பைராபி (Bairabi) என்பது இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும். அய்சால் நகரில் இருந்து 117 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்நகரம் மிசோரம் மாநிலத்தின் ஒரு முக்கியமான தொடருந்து முனையமாகவும் திகழ்கிறது.

பைராபி
Bairabi
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
மாவட்டம்கோலாசிப்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,304
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மிசோ
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

மக்கள் தொகையியல் தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] பைராபி நகரின் மொத்த மக்கள் தொகை 3,304 ஆகும். இம்மக்கள் தொகையில் 53% பேர் ஆண்கள் மற்றும் 47% பேர் பெண்கள் ஆவர். பைராபி நகரின் கல்வியறிவு சதவீதம் 69% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 54% எண்ணிக்கையும் பெண்கள் 46% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 19% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.

தொடருந்துப் போக்குவரத்து தொகு

மிசோரம் மாநிலத்தின் ஒரு முக்கியமான தொடருந்து முனையமாகத் திகழும் பைராபி நகரம் அகன்ற வழிப்பாதை போக்குவரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கடாக்கால் – பைராபி குறுகிய வழிப்பாதையும் தேசிய அகன்றவழிப் பாதையாக்கும் திட்டத்தின் கீழ் அகலப் பாதையாக மாற்றப்பட்டது. விரைவுப் பாதையான இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் நிறைவடைந்தது. [2] சாய்ராங் நகரம் வரை நீட்டிக்கப்படவுள்ள இத்திட்டம் கோலாசிப் மாவட்டத்திற்குள் 40 கிலோமீட்டர் தொலைவும் அய்சால் மாவட்டத்திற்குள் 11 கிலோமீட்டர் தொலைவும் செல்கிறது.

பொருளாதாரம் தொகு

விவசாயத்திற்கு அடுத்ததாக பைராபி நகரில் பின்வரும் தொழில்களில் மக்கள் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர்.

  1. இந்திய உணவுக் கழகம் : – இக்கழகத்தின் உணவு சேமிப்புக் கிடங்குகளில் பணி [3]
  1. பைராபி அனல் மின்நிலையம் : - கன எரி எண்னெய் அடிப்படையிலான 22.92 மெகாவாட் மின்னுற்பத்தி பணி [4]
  1. நவீன செங்கற்கள் உற்பத்தித் துறையில் பணி [5]
  1. பைராபி அணையில் பணி [6]
  1. பைராபி முதல் அய்சாலுக்கு அருகிலுள்ள சாய்ராங் வரையிலான இருப்புப் பாதை அமைக்கும் பணி [7]

மேற்கோள்கள் தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. Sanctioned in 2000, broad-gauge train reaches Mizoram after 16 years Indian Express, Retrieved 21 March, 2016.
  3. "FCI weighbridge chhiat vangin Buhfaiah harsatna tâwk mai thei?". The Zozam Times இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303223448/http://www.vanglaini.org/index.php?option=com_content&view=article&id=5030:fci-weighbridge-chhiat-vangin-buhfaiah-harsatna-tawk-mai-thei. பார்த்த நாள்: 19 August 2012. 
  4. "Cheng Maktaduai 105 senga din Bairabi Thermal Plant, engtia tih zel chi nge?". The Zozam Times. http://thezozamtimes.org/index.php?option=com_content&view=article&id=156:cheng-maktaduai-105-senga-din-bairabi-thermal-plant-engtia-tih-zel-chi-nge&catid=40:article&Itemid=60. பார்த்த நாள்: 19 August 2012. 
  5. "Mizoram to built Tourist Lodge near Serlui B Hydel Project". Orissa Diary இம் மூலத்தில் இருந்து 21 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120321144047/http://orissadiary.com/Shownews.asp?id=19596. பார்த்த நாள்: 19 August 2012. 
  6. Lalfakzuala. "Bairabi Dam Project 80MW leh TLAWNG HEP 55MW TAN MOU ZIAKFEL". DIPR Mizoram. Archived from the original on 8 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Mizoram CM: Bairabi-Sairang Railway Line Unlikely to Complete by 2014". The Northeast Times இம் மூலத்தில் இருந்து 18 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130218011040/http://www.northeasttoday.in/our-states/mizoram/mizoram-cm-bairabi-sairang-railway-line-unlikely-to-complete-by-2014/. பார்த்த நாள்: 13 August 2012. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைராபி&oldid=3791574" இலிருந்து மீள்விக்கப்பட்டது