பேச்சு:2024 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல்

தலைப்பை மாற்றுக தொகு

அடுத்த சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதை சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தல் 2024 என மாற்றவும். சத்திரத்தான் (பேச்சு) 13:10, 25 திசம்பர் 2022 (UTC)Reply

சட்டமன்றம், சட்டப்பேரவை இவை இரண்டும் ஒன்றா, வெவ்வேறா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:57, 25 திசம்பர் 2022 (UTC)Reply
சட்டமன்றம் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர்த்து சட்டமேலவை, சட்டப்பேரவை என இரண்டு அவைகளைச் சேர்ந்ததாக உள்ளது. சட்டமேலவைக்கு நியமன உறுப்பினர்களும், பட்டதாரிகள் போன்றோரால் வாக்களித்து தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களும் இருப்பர். சட்டப் பேரவைக்கு வாக்காளர்கள் தொகுதிவாரியாக வாக்களித்து தேர்ந்தெடுப்பர். என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ்நாட்டில் செயல்பட்டுவந்த சட்டமேலவை எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் ஒழிக்கபட்டது.--கு. அருளரசன் (பேச்சு) 14:07, 25 திசம்பர் 2022 (UTC)Reply
விளக்கத்திற்கு நன்றி. எப்போது சட்டமன்றம் எனக் குறிப்பிடுவது, எப்போது சட்டப்பேரவை எனக் குறிப்பிடுவது? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:24, 25 திசம்பர் 2022 (UTC)Reply

சட்டமன்றம் மற்றும் சட்டப்பேரவை இரண்டும் ஒன்றையே குறிப்பதாக என்னுடைய கருத்து. TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY என்பது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை என அரசால் குறிப்பிடப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். --சத்திரத்தான் (பேச்சு) 15:29, 25 திசம்பர் 2022 (UTC)Reply

சிக்கிம் சட்டமன்றம் என்றே குறிப்பிடுவோம் என்பது எனது எண்ணம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:36, 25 திசம்பர் 2022 (UTC)Reply
Return to "2024 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல்" page.