பேச்சு:துரை வைகோ
இவர் எதற்காக பெயர் பெற்றவர்? கட்டுரையின் ஆரம்பத்திலேயே வைகோவின் மகன் என்ற சிறப்பு தரப்படுகிறது. அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்குக் கட்டுரை வேண்டுமா? மேலும், வெறும் வதந்தியை மட்டும் காட்டி அடுத்த வரி வருகிறது. பின்னர் அவர் ஏதோ ஒரு வணிக நிறுவனத்தின் இயக்குனர். இவை மட்டும் இருந்தால் கட்டுரை தகுதி பெறுமா? உடனடியாக இக்கட்டுரையை நீக்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 08:22, 4 ஆகத்து 2015 (UTC)
User:Kanags அவசரமாக நீக்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது? வதந்தியா இல்லையா என்பதெல்லாம் இங்கு எதற்கு? வழக்கமாக விக்கியில் சேர்க்கப்படும் நாளிதழ்களில் (timesofindia, newindianexpress) இருந்து தான் மேற்கோள் தரப்பட்டுள்ளது. இது மூன்றாம் நிலை தரவு போல் தானே இருக்கிறது. விக்கியில் அரசியல்வாதிகள் தொடர்பாக எதிர்கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் மேற்கோள்களுடன் வழக்கமாக தரப்படுவது தான். மேலே நீங்கள் சுட்டிய காரணங்கள் எல்லாம் கட்டுரைக்கு தகுதியாக எங்கே வைக்கப்பட்டுள்ளது? கட்டுரைக்கு தகுதி என்றால் அது மூன்று வரிகள். மேற்கோள்கள். அவ்வளவு தான்.
கட்டுரை தொடங்கிய பயனருக்கு தெரிவிக்காமல் கட்டுரையை நீக்கியதற்கு விளக்கம் தர உங்களை கேட்டுக்கொள்கிறேன். பேச்சுப்பக்கத்தையும் அவசர அவசரமாக நீக்கியதற்கும் விளக்கம் தரவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:36, 4 ஆகத்து 2015 (UTC)
உங்கள் கருத்துக்களையும் தரவும்.
- பயனர்:Sodabottle
- @Mayooranathan:
- @Natkeeran:
- @Ravidreams:
- @Sundar:
- @AntanO:
கட்டுரையின் உள்ளடக்கங்கள் கீழே தரப்படுகிறது. உரையாடலுக்காக.
நீக்கல் விளக்கம்
தொகுதென்காசி சுப்பிரமணியன், இக்கட்டுரையில் உள்ள செய்திகள் கனக்ஸ் கூறியபடி விக்கிபீடியா கட்டுரையாக தகுதி பெறுமா? இதை முதலில் படித்தபோது எதிர்மறையான எண்ணங்களையே இக்கட்டுரை வரிகள் தோற்றுவித்தது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் மூன்று:
- இவர் அரசியல் தலைவர் வை.கோவின் மகன்.
- இந்திய புகையிலை குழுமத்தில் பங்குத்தொகை வைத்திருப்பதாக எதிர் தரப்புக் கட்சியினரால் சொல்லப்படுவது.
- ஒரு நிறுவனத்துக்கு இயக்குநராக உள்ளது.
தென்காசி சுப்பிரமணியன், நீங்களே கூறுங்கள். இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரையா, இல்லையா என்று. இக்கட்டுரையின் கருத்துகள் அவதூறாக கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, நீக்குக வார்ப்புரு இட்டபின் விரைந்து நீக்கியிருந்தேன் பேச்சுப் பக்கத்தினையும் சேர்த்து. கட்டுரையையே நீக்கிவிட்டதால், பேச்சுப் பக்கத்தையும் நீக்கியிருந்தேன். நான் அறிந்தவரையில் விக்கிபீடியாக் கட்டுரைகள் நடுநிலைமையுடன் எழுதப்பட வேண்டும் என்று கருதுகிறேன். இல்லை இப்படியும் எழுதலாம் என்றால் தயவுசெய்து தெரிவியுங்கள். காலம் தாழ்த்துவது தவறெனப் பட்டதாலேயே விரைந்து செயற்பட்டேன். தாமதித்து வழங்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகிறது. தவறெனில் மன்னிக்கவும். ஆனாலும் இவ்விதக் கட்டுரைகள் (வரிகள்) விக்கிபீடியாவில் இருப்பது தவறெனக் கருதுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 17:30, 4 ஆகத்து 2015 (UTC)
அவதூறு என்றால் இப்படி இருக்கும். வையாபுரி புகையிலை குழும பங்குதாரர்.
மூன்றாம் நிலை தரவு என்பது நான் எழுதியது மாதிரி இருக்கும். இந்திய புகையிலை குழுமத்தில் பங்குத்தொகை வைத்திருப்பதாக எதிர் தரப்புக் கட்சியினரால் சொல்லப்படுவது.
இதில் எங்கிருந்து அவதூறு வந்தது?
வைகோ மகன். மற்றொரு குழுமத்தின் இயக்குநர். இந்த 2 கருத்திலும் என்ன அவதூறு கண்டீர்கள்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:10, 4 ஆகத்து 2015 (UTC)
//இக்கட்டுரையின் கருத்துகள் அவதூறாக கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளது.//
இதை மறுக்கிறேன். அப்படிப்பார்த்தால் மூன்றாம் நிலை தரவுகள் உள்ள பல கட்டுரைகளில் இன்னார் இன்னார் மீது இவ்வாறு குற்றம் சாட்டினார் என்று எழுதப்பட்டுள்ள வாக்கியங்கள் இருந்தால் அக்கட்டுரைகளை நீக்கிவிடலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:12, 4 ஆகத்து 2015 (UTC)
இதுகுறித்து சோடாபாட்டிலுக்கு பல அனுபவங்கள் இருக்கலாம். இன்னார் இன்னார் மீது இவ்வாறு குற்றம் சாட்டினார் என்று விக்கியில் இருந்தால் அது அவதூறா? இல்லை இன்னார் இக்குற்றம் செய்தார் என்றால் அவதூறா? இந்த கேள்விக்கு மற்ற பயனர்களும் பதில் சொல்லவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:16, 4 ஆகத்து 2015 (UTC)
- கட்டுரையைத் தற்காலிகமாக மீட்டிருக்கிறேன். ஆனாலும் இது உடனடியாக நீக்கப்பட வேண்டும். நான் மேலே சொல்லியது தான் எனது நிலைப்பாடு. இக்கட்டுரையை வைத்திருப்பதற்கு எவ்விதமான நியாயங்களும் இல்லை.--Kanags \உரையாடுக 21:20, 4 ஆகத்து 2015 (UTC)
நான் முதலில் இருந்து கேட்கிறேன். முதலில் கட்டுரையை நீக்கியதற்கு யாராவது ஒரே ஒரு நியாயத்த சொல்லுங்கப்பா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:42, 4 ஆகத்து 2015 (UTC)
- நீக்கியவரே விளக்கம் தந்துள்ளார். வேறு யாரப்பா விளக்கம் தர வேண்டும்?--Kanags \உரையாடுக 02:53, 5 ஆகத்து 2015 (UTC)
- ஒருவர் ஒரு நிறுவனம் ஒன்றில் பங்குகள் வைத்திருப்பதால் யாருக்கு என்ன குறை? அது எதற்கு இங்கு குறிப்பிட வேன்டும்? கட்டுரை இருப்பதற்கு அது ஒரு தகுதியா? ஒருவர் ஏதோ ஒரு ஒரு நிறுவனத்தில் இயக்குனராக இருப்பது ஒரு விக்கிப்பீடியா கட்டுரை தகுதியா? அரசியல்வாதியின் மகன் ஒரு கட்டுரை தகுதியா? எவையுமே முக்கியத்துவம் பெறவில்லை. எனவே கட்டுரையை உடனடியாக அழிப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 03:00, 5 ஆகத்து 2015 (UTC)
கட்டுரையை நீக்கியது சரியே. அவர் விக்கியில் கட்டுரை கொள்ளத்தக்க குறிப்பிடத்தக்க அரசியல்வாதி என்பதற்கான தகுதிகள் இல்லை. 1) அவர் தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியன்று, தேர்தலில் போட்டியிட்டவரும் இல்லை. 2) குறிப்பிடத்தக்க கட்சியில் அதிகாரப்பூர்வமான பொறுப்பில் இருப்பவர் அன்று 3) அரசியல் நோக்கில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர் கிடையாது. 4) தொடர்ச்சியாக (பிற கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு சர்ச்சைகள் மட்டுமல்லாமல்) ஊடகங்களால் எழுதப்படுபவருமன்று. (ஒரு ஒப்பீட்டுக்குக் காண்க en:WP:POLITICIAN)
மதுவிலக்கு பற்றிய சர்ச்சையின் விளைவாக இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் “நீங்கள் / உங்கள் குடும்பம் மட்டும் ஒழுக்கமா” என்ற சண்டையில் இழுக்கப்பட்டிருக்கும் குடும்ப அங்கத்தினர் துரை வையாபுரி. வைகோவின் மகன் என்பது மட்டுமே அவரது ”சிறப்பு”. மதிமுகவின் அடுத்த தலைவர் என்று கூட அவரை ஊடக ஊடகங்கள் காட்டுவதில்லை (வாரிசு அரசியல் ரீதியதாக கார்த்தி சிதம்பரம், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி அளவுக்குக் கூட பேசப்படுபவர் அல்ல). 2015 தேர்தலில் பிரச்சாரம் செய்தார் என்பது மட்டுமே இதற்கு முன்னர் அவர் பற்றியான ஊடக செய்திகள் (அவையும் சிலவே). எனவே கட்டுரையை நீக்கியது தவறில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 03:19, 5 ஆகத்து 2015 (UTC)
நந்தகுமார், புதிய பயனர்கள் எழுதும் பொருந்தாத கட்டுரைகளைத் துரிதமாக நீக்கலாம். அனுபவம் உள்ள பயனர்கள் எழுதிய கட்டுரைகள் என்றால் அவர்களுக்குத் தகவல் தந்து கருத்து அறிந்த பின் முடிவெடுக்கலாம். இது விக்கிச்சமூகத்தில் இணக்கத்தைத் தக்க வைக்க உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 03:58, 5 ஆகத்து 2015 (UTC)
- இனி அப்படியே செய்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 05:02, 5 ஆகத்து 2015 (UTC)
User:Kanags நீக்கியவர் தந்தது விளக்கங்கள் அல்ல. அவர் என்னை இதை எழுதியது என்ன நியாயம் எனக் கேள்வி கேட்டுள்ளார்.
//தென்காசி சுப்பிரமணியன், நீங்களே கூறுங்கள். இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரையா, இல்லையா என்று.//
அதுக்கு நான் பதிலும் அளித்துள்ளேன். அவதூறு மூன்றாம் நிலை தரவு இரண்டுக்கும் வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. அதுக்கு ஏதும் மறுப்பு வரவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:40, 5 ஆகத்து 2015 (UTC)
நீங்கள் ஒருவர் ஒரு நிறுவனம் ஒ......' என்று தொடங்கிய பத்தியில் உள்ள கருத்துக்கள் பற்றி சொல்லனும் என்றால் கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வரியையும் ஒரு கட்டுரையாக இருந்தால் மட்டுமே நீக்குவதற்கு தகுதிபடும். ஆனால் அனைத்து வரிகளும் ஒரே கட்டுரையில் உள்ளது. அதனால் நீங்கள் சொல்லியவை பொருந்தாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:45, 5 ஆகத்து 2015 (UTC)
- தென்காசி, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது இது தானோ? உங்கள் அனைத்து மூன்று வரிகளுமே விக்கிக்கு ஏற்றதல்ல என ஆரம்பத்திலேயே கூறியுள்ளேன். நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே படிக்கவில்லையா? முழுவதையும் படிக்கவில்லையா?--Kanags \உரையாடுக 22:46, 5 ஆகத்து 2015 (UTC)
User:Kanags நீங்கள் படித்தாலும் புரிந்துகொள்ளவில்லையா? நீங்கள் கேட்ட தனித்தனிக் கேள்விகளுக்கான சம கருத்துகள் மற்ற கட்டுரைகளிலும் உள்ளன. ஆனால் அவை பிற கருத்துக்களோடும் இருப்பதால் அவை நீக்கப்படுவதில்லை. அதே போல் தான் இங்கும்.
//ஒவ்வொரு வரியையும் ஒரு கட்டுரையாக இருந்தால் மட்டுமே நீக்குவதற்கு தகுதிபடும். ஆனால் அனைத்து வரிகளும் ஒரே கட்டுரையில் உள்ளது. அதனால் நீங்கள் சொல்லியவை பொருந்தாது.// --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:59, 5 ஆகத்து 2015 (UTC)
சோடாப்பாட்டில் கருத்துகளுக்கு மறுப்பு
தொகுகீழுள்ள கருத்து எந்த நாளிதழ்களில் வந்துள்ளது? இது உங்கள் சொந்த ஊகம். இதை கட்டுரை நீக்க காரணியாக எடுத்துக்கொள்ள முடியாது.
//மதுவிலக்கு பற்றிய சர்ச்சையின் விளைவாக இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் “நீங்கள் / உங்கள் குடும்பம் மட்டும் ஒழுக்கமா” என்ற சண்டையில் இழுக்கப்பட்டிருக்கும் குடும்ப அங்கத்தினர் துரை வையாபுரி.//
விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள் பட்டியலில் நான் வைகோ குடும்பம் என்னும் கட்டுரை தலைப்பை மார்ச்சு மாதம் சேர்த்ததே இத்தகவல் கிடைத்ததை வைத்து தான். அதுக்கு முன்னர் ஒராண்டுக்கு முன்னரே இது சொல்லப்பட்டு வருவது தான். உங்களின் சொந்த ஊகம் உண்மையாக அதாவது துரை வையாபுரி புகையிலை குழும பங்குதாரராக இல்லாமல் இருந்தாலும் கூட, நாளிதழ்களில் இதுக்கு மறுப்பு வந்தால் "எதிர்கட்சியினர் சுமத்திய இக்குற்றத்துக்கு இவர் இவ்வாறு மறுப்பளித்துள்ளார்" என்று எழுதி மாற்றலாமே ஒழிய மொத்தமாக அழிப்பது பொருத்தமில்லை.
மற்ற சோடாப்பாட்டிலின் கருத்துகள் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:56, 5 ஆகத்து 2015 (UTC)
- 1) //மார்ச்சு மாதம் சேர்த்ததே இத்தகவல் கிடைத்ததை வைத்து தான். அதுக்கு முன்னர் ஒராண்டுக்கு முன்னரே இது சொல்லப்பட்டு வருவது தான்.// இதற்கான ஊடகச் சான்றுகளை முன்வையுங்கள். குறிப்பிடத்தக்க அரசியல்வாதியல்ல என்பதை தெளிவாக மேலே நான் காட்டிவிட்டேன். நான் கூறும் காரணங்கள் நீர்த்துப் போகச்செய்ய வேண்டுமெனில் தொடர்ச்சியாக ஊடகங்களால் பேசப்படுபவர் என்பதைக் காட்டுங்கள். நிரூபணத்தின் சுமை (burden of proof) கட்டுரையாக்குனரான உங்களைச் சார்ந்ததே.
- 2) //கீழுள்ள கருத்து எந்த நாளிதழ்களில் வந்துள்ளது? இது உங்கள் சொந்த ஊகம். இதை கட்டுரை நீக்க காரணியாக எடுத்துக்கொள்ள முடியாது. // "one event" வழிகாட்டுதல்கள் கூறும் வட்டத்துக்குள் இவர் வருகிறார் என்பதை எடுத்தக்காட்ட நான் விளக்கியது இது. நீங்கள் இணைத்திருக்கும் கட்டுரையே மதுவிலக்கு சர்ச்சையில் ஒரு அரசியல்வாதி மற்ற அரசியவாதிகளுக்கு தகுதியில்லை என்று கூறிய அறிக்கையைப் பற்றித்தான். நத்தம் விஸ்வநாதன் “மதுவிலக்கு” பற்றி விடுத்த அறிக்கையில் தான் துரை வையாபுரியை குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்பு அவர் குறித்து எந்த ஊடகத்திலும் ”வைக்கோ மகன்” என்ற சிறிய ஒரு வரி இருவரிக் குறிப்புகளைத் தவிர வேறு எதுவும் வந்ததில்லை. ஒரேயொரு விதிவிலக்கு நான் கூறிய 2014 தேர்தல் பரப்புரை நிகழ்வு. அதுவும் ஒரு நாள் வந்திருக்கிறது. எனவே தான் கட்டுரை இருக்கவே குறிப்பிடத்தக்கமை போதாது என்கிறேன்.
- 3) "உங்களின் சொந்த ஊகம் உண்மையாக அதாவது துரை வையாபுரி புகையிலை குழும பங்குதாரராக இல்லாமல் இருந்தாலும் கூட" இது என் சொந்த ஊகமா.? ”அவர் புகையிலை குழும பங்குதாரர் இல்லை” என்று நான் எங்கும் ஊகிக்கவில்லை. தயவு செய்து நான் சொல்லாததை சொன்னேன் என்று மாற்ற வேண்டாம். கட்டுரையை நீக்க ஆதரவளிப்பவர் எல்லாம் துரை வையாபுரி ஆதரவாளர் போன்ற தோன்றினால் நான் என்ன சேய்ய முடியும். கருத்து சொல்ல அழைத்தீர்கள், வந்து சொல்லியிருக்கிறேன். அவ்வளவு தான். இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உரையாட விரும்பவுமில்லை. --சோடாபாட்டில்உரையாடுக 16:51, 5 ஆகத்து 2015 (UTC)
நீங்கள் துரை வையாபுரி ஆதரவாளர்னு நான் எங்கும் சொல்லவில்லையே சோடாப்பாட்டில். இங்குள்ள நான் நடத்திய உரையாடல் அனைத்தும் அவதூறா? மூன்றாம் நிலை வாக்கியமா? வைக்கத்தகுந்த கருத்தா? கொடுக்கக்கூடிய மூலமா? என்பது பற்றி மட்டும்தான். அதனால் தான் இன்னார் இன்னாரைன்னு பல இடங்களில் பேச்சுப்பக்கத்தில் பயன்படுத்தினேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:42, 5 ஆகத்து 2015 (UTC)
//நான் கூறும் காரணங்கள் நீர்த்துப் போகச்செய்ய வேண்டுமெனில் தொடர்ச்சியாக ஊடகங்களால் பேசப்படுபவர் என்பதைக் காட்டுங்கள்.//
இங்கு நீங்கள் கூறும் காரணங்கள் என்பதற்காக மட்டும் எதையும் மறுக்கப்போவதில்லை. 2002ல் ஒரு செய்தியும், ஏப்ரல் 2014 2 செய்திகளைச் சேர்த்துள்ளேன் பார்க்கவும்.
//இதற்கான ஊடகச் சான்றுகளை முன்வையுங்கள்.//
நான் ஊடகத்தில் இது சென்ற ஆண்டு வந்ததுன்னு சொல்லவே இல்லையே? எனக்கு அப்போதே தகவல் தெரியும்னு தான் சொன்னேன். ஊடகங்களில் தேட்ப்பார்த்த போது எந்த தகவலும் அதற்கு கிடைக்கவில்லை. அதனால் அது பொய் என நினைத்தேன். இப்போது நாளிதழ்களிலும் வந்ததால் சேர்த்தது அவ்வளவே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:56, 5 ஆகத்து 2015 (UTC)
நீக்குவதற்கு ஆதரவு
தொகு- இக்கட்டுரையை நீக்கலாம். பொதுவில் அறியப்படாதவர் (Notability). வைகோ பக்கத்தில் குடும்பம் எனும் பகுதியில் இணைக்கலாம். -- மாகிர் (பேச்சு) 05:28, 5 ஆகத்து 2015 (UTC)
பக்கம் அழிக்க நேர்ந்தால்
தொகுஒரு வேலை பக்கம் அழிக்க நேர்ந்தால் பேச்சுப்பக்கத்தை விட்டு விடலாம். மேலும் கட்டுரை உள்ளடக்கங்கள் வைகோ குடும்பம் என்ற உபதலைப்பில் வைகோ கட்டுரையிலோ அல்லது வைகோ குடும்பம் என்ற புதுக்கட்டுரையிலோ இணைக்கலாம் என்பது என் பரிந்துரை.
கட்டுரை பற்றிய விவாதம் நடந்து கொண்டுள்ளது. அதனால் இந்த கருத்துகள் இந்த பக்கத்தை அழிக்க என் ஆதரவாக யாரும் கருதக்கூடாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:19, 5 ஆகத்து 2015 (UTC)
- கட்டுரையை இணைக்கும் போது பேச்சுப் பக்கத்தையும் வைகோ பக்கத்துடன் இணைக்க முடியும். வைகோ பக்கத்தின் பேச்சு பக்கத்திற்கு தேவையற்ற உள்ளடக்கம் என்பது எனது கருத்து. எனினும் இருப்பதும் நல்லதே. பிறகு வேறொருவர் அக்கட்டுரையை மீண்டும் துவங்கும்போது இந்த கருத்துப் பறிமாற்றங்கள் அறிந்து கொள்ளலாம். --மாகிர் (பேச்சு) 16:34, 5 ஆகத்து 2015 (UTC)
பயனர்:Mahir78 ஆம் நானும் அதற்குத்தான் சொன்னேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:40, 5 ஆகத்து 2015 (UTC)
உரையாடலில் கண்ணியம்
தொகுநமது உரையாடல்களில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதனை பலரும், பலநேரங்களில் வலியுறுத்தி வந்தாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாதது... வருத்தம் தருகிறது. //யாராவது ஒரே ஒரு நியாயத்த சொல்லுங்கப்பா?// என்பன போன்ற சொற்றொடர்கள் விக்கிப்பீடியா போன்ற தளங்களில் எழுதத்தக்கவை அன்று என்பது எனது கருத்து. முறையற்ற உரையாடல்களின் காரணமாக நல்ல பயனர்கள் பலரை நாம் இழந்துள்ளோம் என்பதனை நான் உணர்ந்துள்ளேன்.
இப்படி ஒரு உரையாடல் நடக்கிறது என்பதனை அறிந்தும், விலகிப் போவது சரியன்று எனும் காரணத்தினாலேயே எனது கருத்தினை இங்கு பதிந்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:15, 5 ஆகத்து 2015 (UTC)
பயனர்:Selvasivagurunathan m அது கனக சிறீதரனின் கருத்துக்கு நான் தந்த மறுப்பு. கீழே கனக் சிறீதரனின் கருத்து உள்ளது. நீங்கள் வேண்டுமானால் தேடிப்பார்த்து சரிபார்த்துக்கொள்ளுங்கள். கனகு கட்டுரை இருப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லை என்றார். நான் அதை மறுப்பதற்கு "கட்டுரையை நீக்க ஒரே ஒரு (எண்ணிக்கை) நியாயமாவது சொல்லுங்கள்" என்றேன். இதில் கண்ணியம் எங்கே தவறியது?
//இக்கட்டுரையை வைத்திருப்பதற்கு எவ்விதமான நியாயங்களும் இல்லை.--Kanags//
நீங்கள் உரையாடலை படிக்கும் போது முழுமையாக படிக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:40, 5 ஆகத்து 2015 (UTC)
- தென்காசி, நான் வெறுமனே நீக்கல் வார்ப்புரு இடவில்லை. அதற்கான மூன்று காரணங்களைக் கூறியே இப்பேச்சுப் பக்கத்தை ஆரம்பித்தேன். அப்படியிருக்க நான் நியாயம் கூறவில்லை என்கிறீர்கள். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது இது தான்.--Kanags \உரையாடுக 22:49, 5 ஆகத்து 2015 (UTC)
நீக்கல் வார்ப்புரு இட்டதற்கு நான் நியாயமான காரணம் கேட்கவில்லையே?
//முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது //
மூன்றாம் நிலைத்தரவை வதந்தி எனச் சொன்னது தான் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது. நான் செல்வகுருநாதனுக்கு அளித்த மறுப்பில் நீங்கள் உள்ளே வரத்தேவையில்லையே. அது உங்கள் நியாய என்ற கருத்துக்கு அதே நியாய என்னும் சொல்லும் வைத்து நான் வைத்த மறுப்புதான். இதை தனி உரையாடலாக நீங்கள் மாற்றனும் என்றால் அதுக்கு நான் ஆளில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:58, 5 ஆகத்து 2015 (UTC)
- நான் ஏதோ தவறு செய்தேன் என்று தானே செல்வாவுக்குப் பதில் தந்திருக்கிறீர்கள்? அப்படியிருக்க நான் மறுமொழி தர வேண்டாமா? மேலும், இது முகநூல் அல்லது மின்னஞ்சல் உரையாடல் அல்ல. எனவே இதற்கு மேலும், உங்களுக்குப் பதில் தர முடியாது. கட்டுரை விரைவில் நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 00:26, 6 ஆகத்து 2015 (UTC)
இந்த பத்தியில் நான் உங்களுக்கு பதிலளித்தேன் என்று தான் சொல்லியுள்ளேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:21, 6 ஆகத்து 2015 (UTC)
இந்தப் பேச்சுப் பக்கத்தில் செல்வசிவகுருநாதனின் இறுதி உரை
தொகு@ சுப்பிரமணியன், எதனையும் முழுமையாக படித்தறிந்த பிறகே விக்கியில் எனது கருத்தினை தெரிவிக்கிறேன். எனவே இதுகுறித்து தங்களின் அறிவுரை, எனக்கு பொருத்தமற்றது.
@ விக்கி குமுகாயம்,
- பல்துறை அறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள், மாணவர்கள் என பலரும் பங்காற்றும் தளத்தில் நயமாக உரையாற்றுதல் நலந்தரும் என்பதே என் கருத்து.
- அறிவுரை கூறுதல் அல்லது ஆணையிடுதல் எனது நோக்கமன்று; மாறாக நல்ல ஆரோக்கியமான உரையாடல்களுக்கு, கீழ்க்காணும் அண்மைக்கால உதாரணங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:
- நந்தகுமார் அவர்களின் ஆளுமை
- பேச்சு:செசில் (அரிமா)
- தனது தொகுப்பில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து மாகிர் தனது கருத்தினை தெரிவித்தல்
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:18, 9 ஆகத்து 2015 (UTC)
உரையாடலில் பக்கச்சார்பை செல்வசிவகுருநாதன் தவிர்க்கனும்
தொகுபயனர்:Selvasivagurunathan m நீங்கள் சொல்வதை இரண்டு தரப்புக்கும் சொல்லி இருக்கனும். சும்மா எனக்கு மட்டும் கண்ணியத்தை கடைபிடிக்க வகுப்பெடுத்தால் எப்படி? உங்களின் அறிவுரையும் எனக்கு பொருந்தாது. மேலும் நீங்கள் மேலே கொடுத்த 3 எடுத்துக்காட்டுகள் எல்லாம் எனக்கு தேவையற்றது. கருத்து/கேள்வி எப்படி அமைகிறதோ அதற்கு ஏற்றது போல் தான் பதிலும்/மறுப்பும் அமையும். பதிலில்/மறுப்பு மட்டும் கண்ணியத்தை எதிர்பார்க்கும் நீங்கள் கருத்து/கேள்வியில் மட்டும் கண்ணியம் கோட்டை விடப்பட்டிருப்பதை கண்டு கொள்ளாமல் இருப்பதைப் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று.
ஒருவேளை முழுதாக படித்திருதால் உங்களின் கண்ணியம் பற்றிய கருத்து மிகமிக பக்கச்சார்பு தன்மையுடன் அமைந்திருப்பது ஆகும். பக்கச்சார்பை பற்றி நானும் சில இணைப்புகளைக் கொடுத்து உங்களுக்கு பதில் சொல்லலாம். ஆனால் அது உரையாடலை நீட்டிக்கும் என்பதால் இத்தோடு விடுகிறேன். இனியும் பக்கச்சார்பு அறிவுரை தொடர்ந்தால் நானும் உங்களுக்கு பதிலுக்கு அறிவுரை சொல்ல நேரிடலாம். --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:46, 10 ஆகத்து 2015 (UTC)
ஆங்கில விக்கிப்பீடியாவின் நோட்டபிலிட்டி விதி
தொகுஆங்கில விக்கிப்பீடியாவில் எல்லா நாடுகளிலும் உள்ள அரசியல்வாதிகளை வைத்து கட்டுரைகள் வருவதால் அவர்கள் நோட்டபலிட்டிக்கு அத்தனை முக்கியத்தும் கொடுக்கிறார்கள். ஆனால் இக்கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்படும் மொழியான தமிழ் மொழி வழங்கும் தமிழ்நாடு பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதி பற்றி. அதனால் இதை ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு கொண்டுபோகும் போது நோட்டபிலிட்டி பொருந்தலாம். வேற்று நாட்டு அரசியல்வாதிகளை தமிழ் விக்கிப்பீடியாவில் குறிக்கும் போது இந்த நோட்டபிலிட்டி விதி பொருந்தலாம்.
ஒரு தமிழக முக்கிய கட்சியின் அரசியல்வாதிக்கு அதுவும் கட்சித்தலைவரின் மகனுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை இருப்பதுக்கு ஆங்கில விக்கி அளவுக்கு மெனக்கிட வேண்டியதில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:48, 5 ஆகத்து 2015 (UTC)
அரசியல் கட்சித்தலைவரின் மகன் (அதிலும் அதிகம் அறியப்படாதவர்) என்பதால் விக்கியில் கட்டுரை இருப்பதில் தவறில்லை என்கிற வாதம் சரியானதல்ல. ஒவ்வொரு கட்சியின் மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் பல்வேறு நேரங்களில் செய்தித்தாள்களில் வெளிவருகிறது என்பதால் அவர்கள் பற்றி த.விக்கியில் கட்டுரை எழுத அனுமதிக்கலாமா? -- மாகிர் (பேச்சு) 11:25, 6 ஆகத்து 2015 (UTC)
நீங்கள் சொல்ற ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு மட்டும் உகந்த நோட்டபிலிட்டி விதிகளை தாண்டி தான் தமிழ் விக்கிப்பீடியாவில் பலக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:24, 6 ஆகத்து 2015 (UTC)
- அப்படியான கட்டுரைகளை பட்டியலிடுங்கள். அக்கட்டுரைகளில் வார்ப்புரு இட்டு, பேச்சுப் பக்கங்களில் கேள்விக்கு உட்படுத்துங்கள். விக்கியில் கேள்விக்கு உட்படுத்துதல் அடிப்படை தானே. --மாகிர் (பேச்சு) 15:25, 7 ஆகத்து 2015 (UTC)
நான் எதுக்கு கேளிவிக்குட்படுத்தனும்.? நீங்கள் தான் ஆங்கில விக்கிப்பீடியாக்கான நோட்டபிலிடியை தமிழ் விக்கிக்கு பொறுத்துகிறீர்கள். நான் செய்யவில்லையே.
நேரம் கிடைக்கும்போது பட்டியல் தருகிறேன். நீங்கள் வேண்டுமானால் ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு மட்டும் உகந்த நோட்டபிலிட்டி விதிகளை பின்பற்றி அவற்றை கேள்விக்குட்படுத்துங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:24, 7 ஆகத்து 2015 (UTC)
- மாகிர், //ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு மட்டும் உகந்த நோட்டபிலிட்டி விதிகளை// என்றே தென்காசி சுப்பிரமணியன் கூறுகின்றார். ஆங்கில விக்கிப்பீடியாவின் கொள்கைகள் அனைத்தையும் இங்கு அவ்வாறே பின்பற்றுவதில் சிக்கல்கள் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்கமை தொடர்பான கொள்கையை உருவாக்குவதற்கு இணைந்து செயற்படுவோம். --மதனாகரன் (பேச்சு) 17:37, 7 ஆகத்து 2015 (UTC)
இதே போன்ற நபர்கள் வேற்று நாட்டுக்காரர்களாய்/மொழிக்காரர்களாய் இருந்தால் தமிழ் விக்கிக்கு தேவைப்படாது என ஆங்கில விக்கிப்பீடியாவின் நோட்டபிலிட்டி விதிகளுக்கு உட்பட்டு நீக்கலாம். சிக்கல் வராது. ஆனால் தமிழர்கள்/தமிழர் தாய்நிலங்களில் உள்ள நபர்கள் என்னும் போது தமிழ் விக்கிப்பீடியாவில் அவர்கள் பற்றிய கட்டுரை அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது. நோட்டபிலிட்டி பொறுத்தவரை ஆங்கில விக்கிப்பீடியாவை பின்பற்றி தமிழர்கள்/தமிழர் தாய்நிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு தருவதே சிறந்ததாகும்.
அப்படித்தான் பல புலவர்கள் சிறிய பங்களிப்பு தந்திருந்தாலும் அவர்கள் பற்றிய கட்டுரை விக்கியில் உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:54, 7 ஆகத்து 2015 (UTC)
கட்டுரையில் மேலும் சேர்க்கப்பட்ட உள்ளடக்கங்கள்
தொகுமுதலில் புகையிலை தொடர்பான செய்தி வதந்தி, அவதூறு என்றெல்லாம் சொல்லப்பட்டது. இத்தனைக்கும் முதலில் சேர்க்கப்பட்ட உள்ளடக்கம் மூன்றாம் நிலைத்தரவாக இருந்தும். (இன்னார் இன்னாரால் குற்றம் சாட்டப்பட்டார் என்று.) இப்போது வைகோ அதை அவர் வாயாலேயே ஒப்புக்கொண்ட காணொளி சேர்க்கப்பட்டாயிற்று. அதனால் இனி இதை வதந்தி அவதூறு என்ற விதத்தில் இனி நீக்க முடியாது.
துரைவையாபுரி 2002ல் கொடுத்த பேட்டியின் (ஓரிரு வரிகள் அல்ல. பல வரிகள்.) இணைப்பு ஏற்கனவே உள்ளது. அதனால் தொடர்ச்சி இல்லை. ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு ஏற்ற நோட்டபிலிட்டி விதிகளின் படி பொருந்தவில்லை என்று சொல்லி இனியும் மறுப்பது ஏற்புடையதாக படவில்லை.
கட்டுரை நீக்கம் பற்றியே கருத்துகள் இருப்பதால் இனி கட்டுரையை உள்ளடக்கங்களை அதிகப்படுத்த வழிகளையும் பார்க்கலாமே? ஒரே கோணம் வேண்டாம் என்பது என் கருத்து.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:11, 5 ஆகத்து 2015 (UTC)
தீர்வு நோக்கி
தொகுதென்காசி சுப்பிரமணியன் கட்டுரையை மேம்படுத்த முனைந்து வருவதால் அதற்குரிய வாய்ப்பை அளிக்க வேண்டும். நீக்கத் தான் வேண்டும் என்ற முன்முடிவோடு அணுக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தென்காசி சுப்பிரமணியன், கட்டுரையை முழுவதும் வளர்த்து விட்டு இங்கு தெரிவியுங்கள். மிக அரிதான வரலாற்று முக்கியத்துவம் இருந்தாலன்றி, இன்னாரின் மகன் அல்லது மகள் என்பது கலைக்களஞ்சித்தில் இடம்பெறுவதற்கான தகுதியாக இருக்காது. அவரது தனிப்பட்ட சாதனைகள் அல்லது முக்கியத்துவம் இருக்க வேண்டும். செய்திகளில் பல்வேறு சர்ச்சைகள் பலர் அடிபடுகிறார்கள் என்பதால் செய்தியில் இடம்பெறுவது மட்டுமே ஒரு தகுதியாகவும் இருக்க முடியாது. இவரைத் தமிழ்நாட்டு அரசியல்வாதி என்ற வகையிலேயே முன்னிறுத்த இயலும் என்று கருதுகிறேன். ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி, தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெறுவதற்கான குறிப்பிடத்தக்கமை என்னவாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்? உரையாடலை இங்கிருந்து பொதுப்படத் தொடர்ந்து அதன் அடிப்படையில் இக்கட்டுரையையும் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள மற்ற ஒத்த கட்டுரைகளையும் ஒத்து நோக்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 04:52, 6 ஆகத்து 2015 (UTC)
- கட்டுரையை விரிவாக்கி முடித்து விட்டீர்களா?
- ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி, தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெறுவதற்கான குறிப்பிடத்தக்கமை என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பான உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்?
- இக்கட்டுரையை வைகோ கட்டுரையின் ஒரு பகுதியாக இணைக்கலாம் என்ற பரிந்துரையைப் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?
உங்கள் மறுமொழியைப் பொருத்து அடுத்த கட்ட செயற்பாட்டை நோக்கிச்செல்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 07:46, 14 ஆகத்து 2015 (UTC)
- இல்லை. கட்டுரை விரிவாக்கத்தில் துரை வையாபுரி குடும்பத்தில் ஒரு மூன்று நான்கு வரிகள் வரலாம். இவரின் மனைவியும் மதிமுக கட்சிக்காரர்களில் முக்கியமானவரின் மகள். மகன் மாநில அளவு விளையாட்டுவீரர். (12 வயதுக்கு கீழ் இருந்த போது)
- குறிப்பிடத்தக்கமை தமிழகத்துக்கு அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. உலகம் முழுதுமுள்ள தமிழர்களுக்கும் தமிழ்நாடு, தமிழீழம், தமிழக அண்டை மாநிலங்களால் தமிழகத்தில் இருந்து பறிக்கப்பட்ட பகுதிகள் என தமிழ்நாடு அரசியல்வாதிகளால் கருதப்படும் பகுதிகள். அதாவது வேங்கடத்துக்கு தெற்கில் உள்ள பகுதிகள் இவற்றிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சேர்த்தே இந்த குறிப்பிடத்தக்கமையை பரிந்துரைக்கிறேன். குறிப்பிடத்தக்கமை பற்றி வேறு சில கருத்துக்களும் வரலாம். இருந்தாலும் இக்கட்டுரையை முன்னிலைப்படுத்தியும் மேலே கூறிய விடயங்கள் ஓரளவையும் சேர்த்து இவை அமையும்.
- நட்சத்திர பரப்புரையாளர் என இந்திய நடுவண் அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டவர்.
- தமிழகத்தின் ஆட்சியை 50ஆண்டுகளுக்கு மேலும் ஆட்சி புரிந்த ஒரு இயக்கத்தின் (பொதுவாக திராவிட இயக்கம். கட்சிகள் வேறு) பல கட்சிகளில் ஒரு முக்கியக் கட்சியை சேர்ந்த தலைவரின் மகன்.
- கட்டுரையிலுள்ள நபரின் கட்சித்தலைமைக்கு எதிராக எதிர்தரப்பினரால் புகையிலை பங்கு விடயம் மூலம் தொடர்ந்து விமர்சனத்துக்குள் உள்ளாக்கப்படுபவர்.
- மேலுள்ள மூன்றுமே ஒருங்கே அமையப்பெற்றவர்.
- இக்கட்டுரையை வைகோ கட்டுரையின் ஒரு பகுதியாக இணைக்கலாம் என்ற கருத்து வைகோவின் அண்ணனுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். காரணம் அவர் ஓரிரு இடங்கள் தவிர எங்கும் குறிக்கப்படவில்லை. நட்சத்திர பரப்புரையாளரோ குற்றச்சாட்டுக்கு உள்ளாபவரோ அல்ல. ஆனால் துரை வையாபுரிக்கு இது பொருந்தாது.
அதனால் இவரைப் பற்றி தனி கட்டுரை இருக்கத்தான் வேணும்.
- இதற்கு முன்னர் இக்கட்டுரைக்கு வந்த விமர்சனங்களான வதந்தி என்பது, கட்சித்தலைமை ஒப்புக்கொண்டதால் உண்மை என்றாகிவிட்டது.
- தொடர் ஊடக கவனமின்மை என்பது 2002ல் இவர் அளித்த பல வரி பேட்டியால் மறுக்கப்பட்டுவிட்டது.
- மேற்கோள் இணைப்புகளில் பலர் அடிபடுவதாக சொல்வதை எல்லாம் கட்டுரை நீக்க காரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது. எடுத்துக்காட்டுக்கு ஒரு வரலாற்று கட்டுரை வரி வரும்போது அதற்கு ஒரு நூலை மேற்கோள் கொடுக்கிறோம் என்றால் அந்நூலில் சில வரிகள் மட்டுமே அக்கடுரை வரி தொடர்பாக இருக்கும். அந்நூலிலுள்ள மற்ற 99.99999% கருத்துக்கள் கட்டுரை தொடர்பற்றவையாக இருக்கலாம்.
- கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வரியாக எடுத்துக்காட்டி இது முக்கியமில்லை அது முக்கியமில்லை என மறுத்ததன் படி அந்த வரிகளை நீக்கிவிட்டால் கட்டுரை இரண்டு வரிகளோடு முடிந்துவிடும். அதை காரணமாக வைத்தே கட்டுரையை நீக்கிவிடக்கூடும். அதனால் ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்கள் ஒருங்கே அமையப்பெற்றது இங்கு கவனிக்கப்படனும். அதனால் வரிகள் விக்கித்தனமைக்கு ஏற்ப இருந்தால் அவைகளை அழிக்க தேவையற்றதாகவே கருதுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:13, 14 ஆகத்து 2015 (UTC)
Kanags
தொகு- இக்கட்டுரை ஒரு புத்தம் புதிய எந்த விக்கி அனுபவமும் இல்லாத பயனர் ஒருவர் எழுதிய கட்டுரை மாதிரி உள்ளது. புதியவர் ஒருவர் இதனை எழுதியிருந்தால் இது உடனடியாகவே அழிக்கப்பட்டிருக்கும். அனுபவமுள்ள பயனருக்கு எதற்காக முன்னுரிமை தரப்பட வேண்டும்? அதுவும் இவ்வளவு விதண்டாவாதங்களை தனது கருத்துகளில் எழுதுகிறார். உரையாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து தனது கருத்துக்களைத் தெரிவிக்கிறார். குறிப்பிட்ட நபர் அரசியல்வாதி என்று கட்டுரையில் தரப்படவில்லை. இவர் தேர்தல் பரப்புரையாளர் மட்டுமே. கொள்கை பரப்பாளரும் அல்ல. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தல் காலத்தை விட்டு இவர் அரசியலில் என்ன செய்கிறார்? அரசியல்வாதிக்கான வேறு தகுதிகள் இவருக்கு இல்லையென்றால் கட்டுரை நீக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 10:56, 6 ஆகத்து 2015 (UTC)
//இக்கட்டுரை ஒரு புத்தம் புதிய எந்த விக்கி அனுபவமும் இல்லாத பயனர் ஒருவர் எழுதிய கட்டுரை மாதிரி உள்ளது. //
மூன்றாம் நிலை தரவு, வதந்தி இரண்டுக்கும் வேறுபாடு தெரியாத நீங்கள் அதைச் சொல்லலாமா? நீங்கள் பேசுவது சாதாரண உரையாடலில் கூட சரியாக ஈடுபடத் தெரியாத வண்ணம் பேசுபவர் போல் உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவின் நோட்டபிலிட்டி விதிகளை அப்படியே தமிழுக்கு கொண்டுவந்தால் பல கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் நீக்கனும். அங்கொன்றும் இங்கொன்றுமாக நீங்கள் உரையாடலை இழுத்தால் நான் அதற்கு பதிலளிக்கத்தான் வேண்டும். நானாவது ஒவ்வொன்றுக்கும் ஒரு பத்தி போடுகிறேன். தெளிவாக உரையாடல் நடத்தலாம். ஆனால் நீங்கள் பெரிதாக ஒரு தலைப்புக்குள்ளேயே உரையாடலை இழுத்துச் செல்கிறீர்கள். உங்களுக்கு உரையாடலில் எப்படி பேச வேண்டும் என்பதும் சிறிதும் தெரியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:20, 6 ஆகத்து 2015 (UTC)
//விதண்டாவாதங்களை//
எது விதண்டாவாதம்? கேள்விக்கு பதில் மறுப்பு அளிப்பதா? ஏற்கனவே விக்கிப்பேச்சுப்பக்கத்தில் அடாவடித்தனம் என்ற ஒரு சொல்லை அறிமுகப்படுத்திய பெருமை உங்களைச் சேரும். இதில் இதுவேறா? இந்த பத்தியை தீர்வை நோக்கி இழுத்துச் செல்லவே விரும்புகிறேன். அதனால் நீக்குவதற்கு ஆதரவு என்ற பத்தியில் உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் தந்துவிட்டு உரையாடலை இன்னும் திசை திருப்பாமல் இருந்தால் கட்டுரையை முன்னேற்றலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:53, 6 ஆகத்து 2015 (UTC)
Kanags, ஏற்கனவே கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளைத் தெரிவித்து உள்ளீர்கள். நீக்கல் வாக்கெடுப்பு நடக்கும்பட்சத்தில் அவை கருத்தில் கொள்ளப்படும் அல்லவா? எனவே, மேற்கொண்டு பங்களிப்பாளரைப் பற்றி கருத்து கூற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்கமை பற்றிய தெளிவான வழிகாட்டல்கள், முற்காட்டுகள் இல்லாத நிலையில் வளர்ந்து கொண்டிருக்கும் கட்டுரை / உரையாடலுக்கு இடையே உடனே அதனை நீக்க வேண்டும் என்று அவசரம் காட்டத் தேவையில்லை.
தென்காசி சுப்பிரமணியன், ஏற்கனவே உரையாடல் நயம் பற்றி இப்பக்கத்தில் கவலை தெரிவித்திருக்கிறார்கள். நீங்களும் ஒரு நிருவாகப் பயனர் என்பதால், உங்கள் செயற்பாடுகள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். எனவே, கட்டுரையாக்கம் / தமிழக அரசியல்வாதிகளுக்கான பொதுவான குறிப்பிடத்தக்கமை பற்றிய உங்கள் வரையறையை முன்வைப்பதில் கவனம் செலுத்த வேண்டுகிறேன். நீக்கல் வாக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் இவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். நன்றி.--இரவி (பேச்சு) 12:24, 6 ஆகத்து 2015 (UTC)
சரி. ஐ யம் வெய்டிங்கு. நீங்கள் எனக்குச் சொன்னதை எல்லாம் இரண்டு தரப்பும் பின்பற்றனும் என்பது தான் என் எண்ணம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:20, 6 ஆகத்து 2015 (UTC)
மீண்டும்
தொகுஇக்கட்டுரை ஓராண்டு கழிந்தும் எந்த வகையிலும் மேம்படுத்தப்படவில்லை. கட்டுரையை நீக்கக் கோருகிறேன். @தென்காசி சுப்பிரமணியன் and Ravidreams:--Kanags \உரையாடுக 13:00, 23 சூலை 2016 (UTC)
கட்டுரையை மேம்படுத்த கடைசியாக ஆகத்து 6 வரை பேச்சுப்பக்கத்தில் பேசப்பட்டு அதன்பிறகு வந்த பங்களிப்புகளில் மட்டும் கட்டுரை போதுமான அளவு இற்றைப்படுத்தப்பட்டுவிட்டது. இதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நான் ஏற்கனவே செய்த மறுப்புகலையும் கவனத்தில் எடுத்துக்கொண்டால் இக்கட்டுரையை அழிக்க தேவை இருக்காது என நான் எண்ணுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:29, 25 சூலை 2016 (UTC)
நோட்டபிலிட்டி விதிகள் அதிகம் கடைபிடிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியாவிலேயே இந்த கட்டுரை நீக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். en:Durai Vaiyapuri --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:38, 25 சூலை 2016 (UTC)
குறிப்பிடத்தக்கமை குறித்து
தொகுஇன்றைய நிலையில் தமிழகத்தின் முக்கிய கட்சியான மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ உள்ளார். எனவே கட்சியின் தலைமைப் பதவியில் இருப்பதாலும் ஊடகச் செய்திகளில் கவனம் பெறுவதாலும் குறிப்பிடத்தக்கமை குறித்தான வார்ப்புருவை நீக்கப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 09:02, 25 சூன் 2022 (UTC)