பொட்டாசியம் பைடார்டரேட்டு
பொட்டாசியம் பைடார்டரேட்டு (Potassium bitartarate) பொட்டாசியம் ஐதரசன் டார்டரேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு KC4H5O6 ஆகும். இது மது தயாரிப்பின் போது கிடைக்கும் துணை விளைபொருள் ஆகும். சமையலில் இது தாட்டர்ச்சாரம் என அழைக்கப்படுகிறது. இது டார்டாரிக் அமிலத்தின் பொட்டாசியம் அமில உப்பிலிருந்து (ஒரு கார்பாக்சிலிக் அமிலம் ) பதப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக கிடைக்கும் தூள் வடிவ அமிலத்தை அடுமனைத் தொழில் அல்லது துப்புரவுக் கரைசலாக (எலுமிச்சை சாறு அல்லது வெள்ளை வினிகர் போன்ற அமிலக் கரைசலுடன் கலக்கும்போது) பயன்படுத்தலாம்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
potassium hydrogen tartrate
cream of tartar potassium acid tartrate monopotassium tartrate potassium;(2R,3R)-2,3,4-trihydroxy-4-oxobutanoate | |
இனங்காட்டிகள் | |
868-14-4 | |
ChemSpider | 12783 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13352 |
| |
பண்புகள் | |
KC4H5O6 | |
வாய்ப்பாட்டு எடை | 188.177 |
தோற்றம் | white crystalline powder |
அடர்த்தி | 1.05 g/cm3 (solid) |
0.57 g/100mL (20 °C) 6.1 g/100mL (100 °C) | |
கரைதிறன் | soluble in acid, alkali insoluble in அசிட்டிக் காடி, alcohol |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.511 |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
22 g/kg (oral, rat) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கிடைக்கும் விதம்
தொகுதிராட்சை சாற்றை நொதிக்கச் செய்யும் போது பொட்டாசியம் பைடார்டரேட்டு மதுக்குடுவையில் படிகமாக்குகிறது. மேலும், குடுவைகளில் உள்ள மதுவை வெளியேற்றும் படிகங்கள் (ஒயின் வைரங்கள்) பெரும்பாலும் 10° செல்சியசு (50° பாரன்கீட்) குறைவான வெப்பநிலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மது நிரப்பப்பட்ட குடுவைகளில் தக்கையின் அடிப்பகுதியில் உருவாகும். மேலும், எப்போதாவது இயற்கையாகவே மதுவில் கரைந்துவிடும்.
இந்த படிகங்கள் குளிர்ந்த அல்லது சிறிது நேரம் நிற்க அனுமதிக்கப்பட்ட புதிய திராட்சை சாற்றிலிருந்து வெளியேறும்.[1] வீட்டில் திராட்சை பழப்பாகில் அல்லது பழக்கூழில் படிகங்கள் உருவாதலைத் தடுக்க, படிகமயமாக்கலை ஊக்குவிக்க முன்னதாகத் தேவைப்படும் புதிய திராட்சை சாற்றை ஒரே இரவில் குளிர்விக்க வேண்டும். பொட்டாசியம் பைடார்டரேட்டுப் படிகங்கள் பருத்தித்துணியின் இரண்டு அடுக்குகளின் மூலம் வடிகட்டுவதன் மூலம் அகற்றப்படுகின்றன. வடிகட்டப்பட்ட சாறு பின்னர் பழப்பாகு அல்லது பழக்கூழ் கூழ்மமாக மாற்றப்படலாம்.[2] சில சந்தர்ப்பங்களில் அவை குளிர்ந்த கொள்கலனின் பக்கத்தோடு ஒட்டிக்கொண்டு வடிகட்டலை தேவையற்றதாக ஆக்குகின்றன.
பண்படா வடிவம் (மண்டிகப்படலம் என அழைக்கப்படுகிறது) சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பல சமையல் மற்றும் பிற வீட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வெள்ளை நிறமுள்ள, மணமற்ற, அமிலத்தன்மையுள்ள தூள் தயாரிக்கப்படுகிறது.
பயன்பாடுகள்
தொகுஉணவில்
தொகுஉணவில், பொட்டாசியம் பைடார்டரேட்டு பின்வரும் காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது:
- முட்டையின் வெள்ளைக்கருவை உறுதிப்படுத்துதல், அவற்றின் வெப்ப சகிப்புத்தன்மை மற்றும் கனஅளவை அதிகரிக்கும்[3]
- மென்மையாக்கப்பட்ட பாலேட்டினை உறுதிப்படுத்துதல், அதன் அமைப்பு மற்றும் கன அளவைப் பராமரித்தல் [4]
- ரொட்டியாதலைத்தடுக்கும் மற்றும் கனமாதலைத் தடுக்கும் காரணிகள் [5]
- சர்க்கரை பாகங்களை படிகமாக்குவதைத் தடுக்கும், சுக்ரோஸில் சில குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸாக உடைவதால் [6]
- வேகவைத்த காய்கறிகளின் நிறமாற்றம் குறைதல்
கூடுதலாக இந்த உப்பு கீழ்க்காண்பனவற்றில் பகுதிப்பொருளாக பயன்படுகிறது:
- சோடியம் பைகார்பனேட்டை தூண்டி விடுவதற்காக சமையல் சோடாவில், ஒரு பகுதிப்பொருளாக [7]
- பொட்டாசியம் குளோரைடுடன் இணைந்து, சோடியம்-அல்லாத உப்பு பதிலிகளாக,
வீட்டு உபயோகப் பயன்பாட்டில்
தொகுபொட்டாசியம் பைடார்டரேட்டை எலுமிச்சை சாறு அல்லது வெள்ளை வினிகர் போன்ற அமில திரவத்துடன் கலந்து பித்தளை, அலுமினியம் அல்லது தாமிரம் போன்ற உலோகங்களுக்கு பசை போன்ற துப்புரவுக் காரணியை உருவாக்கலாம் அல்லது பீங்கானிலிருந்து ஒளிக்கறைகளை அகற்றுவது போன்ற பிற துப்புரவு பயன்பாடுகளுக்கு தண்ணீருடன் கலக்கலாம்.
தாட்டர்ச்சாரம் பெரும்பாலும் பாரம்பரிய சாயமிடுதலில் பயன்படுத்தப்பட்டது. அங்கு டார்ட்ரேட் அயனிகளின் சிக்கலான நடவடிக்கையானது, டின் குளோரைடு மற்றும் ஆலம் போன்ற நிறமூன்றி உப்புகளின் கரைதிறன் மற்றும் நீராற்பகுப்பை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டது.
தாட்டர்ச்சாரம், ஐதரசன் பெராக்சைடுடன் ஒரு பசையாகக் கலக்கப்படும்போது, சில கைக் கருவிகளில் இருந்து துருவை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த பசையானது பயன்படுத்தப்பட்டு சில மணி நேரம் இறுக அனுமதிக்கப்படுகிறது, பின்னர் ரொட்டி சோடா / நீர் கரைசலில் கழுவப்பட வேண்டும். மீண்டுமொரு முறை தண்ணீர் கொண்டு நன்கு கழுவிய பின்னர் நன்கு உலர்த்திய பின், ஒரு மெல்லிய எண்ணெய் பூச்சு அரத்தை மேலும் துருப்பிடிக்காமல் பாதுகாக்கும்.
அழகு சாதனப் பொருட்களில்
தொகுமுடிக்குச் சாயமிடுவதற்காக, பொட்டாசியம் பைடார்டரேட்டானது மருதாணியுடன் சேர்க்கப்படுகிறது. இந்தக் கலவையில் பொட்டாசியம் பைடார்டரேட்டானது ஒரு மிதமான அமிலமாகச் செயல்பட்டு மருதாணியின் செயல்பாட்டைத் தூண்டுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Max Williams at McNicol Williams Management & Marketing Services. "Lloyds Vinyard FAQs". Lloydsvineyard.com.au. Archived from the original on 2011-12-15. பார்க்கப்பட்ட நாள் 2018-04-19.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "National Center for Home Food Preservation". Uga.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-04-19.
- ↑ The science of good cooking : master 50 simple concepts to enjoy a lifetime of success in the kitchen (1st ed.). America's Test Kitchen. 2012. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-933615-98-1.
- ↑ "How to Use Cream of Tartar". wikiHow (in ஆங்கிலம்). Archived from the original on 28 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 28 May 2019.
- ↑ Stephens, Emily (18 February 2017). "The Incredible Cream of Tartar – How to Use and What to Substitute With". MyGreatRecipes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 May 2019.
- ↑ The science of cooking : understanding the biology and chemistry behind food and cooking. John Wiley and Sons, Inc. 2016. p. 504. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118674208.
- ↑ McGee, Harold (2004). On food and cooking : the science and lore of the kitchen (2nd ed.). Scribner. p. 533,534. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-684-80001-1.