மஞ்சள் முதுகு டுயூக்கர்

நடு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் மரிமான் இனங்கள்

Teleostomi

மஞ்சள்-முதுகு டுயூக்கர் ( Yellow-backed duiker ) என்பது இரட்டைப்படைக் குளம்பி வரிசையையி்ல், மாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த, காடுகளில் வசிக்கும் மறிமான் ஆகும். அனைத்து டுயூக்கர்களிலும் மஞ்சள்-முதுகு டுயூக்கர்கள் மிகவும் பரவலான இடங்களில் பரவயாக உள்ளன. இவை முதன்மையாக நடு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில், செனகல் முதல் மேற்கு உகாண்டா வரையும், காம்பியாவில் கொஞ்சம் இருக்கலாம். இவை வாழும் எல்லை ருவாண்டா, புருண்டி, ஜைர், ஜாம்பியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் பரவியுள்ளது. [3]

மஞ்சள் முதுகு டுயூக்கர்
Yellow-backed duiker
டிஸ்னி விலங்கு உலகில்
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. silvicultor
இருசொற் பெயரீடு
Cephalophus silvicultor
(Afzelius, 1815)
மஞ்சள் முதுகு டுயூக்கர் வாழும் எல்லை
வேறு பெயர்கள் [3]

இவற்றில் நான்கு கிளையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன அவை:

  • சி. எஸ் கர்டிசெப்ஸ் க்ரப் அண்ட் க்ரோவ்ஸ், 2002
  • சி. எஸ் லாங்கிசெப்ஸ் கிரே, 1865
  • சி. எஸ் ரூஃபிக்ரிஸ்டா போகேஜ் , 1869
  • சி. எஸ் சில்விகல்டர் (அஃப்ஜெலியஸ், 1815)

விளக்கம்

தொகு
 
மஞ்சள் முதுகு டுயூக்கரின் மண்டை ஓடு

மஞ்சள்-முதுகு டுயூக்கர்கள் குவிந்த உடல் வடிவத்தைக் கொண்டுள்ளன. இவை தூக்கிய முதுகு கொண்டவையாக உள்ளன. இவற்றின் கொம்புகள் மிகக் குறுகியவையாக, 8.5 முதல் 21 செமீ (3.3 முதல் 8.3 அங்குலம்) நீளம் கொண்டவையாக, [4] உருளை வடிவத்தில் கூர்மையானவையாக உள்ளன. [3] இவற்றின் கொம்புகளுக்கு இடையில் ஆரஞ்சு நிற உரோமங்கள் காணப்படும். [5] மஞ்சள்-முதுகு டுயூக்கர்கள் மறிமான்கள் கருப்பு நிறத்தவை. ஆனால் நடு முதுகிலிருந்து வால் முனை வரை அடர்த்தியான மஞ்சள் நிற உரோமங்களைக் கொண்டிருக்கும். இதுவே இவற்றின் பெயருக்கும் காரணம் ஆகும். டுயூக்கர்கள் பயப்படும்போது அல்லது அச்சுறுத்தப்படும்போது இந்த உராமங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. மஞ்சள் முதுகு டுயூக்கர்களில் கிடாக்களைவிட பெட்டைகள் சற்று பெரியதாக வளரும். [3] இவற்றில் பாலினங்களுக்கு இடையேயான வண்ண வேறுபாடு மிகவும் குறைவாக உள்ளன. மேலும் மிகக் குறைவாகவே பாலியல் இருருமை கொண்டுள்ளது. [5] தலை மற்றும் உடல் நீளம் 115 முதல் 145 செமீ (45 முதல் 57 அங்குலம்) இருக்கும், இதில் 11 முதல் 18 செமீ (4.3 முதல் 7.1 அங்குலம்) அளவுள்ள குட்டையான வாலும் அடங்கும். [4] மஞ்சள் முதுகு டுயூக்கரின் எடை 60-80 கிலோ வரை இருக்கும். இது அதன் இனத்தில் மிகப்பெரியது ஆகும். இவை பெரிய வாய், தொண்டை மற்றும் தாடை தசைகள் கொண்டது. [6]

சூழலியல்

தொகு

வாழ்விடம் மற்றும் நடத்தை

தொகு

மஞ்சள் முதுகு டுயூக்கர்கள் முதன்மையாக காடுகளில் வாழ்கின்றன. குறிப்பாக அரை இலையுதிர் காடுகள், மழைக்காடுகள், கரையோர காடுகள், மலைக்காடுகள் போன்ற பகுதிகளில் வாழ்கின்றன. இருப்பினும், இவை புதர்க் காடுகள், வனத் தீவுகள், சவன்னாக் காடுகளிலும் காணப்படுகின்றன. [3] இவற்றின் குவிந்த உடல் வடிவம் வன வாழ்விற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இத்தகைய இதன் உடல் அமைப்பு இவை அடர்ந்த காடுகள் மற்றும் புதர்கள் வழியாக விரைந்து செல்ல ஏற்றதாக உள்ளது. மேலும் புதர்களில் விரைவாக மறைந்து கொள்ள ஏதுவாகவும் உள்ளன. [3] உண்மையில், டுயூக்கர் என்பது "முழ்குதல்" (தண்ணீரில் மூழ்கி மறைதல் போல புதர்களில் மறைவதால்) என்பதற்கான ஆப்பிரிக்கானா சொல்லாகும். [7]

டுயூக்கர்கள் எளிதில் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. பயந்த சுபாவமுள்ள இவை அச்சுறுத்தலுக்கு உட்பட்டால் அதில் இருந்து தப்பிக்க கிட்டத்தட்ட கண்மூடித்தனமாக ஓடும். திடுக்கிடும் பட்சத்தில், டுயூக்கர்கள் தாங்கள் அடைக்கபட்டுள்ள கண்ணாடி தடுப்புக்குள் தலை குப்புறப் பாய்ந்து ஓடுவது லாஸ் ஏஞ்சல்சு விலங்கு காட்சி சாலையில் கண்டறியப்பட்டது. அடைக்கபட்டு வளர்க்கப்படும் நிலையில், டுயூகர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாடையில் புண்கள் உருவாகுவதாக அறியப்படுகிறது. [7]

மஞ்சள் முதுகு டுக்கர்கள் பகல், இரவு என எல்லா நேரங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கும். [6] இவை கூட்டமாக வாழாமல் தனித்தோ அல்லது இணைகளாகவோ வாழ்கின்றன. அரிதாக சிறிய மந்தைகளிலும் கூட வாழ்கின்றன. [3] இவற்றின் கூச்சமிகு பழக்கவழக்கங்கள் காரணமாக மற்ற குளம்புவிலங்குகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் சூழலியல் மற்றும் எண்ணிக்கைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. [8]

மஞ்சள் முதுகு டுயூக்கர்கள் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யக்கூடியன. இவை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை இனப்பெருக்கம் செய்கின்றன. [4] பெண் மான் பிரசவத்தில் ஒரு குட்டியை பெற்றெடுக்கிறது. குட்டி பிறந்த முதல் வாரத்தில் வெளியே வராமல் புதர்களில் மறைந்திருக்கும். பிறந்து 3 முதல் 5 மாதங்கள் பால் குடிக்கும். பாலின முதிர்ச்சி கிடாய்க்கு 12 முதல் 18 மாதங்களிலும், பெட்டைக்கு 9 முதல் 12 மாதங்களிலும் ஏற்படுகிறது. [4]

காடுகளில் இவற்றின் ஆயுட்காலம் 10 முதல் 12 ஆண்டுகளும், அடைத்து வளர்க்கப்படும் நிலையில் 22.5 ஆண்டுகள் இருக்கும். [4]

உணவுமுறை

தொகு

காடுகளில் வாழும் இந்த விலங்குகளானது தாவரங்கள் அல்லது தாவர பாகங்களான தளிர்கள், வேர்கள், இலைகள் மொட்டுகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து உணவளிக்கின்றன. என்றாலும் இவற்றின் முதன்மை உணவாக பழங்கள் உள்ளன. [3] மற்ற டுயூக்கர் இனங்களைக் காட்டிலும் மஞ்சள்-முதுகு டுயூக்கர்கள் தரம் குறைந்த உணவை செரிப்பதில் திறமை கொண்டாதக இருக்கிறது. இதனால் இவற்றால் பெரிய, தரம் குறைந்த பழங்களை உண்ண இயலுகிறது. [6]

இறைச்சியை உண்ணக்கூடிய சில மரிமான்களில் மஞ்சள் முதுகு டுயூக்கர்களும் ஒன்று. எப்போதாவது, இந்த காட்டு விலங்குகள் பறவைகள் போன்ற சிறிய விலங்குகளை கொன்று சாப்பிடும்.

வேட்டை

தொகு

மேற்கு மற்றும் நடு ஆபிரிக்கா காடுகள் முழுவதும் டுயூக்கர் இனங்கள் மிகுதியாக வேட்டையாடப்படுகின்றன. [8] இதன் வாழ்விடங்களுக்கு அருகில் வாழும் மக்களுக்கு இது ஒரு முக்கிய உணவு ஆதாரம் இல்லை [8] என்றாலும் வருமானத்திற்கான முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. [6] எளிதில் பயமுறும் இயல்பு கொண்ட, மஞ்சள்-முதுகு டுயூக்கர்கள் கைவிளக்கின் (டார்ச் லைட்) ஒளியில் செய்வதறியாத நின்றுவிடுகின்றன. இது இவற்றை இரவில் வேட்டையாடுவதை மிகவும் எளிதாக்குகிறது. கைவிளக்கால் விலங்கு திகைத்து நிற்கும்போது, வேட்டைக்காரர்கள் ஏறக்குறைய அதன் அருகில் வரை நடக்க முடியும். [6] இதுவே மஞ்சள் நிற முதுகு டுக்கருக்கு பெரும் ஆபத்தாக உள்ளது. சில அறிவியலாளர்கள் 2020 ஆம் ஆண்டிற்குள் இவை கடுமையான ஆபத்தான நிலைக்கு வந்து சேரும் கணிக்கின்றனர். [8] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கமானது தற்போது மஞ்சள் முதுகு டுயூக்கரின் நிலையை அச்சுறுத்தலுக்கு அண்மித்த நிலையில் உள்ளதாக பட்டியலிட்டுள்ளது. ஆனால் தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், "மஞ்சள் முதுகு டுயூக்கரின் பரவல் பெருமளவில் துண்டிக்கப்படும். மேலும் இதன் நிலை இறுதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்." [1] நைஜீரியாவின் ஓபன் ஹில்ஸ் பிராந்தியத்தில் உள்ள கிராஸ் ரிவர் தேசிய பூங்காவின் திறந்த காட்டில் மஞ்சள் முதுகு டுயூக்கர் ஏற்கனவே அழிந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. [8] இந்த இனத்தின் அழிவு சுற்றுச்சூழலில் மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. இவை பல பழங்குடிகளின் முக்கிய உணவு ஆதாரமாக மட்டுமல்லாமல், பல்வேறு தாவரங்களின் விதைகளை பரப்பும் முகவர்களாகவும், பல மாமிச உண்ணிகளுக்கு இரையாகும் பொருட்களாகவும் செயல்படுகின்றன. [8]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 IUCN SSC Antelope Specialist Group (2016). "Cephalophus silvicultor". IUCN Red List of Threatened Species 2016: e.T4150A50184147. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T4150A50184147.en. https://www.iucnredlist.org/species/4150/50184147. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Lumpkin, S.; Kranz, K.R. (1984). "Cephalophus sylvicultor". Mammalian Species (225): 1–7. doi:10.2307/3503848. http://www.science.smith.edu/resources/msi/pdfs/i0076-3519-225-01-0001.pdf. பார்த்த நாள்: 17 February 2016. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 DeWitt, K. Yellow-backed duiker. University of Michigan Museum of Zoology. http://animaldiversity.org/accounts/Cephalophus_silvicultor/. பார்த்த நாள்: 8 May 2017. 
  5. 5.0 5.1 Kranz, II. Lumpkin, Karl R., II. Lumpkin (1982). "Notes on the yellow-backed duiker" (PDF). Department of Zoological Research. பார்க்கப்பட்ட நாள் November 2, 2015.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Newing, Helen (2001-01-01). "Bushmeat hunting and management: implications of duiker ecology and interspecific competition". Biodiversity & Conservation 10 (1): 99–118. doi:10.1023/A:1016671524034. பன்னாட்டுத் தர தொடர் எண்:0960-3115. 
  7. 7.0 7.1 Barnes, R.; Greene, K.; Holland, J.; Lamm, M. (2002). "Management and husbandry of duikers at the Los Angeles Zoo". Zoo Biology 21 (2): 107–121. doi:10.1002/zoo.10020. 
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 Jimoh, S; Ikyaagba, E; Alarape, A; Adeyemi, A; Waltert, M (2013). "Local depletion of two larger duikers in the Oban Hills Region, Nigeria". African Journal of Ecology 51 (2): 228–234. doi:10.1111/aje.12027. Jimoh, S; Ikyaagba, E; Alarape, A; Adeyemi, A; Waltert, M (2013).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_முதுகு_டுயூக்கர்&oldid=3623839" இலிருந்து மீள்விக்கப்பட்டது