கல்லாவி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்


கல்லாவி (Kallavi) என்பது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியாகும்.[4] இது சிறு நகரமாகும், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதாக இருக்கிறது. கல்லாவியில் சேலம் - சென்னை செல்லும் தொடருந்துப் பாதையில் தாசம்பட்டி என்ற பெயரில் இரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, அரசு நூலகம் அமைந்திருக்கிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி செயல்படுகிறது.

கல்லாவி
—  நகரம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ம. சரயு, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

கல்லாவியானது ஊத்தங்கரையில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், போச்சம்பள்ளியில் இருந்து 15 கி.மீ மற்றும் மொரப்பூரில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், சாமல்பட்டியில் இருந்து 9 கி.மீ தொலைவிலும் ஒசூரில் இருந்து 100 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 252 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[5]

தொல்லியல் எச்சங்கள்

தொகு

கல்லாவி ஊருக்கு அருகில் ஏறத்தாழ 20 ஏக்கர் பரப்பளவில் வாழ்விட மேடு உள்ளது. இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்துள்ளன.

உள்ளூர் மக்களால் கல்லுக்குட்டை என்று அழைக்கபடும் ஈமக் காட்டானது கல்லாவியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பேருந்து செல்லும் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது. இந்த இடம் பழைய கோட்டை மேட்டுத் தெரு என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு கல் வட்ட வகை பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளன. பெரும்பாலான கல் வட்டங்கள் சேதப்படுத்தபட்டுள்ளன.[6]

கோயில்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2013-09-18.
  5. "Kallavi Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
  6. த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். p. 22. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லாவி&oldid=3913935" இலிருந்து மீள்விக்கப்பட்டது