பொக்காரா வானூர்தி நிலையம்

பொக்காரா வானூர்தி நிலையம் (Pokhara Airport)(ஐஏடிஏ: PKRஐசிஏஓ: VNPK) என்பது நேபாளத்தில் உள்ள பொக்காராவிற்கு விமானச் சேவை செய்யும் உள்நாட்டு வானூர்தி நிலையம் ஆகும். பொக்ரா வானூர்தி நிலையம் படிப்படியாக நேபாளத்தின் மூன்றாவது பன்னாட்டு வானூர்தி 2023-ல் தகுதி உயர்த்தப்பட உள்ளது.[4] சனவரி 1, 2023 அன்று பெரும்பாலான செயல்பாடுகள் புதிய விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டாலும், ஜோம்சோமுக்கான குறுகிய வானூர்தி செயல்பாடுகள் இன்னும் இந்த விமான நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.[5]

பொக்காரா வானூர்தி நிலையம்
Pokhara Airport

पोखरा विमानस्थल
பொக்காரா வானூர்தி நிலையம் 2022-l
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்நேபாள அரசு
இயக்குனர்நேபாள விமானப் போக்குவரத்து முகமை
சேவை புரிவதுபொக்காரா, நேபாளம்
கவனம் செலுத்தும் நகரம்
உயரம் AMSL2,712 ft / 827 m
ஆள்கூறுகள்
நிலப்படம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Nepal Gandaki Province" does not exist.
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
04/22 1,433 4,701 நிலக்கீல்
மூலங்கள்: CAAN[1] and DAFIF[2][3]
வானூர்தி நிலைய முனையத்திற்கு முன்னால் புத்தா ஏர் ஏடிஆர் 42
2019-ல் பொக்ரா வானூர்தி நிலையத்தில் எட்டி ஏர்லைன்ஸ் ஜெட்ஸ்ட்ரீம் 41
1971-ல் பொக்ரா விமான நிலையத்தில் நேபாள ஏர்லைன்ஸ் DC-3

வரலாறு

தொகு

பொக்காரா வானூர்தி நிலையம் நேபாளத்தின் பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தால் 4 சூலை 1958-ல் நிறுவப்பட்டது. 2010கள் வரை, இது காத்மாண்டு மற்றும் ஜோம்சோமுக்கு வழக்கமான சேவையினை வழங்கியது. மனாங்கிற்கு பருவகால சேவைகளை செய்தது. 2011ஆம் ஆண்டில், நேபாளி தனியார் விமான நிறுவனமான புத்தா ஏர், பொக்ராவிலிருந்து இந்தியாவின் இலக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குப் பன்னாட்டு விமானங்களைத் தொடங்கியது.[6] மேலும் எதிர்காலத்தில் புதுதில்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கும் விமானச் சேவைத் திட்டத்தை அறிவித்தது.[7] இருப்பினும் இந்த பன்னாட்டுச் சேவைகள் விரைவில் நிறுத்தப்பட்டன.

2010களின் பிற்பகுதியில், பல்வேறு மாகாணங்களுக்கான விமானங்களைக் கையாளும் நேபாளத்தின் இரண்டாவது உள்நாட்டு மையமாக பொக்காரா வானூர்தி நிலையம் விளங்கியது.[8]

2023ஆம் ஆண்டில், வானூர்தி நிலையம் படிப்படியாகப் பன்னாட்டு வானூர்தி நிலையமாக மாற்றப்படும்.

வசதிகள்

தொகு

விமான நிலையத்தின் விமான நிறுத்துமிடம் ஒப்பீட்டளவில் சிறியது மற்றும் ஒரே நேரத்தில் எட்டு உந்தியுடன் கூடிய விமானங்களை மட்டுமே கையாள முடியும். பொக்காரா விமான நிலையம், மூடுபனி போன்ற பிரச்சனைகளின் போது காத்மாண்டு வானூர்தி நிலையத்திலிருந்து மாற்றிவிடபப்டும் முக்கிய விமானங்களைக் கையாளும் வகையில் செயல்படுகிறது. குறுகிய ஓடுபாதை மற்றும் நெரிசலான நிறுத்துமிடம் காரணமாக, விமானங்கள் பெரும்பாலும் குறுகிய ஓடுபாதைகளுடன் கூடிய மூன்றாவது விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்படும் நிலையும் உள்ளது.[9]

விமான நிறுவனங்கள் மற்றும் இலக்குகள்

தொகு
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
சீதா ஏர்சாம்சன் வானூர்தி நிலையம், திரிபுவன், நேபால்கஞ்ச்
சம்மிட் ஏர்சாம்சன் வானூர்தி நிலையம்
தாரா ஏர்சாம்சன் வானூர்தி நிலையம்[10]

பல இலகுரக விமான நிறுவனங்கள் பொக்காரா விமான நிலையத்திலிருந்து பொழுதுபோக்கு மற்றும் பார்வையிடும் விமானச் சேவைகளை வழங்குகின்றன. [11]

சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள்

தொகு
  • நவம்பர் 6, 1997 அன்று, காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து தரையிறங்கிய நெகான் ஏர் அவ்ரோ 748-100-வில் நீரழுத்த கோளாறு ஏற்பட்டது. விமானி விமானத்தை இயக்க முயன்றார், ஆனால் அது மற்றொரு விமானமான ஹாக்கர் சிட்லி எச்எஸ் 748 ஐத் தாக்கியது. நான்கு பணியாளர்கள் மற்றும் 44 பயணித்த நிலையில் உயிரிழப்பு எதுவும் இல்லை. [12]
  • 22 ஆகத்து 2002 அன்று, ஷங்ரி-லா ஏர் ட்வின் ஓட்டர் விமானம், ஜோம்சோமில் இருந்து பொக்காராவுக்குச் சென்ற பொழுது, மூன்று நாட்கள் தொடர் மழை காரணமாக மேக மூட்டமாகக் காணப்பட்ட மலையின் மீது மோதியது. இதில் மூன்று பணியாளர்கள் உட்பட 15 பயணிகள் கொல்லப்பட்டனர்.[13]
  • 16 பிப்ரவரி 2014 அன்று, நேபாள விமானச்சேவை விமானம் 183 ஜும்லா விமான நிலையத்திற்கு பொக்காரா விமானத்திற்குப் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. மோசமான வானிலையில் ஏற்பட்ட விபத்தில் விமானத்திலிருந்த 18 பேரும் உயிரிழந்தனர். [14]
  • காத்மாண்டுவிலிருந்து சுமார் 72 பேருடன் சென்ற பொக்காரா நோக்கிச் சென்ற யெட்டி ஏர்லைன்சு ஏடிஆர் 72-500 விமானம் சனவரி 15, 2023 அன்று காலை பொக்காராவில் தரையிறங்குவதற்கு முன்பாக விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில் 45 பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.[15]

மேலும் பார்க்கவும்

தொகு
  • பொக்ரா சர்வதேச விமான நிலையம்
  • நேபாளத்தில் உள்ள விமான நிலையங்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. Pokhara Airport பரணிடப்பட்டது 24 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம் at Civil Aviation Authority of Nepal, accessed 4 March 2011
  2. "Airport information for VNPK". World Aero Data. Archived from the original on 2019-03-05.{{cite web}}: CS1 maint: unfit URL (link) Data current as of October 2006. Source: DAFIF.
  3. Airport information for PKR at Great Circle Mapper. Source: DAFIF (effective October 2006).
  4. Lin, Ziyu. "With new airport, Pokhara waits for takeoff - Nation - Nepali Times". archive.nepalitimes.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2018.
  5. Pokharel, Santosh (22 December 2022). "Pokhara's Old Airport to Remain Functional as CAAN Prepares to Launch Int'l Airport". República. பார்க்கப்பட்ட நாள் 1 January 2023.
  6. "Buddha Air Lucknow flight" பரணிடப்பட்டது 19 செப்டெம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம், buddhaair.com, accessed 28 September 2012.
  7. "Buddha Air plans to start Pokhara-New Delhi flight" பரணிடப்பட்டது 6 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம், "Tour Nepal", accessed 28 September 2012.
  8. "Pokhara Airport" (PDF). Civil Aviation Authority Nepal.
  9. "Aircraft parking at Pokhara Airport woefully inadequate MYREPUBLICA.com - News in Nepal: Fast, Full & Factual, POLITICAL AFFAIRS, BUSINESS & ECONOMY, SOCIAL AFFAIRS, LIFESTYLE, SPORTS, OPINION, INTERVIEW, INTERNATIONAL, THE WEEK news in English in Nepal". Archived from the original on 19 April 2014.
  10. Republica. "Pokhara Airport resumes flight service". My Republica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-07.
  11. "Civil Aviation Report 2018" (PDF). Civil Aviation Authority of Nepal. பார்க்கப்பட்ட நாள் 6 July 2020.
  12. "ASN Aircraft accident Avro 748-106 Srs. 1A". Aviation Safety Network. பார்க்கப்பட்ட நாள் 23 May 2021.
  13. Aviation Safety Network retrieved 19 November 2006
  14. Adhikari, Deepak. "Nepal plane crash in bad weather killed all 18 on board". http://www.smh.com.au/world/nepal-plane-crash-in-bad-weather-killed-all-18-on-board-20140218-hvcrx.html. பார்த்த நாள்: 27 March 2014. 
  15. https://www.flightglobal.com/safety/yeti-airlines-atr-72-500-crashes-near-pokhara/151636.article

வெளி இணைப்புகள்

தொகு