கிழக்கு மாகாணசபை - தனிக்கட்டுரை
தொகுவடக்கு கிழக்கு மாகாண சபை தொடர்பான தனிக்கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். கொடியை அங்கே போட்டுவிடவும் --மு.மயூரன் 09:23, 11 ஏப்ரல் 2006 (UTC)
குறிப்புகள்
தொகுஇக்கட்டுரையின் நடுநிலைமை நோக்கி கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன
தொகுஆட்சோபனைகளை நுண்ணிய முறையில், வரிகளை சுட்டிக்காட்டி, விபரித்து முன்வைத்தால் நன்று. --Natkeeran 17:17, 5 மே 2006 (UTC)
நற்கீரன், இக்கட்டுரையில் புகுபதிகை செய்யாத பயனர்கள் செய்த மாற்றங்களை முன்பே அவதானித்தேன். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி "மத்தியில் கூட்டாசி;மாநிலத்தில் சுயாட்சி"க்காகவே போராடுகின்றனர். தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் தமிழீழத்துக்காகப் போராடியதாகத் தெரியவில்லை. பொதுவாக தமிழீழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கை என்பது சிறீலங்கா அரசுக்கு எதிரான போராட்டமே. ஆதலால் அந்த இரு அமைப்புக்களின் பெயர்களை நீக்கலாம்தான். --கோபி 17:35, 11 ஜூலை 2006 (UTC)
- மாற்றங்கள் செய்துள்ளேன். --Natkeeran 17:40, 11 ஜூலை 2006 (UTC)
- மாற்றம் பொருத்தமாக உள்ளது.--கோபி 17:58, 11 ஜூலை 2006 (UTC)
இக்கட்டுரையில் காணப்படும் உள்ளீடுகளில் அதிகமானவை மிகவும் பொய்யானது. முதலில் வடகிக்கு என்றொரு பிரதேசமே இலங்கையில் தற்போது இல்லை. வடக்கு மற்றும் கிழக்கு என்ற இரண்டு மாகாணங்களே இருக்கின்றன. //உள்நாட்டுப் போர், ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும்// ஆயுதம் தாங்கியவர்கள் போராளிகள் அல்ல. பயங்கரவாதிகள். //தமிழ்ப் போராளி இயக்கங்கள் பல அழித்தொழிக்கப்பட்டும், பின்தள்ளப்பட்டும் போக, அவற்றுள் வலுவான இயக்கமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே நீண்ட காலத்துக்கு தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை நடத்திவந்தது.// இந்த வசனமெ பிழை. இந்தக் கட்டுரையில்அதிகமான பிழைகள் மாத்திரமே காணப்படுகின்றன.
//தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அரசின் உதவியுடன் மாசி 2002இல் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை நடப்பில் வந்தது. பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது[5][6].// இங்கு புலிகளின் தரப்பு தவறுகள் சுட்டிக்காட்டப்படவில்லை.
இந்தக் கட்டுரையின் பிழைகளை ஒவ்வொரு வசனமாக கூறிக் கொண்டு போகலாம். பேச்சு பக்கத்தில் வெறுமனே எழுத்து மூல கோரிக்கையாக மாத்திரம் தொடர்ந்து இருப்பதை விடுத்து, இவை அனைத்தும் விரைந்து சரி செய்யப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கோரிக்கை. --Fasly (பேச்சு) 07:41, 10 ஆகத்து 2016 (UTC)
Tamil People's country - TAMIL EELAM
தொகுLTTE Liberation Tigers of Tamil Eelam is tamil people's representative. Liberation tigers protect tamil people. It's not Terrorist. It's called liberation. Liberation!!! People have to think it. We always like liberation and liberation tigers give us liberation from terrorist goverment "Sri Lanka". Sri Lanka goverment is one of the famous terrorist goverment.
Tamil Eelam Tamil Eelam Tamil Eelam Liberation country
Liberation tigers Representatives of Tamil people.
A Tamil Citizen
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.eelamjudicial.org/
- In தமிழீழ விடுதலைப் புலிகள் on 2007-05-06 10:50:42, Socket Error: (11001, 'getaddrinfo failed')
- In தமிழீழ விடுதலைப் புலிகள் on 2007-05-14 01:31:38, Socket Error: (11001, 'getaddrinfo failed')
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.tamilnet.com/img/publish/2006/02/Building_the_state_1.pdf
- In தமிழீழ விடுதலைப் புலிகள் on 2007-05-06 10:51:02, 404 Not Found
- In தமிழீழ விடுதலைப் புலிகள் on 2007-05-14 01:32:00, 404 Not Found
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.teedor.org/
- In Portal:சூழலியல் on 2007-05-06 10:07:16, 404 Object Not Found
- In Portal:சூழலியல் on 2007-05-06 11:24:33, 404 Object Not Found
- In Portal:சூழலியல் on 2007-05-14 00:40:43, 404 Object Not Found
நடுவு நிலைப் பற்றி
தொகுநடுவு நிலைப் பற்றி கருத்துக்கள் கோரப்பட்டு பல நாட்களாவிட்ட நிலையிலும், எதிர் கருத்து ஏதும் இல்லாத நிலையிலும் நடுவுநிலை மீரல் வார்ப்புருவை நீக்கக் வேண்டுகிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 01:30, 3 நவம்பர் 2007 (UTC)
போர்நிறுத்தம்
தொகுபோர்நிறுத்தம் விலக்கப்பட்டது குறித்து இற்றைப்படுத்த வேண்டும்.--சிவகுமார் \பேச்சு 18:52, 24 ஜூன் 2008 (UTC)
பெயர் தோற்றம்
தொகுKanags, இது அந்த புத்தகத்தில் இருந்தே நான் எடுத்தேன். அந்த புத்தகத்தில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (https://www.scribd.com/document/394426786/Tamil-Eelam-Sivakkirathu-Pala-nedumaran)
திரைப்பிடிப்பு லிங்: https://yarl.com/forum3/uploads/monthly_2022_04/large.960719912_Pg269.png.bd645dd8350391aded8c2fdc32d28688.png பெரும்பாண்டியன்2 4/10/2022. EST 5:06pm
முதலில் “ஈழத் தமிழகம்" என்ற சொல்தான் வழக்கில் இருந்தது. ஈழ தேசியப்பண் பாடிய பரமஹம்ச தாசர்[1],
- "வாழ்க ஈழத் தமிழகம்
- வாழ்க இனிது வாழ்கவே!"
என்றுதான் பாடினார்.
பிறகு "தமிழிலங்கை" என்ற சொல்லும் வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் கவிஞர் காசி ஆனந்தன் படித்தபோது சி. பா. ஆதித்தனார். அவர்களின் தொடர்பு. ஏற்பட்டது. அப்போது அவரைப் பற்றி எழுதிய பாடலில் இச்சொல்லைப் பயன்படுத்தினார்[2].
"அலைகடலுக்கு அப்பாலும்
- தமிழிலங்கை மண்ணில்
அரசமைக்க வழி சொன்னான்
- அவனன்றோ தலைவன்"
1972ஆம் ஆண்டு, மே மாதம், 19ஆம் நாள் மட்டக்களப்பில் தமிழர் கூட்டணி அமைப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் பொறுப்பைக் கவிஞர் காசி ஆனந்தன் ஏற்றிருந்தார். மாநாட்டு மேடையில் கட்டப்பட்டிருந்த பதாகையில்[3],
- "தமிழீழம் தமிழர் தாகம்"
எனப் பெரிதாக எழுதிக் கட்டியிருந்தார், மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களையும் மக்களையும் இச் சொற்றொடர் மிகவும் கவர்ந்தது. மக்களிடையே "தமிழீழம்'" என்ற சொல் நாளடைவில் பரவி நிலைத்தது.