பொன்னு வெளையிற பூமி

பொன்னு வெளையிற பூமி (Ponnu Velayira Bhoomi) 1998இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைப்படம். இதன் இயக்கம் கே. கிருஷ்ணன் . இப்படத்தில் ராஜ்கிரண், குஷ்பூ மற்றும் வினிதா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் மணிவண்ணன், வடிவேலு (நடிகர்), ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்), வெண்ணிற ஆடை மூர்த்தி, விட்டல் ராவ் மற்றும் லதா (நடிகை) போன்றோரும் நடித்திருந்தனர். இதன் தயாரிப்பு ஏ. ஜி கிருஷ்ணன், இசை தேனிசைத் தென்றல் தேவா இப்படம் 1998 ஏப்ரல் 10 அன்று வெளியானது.[1][2]

பொன்னு வெளையிற பூமி
இயக்கம்கே. கிருஷ்ணன்
தயாரிப்புஏ. ஜி கிருஷ்ணன்
கதைகே. கிருஷ்ணன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுரவி சங்கர்
படத்தொகுப்புஏ. கே. சங்கர்r
சி. ஸ்ரீனிவாசன்
கலையகம்ஏஜிஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல்
வெளியீடுஏப்ரல் 10, 1998 (1998-04-10)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

பழனிசாமி (ராஜ்கிரண்) ஒரு கருணையுள்ள பணக்கார விவசாயி, விரைவில் அவர் கிராமத் தலைவராக பொறுப்பேற்கிறார். அவருடைய கிராமத்தில் சில நல்ல காரியங்களுக்காக ஆர்பாட்டங்களை நடத்திவருவதால் அவர் அனைவருக்கும் தெரிய வருகிறார். மனநிலை சரியில்லாத புஷ்பாவை (குஷ்பூ) மணந்து கொண்டு அக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அக்கிரமத்திலுள்ள ஒரு ஏழைப் பெண் வள்ளி (வினிதா) என்பவள் பழனிசாமியை காதலிக்கிறாள்.

கடந்த காலத்தில், புஷ்பா ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். அவருக்கும், பழனிசாமிக்கும் முதலில் மோதல் ஏற்பட்டு, பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் காதலித்து, திருமணம் செய்து கொள்கிறார்கள், அவர்கள் சந்தோஷமாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால் புஷ்பாவின் தந்தை (விட்டல் ராவ்) பழனிசாமியை பழிவாங்க விரும்பினார். அவரது பிரசவத்தின்போது, ​​புஷ்பாவின் குழந்தை இறந்து விடுகிறது, புஷ்பா மீண்டும் குழந்தையை பெற இயலாமல் போய்விடுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, புஷ்பா மனநோயால் பாதிக்கப்படுகிறார்.

எனவே, வள்ளி புஷ்பாவை கவனித்துக் கொள்ள முடிவு செய்கிறாள். கிராம பஞ்சாயத்தில், பழனிசாமி அவளை திருமணம் செய்து கொண்டார் என்று வள்ளி பொய் கூறுகிறார். இதற்கிடையில், புஷ்பா மீண்டும் தன் பெற்றோருடன் சேருகிறார். பழனிசாமி இதை நினைத்து மிகுந்த கவலை கொள்கிறார். பின்னர் பழனிசாமி மற்றும் வள்ளியை மன்னித்தாரா ? பழனிசாமி மற்றும் புஷ்பா மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்கினரா என்பது மீதிக் கதையாகும்.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

ஒரு வருடத்திற்கு மேல் இதன் படப்பிடிப்பு நடந்ததனால், பட வெளியீடும் தாமதப்பட்டது .[3]

ஒலித்தொகுப்பு தொகு

பொன்னு வெளையிற பூமி
ஒலிச்சுவடு
வெளியீடு1998
ஒலிப்பதிவு1998
இசைப் பாணிதிரைப்பாடல்கள்
நீளம்23:22
இசைத் தயாரிப்பாளர்தேவா

ஐந்து பாடல்கள் கொண்ட இதன் இசையமைப்பு தேவா (இசையமைப்பாளர்). பாடல்கள் எழுதியவர் வாலி (கவிஞர்).[4][5]

எண் பாடல் பாடியோர் காலம்
1 "பாட்டு கட்டும் குயிலு" சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) 5:09
2 ஊரே மதிச்சு நிக்கும்" மனோ, சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) 4:09
3 "போய்யா உன் மூஞ்சிய்லே" Deva, அனுராதா ஸ்ரீராம், சுவர்ணலதா (பின்னணிப் பாடகி), வடிவேலு (நடிகர்) 3:36
4 "வெட்டு வெட்டு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:33
5 "மணிய தாலிகட்டி" சித்ரா 5:55

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. https://web.archive.org/web/20130424003725/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-5.htm
  4. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  5. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னு_வெளையிற_பூமி&oldid=3660567" இருந்து மீள்விக்கப்பட்டது