பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016

@ பயனர்:Akmalzubair ... மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தேமுதிக எனும் கருத்துடன் நீங்கள் எழுதியிருந்தீர்கள். இது பொருத்தமான உரைநடை இல்லை என்பதால், உரிய திருத்தங்களை கட்டுரையில் செய்துள்ளேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:04, 23 மார்ச் 2016 (UTC)

@ பயனர்:Akmalzubair ... இந்த மாற்றத்தில் எனக்கு உடன்பாடில்லை; ஏற்கனவே சரியான இடத்தில் இருப்பதாக நினைக்கிறேன். பரிசீலிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:41, 25 மார்ச் 2016 (UTC)

@ பயனர்:Akmalzubair ... கூட்டணி அமைப்பதற்கான முன்னெடுப்புகள் எனும் துணைத் தலைப்பின்கீழ் 'கட்சிகளின் முயற்சிகள் குறித்தும்', இறுதிவடிவம் பெற்ற கூட்டணிகள் எனும் துணைத் தலைப்பின்கீழ் 'எப்போது கூட்டணிகள் இறுதிவடிவம் பெற்றன எனும் தகவல்களைத் தரும் எண்ணத்திலும்' கட்டுரையினை வடிவமைத்திருந்தேன். இதனைப் புரிந்துகொண்டு திருத்தங்களை மேற்கொண்டமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:47, 26 மார்ச் 2016 (UTC)

கவனிக்கவும்... தொகு

@பயனர்:தென்காசி சுப்பிரமணியன்... இந்தத் தகவலும், இந்தத் தகவலும் சரியானத் தகவல்கள் இல்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:28, 8 ஏப்ரல் 2016 (UTC)

உரிய திருத்தங்கள் செய்யப்பட்டன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:51, 8 ஏப்ரல் 2016 (UTC)

ஒப்புதல் தேவை... தொகு

வணக்கம் குறும்பன்! இறுதிவடிவம் பெற்ற கூட்டணிகள் எனும் தலைப்பின்கீழ் நீங்கள் சேர்த்துள்ள கீழ்க்காணும் தகவல்களை தொகுதிப் பங்கீடு / கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை எனும் தலைப்பின்கீழ் உள்ள அட்டவணையில் சேர்த்தால் (குறிப்புகளும் ஆதாரமும்), கட்டுரையின் அமைப்பு மேலும் சிறக்கும் எனக் கருதுகிறேன். பரிசீலிக்கவும், நன்றி!

  • மனித நேய மக்கள் கட்சி உளுந்தூர்பேட்டை, ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திமுக கூட்டணியில் முன்னாள் இஆப அதிகாரி சிவகாமியின் சமூக சமத்துவ படை கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியும் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
  • வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம், பூம்புகார், மணப்பாறை ஆகிய ஐந்து தொகுதிகளில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுவதற்கான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:11, 9 ஏப்ரல் 2016 (UTC)

👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 23:44, 11 ஏப்ரல் 2016 (UTC)

நன்றி, குறும்பன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:25, 14 ஏப்ரல் 2016 (UTC)

கொங்குநாடுமக்கள்தேசியகட்சி யை ஏன் நீங்கல் தேர்தலில் பதியவில்லை 72 இடங்களில் போட்டியிடும் கட்சியை இருட்டடிப்பு செய்கிரீர்கள் மா குணசேகரன் (பேச்சு) 09:32, 7 மே 2016 (UTC)Reply

கவனிக்கவும்... தொகு

@ பயனர்:தென்காசி சுப்பிரமணியன்... நாம் தமிழர் கட்சி பாண்டிச்சேரியிலும், கேரளாவிலும் நிறுத்தும் வேட்பாளர்கள் குறித்து தாங்கள் எழுதிய தகவல்களை இங்கும், இங்கும் முன்பே இட்டுள்ளேன். எனவே இப்பகுதியில் நீக்கிவிடலாமா என்பது குறித்து பரிசீலிக்கவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:33, 14 ஏப்ரல் 2016 (UTC)

ஏதாவது ஒரிடத்தில் இருந்தால் போதும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:10, 14 ஏப்ரல் 2016 (UTC)

உரிய திருத்தம் செய்துள்ளேன்; நன்றி, தென்காசி சுப்பிரமணியன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:26, 14 ஏப்ரல் 2016 (UTC)

தொகுதிவாரியாக வேட்பாளர்கள் தொகு

ஒவ்வொரு தொகுதியிலும் தற்போது போட்டியிடும் கட்சிகளின் பட்டியல் உள்ளது; இதில் வேட்பாளர்களின் பெயரை இணைக்கவியலுமா ?--மணியன் (பேச்சு) 06:58, 21 ஏப்ரல் 2016 (UTC)

நீங்கள் குறிப்பிடும் தகவலை இணைப்பதற்கு பெருமளவு மனித ஆற்றல் தேவை. என்னிடம் தொழினுட்ப அறிவு குறிப்பிடத்தக்க அளவில் இல்லாதது ஒரு பெருந்தடை. எனவே, போட்டியிடும் கட்சியின் பெயரை மட்டும் பட்டியலில் இட்டுள்ளேன். ஒரு குறிப்பிட்ட தொகுதியில், எந்தெந்த கட்சிகள் நேரடியாக களத்தில் உள்ளன எனும் குறைந்தபட்ச தகவலையாவது பயனர்கள் அறியவேண்டும் எனும் நோக்கில் இப்பட்டியலை உருவாக்கினேன்.
தேர்தல் முடிவுகளை தொகுதிகளுக்குரிய தனித்தனி கட்டுரைகளில் தரும்போது, முக்கியக் கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்களை வேட்பாளரின் பெயருடன் தொகுக்கும் எண்ணத்தில் உள்ளேன். காலம் உதவவேண்டும்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:49, 21 ஏப்ரல் 2016 (UTC)
இப்போதைக்கு, முக்கிய வேட்பாளர்கள் குறித்த விவரத்தை இவ்விதமாக தொகுத்து வருகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:19, 21 ஏப்ரல் 2016 (UTC)

என்னிடம் நாதகவுக்கும் பாமகவுக்கும் ஏற்கனவே உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 01:27, 22 ஏப்ரல் 2016 (UTC)

இந்த எக்செல் கோப்பில் பங்களிக்க அழைக்கிறேன். தேர்தலுக்குப் பிறகு தொகுதி வாரியாக தரவுகளைப் பிரித்து விக்கியில், விக்கித்தரவில் பதிவேற்ற உதவியாக இருக்கும். எக்செல் -- Mdmahir (பேச்சு) 01:39, 22 ஏப்ரல் 2016 (UTC)
  • மாகிர் அதிமுக+, திமுக+, கேவிகூ+,பாமக, பாசக+,நாதக என்ற வரிசைப்படி நான் அதிகபட்சம் இன்னும் இரு நாட்கள் கழித்து (முடிந்தால் இன்றே) உங்கள் எக்சல் பக்கத்தில் வேட்பாளர்களை எழுத தொடங்குகிறேன்.
மாகிர் தென்காசியார் கொடுத்துள்ளபடி வரிசை இருந்தால் நன்று, மாவட்டவாரியாகத்தான் நாதக வேட்பாளர்கள் பட்டியல் உள்ளது. தென்காசியாரே உருப்படியா அனைத்து வேட்பாளர்களும் யார் என்று தெரியவில்லை, நாதக பட்டியலை எடுத்து ஓரு கோப்பில் பதித்து விட்டேன். --குறும்பன் (பேச்சு) 01:08, 26 ஏப்ரல் 2016 (UTC)

ஆம். மனுதாக்கல் முடிவடைந்துவிட்டதா? வேட்பாளர்கள் மனுதாக்கலின் போது சிக்கல் ஏற்பட்டால் மாறலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 01:53, 22 ஏப்ரல் 2016 (UTC)

தொகுதி, வேட்பாளர் பெயர், கட்சி என்று விரிதாளில் தொகுத்தால், பின்னர் எல்லா கட்சிகளின் வேட்பாளர்களையும், ஒரு தாளில் ஒருங்கிணைத்துவிடலாம். --Mdmahir (பேச்சு) 14:33, 26 ஏப்ரல் 2016 (UTC)


வரிசை தொகு

என்னிடம் கீழுள்ள வரிசைப்படிதான் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் 1 கும்மிடிப்பூண்டி 2 பொன்னேரி (தனி) 3 திருத்தணி 4 திருவள்ளூர் 5 பூந்தமல்லி (தனி) 6 ஆவடி 7 மதுரவாயல் 8 அம்பத்தூர் 9 மாதவரம் 10 திருவொற்றியூர் சென்னை மாவட்டம் 11 இராதாகிருசுணன் நகர் 12 பெரம்பூர் 13 கொளத்தூர் 14 வில்லிவாக்கம் 15 திரு.வி.க. நகர் (தனி) 16 எழும்பூர்(தனி) 17 இராயபுரம் 18 துறைமுகம் 19 சேப்பாக்கம் 20 ஆயிரம் விளக்கு 21 அண்ணா நகர் 22 விருகம்பாக்கம் 23 சைதாப்பேட்டை 24 தியாகராய நகர் 25 மயிலாப்பூர் 26 வேளச்சேரி காஞ்சிபுரம் மாவட்டம் 27 சோழிங்கநல்லூர் 28 ஆலந்தூர் 29 திருப்பெரும்புதூர் (தனி) 30 பல்லாவரம் 31 தாம்பரம் 32 செங்கல்பட்டு 33 திருப்போரூர் 34 செய்யூர் (தனி) 35 மதுராந்தகம் (தனி) 36 உத்திரமேரூர் 37 காஞ்சிபுரம் வேலூர் மாவட்டம் 38 அரக்கோணம் (தனி) 39 சோழிங்கர் 40 காட்பாடி 41 இராணிப்பேட்டை 42 ஆர்க்காடு 43 வேலூர் 44 அணைக்கட்டு 45 கீழ்வைத்தனன் குப்பம் (தனி) 46 குடியாத்தம் (தனி) 47 வாணியம்பாடி 48 ஆம்பூர் 49 ஜோலார்ப்ட்டை 50 திருப்பத்தூர் கிருசுணகிரி மாவட்டம் 51 ஊத்தங்கரை (தனி) 52 பர்கூர் 53 கிருசுணகிரி 54 வேப்பனகள்ளி 55 ஓசூர் 56 தளி தருமபுரி மாவட்டம் 57 பாலக்காடு 58 பென்னாகரம் 59 தருமபுரி 60 பாப்பிரெட்டிப்பட்டி 61 அரூர் (தனி) திருவண்ணாமலை மாவட்டம் 62 செங்கம் (தனி) 63 திருவண்ணாமலை 64 கீழ்பெண்ணாத்தூர் 65 கலசப்பாக்கம் 66 போளூர் 67 ஆரணி 68 செய்யாறு 69 வந்தவாசு (தனி) விழுப்புரம் மாவட்டம் 70 செஞ்சி 71 மயிலம் 72 திண்டிவனம் (தனி) 73 வானூர் (தனி) 74 விழுப்புரம் 75 விக்கிரவாண்டி 76 திருக்கோயிலூர் 77 உளுந்தூர்பேட்டை 78 இரிசிவந்தியம் 79 சங்கராப்புரம் 80 கள்ளக்குறிச்சி (தனி) சேலம் மாவட்டம் 81 கங்கவள்ளி (தனி) 82 ஆத்தூர் (தனி) 83 ஏற்காடு (பழங்குடி) 84 ஓமலூர் 85 மேட்டூர் 86 எடப்பாடி 87 சங்ககிரி 88 சேலம் - மேற்கு 89 சேலம் - வடக்கு 90 சேலம் - தெற்கு 91 வீரபாண்டி நாமக்கல் மாவட்டம் 92 இராசிபுரம் (தனி) 93 சேந்தமங்கலம் (பழங்குடி) 94 நாமக்கல் 95 பரமத்தி-வேலூர் 96 திருச்செங்கோடு 97 குமாரபாளையம் ஈரோடு மாவட்டம் 98 ஈரோடு கிழக்கு 99 ஈரோடு மேற்கு 100 மொடக்குறிச்சி 101 பெருந்துறை 102 பவானி 103 அந்தியூர் 104 கோபிச்செட்டிப்பாளையம் 105 பவானிசாகர் (தனி) திருப்பூர் மாவட்டம் 106 தாராபுரம் (தனி) 107 காங்கேயம் 108 அவினாசி (தனி) 109 திருப்பூர் வடக்கு 110 திருப்பூர் தெற்கு 111 பல்லடம் 112 உடுமலைப்பேட்டை 113 மடத்துக்குளம் நீலகிரி மாவட்டம் 114 உதகமண்டலம் 115 கூடலூர் (தனி) 116 குன்னூர் கோயமுத்தூர் மாவட்டம் 117 மேட்டுப்பாளையம் 118 சூலூர் 119 கவுண்டம்பாளையம் 120 கோயம்புத்தூர் வடக்கு 121 தொண்டாமுத்தூர் 122 கோயம்புத்தூர் தெற்கு 123 சிங்காநல்லூர் 124 கிணத்துக்கடவு 125 பொள்ளாச்சி 126 சால்பாறை (தனி) திண்டுக்கல் மாவட்டம் 127 பழநி 128 ஒட்டன்சத்திரம் 129 ஆத்தூர் 130 நிலக்கோட்டை (தனி) 131 நத்தம் 132 திண்டுக்கல் 133 வேடச்சந்தூர் கரூர் மாவட்டம் 134 அரவக்குறிச்சி 135 கரூர் 136 கிருசுணராயபுரம் (தனி) 137 குளித்தலை திருச்சிராப்பள்ளி மாவட்டம் 138 மணப்பாறை 139 திருவரங்கம் 140 திருச்சிராப்பள்ளி மேற்கு 141 திருச்சிராப்பள்ளி கிழக்கு 142 திருவெறும்பூர் 143 இலால்குடி 144 மண்ணச்சநல்லூர் 145 முசிறி 146 துறையூர் (தனி) பெரம்பலூர் மாவட்டம் 147 பெரம்பலூர் (தனி) 148 குன்னம் அரியலூர் மாவட்டம் 149 அரியலூர் 150 ஜெயங்கொண்டம் கடலூர் மாவட்டம் 151 திட்டகுடி (தனி) 152 விருத்தாச்சலம் 153 நெய்வேலி 154 பண்ருட்டி 155 கடலூர் 156 குறிஞ்சிப்பாடி 157 புவனகிரி 158 சிதம்பரம் 159 காட்டுமன்னார்கோயில் (தனி) நாகப்பட்டினம் மாவட்டம் 160 சீர்காழி (தனி) 161 மயிலாடுதுறை 162 பூம்புகார் 163 நாகப்பட்டினம் 164 கீழ்வேளூர் (தனி) 165 வேதாரண்யம் திருவாரூர் மாவட்டம் 166 திருத்துறைப்பூண்டி (தனி) 167 மன்னார்குடி 168 திருவாரூர் 169 நன்னிலம் தஞ்சாவூர் மாவட்டம் 170 திருவிடைமருதூர் (தனி) 171 கும்பகோணம் 172 பாபநாசம் 173 திருவையாறு 174 தஞ்சாவூர் 175 ஒரத்தநாடு 176 பட்டுக்கோட்டை 177 பேராவூரணி புதுக்கோட்டை மாவட்டம் 178 கந்தர்வக்கோட்டை (தனி) 179 விராலிமலை 180 புதுக்கோட்டை 181 திருமையம் 182 ஆலங்குடி 183 அறந்தாங்கி சிவகங்கை மாவட்டம் 184 காரைக்குடி 185 திருப்பத்தூர் 186 சிவகங்கை 187 மானாமதுரை (தனி) மதுரை மாவட்டம் 188 மேலூர் 189 மதுரை கிழக்கு 190 சோழவந்தான் (தனி) 191 மதுரை வடக்கு 192 மதுரை தெற்கு 193 மதுரை மத்தி 194 மதுரை மேற்கு 195 திருப்பரங்குன்றம் 196 திருமங்கலம் 197 உசிலம்பட்டி தேனி மாவட்டம் 198 ஆண்டிப்பட்டி 199 பெரியகுளம் (தனி) 200 போடிநாயக்கனூர் 201 கம்பம் விருதுநகர் மாவட்டம் 202 இராசபாளையம் 203 திருவில்லிப்புத்தூர் (தனி) 204 சாத்தூர் 205 சிவகாசி 206 விருதுநகர் 207 அருப்புக்கோட்டை 208 திருச்சுழி இராமநாதபுரம் மாவட்டம் 209 பரமக்குடி (தனி) 210 திருவாடானை 211 இராமநாதபுரம் 212 முதுகுளத்தூர் தூத்துக்குடி மாவட்டம் 213 விளாத்திக்குளம் 214 தூத்துக்குடி 215 திருச்செந்தூர் 216 திருவைகுண்டம் 217 ஓட்டப்பிடாரம் (தனி) 218 கோவில்பட்டி திருநெல்வேலி மாவட்டம் 219 சங்கரன்கோவில் (தனி) 220 வாசுதேவநல்லூர் (தனி) 221 கடையநல்லூர் 222 தென்காசி 223 ஆலங்குளம் 224 திருநெல்வேலி 225 அம்பாசமுத்திரம் 226 பாளையங்கோட்டை 227 நாங்குநேரி 228 இராதாபுரம் கன்னியாக்குமரி மாவட்டம் 229 கன்னியாகுமரி 230 நாகர்கோவில் 231 குளச்சல் 232 பத்மனாபபுரம் 233 விளவங்கோடு 234 கிள்ளியூர் --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 01:54, 22 ஏப்ரல் 2016 (UTC)

வரிசைக்கு எல்லா இடத்திலும் சீராக அமைய விக்கிதரவை பயன்படுத்தலாம். பார்க்க (series ordinal) (நாகப்பட்டினம்). முடிந்தவரை குறுந்தகவல்களை விக்கித்தரவில் பயன்படுத்தவும். -- Mdmahir (பேச்சு) 02:36, 22 ஏப்ரல் 2016 (UTC)

கொங்குநாடுமக்கள்தேசியகட்சி போட்டியிடும் இரங்கல் 1 கோவை வடக்கு 2 கோவை தெற்கு 3 தொண்டாமுத்தூர் 4 கவுண்டம்பாளையம் 5 பொள்ளாச்சி 6 கிணத்துகடவு 7 மேட்டுப்பாளையம் 8 அவிநாசி 9 திருப்பூர் தெற்கு 10 திருப்பூர் வடக்கு 11 தாராபுரம் 12 பழனி 13 மடத்துகுளம் 14உடுமலை 15 சூலூர்16ஈரோடு கிழக்கு17 ஈரோடு மேற்கு 18 மொடகுறுச்சி 19 பெருந்துரை 20ஒட்டன்சத்திரம் 21 அந்தியூர் 22 கோபி 23 நாமக்கல் திருச்சங்கோடு 24 அரவகுறுச்சி 25 கரூர் 26 சிங்காநல்லூர் 27 பரமத்திவேலூர் 28 குமாரபாளை 29 குளித்தலை 30 மேட்டூர் 31சேலம் வடக்கு 32 வீரபாண்டி 33 சேலம் தெற்கு 34 சேலம் மேற்கு 35 ஒமலூர் 36 எடப்பாடி 37 சங்ககிரி 38 தர்மபுரி 39 பென்னகரம் 40 வேப்பனஹள்ளி 41 கிருஷ்ணகிரி 42 சங்கராபுரம் 43 ஒசூர் 44 திருப்பத்தூர் 45 ஆத்தூர் 46 முசிறி 47 அம்பத்தூர் 48 தாம்பரம் 49 விருகம்பாக்கம் 50 ஆலந்தூர் 51 பாப்பிரெட்டிப்பட்டி 52 வேடசந்தூர் 53 உளுந்தூர்பேட்டை 54 பாலக்கோடு 55 அருர் 56 ஊத்தங்கரை 57 வால்பாறை 58 பல்லாவரம் 59 சேந்தமங்கலம் 60 ராசிபுரம் 61 பர்கூர் 62பவானி 63 பவானிசாகர் 64 ஆத்தூர் 65 கெங்கவல்லி 66 கள்ளக்குறிச்சி 67 ஏற்காடு 68 ஸ்ரீரங்கம் 69

மா குணசேகரன் (பேச்சு) 10:08, 7 மே 2016 (UTC)Reply

69சிங்காநல்லூர் மா குணசேகரன் (பேச்சு) 10:09, 7 மே 2016 (UTC)Reply

தொகுதிகளில் கூட்டணிகள் / கட்சிகளின் போட்டி விவரம் தொகு

இந்தக் கட்டுரையில் உள்ள தொகுதிகளில் கூட்டணிகள் / கட்சிகளின் போட்டி விவரம் எனும் துணைத்தலைப்பின் கீழுள்ள 'நீண்ட அட்டவணை', வாக்குப் பதிவு முடிந்ததும் தனிக்கட்டுரையாக நகர்த்தப்படும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:13, 24 ஏப்ரல் 2016 (UTC)

தேர்தலுக்கு முன்பே நகர்த்தினால் நன்றாயிருக்கும், நீண்ட கட்டுரையாக இப்போதே தெரிகிறது. -- Mdmahir (பேச்சு) 01:56, 29 ஏப்ரல் 2016 (UTC)

ஒரு குறிப்பிட்ட தொகுதியில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடுகின்றன என அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்த அட்டவணை உதவும் வகையில் இருக்கும் என்பதால் வாக்குப்பதிவு வரை இங்கிருக்கலாம் என நினைத்தேன். கட்டுரை நீண்டிருப்பதாக மாகிரும் கருதுவதால், இப்போதே தனிக்கட்டுரையாக நகர்த்திவிட்டேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:53, 29 ஏப்ரல் 2016 (UTC)

கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் தொகு

@Selvasivagurunathan m: கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் என்ற 8 வது துணைத் தலைப்பின்கீழ் சில கட்சிகளின் விவரம் பட்டியலிலும், வேறுசில கட்சிகள் குறித்த விவரங்கள் தனித்தனி தலைப்பிலும் தரப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகள் குறித்த வேட்பாளர் விவரங்களும் ஒரே பட்டியலாக இருந்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றுகிறது. அனைத்தையும் ஒரே பட்டியலுக்குள் தருவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா? --Booradleyp1 (பேச்சு) 04:47, 30 ஏப்ரல் 2016 (UTC)

@Booradleyp1: மிகத் துல்லியமாக கவனித்துள்ளீர்கள். தனித்தனி தலைப்புகளில் இருந்த தகவல்களை பட்டியலிடத் தொடங்கியவன், அப்போது போதுமான நேரமில்லாததால் பாதியில் நிறுத்திவிட்டேன். இன்று நிறைவு செய்வேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:42, 30 ஏப்ரல் 2016 (UTC)
Y ஆயிற்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:22, 30 ஏப்ரல் 2016 (UTC)

@Selvasivagurunathan m:இக்கட்டுரை உருவாக்கத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியவை.--Booradleyp1 (பேச்சு) 13:52, 30 ஏப்ரல் 2016 (UTC)

வேட்பு மனு தொகு

மேற்கோள் இணைத்தால் சரிபார்க்க உதவியாயிருக்கும். ஏனென்றால் விகடன் தட்சு தமிழ் போன்றவற்றில் மனு செய்தவர்களை குறைவாக குறிப்பிட்டுள்ளனர். --குறும்பன் (பேச்சு) 16:35, 30 ஏப்ரல் 2016 (UTC)

குறும்பன், உங்களின் சுட்டிக்காட்டல் மிகச் சரியானது. இன்று காலை முதல், தேர்தல் ஆணையத்தின் தளம் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களை மணிக்கொரு முறை கவனித்து வருகிறேன். இந்தத் தருணம் வரை மிகச் சரியான தகவல் கிடைத்தபாடில்லை. பொருத்தமான மேற்கோள் கிடைத்ததும் உடனடியாக சேர்த்து விடுகிறேன். பின் குறிப்பு: புதுச்சேரி சிறிய மாநிலமாக இருப்பதாலோ என்னமோ, அம்மாநிலத்துக்குரிய தகவல் புதுச்சேரி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெளிவாக நாள்தோறும் தரப்பட்டது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:49, 30 ஏப்ரல் 2016 (UTC)

கருத்து தேவை... தொகு

@ பயனர்:Kanags... நடப்பு வார்ப்புரு இக்கட்டுரைக்கு தேவையில்லை எனக் கருதுகிறீர்களா? மே 19 அன்றுதான் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. எனவே பரிசீலிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:57, 8 மே 2016 (UTC)Reply

சேர்த்திருக்கிறேன். மேலும், தகவல்சட்டத்தில் உள்ள தமிழ்நாடு வரைபடம் ஆங்கிலத்தில் உள்ளது. யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் நல்லது.--Kanags \உரையாடுக 04:09, 8 மே 2016 (UTC)Reply

2011 தொகு

2011இல் வென்ற தொகுதிகள் அடிப்படையில் 2 வது பெரிய கட்சி தேமுதிக 3 வது பெரியது திமுக அதன்படி மாற்றியுள்ளேன் --குறும்பன் (பேச்சு) 14:33, 8 மே 2016 (UTC)Reply

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:35, 9 மே 2016 (UTC)Reply

234 அல்ல 232 தொகு

232 தொகுதிகளுக்கு தான் தேர்தல் நடந்துள்ளது மீதி 2க்கு யூன் மாதம் நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதை பயனர் 194.170.95.210 நீக்கிவிட்டார். 234 தொகுதிகளுக்கு நடந்தது என்றால் அதிமுக+ கூட்டணி திமுக கூட்டணி தொகுதிகளை கூட்டினால் 234 வராதே மேலும் மே 16 அன்று 232 தொகுதிகளுக்கு தான் தேர்தல் நடந்தது என்பதும் தெரியாதே. இத்தகவல் முக்கயமாயிற்று அல்லவா? --குறும்பன் (பேச்சு) 13:47, 23 மே 2016 (UTC)Reply

ஐயம் தொகு

சட்டமன்ற எதிர்கட்சித தலைவரை தானே கட்சித்தலைவராக காட்சிபடுத்த வேண்டும். அப்படி என்றால் இசுதாலின் தானே எதிர்க்கட்சித்தலைவர், கருணாநிதி கட்சித் தலைவராக இருக்கலாம், --குறும்பன் (பேச்சு) 21:03, 6 சூன் 2016 (UTC)Reply

கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறாரோ இல்லையோ, அவரையே காட்சிப்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 22:20, 6 சூன் 2016 (UTC)Reply
Return to "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016" page.