Hello,

I am from Malayalam Wikipedia. I just saw that you have completed 15,000 articles. Congrats to all Tamil wikipedians for crossing another milestone. --Shijualex 19:05, 19 ஆகஸ்ட் 2008 (UTC)

Thank you! Welcome Shijualex from Malayalm Wiki! Thanks for sending your congratulations on reaching 15K articles. Coming from such a great contributor in Malaylam Wiki, as yourself, it is indeed quite gratifying ! Regards --செல்வா 19:16, 19 ஆகஸ்ட் 2008 (UTC) (Selva)

Vandalism in news

தொகு

hello , the news section reports news in an Anti Indian Govt way , Admin intervention needed , else Vandalism will be reported and content will be removed.Thnaks--R.srinivaas 10:01, 6 பெப்ரவரி 2009 (UTC)

சிறீநிவாஸ், நீங்கள் குறிப்பாக எந்தச் செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்பதைத் தெரிவித்தால் நல்லது. என்றாலும், முன்பக்கச் செய்தியில் சிறிது மாற்றத்தைச் செய்துள்ளேன். இது குறித்து உங்கள் கருத்துக்களை தலைப்புச் செய்திகளின் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். நன்றி.--Kanags \பேச்சு 10:27, 6 பெப்ரவரி 2009 (UTC)

srinivas, முதற்பக்க இற்றைப்படுத்தல் நிருவாகிகள் மேற்பார்வையிலேயே நிகழ்கிறது. இதை விசமத் தொகுப்பாக கருத இயலாது. செய்தியை மறுப்பதற்குத் தக்க ஆதாரம் இருந்தால் தெரிவியுங்கள். மற்றபடி, விக்கிப்பீடியா செய்திகள் எந்த ஒரு அரசாங்கத்துக்கும் ஆதரவாகத் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.--ரவி 14:30, 6 பெப்ரவரி 2009 (UTC)

I agree with you MR RAVI , but it should not support a Terrorist outfit, my concern is that thanks for your reply Kanags --R.srinivaas 12:32, 10 பெப்ரவரி 2009 (UTC)

Index

தொகு

Shouldn't the வார்ப்புரு:Index be included in the main page?

Anguraj

மாவீரர் நாள் பற்றிய கட்டுரையில் எழுத்துப்பிழை உள்ளது அஞ்சலி என்பதற்குத் தவறாக உச்சரிப்புச் செய்யப்பட்டுள்ளது திருத்தவும்.--நிரோஜன் சக்திவேல் 20:21, 23 நவம்பர் 2008 (UTC)Reply

தொகு

பெரும்பாலான விக்கிகளில் இந்த மேல்பட்டை வாசகங்களை மொழிபெயர்த்துள்ளார்கள். தமிழில் ஏன் இன்னும் மொழி பெயர்க்க வில்லை என்று தெரியவில்லை. இதற்கான கோப்பு எங்குள்ளது என்று தெரிவித்தால், நானும் மொழி பெயர்க்க முயல்வேன்.--செல்வா 21:32, 24 நவம்பர் 2008 (UTC)Reply

Translate article:Chagos Archipelago

தொகு

Could you please translate the article en:Chagos Archipelago into Tamil please?

செய்தியில் தவறு

தொகு

//நியூயார்க் நகரில் விமானம் ஒன்று வீடு ஒன்றின் மீது வீழ்ந்து மோதியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.// நியூயார்க் நகரில் விமானம் விழவில்லை, நியூயார்க் மாநிலத்தில் மற்றொரு பெரிய நகரான பவ்வல்லோ அருகில் வீழ்ந்தது. மாற்றிவிடவும். --குறும்பன் 03:03, 14 பெப்ரவரி 2009 (UTC)

திருத்தி உள்ளேன்.வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் செய்திகள் பக்கத்தில் திருத்தலாம்--ரவி 09:08, 14 பெப்ரவரி 2009 (UTC)

விக்கிப்பீடியர் அறிமுகதில் தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில என குறிப்பிட்டுள்ளீர்கள் இது தவறு. இது நான் முதன்மையாகப் பங்களித்த கட்டுரையாகும். --Hibayathullah 14:49, 18 நவம்பர் 2009 (UTC)Reply

இலங்கையின் தேசிய பத்திரிகை தினக்குரல் என்று இங்கு புன்னியாமீன் அவர்கள் பற்றிய முதற்பக்கக் கட்டுரையில் காண்கிறேன். அது தவறு. இலங்கையின் தேசிய பத்திரிகை தினகரன். தினக்குரல் அல்ல.--பாஹிம் 13:45, 25 பெப்ரவரி 2011 (UTC)

ஜூலை 15

தொகு

இன்று பலரும் விரும்பும் தமிழக தலைவர் காமராசரின் பிறந்தநாளாம். தமிழ் வருனர்கள் இன்று பகுதியில் அவர் பெயரை எதிர்பார்ப்பார்கள். எவ்வாறு இந்நிகழ்வுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன ? தானியங்கிப் பொறி மூலமோ ? -- 06:07, 15 ஜூலை 2009 (UTC)

நினைவூட்டியதற்கு நன்றி. சூலை 15 பக்கத்தில் காமரசார் பிறந்தநாள் குறிப்பைச் சேர்த்துள்ளேன். இந்நிகழ்வுகள் தானியங்கியாகச் சேர்க்கப்படுவதில்லை. பொருத்தமான குறிப்புகளை நாம் அனைவருமே சேர்க்கலாம்--ரவி 06:16, 15 ஜூலை 2009 (UTC)

இன்றைய சிறப்புப்படம்

தொகு

விக்கி பொதுவில் ஒவ்வொரு நாளுக்கும் இன்றைய சிறப்புப்படம் என வெளியிடுகிறார்கள். இதற்கு பெரும்பாலான இந்திய விக்கிகளில் இணைப்பு கொடுத்துள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவிற்கென படிமங்களை யாரும் பதிவேற்றுவதாகத் தெரியவில்லை.பெரும்பாலும் விக்கி பொது படிமங்களே முதற்பக்க சிறப்புப் படமாக இணைக்கிறோம். ஆகவே RSS முறையில் அல்லது வார்ப்புரு ஒன்றின் மூலம் விக்கி பொது இன்றைய படிமத்திற்கு இணைக்கலாம். தவிர ஏற்கெனவே இரண்டு சிறப்புக்கட்டுரைகளை இணைத்துள்ளதால் படிமத்திற்கு தலைப்பு மட்டுமே போதும் என்பது எனது கருத்து. உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.--மணியன் 10:06, 11 பெப்ரவரி 2010 (UTC)

--Natkeeran 04:48, 24 பெப்ரவரி 2010 (UTC)

முதற் பக்க கட்டுரை

தொகு

கூகுள் மொழிபெயர்ப்பு கட்டுரைகளை முதற் பக்கத்தில் காட்சிப்படுத்துவது நல்லதல்லவே. அதிக அளவில் சிகப்பு இணைப்புகள் உள்ளன. --Arafat 12:36, 23 பெப்ரவரி 2010 (UTC)

இந்த வாரம் காட்சிப்படுத்திய கூகுள் கட்டுரையில் ஏனையவற்றைவிட குறைவான சிகப்பு இணைப்புகள் இருந்ததாகக் கருதியதால் காட்சிப்படுத்தப்பட்டது. இனி இதனை கவனம் கொள்கிறேன்.--மணியன் 05:55, 24 பெப்ரவரி 2010 (UTC)

M.K.Chandra Mouleeswaran-31May2K10-Monday.1053AM. I am a new face in the Thamilzh Wikipedia pages. Although I have been SEEING Thamlzh Wiki since 2K4, I was deeply engaged in my profession. Recently, after setting aside all the past commitments for a while, I connected to Thamilzh Wikipedia. I use Thamilzh in ALL POSSIBLE MEANS EVEN IN MY PROFESSIN WHERE THAMILZH HAS A SMALL SPACE. So,I love and cordially appriciate the Contributors and their momumental efforts. In fact I was fascinatted by the earlier ENCYCLOPEDIAE Brittannica. And very fondly expected inthose days for a Thamizlh version for our rural Thamilzh Aarvalargall. Thanks to every soul in and around Wikipedia. Now to the Front Page and Today's Photo. The instrument "Thappu" or "Parai" or "Palagai" is genuinly the Soul Stirring percussion instrument of our Thamilzhargall. We in Erode and Coimbatore Maavattangall, call it "Palagai" and its the most used instrument in the festivities from Marriage to Religious to Death. You can see, that whenever a person is exposed to the stirring rythms of the Palagi his knees sub-consciousely begin to flex to keep time! It is because he immediately identifies himself with the troup playing the Palagi and mentally joins the ring of players. You can simply "veshtiya madichchuk kattigittu ulla poyirlaam. Poyi oru ravundu aadalaam!". Now just listen to the strong song done by Navaneedha Krishnan's "Thappeduththu adikkayile thaandavak koney, en raththamellaam theeppudikkum thandavak koney!" once and try to keep srrect!

So, to the Foto-Bee who caught the snap and to the Editor who put it in the Front Page, let us "veshtiya madichchuk kattigittu ulla poyi oru ravundu aadalaam!"

உங்களுக்குத் தெரியுமா?

தொகு

கருவுற்ற பெண் ஏன் புளிப்பு மிகுந்த அல்லது மாங்காய் போன்ற உணவை உண்ண தூண்டப்படுகிறாள் என்பதற்கு சரியான விளக்கம் இதுவரை இல்லை.

அதற்க்கு சுரப்பிகளின் மாற்றம் மற்றும் இரை பையில் ஏற்படும் pH மாற்றங்களாக இருக்க கூடும் என கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் முதற் பக்கத்தில் , உங்களுக்கு தெரியுமா ? என்ற பகுதியில் உள்ள கருத்துக்கு அறிவியல் ஆதாரம் உண்டா? உண்டு என்றால் , அதை தெரியப்படுத்த முடியுமா?. நன்றி.-- மகிழ்நன் 20:09, 23 பெப்ரவரி 2010 (UTC)

முக்கியமான கருத்துக்கள். பொறுப்பானவர்கள் கவனிக்கவும். --Natkeeran 04:48, 24 பெப்ரவரி 2010 (UTC)
தகுந்த சான்று கிடைக்கும் வரை அந்தக் குறிப்பை நீக்கப் பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:07, 24 பெப்ரவரி 2010 (UTC)
கடந்த சில கிழமைகளாக ஆதாரம் இல்லாத சில செய்திகள் உங்களுக்குத் தெரியுமா பகுதியில் இடம்பெற்றுள்ளன. சென்ற வாரம் இரண்டு தவறான தகவல்கள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன. இப்பகுதியைக் கவனிப்பவர்கள் தயவு செய்து ஆதாரபூர்வமான இணையத்தளங்களில் இருந்து அல்லது நூல்களில் இருந்து தகவல்களைப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். விக்கியில் உள்ளிணைப்புகள் உள்ள கட்டுரைகளில் இருந்து பெறுவது நல்லது. நன்றி.--Kanags \உரையாடு 06:47, 24 பெப்ரவரி 2010 (UTC)
கனகுவின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன். தகவல்கள் வாரப் பத்திரிக்கை துனுக்கு போல் அல்லாமல் இருப்பது நன்று.--Arafat 08:35, 24 பெப்ரவரி 2010 (UTC)

உங்களுக்குத் தெரியுமா? பகுதியின் நோக்கம் புதிதாய் தொடங்கப்படும் கட்டுரைகளில் உள்ள சுவையான, வியப்பூட்டும் அல்லது அரிதான தகவல்களின் வாயிலாக முதல் பக்க வாசகர்களை அந்தக் கட்டுரைகளுக்கு அழைத்துச் செல்வது. அந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 10:27, 24 பெப்ரவரி 2010 (UTC)

M.K.Chandra Mouleeswaran-31May2K10-Monday.1122AM. Naan innum Thamilzh Elzhuththurukkalai enadhu Thamilzh Wiki pakkangalukkaana Windows Fonts irtkaaga Install seyyavillai. Naan palzhagi ulla Thamilzh Fonts veru vagaiyaana KeyBoard irtkaanavai. Ellarum konjam periya manaththudan ennai mannikka vendum. Miga viraivileye naan Thamilzhil neeraaga vandhu viduven!

கட்டுரைப்போட்டி அறிவிப்பு

தொகு

புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள படிமம் திரையின் அளவுக்கு ஏற்ப அளவு மாறாமல் இருப்பதால் குறித்த இடத்துக்குள் சரியாகப் பொருந்தவில்லை. பழைய அறிவிப்பே நல்லது என்பது எனது கருத்து.மயூரநாதன் 17:56, 29 மார்ச் 2010 (UTC)

ஒளிவீசுவது போல் இருந்த பழைய படம் அழகாக இருந்ததே, ஏன் மாற்றிவிட்டீர்கள்? நான் கூறுவது இந்தப்படத்தை:   எழுத்துகள் வெள்ளை நிறத்தில் பெரிதாக இருந்தது எடுப்பாக இருந்தது. எல்லோருக்கும் எது பிடித்திருக்கின்றதோ அதனையே வைத்த்துக்கொள்வோம். ஆனால் அடிகக்டி மாற்றாமல் இருப்பது நல்லது. தேவை எனில் சில படங்களை முதலில் வேறொரு இடத்தில் இட்டுப் பார்த்துதேர்ந்து கொள்ளலாம்.எழுத்துகள் வெள்ளை நிறத்திலும்,பின்புலநிறம் மண் நிறத்திலும், ஒளிவீசுவதுபோல் இருப்பதும் அழகாக இருப்பதாக என் கண்களுக்குத் தெரிகின்றன. --செல்வா 02:20, 30 மார்ச் 2010 (UTC)

இந்த மத்தாப்பூ ஒளிரும் படம் அழகாக இருக்கிறது. மணல்நிறப் பின்னணியில் இருக்கும் தற்போதைய படம் படிக்க இலகுவாக இருக்கிறது. இரண்டில் எதுவானாலும் சரி. ஆனால், sitenotice வெவ்வேறு கணினிகளில் வெவ்வேறு பக்கங்களில் வேறு வேறு மாதிரி வருகிறது. சில வேளை வராமலும் போகிறது. இதைச் சரி செய்ய என்ன வழி?--ரவி 06:20, 30 மார்ச் 2010 (UTC)

அருள் கூர்ந்து எழுத்துகள் வெள்ளை நிறத்திலும, பின்புலம் அடர்ந்த நிறத்துடன் இருக்குமாறு அமைக்க வேஎண்டுகிறேன். அப்படி இருந்தால் எடுப்பாக இருக்கும். மயூரநாதன் முதலில் இட்டது உண்மையிலேயே மிகவும் எடுப்பாக இருந்தது. கூடிய விரைவில் மாற்ற முடியுமா எனப் பாருங்கள். கறுப்பு எழுத்துகளில் பின்புலத்தில் அடர்ந்த நிறத்தில் இருப்பது எடுப்பாக இல்லை. --செல்வா 15:01, 30 மார்ச் 2010 (UTC)
மேலும் இப்பொழுது இடவலமாக உள்ள இருபக்கங்களின் பின்புலங்களும் நிற இசைவு இல்லாமல் உள்ளது (colour coordination is not pleasing). நாம் செய்வதை இயன்ற அளவு சிறப்பாக செய்ய முற்படுவோமாக. நன்றி.--செல்வா 15:05, 30 மார்ச் 2010 (UTC)

மத்தாப்பு ஒளிரும் படம் எனக்கும் பிடித்துள்ளது. உண்மையில் இப்படம் என்னுடையது அல்ல. இதுவும், பின்னர் இட்ட எல்லாப் படங்களும் தேனி. சுப்பிரமணி வரைந்து அனுப்பியவை. அவருக்கு எனது நன்றிகள். மயூரநாதன் 19:23, 30 மார்ச் 2010 (UTC)

மாற்றியதற்கு மிக்க நன்றி. தேனி சுப்பிரமணிக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்! அவர் இந்த கட்டுரைப்போட்டியில் மிகுந்த துடிப்புடனும் உடனுக்குடன் பலவும் செய்து உதவிவருவது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. --செல்வா 19:52, 30 மார்ச் 2010 (UTC)

விக்கிசெய்திக்கான பேஸ்புக் தொடுப்பு

தொகு

    இந்த இணைப்பை 'செய்திகளில்' க்கு அருகில் சேர்க்கமுடியுமா? மாஹிர் 18:51, 7 ஏப்ரல் 2010 (UTC)

Char Dham

தொகு

Please translate Char Dham into Tamil.

Thank you. --92.21.154.109 18:14, 22 மே 2010 (UTC)Reply

Tamil trauma- Eelam’s accession to India - the only viable and dharmic solution

தொகு

Please take a look. As a foreigner (American), what do Tamils think of this idea of Eelam to integrate with India? I would be interested to see your opinions.

http://www.groundreport.com/Business/Tamil-trauma-Eelam-s-accession-to-India-the-only-v_4/2918230

--66.90.104.230 10:43, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்

தொகு
(படம்)தவறியுள்ளது.   சஞ்சீவி சிவகுமார்--192.248.66.3 05:20, 23 செப்டெம்பர் 2010 (UTC)Reply

தச்சால்

தொகு

சிறீதரன். தச்சால் கட்டுரை ஏற்கனவே முன்பு ஒருமுறை முதற் பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கவணிக்கவும். --அராபத்* عرفات 06:43, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நன்றி அராபத்.--Kanags \உரையாடுக 07:04, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நடப்பு நிகழ்வுகள்

தொகு

முதற் பக்கத்தில் பகுப்பு:நடப்பு நிகழ்வுகள் பெட்டி ஒன்றை வைக்கலாமா? இதன்மூலம் நடப்பு நிகழ்வுகள் வார்ப்புரு கொண்ட கட்டுரைகள் வளர்வதற்கு உதவும். -- மாஹிர் 07:03, 6 அக்டோபர் 2010 (UTC)Reply

படம் இணைப்பை நீக்க

தொகு

பழங்குடியினர் தொடர்பான செய்தியில் படம் இணைப்பை நீக்கவூம்.--சஞ்சீவி சிவகுமார் 14:22, 13 நவம்பர் 2010 (UTC)Reply

நன்றி சஞ்சீவி. நீக்கியிருக்கிறேன். நீங்களே இதனை நீக்கியிருக்கலாமே!:).--Kanags \உரையாடுக 14:25, 13 நவம்பர் 2010 (UTC)Reply

வார்ப்புருவில் மாற்றம் தேவை

தொகு

அண்மையில் தமிழ் விக்சனரி உலக விக்சனரிகளில் 9வது இடத்தை எட்டியுள்ளது. விக்கிமூலத்தில் பயனர் செங்கைப் புதுவன் மூலமாக உள்ளடக்கம் கூடுகிறது. இருப்பினும் பெரும்பாலான விக்கி வாசகர்களுக்கு நமது சகோதர திட்டங்களைக் குறித்த விழிப்புணர்வு இல்லை. எனவே நமது முதற்பக்கத்தில் இத்திட்டங்களிலிருந்து வாரம் ஒரு கட்டுரையின் சுருக்கத்தை (முதற்பக்க கட்டுரைகளைப் போல) கொடுத்தால் நலமாக இருக்கும். விக்சனரியில் நாளும் ஓர் சொல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதற்கு விக்கியின் முதற்பக்கத்தில் தொடுப்பு(not simple link, but copying the content) கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.இது முதற்பக்க வடிவமைப்பை மாற்றிச் செய்யக்கூடிய திறனாளர்களுக்கே முடியுமாதலால் இங்கே விண்ணப்பிக்கிறேன்.--மணியன் 04:34, 25 திசம்பர் 2010 (UTC)Reply

Translate articel - Harry Mulisch

தொகு

Could you please translate the article about the most famous Dutch writer en:Harry Mulisch into Tamil? These requests may be recorded in Embassy link for prompt attention. The Tamil article is at ஆரி முலிச்.--மணியன் 03:32, 13 சனவரி 2011 (UTC)Reply

முதல் பக்க தேதி மாற்றம்

தொகு

முதற் பக்கத்தில் கடைசி பாகத்தில் இப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2010, 09:01 மணிக்குத் திருத்தினோம்.என்று வருகின்றது. இதை மாற்ற இயலாதா? -வின்சு

அந்த வரியை நீக்கிவிட்டேன் வின்சு. முதல்பக்கம் வார்ப்புருக்களைக் கொண்டு இற்றைப்படுத்தப்படுகிறது. நேரடியாக மாற்றப்படுவதில்லை (முதற் பக்கத்தில் மூன்று உட்பிரிவு வார்ப்புருக்கள் உள்ளன. அவற்றுள் நடுப்பாகம் மட்டும் இற்றைப்படுத்தபடுகிறது) என்பதால், இந்த அறிவிப்பு அங்கு தேவையில்லை. எனவே இதனை நீக்கியுள்ளேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.--சோடாபாட்டில்உரையாடுக 12:55, 13 பெப்ரவரி 2011 (UTC)

செய்திகளில் தவறு

தொகு

செய்திகளில் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை வென்றது என தவறாக உள்ளது. தயவுசெய்து பாக்கித்தான் வென்றது என திருத்தியமைக்கவும். --சிவகோசரன் 08:03, 27 பெப்ரவரி 2011 (UTC)

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சிவகோசரன். மாற்றிவிட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:22, 27 பெப்ரவரி 2011 (UTC)

Tamil numbers

தொகு

As direct edit in Tamil option in Tamil wikipedia will not support Tamil numbers, people will forget that there are separate symbols in Tamil script for numbers. I request people to use Tamil numbers in wikipedia inplace of English numbers. Please dont let cultural scripts to vanish.

I request administrator to look into this issue ASAP. You can contact me on teju2friends@gmail.com

Teju2friends

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்/3&oldid=724114" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முதற் பக்கம்/3" page.