ப. பெருமாள்

தமிழகத்தில் நூலக பாதுகாப்பாளராக பணியாற்றிய முதல் நபர்

ப.பெருமாள் (P.Perumal, பிறப்பு: சூன் 2, 1954), திண்டுக்கல் மாவட்டத்தின் திருமலைராயபுரத்தில் பிறந்தவர். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் 1980இல் பாதுகாப்பாளராகப் பணியைத் தொடங்கி, 2012 சூன் வரை பணியாற்றி பணி நிறைவு பெற்றார். தமிழகத்தில் நூலகப் பாதுகாப்பாளராகப் பணியாற்றிய முதல் நபர் இவர். 200க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் கலந்துகொண்டவர். நூலகம், சுவடிப் பாதுகாப்பு, ஓலைச்சுவடிப் பாதுகாப்பு,சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள அரிய நூல்கள் போன்ற பொருண்மைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர். தேசியச்சுவடிகள் பாதுகாப்புத் திட்டததின் கீழ் தமிழகத்தின் தென்மாவட்டத்திலுள்ள சுவடிகளைப் பாதுகாக்க ஒருங்கிணைப்பாளராகப் (2004-08) பணியாற்றியுள்ளார்.

ப.பெருமாள்

முதுகலை, முனைவர்

தொகு

நூல்கள்/சுவடிப் பாதுகாப்பு பயிற்சி

தொகு

கீழ்க்கண்ட நிறுவனங்களில் நூல்கள் மற்றும் சுவடிப்பாதுகாப்புப் பயிற்சியினை இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பெற்றுள்ளார்.

  • அரசு அருங்காட்சியகம், சென்னை (10 நாள்கள்)
  • ஆவணக் காப்பகம், சென்னை (10 நாள்கள்)
  • தேசிய கலைப்பொருள்கள் பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையம், லக்னோ (ஆறு மாதங்கள்)
  • அரசு அருங்காட்சியகம், ஒரிஸ்ஸா (15 நாள்கள்)
  • தேசிய ஆவணப்பாதுகாப்பகம், ஜப்பான் (மூன்று வாரங்கள்)
  • ஜவஹர்லால் நேரு தகைமைத்திட்டத்தின்கீழ் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகம் (45 நாள்கள்), பிரித்தானிய அருங்காட்சியகம் (15 நாள்கள்), வெல்கம் ஆய்வு மையம் (15 நாள்கள்) அதே காலகட்டத்தில் இலண்டன் ஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜ், ஸ்காட்லாந்து நூலகங்களில் குறுகிய காலப் பயிற்சி

நூல்கள்

தொகு

வெளிநாடு

தொகு
  • நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுவடிகள் கருத்தரங்கில் தென்னிந்தியாவில் வடமொழிச்சுவடிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வாசிப்பு
  • மலேசிய தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எட்டாவது பட்டமளிப்பு விழாவின் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டமை.
  • ஜெர்மனியில் ஹாலேயில் உள்ள பிராங்கி பவுன்டேசனில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு பற்றிய கட்டுரை வாசிப்பு

பொறுப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. "Indian Association for Study of Conservation of Cultural Properties". Archived from the original on 2016-01-10. பார்க்கப்பட்ட நாள் 2016-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._பெருமாள்&oldid=3925317" இலிருந்து மீள்விக்கப்பட்டது