போச்சம்பள்ளி சந்தை

இது தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாரச்சந்தை மற்று

போச்சம்பள்ளி சந்தை என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள 125 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான ஒரு வாரசந்தையாகும். இது தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தை என்று கூறப்படுகிறது. இந்த சந்தையானது 18 ஏக்கர் பரப்பளவில் 10,000 கடைகளுடன் செயல்படுகிறது. இந்த வாரச்சந்தையில் கடுகு, சீரகத்தில் இருந்து சிறுதானியங்கள், நவதானியங்கள், காய்கறிகள், கீரைகள், அரிசிவகைகள், பழங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடு, மாடு, கோழி, வேளாண் இரும்பு கருவிகள், மூங்கில் கூடைகள், முறம், பாய், மண் கலங்கள், துணிமணிகள், பாத்திரங்கள், மின்னணு பொருட்கள் என அனைத்துப் பொருட்களும் விற்கப்படுகின்றன. தமிழ் நாட்டில் வேரெந்த சந்தையிலும் இல்லாத சிறப்பாக இங்கு தங்கம், வெள்ளி ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன.[1] இந்த வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு கிருட்டிணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, பாளேத்தோட்டம் (வாழைத் தோட்டம்), புளியம்பட்டி, புதுவயலூர், கரடியூர், புலியூர், அரசம்பட்டி, கூச்சானூர், ஆனந்தூர், கல்லாவி, சாத்தூர், காவேரிப்பட்டணம் போன்ற சுற்றுவட்டார ஊர்களிலிலிருந்து விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டுவந்து விற்கின்றனர், மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அருகிலுள்ள ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து வணிகர்கள், வேளாண் மக்களும் இந்த சந்தைக்கு வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "தங்கம் முதல் தானியம் வரை மலிவான விலையில் விற்கப்படும் சந்தை". கட்டுரை. தினத் தந்தி. 27 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. எஸ். கே. ரமேஷ் (நவம்பர் 25 2018). "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் போச்சம்பள்ளி சந்தை கலப்படமில்லாத பொருள்கள் வருவாய் நோக்கி விற்பனை". இந்து தமிழ். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போச்சம்பள்ளி_சந்தை&oldid=3657596" இலிருந்து மீள்விக்கப்பட்டது