மகாராட்டிர புலிகள் காப்பகங்கள்
மகாராட்டிர புலிகள் காப்பகங்கள் (Tiger reserves of Maharashtra) என்பவை மகாராட்டிர மாநில தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் உள்ள ஆறு அர்ப்பணிக்கப்பட்ட புலிகள் காப்பகங்களை குறிக்கிறது. இக்காப்பகங்கள் புலி திட்டம் மூலம் அங்கு வாழும் புலிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகின்றன. [1] ஒட்டுமொத்தமாக 9,113 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இந்த காப்பகங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது மொத்த மாநில பரப்பளவில் இது 3% ஆகும்.
இரண்டு வனவிலங்கு சரணாலயங்களில் புலிகள் இருப்பதைக் காரணம் காட்டி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உம்ரெட் கர்கண்ட்லா வனவிலங்கு சரணாலயம் மற்றும் திபேசுவர் வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை புலிகள் காப்பகங்களாக அறிவிக்கும் திட்டத்தை முன்வைத்தனர். இந்நடவடிக்கை புலிகளின் மரபியல் பரவலை ஊக்குவிப்பதற்காக வெவ்வேறு காப்பகங்களுக்கு இடையில் புலிகள் இடம்பெயர்வதற்காக ஒரு புலி நடைபாதையை உருவாக்கும் என்பது இதற்கான காரணமாகும். 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி இந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது. [2]
வரலாறு
தொகுமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முக்கிய திட்டமான புலிகள் திட்டத்தில் புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன.புலிகள் செழித்து வளரவும், வேட்டையாடுபவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ பாதுகாப்பைப் பெறவும் பாதுகாப்பான ஒரு சொர்க்கத்தை உருவாக்க இத்திட்டம் திட்டமிட்டது. 1973 ஆம் ஆண்டு புலிகள் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஒன்பது புலிகள் காப்பகங்களில் மேல்காட்டும் ஒன்றாகும். குகமால் தேசியப் பூங்கா இதன் மைய மண்டலமாகும். இதனுடன் மெல்காட் வனவிலங்கு சரணாலயம் மற்றும் இலையுதிர் காடுகள் நிறைந்த வன மண்டலங்களுடன் சேர்ந்துள்ளன. பின்னர், பல ஆண்டுகளாக, ஐந்து கூடுதல் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன. 1955 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ததோபா தேசியப் பூங்கா, பழமையான தேசிய பூங்காக்களில் ஒன்றாகும். 1993 ஆம் ஆண்டு அந்தாரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைந்ததன் மூலம் ததோபோ அந்தாரி புலிகள் காப்பகம் உருவானது.
புலிகள் கணக்கெடுப்பு
தொகு2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, அனைத்து இந்திய மாநிலங்களிலும், மகாராட்டிர மாநிலம் ஐந்தாவது பெரிய புலிகள் தொகையைக் கொண்டுள்ளது. மாநிலத்தில் புலிகளின் எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் 103 ஆக இருந்து 2010 ஆம் ஆண்டில் 169 ஆக சீரான உயர்வைக் காட்டியது. 2015 ஆம் ஆண்டில் சமீபத்திய கணக்கெடுப்பு 190 ஆக உயர்ந்துள்ளது, இது 2010 மற்றும் 2015 க்கு இடையில் 12% அதிகரிப்பாகும். 2018 ஆம் ஆண்டின் நான்காவது புலிகள் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 312 [3] ஆக உயர்ந்துள்ளது.
புலிகள் காப்பகங்களின் பட்டியல்
தொகுபுலிகள் காப்பகம் | ஆண்டு அறிவிக்கப்பட்டது | மையப் பகுதி (கிமீ 2 ) | தாங்கல் பகுதி (கிமீ 2 ) | மொத்த பரப்பளவு (கிமீ 2 ) |
---|---|---|---|---|
மேல்காட் | 1974 | 1,500 | 1,268 | 2,768 |
ததோபா | 1993 | 626 | 1,102 | 1,728 |
பெஞ்சு | 1999 | 257 | 484 | 741 |
சயாத்ரி | 2007 | 600 | 565 | 1,166 |
நவேகான்-நாச்சிரா | 2013 | 654 | 1241 | 1895 |
போர் | 2014 | 138 | 678 | 816 |
மொத்தம் | 3775 | 5338 | 9113 |
ஒவ்வொரு புலிகள் காப்பகத்திலும் உள்ள புலிகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. இவற்றை bigcatsindia.com இல் காணலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "List of Tiger Reserves Core & Buffer Areas". National Tiger Conservation Authority. Archived from the original on 2014-08-23.
- ↑ "Karhandla and Tipeshwar can't be tiger reserves? - Times of India". பார்க்கப்பட்ட நாள் 4 March 2017.
- ↑ "Tiger census: Maharashtra records a mere 12% rise". 21 January 2015. பார்க்கப்பட்ட நாள் 4 March 2017.