பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II)
பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II) (Potassium tetraiodomercurate(II)) என்பது K2[HgI4]. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் நேர்மின் அயனிகளும் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II) எதிர்மின் அயனிகளும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அம்மோனியாவைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும் நெசுலர் வினையாக்கியில் இச்சேர்மம் ஒரு தீவிர செயல்படும் முகவராகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II)
| |
வேறு பெயர்கள்
பொட்டாசியம் மெர்குரிக் அயோடைடு,
நெசுலர் வினையாக்கி (முதன்மைக் கூறு) | |
இனங்காட்டிகள் | |
7783-33-7 | |
ChEBI | CHEBI:51568 |
ChemSpider | 22948 |
EC number | 231-990-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15980736 |
| |
UNII | 7N83S6IU0F |
UN number | 3287 |
பண்புகள் | |
K2[HgI4][1] | |
வாய்ப்பாட்டு எடை | 786.41 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 4.29 கி/செ.மீ3 |
கரையும் | |
கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர், அசிட்டோன் ஆகியவற்றில் கரையும் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS for Nessler's reagent |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பாதரச(II) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுமெர்குரிக் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு மற்றும் அசிட்டோனில் உள்ள 2% தண்ணீரின் சூடான கரைசலில் இருந்து பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II) படிகமாகிறது. செறிவூட்டப்பட்ட நீரிய கரைசலில் தயாரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியானது வெளிறிய ஆரஞ்சு நிற ஒற்றைநீரேற்றைக் K[Hg(H2O)I3] கொடுக்கும்.[2]
பயன்பாடுகள்
தொகுபொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II) இதன் ஒப்புமைகளான செப்பு மற்றும் வெள்ளி உப்புகளான M2[HgI4] (இங்கு M=Cu,Ag)போன்றவற்றை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகப் பயனளிக்கிறது. [3]
நெசுலர் வினையாக்கி
தொகுஇயூலியசு நெசுலரின் (நெசுலர்) பெயரிடப்பட்ட நெசுலர் வினையாக்கியானது 2.5 மோல்/லி பொட்டாசியம் ஐதராக்சைடில் உள்ள பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டின்(II) 0.09 மோல்/லி கரைசல் ஆகும். அம்மோனியா (NH3) முன்னிலையில் இந்த வெளிர் கரைசல் ஆழமான மஞ்சள் நிறமாக மாறும். அதிக செறிவுகளில், மில்லனின் காரத்தில் (HgO·Hg(NH2)Cl) ஒரு பழுப்பு நிற படிவு வழிப்பெறுதி உருவாகும். இதன் உடனடி பரிசோதனை உணர்திறன் மதிப்பு 2 μL இல் 0.3 μg NH3 ஆகும்.
- NH4+ + 2 [HgI4](2−) + 4 OH− → HgO*Hg(NH2)I↓ + 7 I− + 3H2O
பழுப்பு நிற வீழ்படிவு முழுமையாக வகைப்படுத்தப்படவில்லை. இது HgO·Hg(NH2)I சேர்மத்திலிருந்து 3HgO·Hg(NH3)2I2 வரை மாறுபடலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0. p. 4-82.
- ↑ Wagenknecht, F.; Juza, R. (1963). "Potassium Triiodomercurate(II)". In Brauer, G. (ed.). Handbook of Preparative Inorganic Chemistry. Vol. 1 (2nd ed.). Academic Press. p. 1100 – via the Internet Archive.
- ↑ Wagenknecht, F.; Juza, R. (1963). "Copper(I) Tetraiodomercurate(II)". In Brauer, G. (ed.). Handbook of Preparative Inorganic Chemistry. Vol. 1 (2nd ed.). Academic Press. p. 1100 – via the Internet Archive.