பொட்டாசியம் தெலூரைடு

வேதிச் சேர்மம்

பொட்டாசியம் தெலூரைடு (Potassium telluride) என்பது K2Te என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியமும் தெலூரியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2] பொட்டாசியம் தெல்லூரைடு வெண்மை நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது. உருபீடியம் தெல்லுரைடு மற்றும் சீசியம் தெலூரைடு சேர்மங்கள் போலவே இதையும் விண்வெளியில் புற ஊதாக் கதிர் கண்டறியும் கருவியாகப் பயன்படுத்தலாம். இதன் படிக அமைப்பு மற்ற தெலூரைடுகளைப் போலவே உள்ளது. இவை புளோரைட்டு எதிர்ப்பு அமைப்பைக் கொண்டுள்ளன.

பொட்டாசியம் தெலூரைடு
Potassium telluride
碲化鉀
K+: __   Te2-: __
இனங்காட்டிகள்
12142-40-4 Y
ChemSpider 74841
EC number 235-256-4
InChI
  • InChI=1S/2K.Te
    Key: JNKJTXHDWHQVDL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82942
  • [K][Te][K]
பண்புகள்
K2Te
வாய்ப்பாட்டு எடை 298.64 கி/மோல்
தோற்றம் வெளிர் மஞ்சள் தூள், காற்றில் வெளிப்பட்டால் சாம்பல் நிறம்[1]
உருகுநிலை 874 °C
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் ஆக்சைடு
பொட்டாசியம் சல்பைடு
பொட்டாசியம் செலீனைடு
பொட்டாசியம் பொலோனைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் தெலூரைடு
சோடியம் தெலூரைடு
ருபீடியம் தெல்லூரைடு
சீசியம் தெலூரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

தெலூரியம் உருகும் பொட்டாசியம் சயனைடுடன் உடன் வினைபுரிந்து பொட்டாசியம் தெலூரைடை உற்பத்தி செய்யும். பொதுவாக திரவ அம்மோனியா கரைப்பானில் பொட்டாசியம் மற்றும் தெலூரியம் ஆகியவற்றின் நேரடி வினையிலும் இது தயாரிக்கப்படலாம்.[3]

2K + Te --? K2Te

வினைகள்

தொகு

தண்ணீரில் பொட்டாசியம் தெலூரைடைச் சேர்த்து வடிநீரை காற்றில் வெளிப்படுத்தினால் ஆக்சிசனேற்ற வினையினால் பொட்டாசியம் ஐதராக்சைடும் தனிம நிலை தெலூரியமும் உருவாகின்றன. [3][4]

2K2Te + 2H2O + O2 --> 4KOH + 2Te

மேற்கோள்கள்

தொகு
  1. Linda D. Schultz (October 1990). "Synthesis and characterization of potassium polytellurides in liquid ammonia solution" (in en). Inorganica Chimica Acta 176 (2): 271–275. doi:10.1016/S0020-1693(00)84855-0. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0020169300848550. பார்த்த நாள்: 2019-11-23. 
  2. Brigitte Eisenmann, Herbert Schäfer: K2Te3 : The First Binary Alkali-Metal Polytelluride with Te2−3-Ions. In: Angewandte Chemie International Edition in English. 17, 1978, S. 684, எஆசு:10.1002/anie.197806841.
  3. 3.0 3.1 Wolfgang A. Herrmann, Christian Erich Zybill (2014). Synthetic Methods of Organometallic and Inorganic Chemistry, Volume 4, 1997 Volume 4: Sulfur, Selenium and Tellurium. Georg Thieme Verlag. p. 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-179191-7.
  4. Adolf Pinner (1885), Repetitorium Der Anorganischen Chemie [Repetitorium of Inorganic Chemistry] (in German), Рипол Классик, p. 116, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-87746-719-4{{citation}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டாசியம்_தெலூரைடு&oldid=4003321" இலிருந்து மீள்விக்கப்பட்டது