மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி

மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி (Lesser Yellow Nape) என்பது மரங்கொத்தி வகைகளுள் ஒன்றாகும். பொதுவாக இவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல ஆசியாவில் முதன்மையாக இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியா பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது. மேலும் இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், மியான்மார், தென் சீனா, தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனிசியா, புருனே போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: பிசிபார்மிசு
குடும்பம்: பிசிடே
பேரினம்: 'பைகசு'
இனம்: P. chlorolophus
இருசொற் பெயரீடு
Picus chlorolophus
(Vieillot, 1818)
பெண் மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி

உடலமைப்பு தொகு

இந்த மரங்கொத்தியின் நீளம் சுமார் 27 செ.மீ. வரை இருக்கும். மஞ்சள் தோய்ந்த பச்சை நிற உடலும் இறகுகளும் கொண்ட இதன் வால் பழுப்புத் தோய்ந்த கருப்பாக இருக்கும். மார்பானது ஆலிவ் பழுப்பு நிறத்திலும், வயிறும் வாலடியும் வெண்மையும் பழுப்புமான பட்டைகளைக் கொண்டது.

காணப்படும் பகுதிகள், உணவு தொகு

மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பகுதிகளில் தேக்குக் காடுகளிலும் இலையுதிர் காடுகளிலும் காபி, ரப்பர் தோட்டங்களிலும் காணலாம். பிற மரங்கொத்திகளோடும், கரிச்சான், மின்சிட்டுகள், ஈப்பிடிப்பான், சிலம்பன்கள் ஆகியவற்றோடு சேர்ந்து இரை தேடும். எறும்புகளும் கறையான்களுமே இதன் முக்கிய உணவு; பழங்களையும் அவ்வப்போது தின்னும். 'சேங் என சோகங்கலந்த குரலில் அரைவினாடி முதல் ஒரு வினாடி வரை நீள ஒலிக்கும், மரத்தில் உளியை ஒத்ததான அலகால் தட்டித் தொடர்ந்து ஒலி எழுப்பவும். பறக்கும்போது குரலொலி எழுப்புவதில்லை.[2]

இனப்பெருக்கம் தொகு

ஜனவரி முதல் மே வரையான பருவத்தில் காட்டு மரங்களில் வங்கு குடைந்து 2 முட்டைகள் இடும்.

துணையினங்கள் தொகு

  • குளோரபசு - இமயமலை
  • குளோரிகேசுடர் - தீபகற்ப பகுதிகளில்
  • வெல்சி - இலங்கை.
 
உத்தர்காண்ட் இந்தியா

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Picus chlorolophus". IUCN Red List of Threatened Species 2016: e.T22681431A92906492. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681431A92906492.en. https://www.iucnredlist.org/species/22681431/92906492. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:97