மடகாசுகர் சதுப்புநில கதிர்க்குருவி
மடகாசுகர் சதுப்புநில கதிர்க்குருவி (Madagascar swamp warbler)(அக்ரோசெபாலசு நியூடோனி) என்பது அக்ரோசெபாலிடே குடும்பத்தில் உள்ள பழைய உலக கதிர்க்குருவி சிற்றினமாகும். இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் சதுப்புநிலங்கள் ஆகும்.
மடகாசுகர் சதுப்புநில கதிர்க்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | அக்ரோசெபாலிடே
|
பேரினம்: | அக்ரோசெபாலசு
|
இனம்: | A. newtoni
|
இருசொற் பெயரீடு | |
Acrocephalus newtoni (ஹார்ட்லாப், 1863) | |
விளக்கம்
தொகுமடகாசுகர் சதுப்புநில கதிர்க்குருவி குட்டையான, வட்டமான இறக்கைகள் மற்றும் நீண்ட அலை அலையான் வாலினைக் கொண்ட கதிர்க்குருவி ஆகும். இதன் இறக்கைகள் மற்றும் வால் உட்பட அடர் சாம்பல்-பழுப்பு முதல் அடர் பழுப்பு வரையிலான மேல்பகுதியுடன் காணப்படும்.
அடிப்பகுதி சாம்பல்-வெள்ளை நிறத்தில் இருக்கும், ஆனால் பக்கவாட்டு மற்றும் வயிறு வெளிர் பழுப்பு-சாம்பல் நிறத்தில் இருக்கும். கன்னம், தொண்டை மற்றும் மேல் மார்பகம் பொதுவாகப் பழுப்பு-சாம்பல் கோடுகளுடன் இருக்கும். ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியாக வேறுபாடின்றி காணப்படும்.[2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Acrocephalus newtoni". IUCN Red List of Threatened Species 2016: e.T22714865A94431069. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714865A94431069.en. https://www.iucnredlist.org/species/22714865/94431069. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ HANDBOOK OF THE BIRDS OF THE WORLD Vol 11 by Josep del Hoyo, Andrew Elliott and David Christie - Lynx Edicions - ISBN: 849655306X
- ↑ Reed and Bush Warblers Par Peter Kennerley, David Pearson – Helm Identification Guide – Editeur: A&C Black, 2010 – ISBN: 1408134012, 9781408134016
- ↑ Birds of Madagascar and the Indian Ocean Islands Par Roger Safford, Adrian Skerrett, Frank Hawkins – ISBN: 1472924118, 9781472924117- Editeur: Bloomsbury Publishing, 2015