பொட்டாசியம் பைபுளோரைடு
பொட்டாசியம் பைபுளோரைடு (Potassium bifluoride) KHF2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் நேர்மின் அயனியும் பை புளோரைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நிறமற்று காணப்படும் இதை கண்ணாடியை அறுக்கப் பயன்படுத்துகிறார்கள். அறுப்பானாகவும் பொருள்களை தூய்மையாக்கவும் பயன்படுவதால் வணிக முக்கியத்துவம் கொண்ட வேதிப்பொருளாக பொட்டாசியம் பைபுளோரைடு பார்க்கப்படுகிறது. [2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் பைபுளோரைடு
| |
வேறு பெயர்கள்
பொட்டாசியம் ஐதரசன் டைபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
7789-29-9 | |
ChemSpider | 35308426 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11829350 |
வே.ந.வி.ப எண் | TS6650000 |
| |
UNII | 880X05W53M |
பண்புகள் | |
HF2K | |
வாய்ப்பாட்டு எடை | 78.103 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
மணம் | அமிலத்தன்மை |
அடர்த்தி | 2.37 கி/செ.மீ3 |
உருகுநிலை | 238.7 °C (461.7 °F; 511.8 K) |
கொதிநிலை | சிதையும் |
24.5 கி/100 மி.லி (0 °செ) 30.1 கி/100மி.லி (10 °செ) 39.2 கி/100 மி.லி (20 °செ) 114.0 கி/100 மி.லி (80 °செ) | |
கரைதிறன் | எத்தனாலில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-417.26 கிலோயூல்·கெல்வின்−1*மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
45.56 யூல்/(மோல் கெல்வின்) [1] |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | நச்சு (T), அரிக்கும் (C) |
R-சொற்றொடர்கள் | R25-34 |
S-சொற்றொடர்கள் | S22-26, S37-45 |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் புளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் பைபுளோரைடு, அமோனியம் பைபுளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபொட்டாசியம் கார்பனேட்டு அல்லது பொட்டாசியம் ஐதராக்சைடை ஐதரோபுளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து இதை தயாரிக்கலாம். எட்மண்டு பிரேமி முதன் முதல் இந்த உப்பை தயாரித்தார்.
- 2 HF + KOH → KHF2 + H2O
மேலும் இரண்டு சமமான ஐதரசன் புளோரைடுடன் KH2F3 (CAS#12178-06-2, m.p. 71.7 C) உற்பத்தியாகிறது.
- 2 HF + KHF2 → KH2F3
KHF2 வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு ஐதரசன் புளோரைடைக் கொடுக்கிறது.
- KHF2 → HF + KF
பயன்கள்
தொகுஉருகிய பொட்டாசியம் பைபுளோரைடை மின்னாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி புளோரின் தயாரிக்கப்படுகிறது. 1886 ஆம் ஆண்டு என்றி மொய்சன் முதன் முதலில் இதைக் கண்டறிந்தார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Westrum, Edgar F., Jr.; Pitzer, Kenneth S. (June 1949). "Thermodynamics of the System KHF2-KF-HF, Including Heat Capacities and Entropies of KHF2, and KF. The Nature of the Hydrogen Bond in KHF2". J. Am. Chem. Soc. 71 (6): 1940–1949. doi:10.1021/ja01174a012.
- ↑ 2.0 2.1 Aigueperse, Jean; Mollard, Paul; Devilliers, Didier; Chemla, Marius; Faron, Robert; Romano, René; Cuer, Jean Pierre (2005), "Fluorine Compounds, Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a11_307