மஜீத் கான்

(மஜீட் கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மஜீத் ஜஹாங்கீர் கான் (Majid Jahangir Khan (உருது: ماجد جہانگیر خان‎) ), பிறப்பு: 1946, முன்னாள்பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் மற்றும் தலைவர் ஆவார்.). இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1967 இலிருந்து 1977 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1975ம் பருவ ஆண்டுகளில் செயல்பட்டுள்ளார். 1961 ஆம் ஆண்டு முதல் 1985 வரையிலான காலங்களில் இவர் முதல் தரத் துடுப்பாட்டங்களில் விளையாடியுள்ளார். இவர் மொத்தமாக 63 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 3,931 ஓட்டங்களை எடுத்துள்ளனர். இதில் 8 நூறுகளும் அடங்கும். 27,000 ஓட்டங்களை முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் எடுத்துள்ளார். இதில் 78 நூறுகளும், 128 அரைநூறுகளும் அடங்கும்.[1] 1983 ஆம் ஆண்டில் லாகூரில் உள்ள கடாஃபி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் இறுதியாக விளையாடினார்[2]. 1982 ஆம் ஆண்டில் மான்செஸ்டர் , ஓல்டு டிரஃபோர்டு துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.[3]

மஜீத் கான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 63 23
ஓட்டங்கள் 3931 786
மட்டையாட்ட சராசரி 38.92 37.42
100கள்/50கள் 8/19 1/7
அதியுயர் ஓட்டம் 167 109
வீசிய பந்துகள் 3584 658
வீழ்த்தல்கள் 27 13
பந்துவீச்சு சராசரி 53.92 28.76
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/45 3/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
70/- 3/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

சர்வதேச போட்டிகள்

தொகு

தேர்வுத் துடுப்பாட்டம்

தொகு

1964 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .அக்டோபர் 24 இல் கராச்சியில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்ட்டியில் இவர் அறிமுகமானார்.[4] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 30 ஓவர்கள் வீசி 55 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 9 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் மட்டையாட்டத்தில் ஓட்டங்கள் எதுவும் சேர்க்காமல் மார்ட்டினின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 16 ஓவர்கள் வீசி 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசி 1 இலக்கினைக் கைப்பற்றினார். மட்டையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[5]

இறுதிப் போட்டி

தொகு

1983 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இதன் ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் சனவரி 23 , லாகூரில் நடைபெற்றது .இந்தப் போட்டியில் 10 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் கபில் தேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 1ஓவர் வீசி 4 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[6]

ஒருநாள் போட்டிகள்

தொகு

1973 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தது. பெப்ரவரி 11, கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியில் 8 ஒவர்கள் வீசி 23 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 10 பந்துகளில் 8 ஓட்டங்கள் எடுத்து ஹாட்லீயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இதில் நியூசிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[7]

இறுதிப் போட்டி

தொகு

1982 ஆம் ஆண்டில் மான்செஸ்டர் , ஓல்டு டிரஃபோர்டு துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.[3]

சான்றுகள்

தொகு
  1. Majid Khan, ESPNCricinfo, பார்க்கப்பட்ட நாள் 19 April 2012
  2. India in Pakistan Test Series – 5th Test, ESPNCricinfo, 23 January 1983, பார்க்கப்பட்ட நாள் 19 April 2012
  3. 3.0 3.1 Prudential Trophy – 2nd ODI, ESPNCricinfo, 19 July 1982, பார்க்கப்பட்ட நாள் 19 April 2012
  4. "Majid Khan", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
  5. "Only Test, Australia tour of Pakistan at Karachi, Oct 24-29 1964 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
  6. "5th Test, India tour of Pakistan at Lahore, Jan 23-28 1983 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
  7. "Only ODI, Pakistan tour of New Zealand at Christchurch, Feb 11 1973 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஜீத்_கான்&oldid=2532211" இலிருந்து மீள்விக்கப்பட்டது