மங்கோல் (திரைப்படம்)

2007 வரலாற்று காவியத் திரைப்படம்

மங்கோல் (Монгол) என்பது 2007ஆம் ஆண்டு வெளிவந்த வரலாற்றுக் காவியத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தைச் செர்ஜி போட்ரோவ் இயக்கியிருந்தார். போட்ரோவ் மற்றும் ஆரிப் அலியேவ் ஆகியோர் திரைக்கதையை அமைத்து இருந்தனர். போட்ரோவ், செர்ஜி செல்யனோவ் மற்றும் ஆண்டன் மெல்னிக் ஆகியோர் தயாரித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தில் தடனோபு அசானோ நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெமுசினின் ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றி கூறியது. தெமுசின் தான் பின்னாளில் செங்கிஸ் கான் என்று அறியப்பட்டார்.[3]

மங்கோல்
வெளியீடு20 செப்டம்பர் 2007 (2007-09-20)(உருசியா)
6 சூன் 2008 (ஐக்கிய இராச்சியம்
மற்றும் ஐக்கிய
அமெரிக்கா)

19 சூன் 2008 (ஆத்திரேலியா)
ஓட்டம்2:05 மணி நேரம்[1]
நாடு
  • உருசியா
  • செருமனி
  • கசக்கஸ்தான்
  • சீனா
  • மங்கோலியா
மொழி
ஆக்கச்செலவுஐஅ$18 மில்லியன் (128.7 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$26.5 மில்லியன் (189.5 கோடி)[2]

இந்தத் திரைப்படம் உருசிய, செருமானிய மற்றும் கசக்கஸ்தான் நாட்டு நிறுவனங்களின் இணைத் தயாரிப்பு ஆகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சீன மக்கள் குடியரசில் நடத்தப்பட்டது. முக்கியமாக மங்கோலியத் தன்னாட்சி மாகாணமான உள் மங்கோலியாவில் நடத்தப்பட்டது. கசக்கஸ்தானிலும் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. செப்டம்பர் 2005 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டு நவம்பர் 2006 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு வைபோர்க் நகரில் நடந்த உருசியத் திரைப்பட விழாவில் முதன் முதலில் வெளியிடப்பட்டது. உருசியாவில் 20 செப்டம்பர் 2007 ஆம் ஆண்டு மங்கோல் திரைப்படம் வெளியிடப்பட்டது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 2007ஆம் ஆண்டு நடந்த அகாதமி விருது வழங்கும் விழாவில் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் கசக்கஸ்தான் நாட்டில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.[4]

முப்படங்களில் முதல் படமாக இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இரண்டாவது படத்திற்கான வேலைகள் 2008ஆம் ஆண்டே தொடங்கப்பட்டன.[5] எனினும் கடைசியில் கைவிடப்பட்டன. ஆனால் சூலை 2013 ஆம் ஆண்டு உலான் பத்தூரில் ஆண்டுதோறும் நடக்கும் நாதம் விழாவிற்கு வந்திருந்த பத்திரிகையாளர்களிடம் இரண்டாவது படத்திற்கான வேலைகள் தொடங்கியதாகப் போட்ரோவ் கூறினார். அப்படம் மங்கோலியாவில் படம்பிடிக்கப்படலாம் என்றும் கூறினார்.[6] எனினும் பிறகு உள்ளூர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மங்கோலிய மக்கள் மற்றும் அவர்களது தேசியக் கதாநாயகனை இந்தத் திரைப்படம் சரியாகச் சித்தரிக்காது என்ற அச்சத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் காரணமாகப் படப்பிடிப்பானது உள் மங்கோலியா மற்றும் கசக்கஸ்தானுக்கு மாற்றப்பட்டது.[7]

உசாத்துணை தொகு

  1. "MONGOL (15)". British Board of Film Classification. 31 March 2009. பார்க்கப்பட்ட நாள் 21 April 2015.
  2. 2.0 2.1 "Mongol". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் 2011-02-21.
  3. Sergei Bodrov. (2007). Mongol [Motion picture]. Russia: Picturehouse Entertainment.
  4. அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்(2008-01-22). "80th Academy Awards Nominations Announced". செய்திக் குறிப்பு.
  5. Birchenough, Tom (14 May 2008). "Bodrov kicks off production unit". Variety Asia (Reed Business Information) இம் மூலத்தில் இருந்து 15 மே 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080515195418/http://www.varietyasiaonline.com/content/view/6083/53/. 
  6. InfoMongolia, 6 August 2013: "Russian Producer Announces the Sequel to 'Mongol'" பரணிடப்பட்டது 9 சூலை 2015 at the வந்தவழி இயந்திரம் Linked 2013-08-29
  7. Variety, 10 April 2005: "Mongols protest Khan project". Retrieved 2011-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கோல்_(திரைப்படம்)&oldid=3777710" இலிருந்து மீள்விக்கப்பட்டது