பேச்சு:மு. க. ஸ்டாலின்
Untitled
தொகுநட்கீறன் அவர்கள் தன் போக்கிலேயே பெயர்களை மாற்றுவது சரியல்ல. தமிழ்நாடு அரசாங்க தளத்தில் http://www.tn.gov.in/tamiltngov/tnassembly/ministers-tam.htm ஸ்டாலின் என பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. எவர் பெயரையும் மாற்றுவதற்கு விகிக்கு உரிமை இல்லை--217.28.2.87 17:13, 28 பெப்ரவரி 2009 (UTC).
ஸ் - > இசு
தொகுஸ்டாலினை இசுடாலின் என்று எழுதுவது ஏதோ உறுத்தலாக இருக்கிறது. ஸ் -> இசு என்று மாறுவதை எழுத்து வழக்கில் அவ்வளவாக கண்டதில்லை. இசுக்கூல் (school) என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவது உண்டு. சினேகா, சுவிட்சர்லாந்து என்று எழுதுவது போல் இகரம் இல்லாமல் எழுதலாம். ஸ்டாலின் என்பதற்கு சிடாலின் (சிட்டாலின்?) என்று எழுதவது சரியாக இருக்கலாம்--ரவி 08:58, 2 ஏப்ரல் 2009 (UTC)
எந்த விதியும் தேவையில்லை இது ஒருவருடையப் பெயர் அவர்க்ள அம்மா, அப்பா அவருக்கு ஆசையாக வைத்தப் பெயர், நமக்கு நம் தாய், தந்தையர் வைத்த்து போல இடையில் நாம் யார்?--செல்வம் தமிழ் 13:47, 22 ஏப்ரல் 2009 (UTC)
- செல்வம் தமிழ், நீங்கள் கூறுவது உண்மை, ஆனால் ஒருவரின் பெயரை ஒரு மொழியில் எழுதும்பொழுது அம்மொழியில் இயல்பின்படி எழுதவேண்டும் அல்லவா? ஞானசம்பந்தன் என்று ஆசையுடன் பெயர் வைத்தாலும், ஆங்கிலத்திலே எழுதும்பொழுது gnanasambandan என்றுதானே எழுதுகிறார்கள்? ஞாnasambaந்தn என்றா எழுதுகிறார்கள்? இதே போலவே, தமிழினி, யாழினி, அழகப்பன் போன்ற பிற பெயர்களும். ஸ் என்னும் எழுத்தை ஏற்றுக்கொண்டால் நீங்கள் சொல்வது சரி, ஆனால் கிரந்தம் தமிழில் ஏற்றுக்கொள்வோர்களும், ஏற்றுக்கொள்ளாதவர்களும் உள்ளார்கள் அல்லவா? ஒருவரின் பெயரை மாற்றும் உரிமை நமக்கு இல்லை, ஆனால் மொழியின் இயல்பை மாற்ற உரிமை உள்ளதா என நாம் கேட்கவேண்டும். ஒருவரின் பெயரை வேறுவிதமாக எழுதுவது அவரை அவமதிப்பதாகும் என்கிறார்கள் சிலர், ஆனால் ஒரு மொழியையும் அதன் முன்னோர்களையும் ஒருசேர அவமதிப்பதை அவர்கள் பார்க்க மறுக்கிறார்கள். தமிழில் காந்தி என்று எழுதும்பொழுது G ஒலி தமிழில் முதலில் வரலாகாது ஆகையால் நாம் Kaandhi என்று கூறுகிறோம். அது அவரை அவமதிப்பதாகாது. எசுப்பானியர் இயேசுநாதரை Hesoos என்று கூறுகிறார்கள் எசுப்பானியர். அது அவரை அவமதிப்பதாகாது. அவர்கள் மொழியில் அப்படித்தான் கூற இயலும். அது போலவே, Stalin என்னும் பெயரை இசுட்டாலின், இசிட்டாலின் என்று எழுதுவது தவறல்ல. உண்மைதான், இவ்வெழுத்துக்கூட்டல்கள் வேறாக உள்ளன. ஆனால் தமிழ் எழுத்துகளில் எழுதவேண்டுமெனில் அப்படித்தான் எழுத இயலும். கிரந்த எழுத்தை இட்டு எழுதினால் ஸ்டாலின் என எழுதலாம். ஸ்டாலின் என்று எழுதினாலும் Sdaalin என்று ஒலிக்க வேண்டும். தமிழில் டகரம் வலித்து ஒலிக்க வேண்டும் எனில் முன்னே வல்லின ஒற்றுவருதல் வேண்டும். இப்படி எழுதுவதால் தமிழின் ஒலிப்பொழுக்கம் சிறுகச்சிறுக சிதைந்து சீரழிகின்றது. கிரந்தத்தை ஏற்பதால் விளையும் கேடுகளால் பலர் அவற்றாஇ இட்டு எழுதுவதை எதிர்க்கின்றார்கள். கிரந்தம் தமிழ் அல்ல, அதில் ஐயம் இல்லை. ஏற்கலாமா, கூடாதா என்பது இன்னும் கேள்விதான். எடுத்து ஆள்வோரும் உண்டு. தவிர்த்து ஆள்வோரும் உண்டு. தமிழில் விபீடணன், இலக்குவன், அனுமன், அரன், அரி, கந்தன் ("ஸ்கந்தன்"), சீனிவாசன், சிரீதரன் என்றெல்லாம் எழுதும் வழக்கம் உண்டுதானே? சினேகிதி, தலம் ("ஸ்தலம்"), தாபனம் ("ஸ்தாபனம்"), சந்தோசம் என்று எத்தனையோ சொற்களை கிரந்தம் இல்லாமல் ஏழுதும் வழக்கம் இருப்பதும் உண்மைதானே? தமிழில் வடவெழுத்து ஒரீஇ (நீக்கி) எழுதும் இலக்கணம் கூட உள்ளதே? இத்தாலியர் Helium என்பதை Elio என்கிறார்கள். அவர்கள் மொழியில் H ஒலி இல்லை. தமிழிலும் அப்படித்தான். ஈலியம் என்று எழுதுவதே சரி. Station என்பதை பொதுமக்கள் டேசனுக்குப் போனேன் என்று கூறக்கேட்டு உள்ளேன். Bus Stand என்பதை பசுட்டாண்டு என்று மக்கள் இயல்பாகக் கூறுகின்றார்கள். தமிழில் மெய்யொலிக்கூட்டங்கள் வருவது (ஒரு சிலவற்றைத் தவிர) இயல்பல்ல. எகிப்தியர் First என்னும் சொல்லை furust என்று இடையே உயிரொலி இட்டுத்தான் ஒலிக்கிறார்கள். ஆங்கிலத்திலே Thooththukkudi, thiruvanandhapuram என்று கூற எல்லா ஒலியன்களும் இருந்தபொழுதும் அவர்கள் Tutucorin, Trivandrum என்று உயிரொலிகளை ஒடுக்கி ஒலிக்கிறார்கள், எழுதுகிறார்கள். அதாவது மொழி இயல்பைப் பொருத்தே இவை அமையும். திரிபுகள் ஏற்படுவது இயற்கை. இசுட்டாலின் என்பது தமிழ்ப்பெயர் இல்லை (ஒரு தமிழருக்கு அப்பெயர் இட்டிருந்தாலும்). ஆகவே திரிபுகள் நிகழ்வது இயற்கை. இதில் உரிமை கொண்டாடுவதாயின், தமிழ் மொழியின் முன்னுரிமையையும் கருத்தில் கொள்ளவேண்டும். இது ஒரு சிக்கலான கேள்விதான். --செல்வா 15:06, 22 ஏப்ரல் 2009 (UTC)
ஸ்டாலின், ஜெயலலிதா ஆகிய பக்கங்களில் கிரந்த எழுத்துக்கள் அனுமதிக்கப்படுகையில் பிற ஆளுமைகளின் பெயர்களில் உள்ள கிரந்த எழுத்துக்களைத் திருத்தலாமா? சக அரசியல்வாதி ஒருவரின் (விஜயகாந்த்) பெயரில் கிரந்தம் நீக்கப்படுவதுடன் ஒலிக்குறிப்பும் தமிழுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா முழுமைக்கும் ஒரே கொள்கையைக் கடைபிடிக்க வேண்டாமா? ஏன் இந்த வேறுபாடு? --CXPathi (பேச்சு) 11:41, 4 சூன் 2021 (UTC)
- மேற்கூறிய கருத்தினை ஆதரிக்கிறேன். விக்கிப்பீடியா முழுமைக்கும் ஒரே கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். ஸ்பெயின் - எசுப்பானியா என்று உள்ளது. ஆனால், மிலன் - மிலானோ அனுமதிக்கப்படவில்லை. சத்தியராஜ் (பேச்சு) 12:04, 2 ஆகத்து 2021 (UTC)
ஆம். Elango (பேச்சு) 17:14, 26 திசம்பர் 2021 (UTC)
Uniformity should be there for example [[1]] is a newspaper name why the same standards are followed there ?--R.srinivaas (பேச்சு) 14:26, 11 அக்டோபர் 2022 (UTC)
வழக்குச் சொற்கள்
தொகுசெல்வா நீங்கள் கூறுவது வழக்கு சொற்கள் அல்லது வினைச்சொற்கள் அவற்றை மாற்றுவது பொருந்தும். நம் முன்னோர்கள் எவ்வளவோ மாற்றி மாற்றித்தான் தமிழ் இந்நிலைக்கு வந்துள்ளது. மொழி பிற மொழிகளுடன் சேர்ந்து தான் பல புதிய சொற்களை உருவாக்கிவந்துள்ளது. இது தமிழுக்கும் பொருந்தும். இதன் பரிணாம வளர்ச்சி இப்படித்தான். ஆங்கிலேயர் இங்கே அதிக வருடங்கள் ஆண்டதால் ஆங்கிலம் சார்ந்த சொற்களை தமிழர்கள் கையாண்டனர், சிலர் கல்வியறிவு பெறாத காரணத்தினால் பயன்படுத்தி வந்தனர்.
தமிழ் நம் இணையத்திலிருக்கும் பயனர்களால் மட்டும் வளர்ந்தது அன்று. இதற்காக பலர் இரத்தம் சிந்தி காப்பாற்றியதன் விளைவாக நாமும் இன்று பயன்படுத்தி முன்னேற்ற முனைகின்றோம்.
நமக்கு வெளியே நிறையபேர் மிகுந்த பற்றுடனே இருக்கின்றனர். அவர்களாலேயே தமிழ் வளர்ந்து இன்று செம்மொழி அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
ஒருவருடைய பெயரை மாற்றித்தான் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனித உரிமை மீறலும் கூட. அவர் அனுமதி இல்லாமல் மாற்றுவது அவரது தனியுடமையில் தலையிடுவது ஆகும். அதற்கு அந்த கட்டுரையை நீக்கினாலும் தவறில்லை.
மகான்களின் பெயர்களைப் பற்றி மகான்கள் கவலைப்படுவதில்லை. ஒரு தனி நபரின் பெயரை எப்படி மாற்றமுடியும். வேறு மொழி உச்சரிப்பு தெரிந்துதானே அப்பெயரை வைத்திருப்பார். அரசு பதிவேடுகளில் கட்டணம் செலுத்தி பதிந்தபின் தான் மாற்றமுடியும். அப்படியென்றால் நாம் அரசாங்கத்தையும் மீறியவர்களா?
அவ்வெழுத்து சேர்ப்பதனாலேயே மொழி வீழ்ச்சியடைந்துவிட முடியுமா?. அப்படியிருந்தால் தமிழ் விசைப்பலகையில் அவ்வெழுத்துக்களை ஏன் சேர்க்கவேண்டும்?. கல்வி நிலையத்தில் ஏன் சொல்லித் தரவேண்டும்?.
ஒலியைத்தானே சேர்க்கின்றோம். வேண்டுமானலும் கூடுதலாக தமிழ் எழுத்துக்களை கண்டுபிடித்து அதை சேர்க்க வேண்டியது தானே. இதற்கு மேல் எழுத்துக்கள் கண்டுபிடிக்கக் கூடாது என்று சட்டம் உள்ளதா? அது வரை இதைப் பயன்படுத்துவோமே. பழைய வார்த்தைகளை நாம் மாற்றுவதில்லை? எவ்வளவோ நம் முன்னோர்கள் மாற்றியிருக்கின்றனர். எழுத்துக்களையே குறைத்திருக்கின்றோமே. அது போலத்தான் இதுவும்.
நீங்கள் என்னுடன் தகவல் பரிமாற்றம் செய்யும் பொழுது பல தமிழ் வார்த்தைகள் புரியவில்லை. இவைகள் வழக்கத்தில் பயன்படுத்தாத சொற்கள் ஆதலால் என்க்குப் புரியவில்லை அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அகராதி பார்க்கவேண்டும். அகராதியிலும் இல்லை. இது நடைமுறைக்கு ஒத்து வருமா. புரியாததினால் எனக்கு தமிழ் மீது பற்றில்லை என்று அர்த்தம் இல்லை. தமிழ் இலக்கியம் படித்தவனில்லை. வழக்கத்தில் பெரும்பாலும் கையாள்கின்ற தமிழ் சொற்களையே அதிகம் பயன்படுத்துவதால் உங்கள் புதிய சொற்கள் புரியவில்லை. தமிழ் உச்சரிப்பு எழுத்துதான் பயன்படுத்தவேண்டும் என்று நீங்கள் கருதினால் நானும் நீங்களும் மட்டுமே விக்கியைப் பயன்படுத்தமுடியும்.
வழக்கத்தில் ஜப்பான் என்று கூறுகின்றோம் நீங்கள் சப்பான் என்று கூறவேண்டும் என்கிறீர்கள் இங்கே சிரிக்கின்றார்கள் தமிழ் நகைப்புள்ளாக்கப்படுவது மிகுந்த வருத்தமடையவைக்கின்றது. ஜப்பான் இங்கேயும் ஜப்பான் பிறநாடுகளிலும் ஜப்பான்தான் நமக்காக நாட்டின் பெயரையை மாற்றுகின்றோம். இந்தியாவை மாற்ற விடுவோமா? எழுத்து இல்லையென்றால் மாற்றலாம் எழுத்துதான் கூடுதாலாக வைத்திருக்கின்றோமே. அதைப்போலத்தான் இசு= இது ஒரு கொச்சை சொல் நன்னா, ஆத்துல என்பது போன்ற வெற்று கொச்சை சொற்களாகும். இதை அவர் கேட்டால் வெறுத்துவிடுவார்.
தமிழில் எல்லா மொழி உச்சரிப்பு ஒலிகளும் வர ஆவண செய்யவேண்டும் அதுவே வளர்ச்சி. அப்போது தான் போலியான ஆங்கில மோகம் ஒழியும் தாய் மொழிக்கல்வியின் இன்றியமையாமைப் புரியும். தமிழ் படுத்துகிறேன் என்று இன்னும் இழிவு படுத்தினால் பலர் விலகிச்செல்வர் அது நமக்குத் தெரியாது. ஒருவகையில் தமிழை வளர்க்கின்றேன் என்று தமிழுக்கு நம்மை அறியாமல் தீமை செய்கின்றோம்.
இசு- இது என்ன பொருள். இது இங்குள்ள யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். இது இழிவுபடுத்துவதா இல்லையா? என்று. ஜோதியை -சோதி என்று மாற்றுகின்றனர். சோதி என்றால் மயக்கம் என்று வருகின்றது. இது சரியான சொல்லா. தமிழகத்தில் உள்ள அனைவரும் சேர்ந்துதானே மொழியை காப்பாற்றி வருகின்றோம். நம்முன்னோர்கள் செய்யாததையா நாம் செய்து விட்டோம். அவர்களிடம் கற்றது தானே தமிழ். இணையம் இப்பொழுது தானே வந்த்து. இதை விவாதித்தால் இன்னும் போகும். இத்துடன் முடிக்கின்றேன்.--செல்வம் தமிழ் 18:37, 22 ஏப்ரல் 2009 (UTC)
- உங்கள் கருத்து புரிகின்றது செல்வம் தமிழ். இது பற்றி நிறைய உரையாடி இருக்கின்றோம். நீங்கள், //வழக்கத்தில் ஜப்பான் என்று கூறுகின்றோம் நீங்கள் சப்பான் என்று கூறவேண்டும் என்கிறீர்கள் இங்கே சிரிக்கின்றார்கள் தமிழ் நகைப்புள்ளாக்கப்படுவது மிகுந்த வருத்தமடையவைக்கின்றது. ஜப்பான் இங்கேயும் ஜப்பான் பிறநாடுகளிலும் ஜப்பான்தான் நமக்காக நாட்டின் பெயரையை மாற்றுகின்றோம்.// என்கின்றீர்கள். செருமன் மொழியில் அவர்கள் யாப்பான் என்றுதான் சொல்கின்றார்கள். எசுப்பானியரும் Hapon (ஃஆப்பொன்) என்பது போல ஒலிப்பர், கிரேக்க மொழியிலே இயாப்பொனியா (Ιαπωνία) என்பர், உருசிய மொழியிலும் தொடர்பான பல மொழிகளிலும் யாப்பொனிய்யா (Япония) என்பர். எனவே எல்லோரும் "ஜப்பான்" என்பதில்லை. நாம் அவர்கள் மொழியில் கூறுவதற்கு நெருக்கமாக நிப்பொன் என்றுகூடச் சொல்லலாம். சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அவர்கள் பல மொழிமரபுகளை அறிந்தால் சிரிக்கமாட்டார்கள். கூடுதலான ஒலிகளை தக்க இடங்களில் மட்டும் பயன்படுத்த பயனர்:செல்வா/தமிழ் என்னும் பக்கத்திலும், பயனர்:செல்வா/தமிழ்-2 என்னும் இடத்திலும், என் வலைப்பக்கத்திலும் (இங்கே பார்க்கவும் ) தந்திருக்கின்றேன். இன்றைய யூனிக்கோடு முறையில் இம்மறுமொழியில் உள்ளவாறு பற்பல மொழி எழுத்துகளைப் புகுத்தி எழுதமுடியும். அதனாலேயே அவை சரியென்று கொள்ள முடியாதல்லவா?--செல்வா 19:47, 22 ஏப்ரல் 2009 (UTC)
- மேலும் நீங்கள்: //ஒலியைத்தானே சேர்க்கின்றோம். வேண்டுமானலும் கூடுதலாக தமிழ் எழுத்துக்களை கண்டுபிடித்து அதை சேர்க்க வேண்டியது தானே. இதற்கு மேல் எழுத்துக்கள் கண்டுபிடிக்கக் கூடாது என்று சட்டம் உள்ளதா?// நாம் விரும்பியவாறெல்லாம் எழுத்துகளைக் கூட்டலாம் என்றால் மொழியே கண்டபடி சிதைந்துவிடும்.என்னென்ன எழுத்துகள் தமிழ் எழுத்துகள் என்பதற்கும், அவை எப்படியெப்படி வழங்கவேண்டும் என்பதற்கும் இலக்கணம் கொண்ட மொழி தமிழ்மொழி. இலக்கணம் என்பது சட்டம் போன்றதுதான். அதுவும் நம் நன்மைக்காக நுணுகி அறிந்த நம்முன்னோர்கள் வகுத்துக்கொடுத்தது. அது எத்தனையும் அரிய ஒன்று என்று அறிந்தால் நாம் மதித்துப் போற்றுவோம். புதிய ஒலிகளையும், புதிய மெய்யொலிக்கூட்டங்களையும் போன்று மொழிக்கு அடிப்படையான சிலவற்றை மாற்றுவது கடினம், வரவேற்கப்படுவதில்லை. இதனாலேயே நாம் Buddha என்று எழுதினாலும், ஆங்கிலேயன் Boodaa ('பூடா) என்கிறான். காந்தி என்பதை மிட்டாய் என்பது போல கேன்டி என்கிறான். ஏன் அவன் மொழியில் dh ஒலி இல்லையா? Then, there, that father, mother போன்ற அடிப்படைச் சொற்கள் இருந்தும் கூட அவனால் ஒழுங்காக ஒலிக்க இயலவில்லை. அது அவன் மொழி இயல்பு. இதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஒருசிலர் மாற்றி ஓரளவுக்கு ஒழுங்காக ஒலிக்ககூடும், ஆனால் பொதுமக்கள் அப்படி ஒலிக்க முடிவதில்லை. செய்திகள் படிப்பவர்கள்கூட ஒழுங்காக ஒலிப்பதில்லை. சரியான ஒலிப்பைக் காட்ட அனைத்துலக ஒலியன் குறியெழுத்து வரிசை உண்டு. அதனைப் பயன்படுத்தலாம். --செல்வா 20:01, 22 ஏப்ரல் 2009 (UTC)
Japan, India குறித்த ஆங்கில விக்கிப்பீடியா பக்கத்துக்குப் போய் இடப்பக்கம் உள்ள பிற மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கான தொடுப்புகளைப் பார்க்கலாம். இந்நாடுகளின் பெயர்கள் உலகம் முழுக்க ஒரே போல் எழுதப் படுவதில்லை. அழைக்கப்படுவதில்லை.--ரவி 20:04, 11 மே 2009 (UTC)
நான் மேலே கூறியதும் ஆய்வில் உள்ளது. மொழியை கண்டுபிடித்த்து மனிதன் தான். மொழியே இல்லாத காலத்தில் என்ன இலக்கணம் இருந்தது அதை ஒருவருடன் ஒருவர் கலந்து பேசி உருவாக்கப்பட்டது தான். எல்லாமே மனிதன் உருவாக்கியது தான் விமானத்திற்கு முன் பறவைதானே, கைப்பேசிக்கு முன் தொலைப்பேசித் தானே. மேற்கூறிய விவாதங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே தொலைக்காட்சியில் வந்து விட்டது, திருத்த எழுத்துக்கள் பட்டியல் மாதிரிக்காக காட்டப்பட்டது. இ.ஆ.ப முன் நாட்டில் செயலாட்சியர்களே இல்லையா. எவ்வளவோ எழுத்துக்கள் மாற்றியாகி விட்டது. இஙுகுள்ள அறிஞர்களும ஏற்று கொண்டு விட்டார்கள். நானும் இன்றைய முதல்வர் பத்திரிகையில் பணி புரிந்தவன் தான்.இது பற்றிய விவாதங்கள் நடந்த்துண்டு. ஆங்கில மருத்தவத்திற்கு முன் மருத்துவமே இல்லையா? மனிதன் தான் உயிர் வாழ வில்லையா. தொல்காப்பியனுக்கு யார் இலக்கணம் சொல்லிக் கொடுத்த்து. எல்லாமே புள்ளியில் இருந்துதான் துவங்கியது. விக்கியில் யார் முடிவு செய்கின்றார்கள் --செல்வம் தமிழ் 21:19, 22 ஏப்ரல் 2009 (UTC)
- நீங்கள் கேட்கும் கேள்விகள் புரிகின்றன. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்னும் சொலவடையும் உண்டு. ஆனால் எது நல்லது எது தீயது என்று அறிந்து செய்தல் வேண்டும். பழையன எல்லாம் பழுதும் அல்ல, புதியன எல்லாம் புதுமை என்னும் நலம்பெருக்கும் புதுமையும் அல்ல. உலகில் எத்தனை மொழிகளில் உயிரெழுத்து, மெய்யெழுத்து என்று வகைப்படுத்தியும், குறில் நெடில் என்று வகைப்படுத்தியும், இத்தனை விரிவாக இலக்கண வரைமுறைகள் வகுத்தும் 2500 ஆண்டுகளாக செழித்து வந்துள்ளன கூறுங்கள். தமிழின் சிறப்பு அதன் எளிமை. ஒலிநுட்பங்களை மிக நுண்ணிதாக அறிந்துணர்ந்து ஆக்கியுள்ளார்கள். எவை எவை எப்படி எப்படி ஒன்றுக்கு ஒன்று துணையாகவும் இணக்கமாகவும், முரணாகவும் உள்ளன என்றெல்லாம் நன்கு அறியாமல் அவரவர் மாற்றங்கள் கொண்டுவருவது பெருந்தீங்காக முடியலாம். கிரந்த எழுத்தொலிகள் தமிழர்களுக்குப் புதிதல்ல. 2500 ஆண்டுகளாகவே அறிவர் ஆனால் கிரந்த ஒலிகளைத் தமிழில் ஏற்கவில்லை. ஆங்கிலேயர்களும் பிரான்சியர்களும் அருகருகேதான் வாழ்ந்து வந்துள்ளனர், என்றாலும் பிரான்சிய ஒலிகளையெல்லாம் ஆங்கிலேயர்கள் ஏற்கவில்லை. இதே போலத்தான் எசுப்பானியர்களும். விக்கியில் முடிவு எடுப்பது பயனர்கள்தாம். தக்க காரணங்களை முறைப்படி முன்வைத்து கருத்தாடி பயனர்கள் இணக்க முடிவு எடுப்பர். கிரந்த எழுத்தின் பயன்பாடு பற்றி முக்கியமாக 3 நிலைப்பாடுகள் உள்ளன (1) எங்கும் பயன்படுத்தத் தேவை இல்லை. கூடாது, (2) எல்லா இடங்களிலும் தங்கு தடையின்றி பயன்படுத்தலாம், பயன்படுத்த வேண்டும். (3) ஒரு சில இடங்களில் பயன்படுத்தலாம், ஆனால் கூடியமட்டிலும் குறைவாக இருப்பது நல்லது. இந்த மூன்று நிலைப்பாடுகளில் ஒவ்வொன்றுக்கும் ஆதரவாளர்கள் உள்ளனர். இதைப்பற்றி ஆழமாக நடுநிலையுடன் எண்ணியவர்களுக்குள் கருத்துகள் உண்டு. --செல்வா 23:09, 22 ஏப்ரல் 2009 (UTC)
- சுருக்கமாக எனது பரிந்துரை. தமிழர்களின் (குறிப்பாக குறைந்தது இருக்கும் தமிழர்களின்) பெயர்களை அவரவர்கள் தங்களை அழைக்கும் பெயரையே முதன்மைப்படுத்துதல் இப்போதைக்கு நல்லது. வீணான சச்சரவுகளைக் குறைக்கலாம். ஸ்டாலின் என்பதை இசுட்டாலின், சிட்டாலின், சிடாலின் இவற்றில் எதனை முதன்மைப்படுத்துவது என்பதிலேயே குழப்பம். இவ்வாறான உரையாடல்களில் வீணாக எமது நேரத்தை வீணடிக்கிறோம். நாடுகள், வெளிநாட்டவர்களின் பெயர்களைப் பொருத்தவரை அவற்றைத் தமிழ்ப்படுத்தலாம். நிப்பான் அல்லது நிப்போன் என்பதை முதன்மைப்படுத்தலாம். மாஸ்கோ என்பதற்கு மாசுக்குவா (Москвa, romanised: Maskva) என்பதை முதன்மைப்படுத்தலாம் என்பது எனது கருத்து.--Kanags \பேச்சு 23:59, 22 ஏப்ரல் 2009 (UTC)
- இம்முறை நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. -- சுந்தர் \பேச்சு 06:56, 23 ஏப்ரல் 2009 (UTC)
ஸ்வாமிநாதன் - > சுவாமிநாதன் (அ) சாமினாதன் ஸ்வாதி -> சுவாதி என்பதை இலகுவாக ஏற்றுக் கொள்ள முடிகிற போது ஸ்டாலின் போன்ற பெயர்களை மாற்றி எழுதுவது உறுத்துவதற்கு இரண்டு காரணங்கள்:
- இது வரை யாரும் அப்படி மாற்றி எழுதாததால் நாம் பார்த்துப் பழகவில்லை
- அப்படி யாரும் மாற்றி எழுதாததால் எப்படி எழுதுவது என்ற குழப்பம்.
கிரந்த நீக்கத்திலேயே சற்று குழப்பம் தருவது ஸ் தான்.
- ஸ்கூல் என்று எழுதினால் பாமரர்கள் இசுக்கூல் என்று வாசிப்பார்கள். ஆனால், சுவாமி என்று எழுதினால் சுவாமி என்று தான் வாசிப்பார்கள். இசுவாமி என்று வாசிக்க மாட்டார்கள். எனவே, எல்லா இடங்களிலும் ஸ் - > இசு என்று மாற்றுவது பொருந்தாது.
- ஸ்வாமி, ஸ்வப்னம் போன்ற இடங்களில் ஸ்-க்கு அடுத்துவரும் வகரத்தை முழுங்கி சாமி, சொப்பனம் என்று எழுதுவதும் ஏற்புடையதாயிருக்கிறது.
எனவே ஸ் - க்கு அடுத்து என்ன எழுத்து வருகிறது என்பதைப் பொறுத்தே அதை எப்படித் தமிழாக்குவது என்பதைத் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது. சுந்தர், செல்வா போன்றவர்கள் மொழியியல் நோக்கில் இதை அணுகி ஒரு syntax போல சில வழிகாட்டல்களைத் தந்தால் நன்றாக இருக்கும்.
//தமிழர்களின் (குறிப்பாக குறைந்தது இருக்கும் தமிழர்களின்) பெயர்களை அவரவர்கள் தங்களை அழைக்கும் பெயரையே முதன்மைப்படுத்துதல் இப்போதைக்கு நல்லது. வீணான சச்சரவுகளைக் குறைக்கலாம்.//
மேலோட்டமாகப் பார்த்தால் இது உடனடி நல்ல தீர்வாகப் படுகிறது. ஆனால், பிற மொழியினர் ஒலிகளை எழுதுவதற்காக கொண்டு வந்த கிரந்த எழுத்துகளை நீக்குவதற்கு இன்று அவ்வொலிகளைத் தாங்கிய தமிழர்களே தடையாக இருப்பதைக் கண்டால்... என்ன கொடுமை இது?--ரவி 05:16, 29 ஏப்ரல் 2009 (UTC)
- வாழும் மாந்தரைப் பற்றிய கனகுவின் பரிந்துரையை மற்ற அனைவரும் விரும்பினால் தயக்கத்துடன் ஏற்பேன். பின்னால் வரும் எழுத்தைப் பொருத்தே தமிழாக்கும் முறை அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி, ரவி. இதுபோன்ற மற்ற சொற்களையும் பார்த்துவிட்டு ஒரு முறையை வகுத்து விடலாம். -- சுந்தர் \பேச்சு 06:51, 29 ஏப்ரல் 2009 (UTC)
சுந்தர், கனகு, வாழும் மாந்தரில் பெயர் மாற்றினால் மட்டும் பிரச்சினை அல்ல.
- இராமானுசர் - காலமானவர்.
- இராசத்தான் - ஒரு ஊரின் பெயர்.
- பகாமா - ஒரு சமய நெறியின் பெயர்.
என்று எங்கு கிரந்தத்தைத் தொட்டாலும், மறுத்துப் பேச ஆட்கள் உண்டு. கிரந்தம் இல்லாவிட்டால் அறிவியல் சொற்களைத் தமிழாக்க முடியாது என்றும் ஒரு வாதம் !!
அப்புறம் சுந்தர், ஸ் க்கு முன்னும் பின்னும் என்ன எழுத்து வருகிறது என்பதைப் பொறுத்து அதன் தமிழாக்கம் மாறுவது போல, ஹ சொல்லில் எந்த இடத்தில் வருகிறது என்பதைப் பொறுத்து தமிழாக்கம் மாறும்.
ஹ் - சொல் முதலில் வந்தால் இகரம் கொண்டு எழுதவும்.
ஹ்ருதயம் - > இருதயம்
ஹ் - சொல்லின் இடையில், கடைசியில் வந்தால் புறக்கணிக்கவும்.
தேஹ்ராதூன் - > தேராதூன்
ஹ - சொல் முதலில் வந்தால் - > அ ( ஹ் புறக்கணித்து அதை ஒட்டிய உயிரொலியைக் கொள்ளவும்);
ஹா - ஆ; ஹி - இ ..
ஹிந்து - இந்து; ஹனுமன் - அனுமன்; ஹோட்டல் - ஒட்டல்
ஹ் - சொல் இடையில் வந்தால் - > க; ஹா - கா ..
மோஹன் - மோகன்; மஹாத்மா - மகாத்மா.
பிற மொழி ஒலிகளை உள்வாங்குவதில் கூட தமிழில் ஒரு ஒழுங்கு இருக்கிறது !!
அப்புறம், பலரும் தமிழில் S ஒலி, எழுத்து இல்லாததால் ஸ் கொண்டு எழுதலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே ஸ ஒரு தமிழ் எழுத்தாக இருந்தாலும் ஸ் முதலில் வராது. ஏன் என்றால் தமிழில் மெய்யெழுத்து முதலில் வராது. எப்படி க்ருபா, ப்ரியா என்று எழுதுவது தவறோ அது போல் ஸ் கொண்டு முதலில் எழுதுவதும் தவறு.--ரவி 11:33, 9 மே 2009 (UTC)
மு.க. முத்து குறித்து
தொகுசெல்வம் தமிழ், மு.க.முத்துவின் தாயார் மறைந்த பத்மாவதி அம்மாள் என நினைக்கிறேன். சான்றுகள் கிடைத்தால் சேர்க்கிறேன். அது உண்மையென்றால் 1953ம் ஆண்டு கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். என்பதைச் சற்று மாற்றி 1953-ம் ஆண்டு கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு மு.க.முத்து, மு.க.அழகிரி என்ற தமையன்கள் இருவரும் தமிழரசு, கனிமொழி என்ற இளவல்களும் இருக்கின்றனர். என்று தரலாம் என நினைக்கிறேன். செய்யலாமா? -- சுந்தர் \பேச்சு 15:32, 11 ஜூன் 2009 (UTC)
நடுநிலை
தொகுஇக்கட்டுரையில் உள்ள சில வரிகள் நடுநிலை இல்லாமல் இருக்கிறது. இவற்றை மாற்றாலாமா?--கார்த்திக் 18:32, 11 ஜூன் 2009 (UTC) எ.கா
- /அரசியலில் பல காலமாக ஈடுபட்டு வந்த போதிலும் கூட எடுத்த எடுப்பிலேயே பெரிய பதவி ஸ்டாலினைத் தேடி வந்து விடவில்லை/
- இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சோதனை செய்வது போல சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி வழங்கினார்.
- இத்தகைய சாதனைகளின் பலனாக 2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா.
- படத்திற்கு கீழ் பெயரில் மாண்புமிகு என்ற அடைமொழி உள்ளது
- கட்டுரை உள்ளடக்கத்தை நிறைவு செய்தவுடன், கலைக்களஞ்சிய நடைக்கு உரையைத் திருத்த வேண்டும். சிலவற்றிற்குத் தகுந்த சான்றுகளைச் சேர்த்தால் போதுமானது. எடுத்துக்காட்டாக, ஒரு மதிக்கத்தக்க சமூகவியல் ஆய்விதழோ நாளிதழோ மேற்கூறிய சட்டத்திருத்தம் ஸ்டாலின் பதவியைப் பறிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்தால் அதைக் குறிப்பிடலாம். இல்லையென்றால் பொதுவாக அறியப்பட்டிருந்தாலும் கூட விக்கிக் கொள்கைகளைப் பொருத்த மட்டில் அது சொந்தக் கருத்தாகக் கருதப்படும். -- சுந்தர் \பேச்சு 02:29, 12 ஜூன் 2009 (UTC)
கலைஞர்
தொகுமற்ற தலைவர்களை அடைமொழியிட்டு குறிப்பதில்லை. இங்கு மட்டும் என்று இல்லை விக்கிபீடியாவில் பல இடங்களில் முன்னாள் முதல்வர் திரு. மு. கருணாநிதி கலைஞர் என்றே அடைமொழியிட்டு குறிப்பிடப்படுகிறார். ஏனிந்த பாகுபாடு? மற்றொரு இடத்தில் இதேபோன்ற ஒரு உரையாடல் என்னால் தொடக்கப்பட்டபோது அது மற்றொருவரால் நடுநிலையின்றி நீக்கப்பட்டது. Elango (பேச்சு) 17:21, 26 திசம்பர் 2021 (UTC)
- கட்டுரையில் குறிக்கப்படுவதில் தவறில்லை. தலைப்பிடுவதே தவறு.--Kanags \உரையாடுக 23:42, 26 திசம்பர் 2021 (UTC)