பொட்டாசியம் பெர்ரிசயனைடு

வேதிச் சேர்மம்

பொட்டாசியம் பெர்ரிசயனைடு (Potassium ferricyanide) என்பது K3[Fe(CN)6] என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரகாசமான சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. கட்டமைப்பில் [Fe(CN)6]3−] அயனி எண்முகமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.[2] தண்ணீரில் இச்சேர்மம் கரையும். இதன் கரைசல் பச்சை-மஞ்சள் நிறத்தில் ஒளிரும் தன்மையைக் காட்டுகிறது. 1822 ஆம் ஆண்டில் இலியோபோல்ட் கிமெலின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[3][4]

பொட்டாசியம் பெர்ரிசய்னைடு
Potassium ferricyanide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் அறுசயனோபெர்ரேட்டு(III)
வேறு பெயர்கள்
பொட்டாசின் சிவப்பு புருசியேட்டு,
புருசியன் சிவப்பு,
பொட்டாசியம் பெர்ரிசய்னைடு
இனங்காட்டிகள்
13746-66-2 Y
ChEBI CHEBI:30060
ChemSpider 24458 Y
EC number 237-323-3
Gmelin Reference
21683
InChI
  • InChI=1S/6CN.Fe.3K/c6*1-2;;;;/q6*-1;+3;3*+1 N
    Key: BYGOPQKDHGXNCD-UHFFFAOYSA-N N
  • InChI=1S/6CN.Fe.3K/c6*1-2;;;;/q6*-1;+3;3*+1
    Key: BYGOPQKDHGXNCD-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 26250
வே.ந.வி.ப எண் LJ8225000
  • [K+].[K+].N#C[Fe-3](C#N)(C#N)(C#N)(C#N)C#N.[K+]
UNII U4MAF9C813 Y
பண்புகள்
K3[Fe(CN)6]
வாய்ப்பாட்டு எடை 329.24 கி/மோல்
தோற்றம் ஆழ்ந்த சிவப்பு, சிலசமயங்களில் சிறிய மாத்திரிகைகள், ஆரஞ்சு முதல் அடர் சிவப்பு தூள்
அடர்த்தி 1.89 கி/செ,மீ3, திண்மம்
உருகுநிலை 300 °C (572 °F; 573 K)
கொதிநிலை சிதைவடையும்
330 கி/லிட்டர் ("குளிர் நீர்")
464 கி/லிட்டர் (20 °செ
775 கி/லி ("சூடான நீர்")[1]
கரைதிறன் எத்தனாலில் சிறிதளவு கரையும்
அமிலத்தில் கரையும் காடி
நீரில் கரையும்
+2290.0·10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சரிவச்சு
ஒருங்கிணைவு
வடிவியல்
இரும்பில் எண்முகம்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H315, H319, H332, H335
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது.
Lethal dose or concentration (LD, LC):
2970 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் பெர்ரோசயனைடு
ஏனைய நேர் மின்அயனிகள் புருசியன் நீலம் பொட்டாசியம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

பொட்டாசியம் பெர்ரோசயனைடு கரைசலில் குளோரினைச் செலுத்துவதன் மூலம் பொட்டாசியம் பெர்ரிசியனைடு தயாரிக்கப்படுகிறது. பொட்டாசியம் பெர்ரிசியனைடு கரைசலில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.:

2 K4[Fe(CN)6] + Cl2 → 2 K3[Fe(CN)6] + 2 KCl

கட்டமைப்பு

தொகு

மற்ற உலோக சயனைடுகளைப் போலவே, திண்மநிலையில் காணப்படும் பொட்டாசியம் பெர்ரிசயனைடும் ஒரு சிக்கலான பல்லுருவ அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த பலபடி எண்முகம் [Fe(CN)6]3− மையங்களைக் கொண்டுள்ளது. CN ஈந்தணைவிகளுடன் பிணைக்கப்பட்டுள்ள K+ அயனிகள் குறுக்காக இணைக்கப்பட்டுள்ளன.[5] திண்மம் நீரில் கரையும்போது K+---NCFe இணைப்புகள் உடைந்துவிடும்.

பயன்பாடுகள்

தொகு

இரும்பு மற்றும் எஃகை கடினப்படுத்தவும், மின்முலாம் பூசுதல், கம்பளி சாயமிடுதல், ஆய்வக வினையாக்கி மற்றும் கரிம வேதியியலில் இலேசான ஆக்சிசனேற்ற முகவராகவும் பொட்டாசியம் பெர்ரிசயனைடு பயன்படுத்தப்படுகிறது.

ஒளிப்படவியல்

தொகு

மூல வரைபடம், நீல அச்சுப்படிவம், புகைப்பட அச்சுக்கு நிறமளித்தல்

தொகு

மூல வரைபடம் வரைதல், ஒளிப்படவியல் (நீல அச்சுப்படிவச் செயல்முறை), புகைப்பட அச்சுக்கு நிறமளித்தல் செயல்முறை ஆகிய பரவலானப் பயன்பாடுகளைக் பொட்டாசியம் பெர்ரிசியனைடு கொண்டுள்ளது. படச்சுருள் அல்லது அச்சுக்களில் அடர்த்தியைக் குறைக்க 10 கிராம்/லி செறிவில் இலேசான நிறம் நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

நிறம் நீக்கல்

தொகு

பொட்டாசியம் பெர்ரிசியனைடு ஓர் ஆக்சிசனேற்ற முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. நிறம் நீக்கல் எனப்படும் செயல்முறையின் போது நேர் மற்றும் எதிர் வண்ணங்களிலிருந்து வெள்ளியை அகற்றும். பொட்டாசியம் பெர்ரிசயனைடு நிறம் நீக்கிகள் சுற்றுச்சூழலுக்கு ஒவ்வாதவை. குறுகிய காலம் மட்டுமே இவை நிலைத்திருக்கும். அதிக செறிவும் அதிக அளவும் கொண்ட அமிலத்தை கலந்தால் ஐதரசன் சயனைடு வாயு வெளியிடப்படும். 1972 ஆம் ஆண்டு கோடாக் சி-41 செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெர்ரிக் எத்தில்டையமீன் டெட்ரா அசிட்டிக் அமில நிறம் நீக்கிகள் வண்ணச்செயல்முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற்ன. வண்ணக் கல்லச்சுக் கலையில் பொட்டாசியம் பெர்ரிசியனைடு வண்ணப் புள்ளிகளின் அளவைக் குறைக்கப் பயன்படுகிறது. இச்செயல் முறை புள்ளியுருச் செதுக்கல் முறை எனப்படும் கைமுறை வண்ணத் திருத்தம் ஆகும்.

பார்மர் குறைப்பான்

தொகு

பொட்டாசியம் பெர்ரிசயனைடு கருப்பு-வெள்ளை ஒளிப்படக் காலத்தில் சோடியம் தயோசல்பேட்டுடன் சேர்க்கப்பட்டு மூலப்படம் அல்லது ஜெலட்டின் வெள்ளி அச்சின் அடர்த்தியைக் குறைக்க பயன்படுத்தப்பட்டது. இப்பயன்பாட்டுக்கான கலவை பார்மர் குறைப்பான் என்ற பெயரால் அறியப்பட்டது. மூலப்படத்தின் அதிக வெளிப்பாட்டு சிக்கல்களை ஈடுசெய்யவும் அச்சில் உள்ள சிறப்பம்சங்களை பிரகாசமாக்குவதற்கும் இது உதவுகிகிறது[6]

கரிமத்தொகுப்பு வினையாக்கி

தொகு

பொட்டாசியம் பெர்ரிசயனைடு கரிம வேதியியலில் ஒரு ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.[7][8] சார்ப்லெசு ஈரைதராக்சிலேற்ற வினையில் வினையூக்கி மீளுருவாக்கம் செய்வதற்கான ஆக்சிசனேற்றியாக இது பயன்படுகிறது.[9][10]

குறிக்காட்டி மற்றும் உணரி

தொகு

பெராக்சைல் குறிகாட்டி கரைசலில் உள்ள இரண்டு சேர்மங்களில் பொட்டாசியம் பெர்ரிசயனைடும் ஒன்றாகும். மற்றொரு சேர்மம் பீனாப்தலீன் ஆகும். இது Fe2+ அயனிகளின் முன்னிலையில் கரைசலை நீலமாக (பிரசியயன் நீலம்) மாற்றும். எனவே துருப்பிடித்தலுக்கு வழிவகுக்கும் உலோக ஆக்சிசனேற்றத்தைக் கண்டறிய இது பயன்படுகிறது. பிரசியன் நீலத்தின் மிகத் தீவிரமான நிறத்தின் காரணமாக, வண்ணமானியைப் பயன்படுத்தி Fe2+ அயனிகளின் மோல்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியும்.

உடலியல் சோதனைகளில் பொட்டாசியம் பெர்ரிசயனைடு ஒரு கரைசலின் ஆக்சிசனேற்ற ஒடுக்க திறனை அதிகரிக்கும் வழிமுறையை வழங்குகிறது. எனவே, இது தனிமைப்படுத்தப்பட்ட மைட்டோகாண்ட்ரியாவில் குறைக்கப்பட்ட சைட்டோக்ரோமை ஆக்சிசனேற்றம் செய்யும். பொதுவாக சோடியம் டைதயோனைட்டு இத்தகைய சோதனைகளில் குறைக்கும் வேதிப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு மாதிரியின் பெர்ரிக் குறைக்கும் ஆற்றல் திறனைக் கண்டறிய பொட்டாசியம் பெர்ரிசயனைடு பயன்படுகிறது.[11] (சாறு, இரசாயன கலவை போன்றவை). இத்தகைய அளவீடு ஒரு மாதிரியின் ஆக்சிசனேற்ற பண்புகளை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகிறது

மின்னோட்ட அளவியல் உயிரிய உணரிகளில் பொட்டாசியம் பெர்ரிசயனைடு ஓர் அங்கமாகும். ஓர் எலக்ட்ரான் மாற்ற முகவராக குளுக்கோசு ஆக்சிடேசு நொதிக்கு ஆக்சிசன் போன்ற ஒரு நொதியின் இயற்கையான எலக்ட்ரான் மாற்ற முகவரை இது மாற்றுகிறது. நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்த வணிக ரீதியாக கிடைக்கும் இரத்த குளுக்கோசு மீட்டர்களில் இது ஒரு மூலப்பொருளாகும்.

பிற பயன்கள்

தொகு

பொட்டாசியம் பெர்ரிசயனைடு பொட்டாசியம் ஐதராக்சைடு அல்லது சோடியம் ஐதராக்சைடு மற்றும் தண்ணீருடன் சேர்ந்து முரகாமியின் அரித்துருவாக்கியை உருவாக்குகிறது. கடினமாக்கப்பட்ட கார்பைடுகளில் பிணைப்பான் மற்றும் கார்பைடு கட்டங்களுக்கு இடையே உள்ள மாறுபாட்டை வழங்க உலோகவியலாளர்களால் இந்த அரித்துருவாக்கி பயன்படுத்தப்படுகிறது.

புருசியன் நீலம்

தொகு

நீல அச்சில் உள்ள ஆழமான நீல நிறமியான புருசியன் நீலமானது, இரும்பு (Fe2+) அயனிகளுடன் K3[Fe(CN)6] மற்றும் பெர்ரிக் உப்புகளுடன் K4[Fe(CN)6] ஆகியவை சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது.[12]

திசுவியலில் திசுக்களில் பெர்ரசு இரும்ப்பு இருப்பதைக் கண்டறிய பொட்டாசியம் பெர்ரிசயனைடு பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் பெர்ரிசியனைடு அமிலக் கரைசலில் பெர்ரசு இரும்புடன் வினைபுரிந்து கரையாத நீல நிறமியை உருவாக்குகிறது. இது பொதுவாக தர்ன்புல் நீலம் அல்லது புருசியன் நீலம் என குறிப்பிடப்படுகிறது. பெர்ரிக்கு (Fe3+) இரும்பைக் கண்டறிய, பெர்ல்சின் புருசியன் நீலம் சாயமேற்றுதல் முறையில் பொட்டாசியம் பெர்ரோசயனைடு பயன்படுத்தப்படுகிறது.[13][14]

பாதுகாப்பு

தொகு

பொட்டாசியம் பெர்ரிசியனைடு குறைந்த நச்சுத்தன்மையைக் கொண்டுள்ளது. இதன் முக்கிய ஆபத்து யாதெனில் கண்கள் மற்றும் தோலுக்கு லேசான எரிச்சலூட்டுவதாகும். இருப்பினும். மிகவும் வலுவான அமில நிலைமைகளின் கீழ், சமன்பாட்டின் படி, மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஐதரசன் சயனைடு வாயுவை உருவாக்குகிறது:

6 H+ + [Fe(CN)6]3− → 6 HCN + Fe3+[15]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kwong, H.-L. (2004). "Potassium Ferricyanide". Encyclopedia of Reagents for Organic Synthesis. Ed. Paquette, L.. New York: J. Wiley & Sons. DOI:10.1002/047084289X. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471936237. 
  2. Sharpe, A. G. (1976). The Chemistry of Cyano Complexes of the Transition Metals. London: Academic Press.
  3. Gmelin, Leopold (1822). "Ueber ein besonderes Cyaneisenkalium, and über eine neue Reihe von blausauren Eisensalzen" (in German). Journal für Chemie und Physik 34: 325–346. https://babel.hathitrust.org/cgi/pt?id=nyp.33433069069148&view=1up&seq=347. 
  4. Ihde, A.J. (1984). The Development of Modern Chemistry (2nd ed.). New York: Dover Publications. p. 153.
  5. Figgis, B. N.; Gerloch, M.; Mason, R. (1969). "The crystallography and paramagnetic anisotropy of potassium ferricyanide". Proceedings of the Royal Society of London. A. Mathematical and Physical Sciences 309 (1496): 91–118. doi:10.1098/rspa.1969.0031. Bibcode: 1969RSPSA.309...91F. 
  6. "Farmer's Reducer". The Focal Encyclopedia of Photography. (1993). Focal Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-240-51417-8. 
  7. Prill, E. A.; McElvain, S. M. (1935). "1-Methyl-2-Pyridone". Organic Syntheses 15: 41. doi:10.15227/orgsyn.015.0041. 
  8. Würfel, Hendryk; Jakobi, Dörthe (2018). "Syntheses of Substituted 2-Cyano-benzothiazoles". Organic Syntheses 95: 177–191. doi:10.15227/orgsyn.095.0177. 
  9. Gonzalez, Javier; Aurigemma, Christine; Truesdale, Larry (2002). "Synthesis of (+)-(1S,2R)- and (−)-(1R,2S)-trans-2-Phenylcyclohexanol via Sharpless Asymmetric Dihydroxylation (AD)". Organic Syntheses 79: 93. doi:10.15227/orgsyn.079.0093. 
  10. Oi, Ryu; Sharpless, K. Barry (1996). "3-[(1S)-1,2-Dihydroxyethyl]-1,5-Dihydro-3H-2,4-Benzodioxepine". Organic Syntheses 73: 1. doi:10.15227/orgsyn.073.0001. 
  11. Nakajima, Y., Sato, Y., & Konishi, T. (2007). Antioxidant Small Phenolic Ingredients in Inonotus obliquus (persoon) Pilat (Chaga). Chemical & Pharmaceutical Bulletin, 55(8), 1222–1276.
  12. Dunbar, K. R.; Heintz, R. A. (1997). "Chemistry of Transition Metal Cyanide Compounds: Modern Perspectives". Progress in Inorganic Chemistry. Progress in Inorganic Chemistry. Vol. 45. pp. 283–391. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470166468.ch4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470166468.
  13. Tafesse, F. (2003). "Comparative Studies on Prussian Blue or Diaquatetraamine-Cobalt(III) Promoted Hydrolysis of 4-Nitrophenylphosphate in Microemulsions". International Journal of Molecular Sciences 4 (6): 362–370. doi:10.3390/i4060362. http://www.mdpi.org/ijms/papers/i4060362.pdf. 
  14. Verdaguer, M.; Galvez, N.; Garde, R.; Desplanches, C. (2002). "Electrons at Work in Prussian Blue Analogues". Electrochemical Society Interface 11 (3): 28–32. doi:10.1002/chin.200304218. http://www.electrochem.org/dl/interface/fal/fal02/IF8-02-Pages28-32.pdf. 
  15. "MSDS for potassium ferricyanide" (PDF).

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு