நாயன்மார் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நாயன்மார் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நாயன்மார் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி

தொகு
  • Is it ok to use such a portrait of the naalvarkaL? Unlike popularly acepted portraits of hindu gods, this portrait might just be an imagination of a painter and the picture may not be authentic??--ரவி (பேச்சு) 12:20, 20 ஏப் 2005 (UTC)
    • If so, we should state that it is a rendering by an artist or something like that. -- Sundar 04:05, 21 ஏப் 2005 (UTC)
  • Already, another bigger page நாயன்மார் is there!--ரவி (பேச்சு) 12:20, 20 ஏப் 2005 (UTC)
    • Make this page a redirect to that. -- Sundar 04:05, 21 ஏப் 2005 (UTC)
மாணிக்கவாசகர் 63 நாயன்மார்களில் ஒருவர் அல்லர். இது பலருக்கும் தெரியாது இருப்பது வியப்பாக உள்ளது. சைவ சமயக்குரவர்கள் நால்வரில் மாணிக்கவாசகர் ஒருவர்.. குரவர் என்றால் தலைவர், முன்னெறிப் படுத்துவர், குரு என்று பொருள்.--செல்வா 15:55, 15 மார்ச் 2007 (UTC)

இது குறித்து நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. விரிவாக எழுதித் தர முடியுமா? கட்டுரையும் திருத்தப்பட வேண்டும்.--Ravidreams 16:20, 15 மார்ச் 2007 (UTC)

திருமாளிகைத் தேவர் நாயனாரா?

தொகு

திருவிசைப்பா பாடியா திருமாளிகைத் தேவர் ஒரு நாயனரா? --Natkeeran 16:32, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

இல்லை. மயூரநாதன் 18:51, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

தலைப்பு மாற்றம்

தொகு

நாயன்மார் எனும் சொல்லே பன்மைச் சொல் தான். எனவே நாயன்மார்கள் என்பது தவறானது.(எண் வழு). எனவே தலைப்பை பழையபடி மாற்றவும்.--பிரஷாந் (பேச்சு) 03:39, 16 சூலை 2012 (UTC)Reply

நானும் அங்ஙனமே கருதி, மாற்றக்கோருகிறேன்.நம்தமிழின், அழிந்து வரும் தனித்துவங்களில் இதுவும் ஒன்று. அனைத்தும் சொற்களிலும் பின்னொட்டாக - கள் இணைத்து பன்மையாக்குவது தவறான பின்பற்றல். வணக்கம்.-- உழவன் +உரை.. 14:51, 16 சூலை 2012 (UTC)Reply
  • மார் என்பது பன்மை விகுதியே. எனவே நாயன்மார் என்பதே பன்மைதான். ஆனால் இரண்டு பன்மை விகுதிகள் வருவதும் உண்டு. தம்பிமார், தம்பிமார்கள் என்ற இரண்டும் சரியே. அவர், அவர்கள் ஆகிய இரண்டும் சரியே. உயர்வுப்பன்மையாகவும் மெய்யான பன்மையாகவும் இரண்டும் சேர்ந்து நாயன்மார்கள் என்று கூறுவதுண்டு. "தாய்மார்களே!" என்று கூறுவதுண்டு. பிழையில்லை. தேவையா இல்லையா என்பது வேறு கேள்வி. --செல்வா (பேச்சு) 16:12, 16 சூலை 2012 (UTC)Reply
  • அவர் என்பதற்கும் அவர்கள் என்பதற்குமிடையே இருப்பது மரியாதை நிமித்தமானது தான். இங்கு எண் வழுவமைதி இருக்கலாம். ஆனால் நாயன்மார்கள் என்பது வழுவுள்ள சொற்பிரயோகம். இவையிரண்டுக்குமிடையே தொடர்பில்லை. மேலும் தம்பிமார் என்றே பிரயோகிக்க வேண்டுமேயொழிய தம்பிமார்கள் என்பது சரியல்ல.--பிரஷாந் (பேச்சு) 05:27, 25 சூலை 2012 (UTC)Reply
பொதுவாகத் தலைப்புகள் பன்மையில் இடுவதில்லை. அதனையும் கருத்தில் கொண்டு தலைப்பை நாயன்மார் என்றே வைக்கலாம்.--Kanags \உரையாடுக 08:36, 25 சூலை 2012 (UTC)Reply

முகநூல் சைவ குழுவில்(https://www.facebook.com/groups/saivism/) இந்த பெயர் மாற்றம் பற்றி விவாதிக்கப்பட்டது. பலருடைய கருத்தானது "நாயன்மார்" என்று பெயர் வைப்பதை வரவேற்கின்றன. செல்வ முத்து குமரன் என்றும் நண்பர் கூறியது "அடியேனுக்கு தெரிந்த மட்டும் நாயன்மார் என்பது தான் கூற வேண்டும் .ஏனெனில் நாயன்மார்கள் என்பது பன்மையாக இருந்தாலும் புராண காலத்தில் இருந்தே நமது முன்னோர்கள் நாயன்மார் என்று தான் உபயோகித்து வந்துள்ளனர் . நாயன்மார்கள் என்று கூறுவதாலும் ஒன்றும் பிழையல்ல . ஆயினும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் "என்று தான் கூறுகிறார். ஆனால் இதை அவர் அந்தணர்கள் என்று கூறவில்லை . அந்தணர் என்றாலே பன்மையை தான் குறிக்கிறது ஆதலால் இந்த இடத்தில தேவையில்லை என தொண்டை மண்டல குருமணிகள் கூறுகிறார் . அதே போல் "அப்பாலும் அடிசார்ந்த அடியாகும் அடியேன் "என்று தான் உரைக்கிறார் .இதை வைத்து பார்க்கும் பொழுது நாயன்மார் என்றாலே பன்மையை தான் குறிக்கிறது. இதில் ஆர் -வினையாலணையும் பெயர் .அடியார் திருக் கூட்டம்- அடியார்கள் திருக் கூட்டம் என்று கூறப்படாது."

எனவே பெயரினை மாற்றுவது சிறந்தது. இதை செய்ய மனமுவந்து வந்த விக்கியன்பர்களுக்கு நன்றி.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:23, 20 ஆகத்து 2012 (UTC)Reply

நாயன்மாரின் பட்டியல் உள்ள குலம் சரியானது தானா ?

தொகு

நாயன்மார்களின் பட்டியலில் சொல்லப்பட்டுள்ள 63 பேருக்கும் உள்ள குலங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? எதை வைத்து இன்னமும் அதை நீக்காமல் வைத்துள்ளீர்கள்? விக்கிபீடியாவை ஒரு குறிப்பிட்ட ஆட்கள் மட்டுமே ஆக்டோபஸ் போல் ஆட்கொண்டிருப்பதால் தான் பல குழப்பங்கள் நிகழ்கின்றன. முதலில் குலங்கள் என்பதை எதை வைத்து உறுதி செய்திருக்கின்றீர்கள்?--−முன்நிற்கும் கருத்து இமலாதித்தன் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பெரியபுராண ஆராய்ச்சி நூலில் பிற்சேர்க்கை 1-10 இல் அறுபத்துமூவர் ஊர்-மரபு-தொண்டு-காலம் குறித்துப் பட்டியலிடுகையில் அக்காலகட்டத்து மரபுகளாக பரதவர், பிராமணர், வணிகர், வேளாளர், இடையர், ஆதிசைவர், மரபு கூறப்படாதோர், வேடர், என பல மரபுகளைக் குறித்துள்ளார் ஆசிரியர். மேலோட்டமாக ஒப்பிட்டுப் பார்த்தால் அவற்றுள் சிலவற்றிற்கும் விக்கி கட்டுரையில் சில தரவுகளுக்கும் சில மாற்றங்கள் உள்ளன. எனினும் பல சரியாகவே இருந்ததாலும் குலம் குறித்து அவ்வளவாக ஆர்வம் காட்டாததாலும் விடுபட்டிருக்கலாம். ஏதேனும் திருத்தம் இருந்தால் தாங்களும் செய்யது உதவலாம். (பெரியபுராண ஆராய்ச்சி நூல் : http://www.tamilvu.org/library/nationalized/pdf/03-rasamanickam/periyapuranamarachi.pdf) Kuzhali.india (பேச்சு) 14:02, 3 திசம்பர் 2014 (UTC)Reply

வணக்கம் இமலாதித்தன்,. விக்கிப்பீடியாவில் தக்க ஆதாரங்களுடன் தாங்களே மாற்றம் செய்யலாம். சரியான ஆதாரம் இல்லாதவை என்று என்னும் இடத்தில் [சான்று தேவை] என்ற வார்ப்புருவை இடலாம். பெரியபுராணம் என்பது வாழ்ந்தவர்களின் வரலாற்றுத் தொகுப்பாகும். எனவே அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த குலமும் அதில் இடம்பெற்றுள்ளது. சைவர்களும் தங்களது சைவ சமயம் ஓர் இனத்தினை மட்டுமே சார்ந்ததல்ல என்பதை தெளிவுபடுத்தவும், எக்குலமாக இருந்தாலும் ஈசன் பால் கொண்ட அன்பே உயரியது என்று எடுத்துரைக்கவும் நாயன்மார்களின் குலத்தினை தற்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறனர். ஏதேனும் நூல் ஆதாரங்களில் நாயன்மார்களின் குலம் பற்றி வேறு தகவல்கள் இருந்தால் அறியத்தாருங்கள். ஆலோசிப்போம். அதைவிடுத்து ஆக்டோபஸ் என மறைமுகத் தாக்குதல்கள் வேண்டாம். விக்கிப்பீடியா ஆரோக்கியமான உரையாடல்களை மட்டுமே வரவேற்கிறது. மக்களுக்காக தங்களது நேரத்தினை செலவிட்டு உழைக்கும் நண்பர்களை ஏளனம் செய்தல் வரவேற்கத் தக்கதல்ல. தங்களது போக்கினை மாற்றிக்கொள்ளுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:58, 3 திசம்பர் 2014 (UTC)Reply

இடங்கழி நாயனார் குலம்

தொகு

இருக்கு வேளிரின் வழித்தோன்றல் கைக்கோளர் மரபினர் என்பதற்கு ஆதாரம் வேண்டும்.--Puvendhar (பேச்சு) 23:28, 11 ஆகத்து 2015 (UTC)Reply

வணக்கம், Puvendhar! இடங்கழி நாயனார், செங்குந்தர் குல குறுநில மன்னர் என்று புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:82, காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:17, ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் வேளிர்குலத்தின் அரசை ஏற்று நடத்தியதாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் சான்றெதுவும் இணைக்கப்படவில்லை. நான் சான்றுகளின் அடிப்படையிலேயே நீங்கள் நாயன்மார் பக்கத்தில் செய்த தொகுப்பினை மீள்வித்துள்ளேன். போதுமான சான்றுகள் இணைத்தபிறகு திருத்தவும். சைவ சமைய கட்டுரைகளில் பங்கெடுப்பதற்கு நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:30, 12 ஆகத்து 2015 (UTC)Reply

அன்புடையீர் வணக்கம்,

தாங்கள் மேற்கூறிய இரண்டு செய்யுட்களையும் பார்க்க நேர்ந்தது. அவற்றில் பல நாயன்மார்களின் மரபுகள் சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டர் தொகையிலிருந்து முரண்படுகிறது. திருத்தொண்டர் தொகை முதலில் எழுதப்பட்டமையால் அதன் அடிப்படையில் நாயன்மார்களின் மரபு குறிப்பிட்டால் தகும் என்பது என் கருத்து--Puvendhar (பேச்சு) 09:33, 12 ஆகத்து 2015 (UTC)Reply

பயனர்:Puvendhar இரண்டையும் காலவரையறை படி வரிசைப்படுத்தித் தரவும். வரிகளையே மேற்கோளாக காட்டுதல் மிகச்சிறப்பு.--

மேலும் இருக்கெவேளிர் பற்றி நீங்கள் கூறிய செய்தி எந்த கட்டுரையில் உள்ளது? தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:55, 12 ஆகத்து 2015 (UTC)Reply

சுப்பிரமணியன் அவர்களே,

சுந்தரமூர்த்தி நாயன்மார் இயற்றிய திருத்தொண்டர் தொகையின் காலம் எட்டாம் நூற்றாண்டு. சேக்கிழார் பெரிய புராணத்தை 12 ஆம் நூற்றாண்டில் தொகுத்தார் (தி.தொகை இயற்றி 370-400 ஆண்டுகளுக்குப் பின்). திருக்கை வழக்கம் இயற்றிய புகழேந்தியும் சேக்கிழாரும் சம காலத்தவர்கள். மேலும் காஞ்சி வீரபத்திர தேசிகர் இயற்றியது தற்காலத்திலிருந்து 300 ஆண்டுகளுக்கு முந்தையது. அதையும் முதன்மை உசாத்துணையாக ஏற்பது கடினம். இருக்கு வேளிர் பற்றிய செய்தி சரி வர தெரியவில்லை. அவர்களின் வழிதோன்றல்கள் தற்காலத்தில் யார் என்பதை எவரும் சரியாய் அறியிலார். திருத்தொண்ட தொகையில் "இருக்கும் வேளிர்" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அந் நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து
மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பாக்கொங்கின்
பன்னு துலைப் பசும் பொன்னால் பயில்...." என்று தி. தொகையில் வருகிறது"

ஆங்கில புத்தகங்கள் சில "Irukku Velir" என்று எழுதியுள்ளன. http://www.shaivam.org/english/sen_th12_idangkazi.htm https://books.google.com/books?id=ta6AD7MNFioC&pg=PA83&lpg=PA83&dq=irukku+velir&source=bl&ots=76-2-o9IDQ&sig=OPkcRybNB4T1LaQ0dvL8J0IKaxg&hl=en&sa=X&ved=0CEwQ6AEwBmoVChMI8_Tk8IKkxwIVxZWICh0nqQPd#v=onepage&q=irukku%20velir&f=false

--Puvendhar (பேச்சு) 17:04, 12 ஆகத்து 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாயன்மார்&oldid=3897711" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாயன்மார்" page.