போர் திரைப்படம்

போர் திரைப்படம் (War film) என்பது போருடன் தொடர்புடைய ஒரு திரைப்பட வகையாகும். இது பொதுவாக கடற்படை, வான்படை அல்லது தரைப்படை போன்றவற்றை மையமாக வைத்து காட்சிப்படத்தப்படும் நாடகத் திரைப்படமாக இருக்கும்.[1]

இந்த வகைத் திரைப்படத்தில் போர், உயிர்வாழ போராடுதல் மற்றும் தப்பித்தல், வீரர்களுக்கிடையேயான நட்புறவு, தியாகம், போரின் பயனற்ற தன்மை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மை, சமூகத்தின் மீதான போரின் விளைவுகள் மற்றும் போரினால் எழுப்பப்பட்ட தார்மீக மற்றும் மனித பிரச்சினைகள் ஆகியவை அடங்கும். போர் திரைப்படங்கள் பெரும்பாலும் கொரியப் போர்மற்றும் மிகவும் பிரபலமான இரண்டாம் உலகப் போர் பற்றியே எடுக்கப்படுகின்றது. இந்த திரைப்படங்கள் சொல்லப்பட்ட கதைகள் புனைகதை, வரலாற்று நாடகம் அல்லது சுயசரிதை இருக்கலாம்.

சீனா, இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தங்களது சொந்த புரட்சிகரப் போர்களை மையமாகக் கொண்ட அதிரடி மற்றும் வரலாற்று திரைப்படங்கலிருந்து மாறுபட்ட போர்க்கால காதல் வகை திரைப்படங்களை எடுத்துக்கொள்கின்றன. இதன் துணை வகையாக போர் எதிர்ப்பு, நகைச்சுவை, இயங்குபடம், பரப்புரை மற்றும் ஆவணப்படம் போன்றவை அடங்கும்.

என் மகன், கண்ணம்மா என் காதலி, மூன்றாம் உலகப்போர், காற்று வெளியிடை, உன்னை கொடு என்னை தருவேன் போன்ற தமிழ்த் திரைப்படங்கள் இதற்குள் அடங்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Neale 2000, ப. 117.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்_திரைப்படம்&oldid=4167242" இலிருந்து மீள்விக்கப்பட்டது