போயபதி ஸ்ரீனு

இந்தியத் திரைப்பட இயக்குநர்

பொதுவாக போயபதி சிறீனு என்று அழைக்கப்படும் போயபதி சிறீனிவாசு ( Boyapati Srinivas ) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் அதிரடித் திரைப்படங்களை இயக்குவதில் மிகவும் பிரபலமானவர். போயபதி இரண்டு மாநில நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார். [1] [2]

போயபதி ஸ்ரீனு
2018 இல் சிறீனிவாசு
பிறப்புபோயபதி சிறீனிவாசு
பெதகாகனி, குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்ஜே. கே. சி. கல்லூரி
நாகார்ஜுனா பல்கலைக்கழகம்
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
விலேகா
பிள்ளைகள்3
உறவினர்கள்கிருஷ்ண முரளி (உறவினர்)

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

போயபதி ஸ்ரீனிவாஸ், ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்திலுள்ள பெதகாக்கனியில் பிறந்தவர்.[3] [4] குண்டூரில் உள்ள ஜே. கே. சி. கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவரது குடும்பம் புகைப்பட அரங்கத்தை நடத்தி வருகிறது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட போயபதி, ஈநாடு நாளிதழில் பகுதி நேர நிருபராகப் பணியாற்றினார்.[5] திரைப்படங்களில் ஒரு தொழிலைத் தொடர, இவர் ஐதராபாத்து சென்றார். இவரது உறவினர் கிருஷ்ண முரளி 1997 இல் முத்யாலா சுப்பையா ஸ்டுடியோவில் இயக்குநர் பிரிவில் பணிபுரியுமாறு போயபதியை பரிந்துரைத்தார் [6] [7] ஒக சின்ன மாதா, கோகுலத்தில் சீதா, பெல்லி சேசுகுண்டம், பவித்ர பிரேமா, அன்னய்யா மற்றும் மனசுன்னா மாறு போன்ற படங்களுக்கு சுப்பையாவுடன் போயபதி பணியாற்றினார்.[5]

போயபதி, விலேகா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். [8]

தொழில்

தொகு

2005 ஆம் ஆண்டில், ரவி தேஜா, மீரா ஜாஸ்மின் மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்த பத்ரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். துளசி இவரது இரண்டாவது படமாகும். 2010 ஆம் ஆண்டில், நயன்தாரா மற்றும் சினேகா உல்லாலுடன் நந்தமூரி பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்த சிம்ஹா, போயபதியின் மூன்றாவது படம். பின்னர், ஜூனியர் என்டிஆர், திரிசா மற்றும் கார்த்திகா நாயர் ஆகியோர் நடிக்க தம்மு என்ற தனது நான்காவது படத்தை இயக்கினார். [9] [10] பின்னர் 2014 ஆம் ஆண்டில், பாலகிருஷ்ணாவுடன் லெஜெண்ட் படத்திற்காக மீண்டும் இணைந்தார். இது நேர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது.[9] [10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Balakrishna -Boyapati Srinu Movie Titled LEGEND". timesofap.com. Archived from the original on 22 September 2013. பார்க்கப்பட்ட நாள் 22 September 2013.
  2. "Andhra Pradesh government announces Nandi awards for 2014-2016". https://timesofindia.indiatimes.com/city/hyderabad/13-nandi-awards-for-baahubali/articleshow/61655551.cms. 
  3. "ఎందరో మహానుభావులు... అందరూ కృష్ణా, గుంటూరు వారే". ஆந்திர ஜோதி (in தெலுங்கு). 26 July 2016. Archived from the original on 14 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-01.
  4. "Boyapati Srinivas to direct Balakrishna again?". The News Minute. 2019-02-11. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  5. 5.0 5.1 "Boyapati Sreenu interview - Telugu cinema director". Idlebrain.com. 25 April 2013.
  6. "Boyapati Srinu Biography". FilmiBeat (in ஆங்கிலம்). Archived from the original on 17 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 June 2021.
  7. "Posani Krishna Murali Allegations of Boyapati Srinu". Tupaki. 17 October 2016. Archived from the original on 19 October 2016. பார்க்கப்பட்ட நாள் 8 June 2021.
  8. "Boyapati Srinu is blessed with a baby boy - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  9. 9.0 9.1 "'Legend' Review Roundup: Complete Commercial Package; Real Treat for Balakrishna's Fans". International Business Times. 28 March 2014. பார்க்கப்பட்ட நாள் 29 March 2014.
  10. 10.0 10.1 "Balakrishna's Legend opens to positive reviews". 28 March 2014. பார்க்கப்பட்ட நாள் 29 March 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போயபதி_ஸ்ரீனு&oldid=3903171" இலிருந்து மீள்விக்கப்பட்டது